யோகமான அமைப்புகள் சாதகங்களில் இருந்தும் ஒரு சிலருக்கு யோகங்களை தந்துவிடுவதில்லை ஏன் ?
கிரகங்கள் படுத்தும் பாடு-( 172 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
பலருடைய ஜாதகங்களில் யோகமான கிரக அமைப்புகள் உள்ள யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த யோகம் நடக்காமல் போய்விடுகிறது.அவர்களும் வாழ்நாள் முழுவதும் அவர்களது வாழ்க்கை கஷ்டத்திலே முடிந்துவிடுகிறது.அப்ப யோக அமைப்புகள் என்பது பொய்யா? என்றால் இல்லை.அந்த குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கும்போது அவை யோகம் உடையதாக தெரிந்திருக்கும் அதை வைத்து யோக ஜாதகம் என முடிவு செய்ய முடியாது.
சில உதாரணங்களுடன் நாம் அதை விளக்குவோம்.
1) மகர லக்கனம் உடையவருடைய ஜாதகத்தில் லக்கனத்திலே குருவும்,சந்திரனும் சேர்ந்து உள்ள ஜாதகத்தில் லக்கனாதிபதி சனி மேஷத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்த ஜாதகத்தில் குரு -சந்திர யோகம் வேலை செய்யாது.ஏனெனில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தாலும் குருவும் அதற்கு வீடு கொடுத்த சனி பகவானும் நீசம்."ஆரப்ப அத்தலத்தோன் மறைந்தானால் அப்பலனை அரையாதே இப்புவியுள்ளோர்க்கே".இது போன்ற சூட்சும காரணங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
2) மேஷ லக்கன காரர்களுக்கு தர்ம-கர்மாதிபதி யோகம் வேலை செய்யாது. ஏன வேலை செய்யாது் ? என பார்ப்பதற்கு முன்பாக "தர்ம-கர்மாதிபதி யோகம் " என்றால் என்ன ? என்பதை பார்ப்போம்.
தர்ம-கர்மாதிபதி யோகம் என்பது
9,10 க்குடைய கிரகங்கள் சேர்ந்திருந்தாலும்,ஓருவரையொருவர் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும்,இரு கிரகங்களும் பரிமாறிக்கொண்டாலும் மற்றும் 9-க்கு உடைய கிரகம் 10-ம் இடத்தை பார்த்தாலும்,10-க்குடைய கிரகம்
9-ம் இடத்தை மாறி மாறி பார்த்துக்கொண்டால் இவ்வகை யோகம்.இவை லக்கனம் மற்றும் ராசி இரண்டுக்கும் பார்க்கலாம்.
9,10 க்குடைய கிரகங்கள் சேர்ந்திருந்தாலும்,ஓருவரையொருவர் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும்,இரு கிரகங்களும் பரிமாறிக்கொண்டாலும் மற்றும் 9-க்கு உடைய கிரகம் 10-ம் இடத்தை பார்த்தாலும்,10-க்குடைய கிரகம்
9-ம் இடத்தை மாறி மாறி பார்த்துக்கொண்டால் இவ்வகை யோகம்.இவை லக்கனம் மற்றும் ராசி இரண்டுக்கும் பார்க்கலாம்.
விதிவிலக்கு;-(மேஷ ராசிக்கு ஏன் முழுபலன் தராது)
மேஷம் சர ராசியாக இருப்பதால் பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி.இங்கு சனி பகவான் பத்து மற்றும் பதினொன்று என இரு இட ஆதிபத்தியம் பெற்றிருப்பதால் 9-க்குடைய குருவும்,10 -க்கு உடைய சனியும் தர்ம-கர்ம யோக அமைப்பை பெற்றிருந்தாலும் சனி பகவான் பாதக அதிபதியாக வருவதால் குரு தசை சனி புத்தியிலோ அல்லது சனி தசை குரு புத்தியில் யோகத்தை தருவதற்கு பாதகங்களை தந்துவிடுகிறது.
3) பஞ்ச மஹா யோகம்
புதன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் பத்ர யோகம்,குரு ஆட்சி உச்சம் பெற்றால் ஹம்ச யோகம் ஆனால் உபய ராசிகளான மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளுக்கு மேற்க்கண்ட யோகங்களை அத்தகைய திசைகளில் கொடுக்காமல் மாறாக கெடுதலை கொடுக்கிறது.காரணம் உபய ராசிக்கு பாதகாதிபதி,மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி தோஷம் ஆகிய மூன்று வித பாதிப்புகளுக்கு இடையே மாட்டிக்கொள்வதால் குரு,புதன் பஞ்மஹா யோக பலனான ஹம்சக யோகம், பத்ர யோகம் தருவதற்கு பதிலாக முற்றிலும் மாறான பலன்களை தந்துவிடுகிறது.
4) சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பஞ்சமகா யோகங்களில் ஒன்றான "மாளவீகா யோகம் " என்றாலும்
மேஷ ராசிக்கு சுக்கிரன் ஏழில் ஆட்சி பெறுவது " காரக பாவ நாஸ்தி" பெறுவதோடு,செவ்வாய்க்கு சுக்கிரன் எதிரி என்பதாலும் இந்த ராசிக்கு மாளவீகா யோகம் வேலை செய்யாது.இதேபோல் கடகம் சர ராசியாக இருப்பதால் 11-ம் இட அதிபதி பாதாகாதிபதி ஆட்சி பெறுவது நல்லதல்ல.
மேஷ ராசிக்கு சுக்கிரன் ஏழில் ஆட்சி பெறுவது " காரக பாவ நாஸ்தி" பெறுவதோடு,செவ்வாய்க்கு சுக்கிரன் எதிரி என்பதாலும் இந்த ராசிக்கு மாளவீகா யோகம் வேலை செய்யாது.இதேபோல் கடகம் சர ராசியாக இருப்பதால் 11-ம் இட அதிபதி பாதாகாதிபதி ஆட்சி பெறுவது நல்லதல்ல.
5) சிலருக்ககு யோக அமைப்புகள் இருந்தாலும் அந்த தசை அமைப்பு அவர் வாழ்நாளில் வராமலே போய்விடும்.
6)சூரியனும்,புதனும் சேர்ந்திருந்தால் புத ஆதித்ய யோகமாக இருந்தாலும் சில நேரங்களில் சூரியனுடன் இணைந்துள்ள புதன் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும்,நீசம் அடைந்து இருந்தாலும் அத்தகைய யோகத்தை தருவதில்லை.
உதாரணமாக மீன ராசியிலும்,துலாம் ராசியலும் சூரியன், புதன் சேர்க்கை "பஉத ஆதித்ய யோகத்தை தராது.ஏனெனில் மீன வீட்டில் புதன் நீசம,துலாம் வீட்டில் சூரியன் நீசம் ஆகும்.
7.) சில கிரகங்கள் உச்சம் ,ஆட்சி பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட பாகை வரைதான் உச்சம்.அதற்கு பிறகு உச்ச பலனை இழந்துவிடும்.இதுபோன்ற தசை யோகங்களை எதிர்பார்த்த அளவு தருவதில்லை.
8) ராசியில் ஒரு கிரகம் உச்சம் பெற்று வக்கிரம் பெற்றால் அவை நீசம் அமைப்பை பெற்றுவிடும்.எனவை அத்தகைய தசை அமைப்புகள் யோகங்களை தருவதில்லை.
9) ராசியில் நல்ல ஸ்தானத்தை பெற்ற கிரகம் அம்சத்தில் பலவீனமடைந்திருந்தாலும் யோக பலனை தருவதில்லை.
10) ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று யோக அமைப்போடு இருந்தாலும் பாவிகள் சேர்க்கை,பார்வை மற்றும் பாவருடைய நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும் யோகங்களை தருவதில்லை.
எனவே எந்த ஒரு பலனை கூறுவதற்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து பலனுரைக்க வேண்டும்.
சோதிடரின் பணி உன்னதமானி பணி ஆகும்.நாம் சரியாக பலனுரைத்து அதற்குரிய உளவியல் ஆலோசனை வழங்கி தன்னம்பிக்கை ஊட்ட செய்யவைண்டும்.
சரியாக பலனுரைக்கும் பட்சத்தில் நம்மைவிட வயதில் அதிகமானோரும்,உயர்பதவியில் உள்ளோரும் மற்றும் வசதி படைத்தோறும் நம்மிடம் கை தூக்கி கும்பிடும்போது நாம் எவ்வளவு உன்னதமான பணியைச்செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.
வாழ்க வளமுடன்
சோதிடரின் பணி உன்னதமானி பணி ஆகும்.நாம் சரியாக பலனுரைத்து அதற்குரிய உளவியல் ஆலோசனை வழங்கி தன்னம்பிக்கை ஊட்ட செய்யவைண்டும்.
சரியாக பலனுரைக்கும் பட்சத்தில் நம்மைவிட வயதில் அதிகமானோரும்,உயர்பதவியில் உள்ளோரும் மற்றும் வசதி படைத்தோறும் நம்மிடம் கை தூக்கி கும்பிடும்போது நாம் எவ்வளவு உன்னதமான பணியைச்செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.
வாழ்க வளமுடன்
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
MSc,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
MSc,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ; 97 151 89 647
Cell: 740 257 08 99
Cell: 740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
( தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)
.Email
masterastroravi@gmail. com
...........
masterastroravi@gmail. com
...........

2nd Oct 1975, 1:50am, நாமக்கல். இவரது ஆன்மீக தேடலுக்கான பலன்கள் அடைவது எப்போது? இந்த பதில் தெரிய எவ்வளவு எங்கு அனுப்ப வேண்டும்
ReplyDelete