Sunday, 17 August 2025

தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர

 தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வர வேண்டும் "என்பார்கள் .

  அது என்ன நேரம் காலம் என்ன என்பதை ஜோதிட அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தால் ஜாதகருக்கு நடக்கும் 

நல்ல/கெட்ட தசா புக்திகளே மிகவும் முக்கியமான ஒன்றாகும்..


   நல்ல தசா புக்தி நடக்கும் காலங்களில் ஜாதகர் எதை செய்தாலும் தொட்டது பொன்னாகும்.அதே நேரத்தில் கெட்ட தசா புக்தி நடக்கும் பொழுது எதை தொட்டாலும் விளங்காமல் போவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.


 நல்ல நேரம் நடந்தால் நரி ஆட்டுடன் மேயும்.கெட்ட நேரம் வந்தால் புடலங்காயும் பாம்பாக தெரியும்.இது கிராமத்து சொல்லோடை ஆகும்.


 ஒருவருக்கு இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிராமங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தசை நடத்தும் போது அல்லது கோண அதிபதிகள் தசை நடக்கும் போது அவை லக்கன யோகம் தரும் தசைகளாக விளங்குகிறது.இந்த தசை காலங்களில் ஜாதகர் எந்த செயலை செய்தாலும் அவை நல்ல முறையில் செயல்பட்டு நல்ல பலனை வாரி வழங்குகிறது.


 ஒருவருக்கு இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,பாவி உடன் சேர்ந்த புதன் போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற கிரகங்கள் உடைய தசை நடக்கும் போது அல்லது ஆறு அல்லது எட்டுக்கு உடைய அவ யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் கடினமான கஷ்டங்களை அல்லது நஷ்டங்களை சந்திக்க நேரிடும். இது போன்ற பாவ அல்லது அவ யோக தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது எவ்வளவு அறிவு நிறைந்த மனிதராக இருந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விடுகிறது.


 ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவு,திறமை மற்றும் முயற்சி என பல வகைகளில் இருந்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் என்பது தேவையாக இருக்கிறது.சில நேரங்களில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பு இருந்து அறிவு மற்றும் திறமையானது மிகவும் குறைவாக இருந்தாலும் நல்ல யோக தசைகள் நடப்பில் இருந்தால் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.


 ஒருவருக்கு யோகம் தரும் தசைகள் வந்தால் அதை அனுபவிக்கவும் மற்றும் அவ யோகம் தரும் தசைகள் வந்தால் அதை தாங்கி கொண்டு எதிர் நீச்சல் போடவும் லக்கனம் மற்றும் அதன் அதிபதியும் வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 ஒரு கிரகம் யோகத்தை தரக்கூடிய கிரகமாக இருந்தாலும் அவை தேய்பிறை சந்திரன், சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அந்த கிரகம் தசை நடத்தும் போது யோகத்தை தராது.


ஒரு கிரகம் அவ யோகத்தை தரக்கூடிய கிரகமாக இருந்தாலும் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிச்சந்திரன் தலித்த புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த அவையப கிரகம் கூட அந்த தசையில் நல்ல பிறவி தரக்கூடிய அமைப்பாக மாறுகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

  097151 89647 


Another cell 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் ஃ



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment