Friday, 21 November 2025

கேது பகவான் தரும் யோக பலன்கள்.

 கேது பகவான் தரும் யோக பலன்கள்.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நிழல் கிரகங்களில் கேது பகவான் பாவ கிரக வரிசையில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவை இயற்கை சுப கிரகம் போலவே செயல்படுகிறது.ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை மட்டுப்படுத்துவது போல கேது பகவான் செய்ய மட்டார். கேது பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை உயர்த்தி தருவார்.


 கேது பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் உடன் இணைந்தால் இருள் கிரகமான சனி பகவானை சூட்சும வலுப்படுத்தி நல்ல பலனை தர வைப்பார்.கேது பகவான் உடன் இணைந்த சனி பகவான் இயற்கை சுப கிரகம் போல செயல்பட வைத்து அதன் பார்வை பலனும் பெரிய அளவிற்கு சர்வ நாசத்தை உண்டு பண்ணுவதில்லை. 


 கேது பகவான் ஆனவர் சனி உடன் இணைந்து குரு பகவானின் தொடர்பை பெற்றவர் ஆன்மீக யோகத்தை பெற்றவராக திகழ்வார்.குறிப்பாக கேது பகவான் சனி உடன் இணைந்து இரண்டு, ஐந்து,ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் நின்றால் நல்ல ஆன்மீக தேடல் ஜாதகரிடம் காணப்படும்.


இதே போல மற்றொரு பாவ கிரகமான செவ்வாய் உடன் இணைந்த கேது பகவான் ஆனவர் ஜாதகருக்கு சனி பகவானை போல சூட்சும வலுவினை தர வைப்பார்.


 கேது பகவான் உடன் இணைந்த செவ்வாய் பகவான் தனது பார்வை செய்யும் இடங்களை பாவ தன்மையை அடைய செய்வதில்லை.


 கேது பகவான் ஆனவர் இருக்கும் இடங்களையும் மற்றும் சேர்க்கை பெற்ற கிரகத்தையும் ராகு பகவான் அளவிற்கு கெடுதலை செய்வதில்லை.


 கேது பகவான் ஆனவர் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தாலும் ராகு பகவானை போல பெரிய அளவிற்கு கெட்ட பலனை கொடுப்பதில்லை.


கேது பகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்களில் நின்று குரு பகவானின் பார்வையை பெற்றால் சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்வதுடன் பரந்த தாராள குணம் படைத்தவராகவும் விளங்குவார்.


கேது பகவான் பன்னிரெண்டாம் இடத்தில் நிற்கும் போது முக்தி அடையும் யோகம் படைத்தவராக விளங்குவார்.


கேது பகவான் ஆனவர் சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று வீடுகளில் கேது பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


கேது பகவான் ஆனவர் சனி மற்றும் செவ்வாய் உடன் இணையும் போது அல்லது சனி அல்லது செவ்வாய் உடன் இணைந்த கேது பகவானை சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தாலும் கெட்ட பலனை ஜாதகருக்கு கேது பகவான் அள்ளிக் கொடுக்கிறது.இந்த மாதிரியான நிலைகளில் சூட்சும வலுவை கேது பகவான் தருவதில்லை.


இவ்வாறு கேது பகவான் பலவீனம் அல்லது பாவ தன்மையை அடையும் போது தமிழ்நாட்டில் கீழப்பெரும்பள்ளம் அல்லது ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி போன்ற ஸ்தலங்கள் சென்று எம் கண்ட நேரத்தில் வழிபட கேது பகவான் தரும் இன்னல்கள் களைந்து நல்ல பலனை தருகிறது.


 கேது பகவான் சுப தன்மையில் இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது ஆன்மீக வழியில் பொருள் தேட வைப்பார்.குறி சொல்லும் பூசாரி, கோவில் ஸ்தலங்களில் சாமி வழிபாடு பொருட்கள் விற்பனை செய்வது மற்றும் தீர்த்த யாத்திரை அழைத்து செல்வது மற்றும் ஆன்மீக சபை நடத்தி பொருள் கட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபட வைத்து அருள்பாலிப்பார்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


  097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி , புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment