புத்திசாலித்தனத்தை அள்ளித் தரும் புதன் பகவான்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் புத்திசாலியாக விளங்க வேண்டும் எனில் ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானின் அருளாட்சி அவசியமாக தேவைப்படுகிறது.
அறிவு ,புத்திசாலித்தனம், மற்றவர்களிடம் இருந்து மாறுபட்ட சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகிய
அனைத்திற்கும் புதன் பகவான் காரண கர்த்தாவாக விளங்குகிறார்.
ஒருவர் கணிதத்தில் சிறந்து விளங்கினாலே எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க இயலும் என்றார் அரிஸ்டாட்டில்.அதேபோல ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் சிறந்து விளங்கினார் என்றால் அவர் கணித அறிவிலும், கணினி அறிவிலும் சிறந்த நிலையில் விளங்குவார்.
ஒருவர் ஆலோசனை வழங்குவதில் மந்திரியாக திகழ்வது புதன் பகவான் ஆவார்.பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும்,புதிர்களை கண்டறிவதற்கும். புதன் பகவானுடன் பேராதரவு தேவைப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் வலிமை அடைந்து இருப்பின் அவர்கள் படிக்காமல் இருந்தாலும் பட்டறிவால் பார்த்தவுடன் கற்று கொள்ளும் ஞானம் படைத்தவராக இருப்பார்.
சிலை வடித்தல், சிற்பங்கள் செய்தல் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற நுண்கலைகளில் வல்லவராக திகழ்வார்.இதேபோல கூடை முடைதல், பாய் பின்னுதல் போன்ற கலைகளில் ஆர்வம் உடையவராக இருப்பார் .
பாடல் எழுதுதல் , கவிதை புனைதல், இசையில் ஆர்வம் போன்ற நிலைகளுக்கு புதன் பகவான் முக்கியமானவர் ஆவார்.
புள்ளி விவரங்களை சேகரித்தல், தலையங்கம் எழுதுதல், நிகழ்ச்சி தொகுப்பாளர்,மேடை ஏறி பேசுதல்,பட்டி மன்றம் பேசுதல் போன்ற திறமைகளை ஒருவர் பெற்றிருப்பதற்கு புதன் பகவானே காரண கர்த்தாவாக விளங்குகிறார்.
புதன் பகவான் ஆனவர் பாவ கிரகங்கள் உடைய தொடர்பினை பெறாத வரை இயற்கை சுப கிரகமாக விளங்குகிறது.மாறாக பாவரின் தொடர்பினை பெற்ற நிலையில் அவை இயற்கை பாவ கிரகமாக செயல்படுகிறது.
புதன் பகவான் ஆனவர் மிதுனம் மற்றும் கன்னி ஆட்சி வீடாகவும், கன்னி வீட்டில் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெறுகிறார். மீனம் வீட்டில் நீசம் அடைகிறார்.லக்கனத்தில் திக் பலம் பெறுகிறார்.
ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்கிறார்.புதன் பகவான் 17 ஆண்டுகள் அதன் தசை காலம் ஆகும்.
புதன் பகவானை பொறுத்தவரை சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள் ஆகும். ரிஷபம், துலாம்,மகரம் மற்றும் கும்பம் ஆகிய நட்பு ராசிகள் ஆகும்.
புதன் பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகமாகும் குரு , சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவை எதிர்
தன்மையான கிரகம் ஆகும்.
புதன் பகவான் லக்கனத்தில் திக் பலம் பெறுகிறார்.ஏழாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.
புதன் பகவான் சூரியன் உடன் இணைந்து அல்லது முன்பின் ஒரு ராசிகளுக்குள் இணைந்து காணப்படுவார்.எனவே இதனை
"உள் வட்ட கிரகம் "என்று அழைக்கப்படுகிறது.
புதன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் கால அளவு வாசம் செய்வார். மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களுக்கு வரக்கூடாத தசையாக புதன் பகவான் தசை அமைகிறது.
புதன் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக லக்கனங்களுக்கு நல்ல பலனை தர வேண்டும் எனில் அவை மேஷத்துக்கு ஆறாம் இடமும் ,விருச்சிக லக்னத்திற்கு எட்டாம் இடமும் அதிபதியாக வருவதால் இதனை அவ யோக தசையாக கருதுகிறோம்.
இவ்விரு லக்கனத்திற்கு நல்ல பலனை தர மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இடத்திற்கு ஆறு, எட்டாம் இடத்தில் மறைந்து நின்றால் அதன் தசையில் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
புதன் பகவான் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை உடைய கிரகமாகும். இவை கண்டுபிடிப்பின் நாயகன் ஆகும் புதிய ஒன்றை படைக்கவும் புதிய ஒற்றை கண்டுபிடிக்கவும் புதன் பகவானுடைய வலிமை மிகவும் முக்கியமானது ஆகும் புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும் ஆலோசனை வழங்குவதில் சாதுரியமான எண்ணம் படைத்தவராகவும் காணப்படுவார்.
ஒருவர் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கவும் , ஷேர் மார்க்கெட் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபத்தை அடையவும் , இணையத்தை பயன்படுத்தி பொருள் ஈட்டவும் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் மூளையாக செயல்படுவர் புதன் பகவானே ஆவார்.
ஒருவர் வங்கித் துறை , பொருளாதார துறை ,நிதி துறை போன்ற துறைகளில் பணி புரிய புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
ஜோதிட துறையில் இணையத்தை பயன்படுத்தி பெரிய அளவில் புகழ்பெற்ற சோதிடராக விளங்க புதன் பகவானுடைய சுபத் தன்மை அளவீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
சிக்கலான விளையாட்டு, புதிர் போன்றவற்றை தீர்வு காண புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
புதன் பகவான் உடன் சனி, செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடைய சேர்க்கை அல்லது பார்வை புதன் பகவானை பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறது. பாவியோடு சேர்ந்த புதன் பாவத்தன்மை அடைந்து விடுகிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment