Monday, 5 January 2026

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் உ

 ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் ? அல்லது இருக்க கூடாது ?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்கள் ஆகும்.இதேபோல சுக்கிரன், புதன் மற்றும் சனி பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்கள் ஆகும். 


    ஒருவருடைய ஜாதகம் யோக ஜாதகமாக திகழ நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர கோணங்களில் தொடர்பு பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.அதே போல பகை கிரகங்களின் தொடர்பு பெறாத நிலையில் இருக்க வேண்டும்.


லக்கனாதிபதி வலிமை பெற்ற நிலையில் இருக்க வேண்டும் தொடர்ந்து 

நடக்கும் தசை யோக தசையாக இருக்க வேண்டும் .


  ஜாதகத்தில் இரண்டு அணிகள் உள்ளன 

அதில் ஒன்று குரு அணி மற்றொன்று சுக்கிரன் அணி ஆகும்.

மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம்,தனுசு மற்றும் மீனம் ஆகிய வீடுகள் குரு அணியை சேர்ந்தவை ஆகும்.


ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு வீடுகளும் சுக்கிரன் அணியை சேர்ந்தவை ஆகும்.


   நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவான் குரு அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு குரு அணியை சேர்ந்த வீடுகளில் ராகு மற்றும் கேது பகவான் அமர்வது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பு ஆகும்.


  இதே போல சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு ராகு மற்றும் கேது பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த வீடுகளில் அமர்வது நல்லது ஆகும்.


   ஒருவருடைய ஜாதகத்தில் பெரும்பாலன கிரகங்கள் குரு பகவானின் பார்வை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.அல்லது வளர்பிறை சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் நின்று சந்திரன் அதி யோகம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும். 


  ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் வீடு கொடுத்தவன் வலிமை பெற்ற நிலையில் அந்த குறிப்பிட்ட கிரகம் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளி கொடுக்கிறது.


பொதுவாக பாவ கிரகங்கள் ஸ்தான‌ வலிமை பெறாமல் அதே நேரத்தில் திக் பலம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.உதாராணமாக துலாம் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி நீசம் பெற்று ஸ்தான பலம் இழந்து திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.பத்தாம் இடத்தில் செவ்வாய் நீசம் அடைந்து ஸ்தான பலம் இழந்து பத்தாம் இடத்தில் திக் பலம் அடைந்து இருக்க வேண்டும்.


 கிரகங்கள் ராசியில் எப்படி இருந்தாலும் அவை அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் அந்த கிரகம் தரும் பலன்கள் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.குரு பகவான் வீடுகள் ஆன தனுசு, மீனம், சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் போன்ற வீடுகள் ஏறி நிற்பது சுப வர்க்கம் ஆகும்.சனியின் வீடுகளாக விளங்கும் மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளிலோ அல்லது செவ்வாய் பகவான் வீடுகளாக திகழும் மேஷம் மற்றும் விருச்சிகம் வீடுகளிலோ ஏறி நின்றால் அது பாவ வர்க்கம் ஆகும்.


முக்கியமாக கிரகங்கள் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இருக்க வேண்டும்.


ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீசம் அடைந்து இருந்தாலும் வீடு கொடுத்தவன் பலம் இழந்த நிலையில் அந்த கிரகம் நடத்தும் தசை யோக பலனை அள்ளி தராது.


லக்கனாதிபதி பலம் இழந்து நிற்க கூடாது .


பிறப்பிலிருந்து தொடர்ந்து அவ யோகத்தை தரும் கிரக தசைகள் தொடர்ந்து வர கூடாது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்).



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment