சமூக ஊடகங்களில் தரப்படும் ஜோதிட கருத்துக்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
ஜோதிடம் தொடர்பான கருத்துக்கள் பல முகநூல் வழியாகவும், யூடியூப் சேனல் வழியாகவும் மற்றும் இணையத்தின் வழியாகவும் தரப்படுகிறது இவ்வாறு தரப்படக்கூடிய அனைத்து கருத்துக்களும் சோதிடம் தொடர்பான பொது கருத்துக்களே ஆகும்.
யூடியூப் சேனலில் இன்று ஜோதிடத்தை முறையாக படித்து தொழில் முறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் படைத்த ஜோதிடர்கள் மூலமாக யூடியூப் வீடியோவில் தரப்படும் கருத்துக்கள் நிச்சயம் சரியானதாக இருக்கும்.இது போன்ற அனுபவம் நிறைந்த சோதிடர்களால் தரப்படும் ஜோதிட கருத்துக்களும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.இதனை அவரவர் ஜாதகத்தில் ஒப்பிட்டு பார்த்து தான் பலனை முடிவு செய்ய வேண்டும்.
யூடியூப் வீடியோவில் தரப்படும் ஜோதிட விதிகள் அனைத்திலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப விதி விலக்குகளும் உண்டு.
ஆதலால் யூடியூப் மற்றும் முகநூல் பதிவுகளில் தரப்பட்ட ஜோதிட பொது விதிகளை பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவர் அதே போன்ற அமைப்பு தன்னுடைய ஜாதகத்திலும் உள்ளது என்று அதை அப்படியே நம்பி பயப்படவோ அல்லது மற்றவரை சந்தேகப்படவோ கூடாது.
ஜோதிட பொது விதிகள் அவரவர் லக்கனம் மற்றும் நடக்கும் தசா புக்திகளுக்கு ஏற்ப மாறுபடும் என்ற உண்மையை புரியாமல் நீங்களே பலன்களை முடிவு செய்து கொண்டு பயப்பட வேண்டாம். "
"Self medicine is dangerous" ..
ஒரு நோய்க்கு எடுத்து கொள்ளும் மருந்தானது நோயின் தன்மை,நோயாளியின் உடல் நிலை போன்ற பல விவரங்களை ஆய்வு செய்து மருந்தானது கொடுக்க வேண்டும்.எல்லா காய்ச்சலுக்கும் ஒரே மாதிரியான மாத்திரை கொடுத்தால் சரியாகது.
கால்பால் மாத்திரை காய்ச்சலுக்கு கொடுத்தால் குணமாகும் என்றாலும் டெங்கு காய்ச்சலுக்கு கொடுத்தால் குணம் ஆகாது.
இது போல் தான் ஜோதிட விதிகள் என்பது அவரவர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் அமைந்த டிகிரி நிலை , கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை,வீடு கொடுத்தவன் வலிமை,லக்கன நிலை , அம்சத்தில் கிரக நிலை மற்றும் நடக்கும் தசா புக்தி போன்ற பலவற்றை சார்ந்து தான் ஜோதிட பலன்கள் அமைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜாதகரின் அப்பா இறப்பதற்கான ஜாதக அமைப்பு பற்றி ஒரு ஜோதிடர் யூடியூப் வீடியோ மூலமாக விளக்கம் தரும் பொழுது அதே போன்ற ஜாதக அமைப்பு உங்கள் மகன் ஜாதகத்தில் இருந்தால் உடனே நீங்கள் தான் இறந்து விடுவோம் என பயப்பட தேவையில்லை..
ஒரே அமைப்பு இருந்தாலும் உங்கள் லக்கனம் வேறு அவரது ஜாதக லக்கனம் வேறாக இருக்கும்.இதே போல ராசி மாறுபடும்.கிரக கலப்பினம் மாறுபடும்.நட்க்கும் தசாபுத்தி மாறுபடும்.எனவே ஜாதக பலன்களும் நிச்சயமாக மாறுபடும்.இதே போல அம்ச நிலை மாறுபட வாய்ப்பு உண்டு.ஆதலால் ஜாதக பலனில் மாற்றம் உண்டாகும்
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment