Wednesday, 25 February 2026

கெட்ட பலனை தராத கேது பகவான்

 கெட்ட பலனை தராத கேது பகவான்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கேது பகவான் ஒரு  இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் ஒருவர் ஜாதகத்தில் எந்த சூழ்நிலையிலும் கெட்ட பலனை தராத கிரகமாகவே செயல்படுகிறது.


 கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை  பாதிப்பது கிடையாது.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரிக்க செய்வார்.கேது பகவான் குரு பகவான் உடன் இணையும் போது கேள யோகம் என்னும் கோடீஸ்வர யோகம் என்றாலும் எல்லோருக்கும் இந்த யோகமானது பலனை  தந்து விடுவது கிடையாது.


   கேது பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு தருகிறது.கேது பகவான் உடன் இணைந்த சனி பகவான் தனது இயல்பான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர் சனி பகவான் உடன் இணைந்து 2,5,9,12 ஆம் இடத்தில் நின்று குரு பகவானின் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகரை ஆன்மீக வழியில் ஈடுபாடு உடையவராக மாற்றுகிறது.


   இதேபோல் கேது பகவான் மற்றொரு முக்கால் பாவ கிரகமான செவ்வாய் பகவான் உடன் இணைந்த நிலையில் சூட்சும வலிமை என்னும் மறைமுக வலிமையை ஜாதகருக்கு கொடுக்கிறது.

கேது பகவான் உடன் இணைந்த பாவ கிரகமான செவ்வாய் பகவான் ஜாதகருக்கு கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுப்பது கிடையாது.


    கேது பகவான் ஆனவர்  ஒளி கிரகங்களாக திகழும் 

சூரியன் மற்றும் சந்திரன் உடன் இணையும் பொழுது ராகு பகவான் அளவிற்கு கிரகண தோஷத்தை கொடுத்து பலவீனமான நிலையை அடைய செய்வதில்லை.


 சூரியன் உடன் கேது இணையும் போது சூரியன் பகவான் தரும் தலைமை பண்பை அதிகரிக்க செய்வார்.சிலரை ஆன்மீக குருவாக அல்லது அரசியல் குருவாக செயல்பட செய்வார்.சூரியன் மற்றும் கேது பகவான் இணைவானது தலைமை பண்பை ஜாதகருக்கு அதிகரிக்க செய்யும்.அப்பா வழி உறவுகளால் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை..அரசாங்க ஆதரவை தர செய்வார்.


    மன நிலை காரகன் சந்திரன் உடன் கேது இணையும் பொழுது மனநிலை பாதிப்பை தர வைப்பதில்லை.யூகித்து அறியும் சக்தியை ஜாதகருக்கு கொடுக்கிறது.தாய் வழி உறவுகளால் ஆதரவு கிடைக்கும்.ஆன்மீக ஈடுபாடு உண்டாகும்.சந்திரன் இணைந்த கேது பகவான் ஆனவர் ராகு பகவான் அளவிற்கு திருமண தடையை தந்து விடுவதில்ல


    வித்தை காரகன் புதன் பகவான் உடன்    கேது பகவான் இணையும் போது வித்தையில் சாதுர்யம், புத்திசாலித்தனம், ஜோதிட ஆர்வம், கணினி ஈடுபாடு போன்றவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.


    சுக்கிரன் பகவான் உடன் கேது பகவான் இணையும் போது ராகு பகவான் அளவிற்கு களத்திர தோஷத்தை தந்து விடுவது கிடையாது.தாம்பத்திய சுகத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக அங்கீகாரம் பெற்ற வாழ்க்கை துணை உடன் மட்டுமே அனுபவிக்கும் எண்ணத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவான் அதிக சுப தன்மை பெற்ற நிலையில் ஆன்மீக வழியில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.. கோவில் அருகே சாமி வழிபாட்டு பொருட்களை வைத்து கடை நடத்துபவராக இருப்பார்.சாமி படங்கள் வைத்து விற்பனை செய்பவராக திகழ்வார்.


 கேது பகவான் தரும் தோஷங்களை போக்க கீழபெரும் பள்ளம்  மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள  காளஹஸ்தி போன்ற இடங்களில் எம கண்டத்தில் வழிபாடு செய்து கேது பகவான் தரக்கூடிய தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.


கேது பகவான் சனியின் வீட்டில் இருந்து செவ்வாய் பகவான் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது செவ்வாய் பகவான் வீட்டில் இருந்து சனியின் பார்வையினை பெற்றிருந்தாலோ அல்லது கேது பகவான் உடன் தேய்பிறை சந்திரன் அல்லது சனி , செவ்வாய் இருவரும் சேர்க்கை பெற்றோ அல்லது தனி தனியாக பார்வை செய்தாலோ கடுமையான கஷ்டங்களை கொடுத்து வாழ்வின் மீது பற்று அற்று வாழும் சந்நியாச நிலைக்கே ஜாதகரை கொண்டு சென்று விடும் நிலைக்கு கேது பகவான் செயல்படுவார்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment