Friday, 21 November 2025

குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்லும் ஜாதகம்

 குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்லும் ஜாதகம் .




(என்னிடம் ஜாதக பலன் பெற்ற உதாரண ஜாதகம். விளக்கம்.)


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் பற்றி தெரிந்து கொள்ள கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய ஜாதகத்திலும் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம், புத்திர ஸ்தான அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூன்று வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 என்னிடம் ஜாதகம் பார்க்க ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் நின்று ஐந்தாம் இடத்தை சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் நின்று பார்வை செய்யும் நிலையில் புத்திர பாக்கியம் கால தாமதமாக ஆகி கொண்டு செல்கிறது.ஆனால் இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் எவ்வித பங்கமும் அடையாத நிலையில் குழந்தை பாக்கியம் கட்டாயம் இருக்கும் என சொல்லி அனுப்பினேன்.


  என்னிடம் ஜாதகம் பலன் பெற வந்த மற்றொருவர் ஜாதகத்தில் மீனம் லக்கினம் மற்றும் ராசி ஆகிய நிலையில் ஐந்தாம் இட அதிபதி சந்திரன் பகவான் செவ்வாய் உடன் இணைந்து ஆறாம் இடமான சிம்மத்தில் இருக்க கும்பத்தில் உள்ள சனி பகவான் தனது சம சப்தம பார்வையில் புத்திர ஸ்தான அதிபதி சந்திரனை பார்வை செய்ய ,

செவ்வாய் பகவான் ஆனவர் சந்திரன் உடன் இணைந்து இருக்க அதாவது புத்திர ஸ்தான அதிபதியுடன் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவ கிரகங்கள் தொடர்புடன் இருக்க சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் விருச்சிகம் வீட்டில் உள்ள குருபகவானை பார்வை செய்ய புத்திர பாக்கியம் கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


என்னிடம் ஜாதக பலன் பெற வந்த மூன்றாம் நபரின் ஜாதகத்தை பார்போம்.ரிஷப லக்கனம் இரண்டாம் இடத்தில் செவ்வாய், ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் எட்டாம் இடத்தில் புதன் பகவான் மற்றும் பதினொன்றாம் இடத்தில் சனி,கேது மற்றும் சந்திரன்.


 மேற்கண்ட இந்த ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் நின்று மிதுனத்தில் உள்ள செவ்வாய் பகவான் தனது நான்காவது பார்வையால் புத்திர ஸ்தானத்தை பார்வை செய்ய ,மீன வீட்டில் உள்ள சனிபகவான் தனது சம சப்தம பார்வையால் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் அதில் உள்ள ராகு பகவானை பார்வை செய்கிறது. ஆக ஐந்தாம் இடத்திற்கு சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரின் தொடர்பு ஏற்பட்டு மிகுந்த பாவத்துவம் அடைகிறது.


 இவை மட்டுமல்லாமல் புத்திர ஸ்தான அதிபதி புதன் பகவான் செவ்வாய் பகவானுடைய ஏழாவது பார்வையும் மற்றும் சனி பகவானுடைய பத்தாம் பார்வையும் பெற்று புத்திர ஸ்தான அதிபதியும் பாவத்தன்மை அடைந்து பலவீனம் அடைந்து விட்டார்.


இந்த நிலையில் புத்திர காரகன் குரு பகவான் நீசம் அடைந்த நிலையில் ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காரகன் ஆகிய மூன்றும் கெட்டு போன் நிலையில் புத்திர தோஷம் கடுமையான நிலையில் உள்ளது..


 லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் நிற்பதும் அந்த ஸ்தான அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகியவற்றுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ள கொள்ளும் பொழுது கடுமையான புத்திர தோஷம் தருகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் 'போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     MmSc,M.A, BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் , ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment