உங்கள் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் எப்படிப்பட்ட வாழ்க்கை நிலை கொண்டவராக இருப்பார் என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலை அமைப்புகளை ஆய்வு செய்து பார்த்து கண்டறியலாம்.
உங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள் முதலில் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் எப்படிப்பட்ட வரன் அமையும் என்பதை தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றார் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.
பிறகு தங்களது மகனுக்கு / மகளுக்கு வரக்கூடிய ஆண்/ பெண்ணின் ஜாதகம் கிடைத்தால் அதனை நன்கு கணித்து பார்க்கும் ஜோதிடரிடம் கொண்டு போய் அந்த ஆண / பெண் ஜாதகத்தினை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் அடிப்படையில் லக்கனம் அதன் அதிபதிகளை துணையாக கொண்டு நடக்கும் தசா புக்திகள் உடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற ஜோடியை நன்கு ஆராய்ந்து கண்டறியலாம்.
இவ்வாறு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து பார்க்காமல் வெறும் நட்சத்திரம் பொருத்தங்களை மட்டுமே வைத்து கொண்டு செய்யும் திருமணங்கள் தான் பெரும்பாலும் தோல்விகளிலும் மற்றும் பிரச்சினைகளிலும் சென்று முடிகிறது.
இதே போல புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைத்தால் உங்கள் ஜாதகப்படி எந்த தொழில் செய்தால் சால் சிறந்தது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இதற்கு உங்கள் ஜாதகத்தில் நவ கிரகங்களில் எந்த கிரகம் அதிக சுபத்துவ படிநிலை கொண்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.அதனை கண்டறிந்து அவை ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.மேலும் தொழில தொடங்க உகந்த காலம் எது என்பதை தசா புக்தி அடிப்படையில் லக்கனாதிபதி வலிமை போன்ற படி நிலைகளை கொண்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இதே போல கல்வி கற்கும் உங்கள் பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் எந்த துறையினை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதை ஜாதகத்தில் உள்ள எந்த கிரகம் அதிக சுபத்துவ படிநிலை கொண்டு தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் கிரகங்கள் சார்ந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் எதிர் காலத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர் ஆக திகழலாம்.
திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் தாமதம் ஆகி கொண்டு செல்கிறதா ? உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணைவர் ஆகிய இருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூன்று வகைகளில் நடக்கும் தசா புக்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து குழந்தை பிறப்பு பற்றிய கேள்விகளுக்கு விடை தரலாம்.
நீங்கள் வீடு மற்றும் நான்கு சக்கர வாகனம் போன்றவை வாங்க வேண்டும் எனில் உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் கார்க் கிரகமான சுக்கிரன் ஆகிய மூன்றையும் நடக்கும் தசா புக்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகியவை பொறுத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் தந்தை நிலையினை பற்றி அறிந்து கொள்ள ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமான சூரியன் ஆகிய மூன்றையும் நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்னாதிபதி வலிமையுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் சூரியனுடன் சனி அல்லது ராகு இணைந்து இருப்பதால் அல்லது சனி பார்வை செய்வதோ ஒன்பதாம் இடத்தில் சனி அல்லது ராகு இருப்பது தந்தை மகன் உறவு நிலையை பாதிக்கும்..
உங்கள் ஜாதகத்தில் உங்களது தாய் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள தாய் ஸ்தானமான நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமான சந்திரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
சந்திரன் உடன் ராகு அல்லது சனி இணைவு அல்லது பார்வை தாய் உறவு நிலை பாதிப்பு அடைய செய்கிறது.நான்காம் இடம் அதன் அதிபதி நிலையை பொறுத்து பாதிப்பு நிலை அமைகிறது
ஒருவர் வெளி நாடு செல்வதற்கு பார்க்க வேண்டும் எனில் ராசி மற்றும் லக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் சுப தன்மை உடன் இருக்க கூடிய சூழ்நிலையில் நடக்கும் தசா புக்தி அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கான யோக அமைப்பு அமைகிறது..
அரசு வேலை கிடைக்குமா ? என்ற ஆராய்ச்சிக்கு உங்கள் ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதி சூரியன் வலிமை அடைந்து இருக்க வேண்டும்.நட்க்கும் தசை புக்தி ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.உங்கள்
.jpeg)

No comments:
Post a Comment