திருமண பொருத்தம் என்பது.....
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இன்று காலை எங்கள் கோயிலுக்கு சென்றேன்.அங்கே எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர். " ஆண் -பெண் இருவருக்கும் பரணி நட்சத்திரம் திருமணம் செய்து கொள்ளலாமா ? "என்று கேட்டார்.
நான் அவரிடம்"பெரும்பாலும் நட்சத்திரத்தை வைத்து கொண்டு பொருத்தம் பார்ப்பது தவறு ? " என்று கூறினேன்.
இருவருக்கும் ஒரே நட்சத்திரம் என்பதால் நட்சத்திரம் அடிப்படையில் பொருத்தம் இருக்கும்.ஆனால் இருவருக்கும் மேஷ ராசி வருவதால் கோச்சார அடிப்படையில் இருவருக்கும் ஏழரை சனி ஆரம்பமாகி இருக்கும்.மேலும் இருவருக்கும் ராசி நாதன் செவ்வாய் என்பதால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து போகும் தன்மை இருக்காது.
எனவே இது போன்ற நிலையில் இவர்களுக்கு இடையே திருமண பந்தத்தில் ஈடுபட வைக்கும் போது ஏழரை ஆண்டுகளில் மூன்றே முக்கால் ஆண்டு தம்பதிகளுக்கு இடையே போட்டியும், போராட்டமும் நிறைந்த வாழ்க்கையாக அமைந்து விடும்.மேலும் தசாபுத்தி ஆறு அல்லது எட்டுக்கு உடைய தசாபுத்தி அல்லது அவ யோக தசாபுத்தி நடப்பில் இருப்பின் இன்னும் கூடுதலான கஷ்டங்களை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.
இது போன்ற நிலையில் எதோ ஒரு ஜோதிடர் நட்சத்திரம் பொருத்தம் உள்ளது என்றவுடன் மகிழ்ச்சியாக பெண் வீட்டில் உறவினர்கள் மற்றும் பங்காளிகள் உடன் சென்று நிச்சயித்து விட்டார்கள்.அதன் பிறகு சிறிய சந்தேகம் அடிப்படையில் பல ஜோதிடர்களிடம் சென்று பார்வை செய்த போது பெரும்பாலான ஜோதிடர்கள் இவர்கள்இருவருக்கு இடையே திருமணம் செய்து வைக்க கூடாது என்று கூறி உள்ளார்கள்.அதன் பிறகு திருமண பந்தத்தில் ஈடுபட விடாமல் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.
இந்த நிலையில் பெண்ணின் வீட்டிற்கு உறவினர்கள் சகிதமாக சென்று பொட்டு வைத்து விட்டு இதுதான் உனது கணவன் என்ற மனநிலையை உருவாக்கி பிறகு பொருத்தம் இல்லை என்பது இன்றைய சமூகத்தில் ஆண் வீட்டிற்கு பெரிய கஷ்டம் கிடையாது .
அதேநேரத்தில் பெண் வீட்டில் தான் மிகுந்த வேதனை நிறைந்த நிலையில் இருக்கும்.
எனவே வெறும் நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து வைக்க கூடாது.கட்ட அடிப்படையில் கிரக கலப்பினம் பார்க்க வேண்டும்.நடக்கும் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்களை ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்..
அதன் பிறகு பெண் வீடு அல்லது மாப்பிள்ளை வீடுகள் சென்று பார்த்து எல்லாம் சரியாக இருந்த பிறகு திருமண நிச்சயதார்த்தம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
சில நேரங்களில் திருமண பொருத்தம் பார்க்க செல்லும் பெற்றோர்கள் இருவருடைய ஜாதகத்தை தனி தனியாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது பெண் மற்றும் மாப்பிள்ளை உடன் பிறந்த பிறப்பு வளர்ப்பு எண்ணிக்கை தொடர்பான கேள்விகள், பெண் அல்லது மாப்பிள்ளை வீட்டு திசை போன்ற கேள்விகளை தவிர்த்து பிறகு பயனுள்ள கேள்விகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்.
கணவன் மனைவி உயிர் நிலை, குழந்தை பாக்கியம்,ஒற்றுமை உணர்வு , விட்டு கொடுத்து போகும் தன்மை மற்றும் யோக நிலை முதலியன.தொடர்பான கேள்விகளை கேட்டு சரி செய்து கொள்ளுங்கள்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & gpay no
097151 89647
Another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.




.jpeg)







.jpeg)

.jpeg)

.jpeg)



