Thursday, 20 November 2025

கிரகங்கள் எப்படி ஜோதிட பலனை தருகிறது.

 கிரகங்கள் எப்படி ஜோதிட பலனை தருகிறது .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருந்து தரும் பலனை போன்று மற்றவர்கள் ஜாதகத்திலும் அதே மாதிரியான நிலையில் இருந்தாலும் ஒன்று போல் ஜாதக பலனை தந்து விடுவது கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


 இது போன்ற ஜோதிட பலன் ஜாதகரை பொறுத்து மாறுபட கூடிய பல்வேறு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


     1.  ஒரு கிரகம் ஒரு வீட்டில் எத்தனை டிகிரியில் உள்ளார் ,வீடு கொடுத்தவன் யார் ?  அவர் இயற்கை சுபரா? பாவரா?


       2.  எந்த கிரகம் பார்வை செய்கிறது ? அவர் எப்படி பட்டவர்? அவரும் இயற்கை சுபரா? அல்லது பாவரா? 


      3.எத்தனை  கிரகத்துடன் எத்தனை டிகிரி அளவில் இணைந்து உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.இதில் எட்டு பாகைக்குள்ளாக இணைந்து இருப்பின் இணைந்து உள்ள கிரகத்தால் முழுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.  பதின்மூன்று பாகைக்கு உள்ளாக இணைந்த நிலையில் ஐம்பது சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகும். 

இருபத்தி ரெண்டு பாகை அளவில் இணைந்த நிலையில் இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.ஒருவரை ஒருவர் எவ்வித பாதிப்பும் அடைவதில்லை.


  ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் இயற்கை சுப கிரகம் இணைந்து இருப்பின் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகமானது சுப தன்மையை அடைந்து விடுகிறது.பாவருடன் இணைந்து இருப்பின்  பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


4)    இவை தவிர அந்த ஒரு குறிப்பிட்ட கிரகமானது அம்ச வீட்டில் சுப வர்க்கம் ஏறி இருக்கிறாரா ? அல்லது பாவ வர்க்கம் ஏறி உள்ளாரா ? என்பதை கவனிக்க பட வேண்டும்.ஒரு வேளை ராசியில் ஒரு குறிப்பிட்ட கிரகமானது பலவீனம் அடைந்து இருந்தாலும் அம்சத்தில் சுப வீடு. ஏறி இருந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


    4) நடக்கும் தசா புக்தி என்ன ? நடக்கும் தசா புக்திக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகத்துக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது.


 இது போன்ற பல்வேறு வினாவுக்கான விடை தேடும் போது தான் இந்த பலனில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணம் புரிகிறது


  5)      ஒப்பிடக்கூடிய இருவர் ஜாதகத்திலும் மீனம் வீட்டில் குரு பகவான் இருந்தாலும்  இருவருக்கும் குரு பகவான் ஒரே மாதிரியான ஜாதக பலன்களை தந்து விடுவது கிடையாது..


 ஒருவர் ஜாதகத்தில் மீனம் வீட்டில் உள்ள குரு பகவானை சனி பகவான் பார்வை செய்தால் பாவத்துவமான குரு பகவான் ஒரு மாதிரியான பாவத்துவமான பலன்களையும் மற்றும் அதே குரு பகவானை வளர்பிறை சந்திரன் கேந்திரத்திற்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் வீட்டில் குரு பகவான் இருந்தபோது சந்திரன் அதியோகத்தில் சுபத்துவ தன்மையை அடைந்து நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு உட்படுகிறது.


6) ஒரு தசை அவ யோக தசையாக நடப்பில் இருந்து  கோச்சார அடிப்படையில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பில் இருக்கும் அந்த கிரகம் தரும் யோக பலனை குறைக்கிறது.


 கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடைபெறும் காலத்தில் யோக தசை நடப்பில் இருந்தால் கோச்சார பலன்களிள் பாதிப்பு ஆனது பெரிய அளவிற்கு பாதிப்பை தருவதில்லை.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

No comments: