Monday, 17 November 2025

வீடு மனை அமைய ஜாதக அமைப்பு

 வீடு மனை அமைய சாதக அமைப்பு.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு ஜாதகத்தில் சொந்தமாக வசிக்கும் வீடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் இடத்தையும் அதன் அதிபதியையும் மற்றும் வீட்டிற்கு காராக கிரகமான சுக்கிர பகவானையும், வீட்டு மனைக்கு காரகக்கிரகமான செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


        1) ஒருவர் ஜாதகத்தில் நான்காம் அதிபதி நான்காம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பது நல்லது.


         2) நான்காம் இடத்தில் சனி செவ்வாய், ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் மற்றும் நான்காம் இடத்தை சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்க்காமல் இருப்பது நல்லது.


 3) நான்காம் இடத்தில் கேது மாந்தி நின்று நான்காம் அதிபதியும் கெட்டுப் போனால் சொந்த வீடு அமையாது.


   3) நான்காம் இடத்திற்கு இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன் ,தனித்தபுதன் மற்றும் சுக்கிரன் இடம்பெறுதல் அல்லது பார்வை செய்தல் நல்லது


4) செவ்வாய் கிரகத்தை குரு பார்ப்பது, சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை ஏற்படுத்துவது .நான்குக்குடையவரும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது அல்லது ஒருவரை ஒருவர் பரிவர்த்தனை பெற்று நிற்பது.


5) நான்குக்கு உடையவனை செவ்வாய் பார்வை செய்வது . நான்காம் இடத்துக்கு உரியவன் நீச பங்க ராஜயோகம் பெறுவது.


6) எந்த வகையிலும் நான்காம் இட அதிபதி 6,8 ஆம் துர் ஸ்தான இடங்களில் சம்பந்தம் பெறாமல் இருப்பது நல்லது.


7) நான்காம் அதிபதி வலிமை அடைந்து நான்காம் இடத்திற்கும் மற்றும் அதன் அதிபதிக்கும் குருவின் பார்வை கிடைப்பது.


8) நான்காம் இடத்துடன் சுபத்துவமான நிலையில் எத்தனை கிரகங்கள் தொடர்பு கொண்டு உள்ளதோ அத்தனை வீடு கட்டும் யோகம் உண்டாகும்.


9) ஆடம்பரமான பங்களா போன்ற வீடு அமைவதற்கு சுக்கிரன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.சுக்கிரன்‌ பகவான் பலமடைந்து இயற்கை சுப கிரகங்கள் பார்வை பெற்ற நிலையில் பங்களா போன்ற வீடு அமையும் யோகம் உண்டாகும் 


10) நான்காம் இடம், அதன் அதிபதி மற்றும் நான்காம் இடத்திற்கு உரிய காரக கிரகம் சுக்கிரன் ஆகிய மூவரும் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல யோக தசைகள் நடப்பில் இருக்கும் காலத்தில் நல்ல ஆடம்பரமான வீடு அமையும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

  097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: