Monday, 17 November 2025

மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய

 மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய...




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


"அன்பான மனைவி 

அழகான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் 

நேசம் ஒரு கோடி

நெஞ்சமேனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே !"


 ஒரு மனிதன் வாழ்க்கையில் நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அவனது வாழ்க்கை சந்தோஷ சாம்ராஜ்யம் ஆகிவிடும்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட 


"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது "என்கிறார்.


    அன்பான மனைவி அமைந்தால் எப்படி இல்வாழ்க்கை இருக்கும் என்பதை கூறிய அதே திருவள்ளுவர் அன்பு இல்லாத மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை கீழ்கண்ட குறள் மூலம் அழகாக படம் பிடித்து காட்டுகிறார்.


"அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கன் வற்றல் மரம் தளிர்த்தற்று".


 அன்பு இல்லாத அல்லது மகிழ்ச்சி இல்லாத மண வாழ்க்கை ஆனது வறண்ட பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்தால் பயனற்றதாகவும் நிலையற்றதாகவும் இருக்கும் அது போல அமைந்து விடும் 


 இவ்வாறு அன்பு அகத்தில் இல்லாத மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் மூதாட்டி பின்வருமாறு பாடலாக தெரிவிக்கிறார்.

 

தமிழ் மூதாட்டி ஒளவையார் 


"பத்தாவுக்கேற்ற

பதிவிரதை

உண்டானால்

எத்தாலுங் 

கூடி இருக்கலாம் 

சற்றேனும் 

ஏறுமாறாக

இருப்பாளே

யாமாகிற்

கூறாமல் 

சந்நியாசம் 

கொள்ள"


 கட்டிய மனைவி ஏறுக்கு மாறானால் சற்றேனும் வெட்கப்படாமல் சன்னியாசி ஆகி விடு என்கிறார்.


 நாம் இந்த பதிவில் மகிழ்ச்சியான

 மண வாழ்க்கை அமைய என்ற தலைப்பின் கீழ் விளக்கமாக மற்றும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.


 "குத்து விளக்காக குல மகளாக

 நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் 

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் 

என் வானிலே நீ வெண்ணிலா!

நட்சத்திரம் உன் கண்ணிலா!"


   ஒருவர் ஜாதகத்தில் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய வேண்டுமென்றால் அவர்கள் ஜாதகத்தில் திருமண ஸ்தானம் என்று அழைக்க கூடிய இலக்கணம் என்ற ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய பாவ கிரகங்கள் இடம் பெறாமல் 1,2,7,8 ஆம் இடங்களில் பாவ கிரகங்கள் பார்வை செய்யாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் நன் முறையில் சுப தன்மை உடன் அமைந்து இருக்க வேண்டும்.


        ஜாதக கட்டத்தில்.1,2,7,8 ஆம் அதிபதிகளான லக்கனாதிபதி ,குடும்ப அதிபதி ,களத்திர ஸ்தான அதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தான அதிபதி ஆகிய நால்வரும் பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை தொடர்பை பெறாமல் சுப கிரக பார்வை மற்றும் சேர்க்கை தொடர்பு பெற்றிருக்க வேண்டும் இவ்வாறு பெற்றிருந்தால்

மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.


  தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் கேந்திர, கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க கூடிய தன்மை உண்டாகும்.


 நிறைவான தாம்பத்ய சுகத்தை அனுபவித்த நிலையில் தம்பதிகளுக்கு இடையிலான நல்ல மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைந்து விடுகிறது.பல பிரச்சினைகளுக்கு மூல வேர் ஆக திகழ்வது இந்த தாம்பத்ய சுக திருப்தியின்மையே ஆகும்.


 இதன் பிறகு எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைவதற்கு லக்கனாதிபதியின் வலிமையும் மற்றும் நல்ல யோக தசா புத்திகளும் முழு முதல் காரணமாக விளங்குகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


   097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: