Wednesday, 7 January 2026

ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.

 ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  

   ஒருவர் ஜாதகத்தில் என்ன தான் கிரகங்கள் பலம் அடைந்து சுப தன்மை உடன் இருந்தாலும் அந்த கிரகங்கள் அதன் தசையில் மட்டும் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.அந்த குறிப்பிட்ட கிரக தசை வராத பொழுது அந்த பலம் மற்றும் சுப தன்மை அடைந்து இருந்தாலும் அதற்கு உரிய பலனை அடைய இயலாது.


அவ்வாறு குறிப்பிட்ட கிரகம் அதன் தசை நடைபெறும் பொழுது நல்ல பலனை தர வேண்டும் எனில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் அடைந்து பாவ தன்மையை அடையாமல் இருக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட கிரக தசை வரவில்லை எனில் அதன் புக்திகளில் நல்ல பலனை தருமா ? தராதா? என ஆய்வு செய்து பார்த்தால் ஒரு தசை நடக்கும் போது தசா நாதன் மட்டும் முதலாளி போல் ஆகும்.புக்தி நாதர்கள் தசா நாதன் இட்ட வேலையை செய்யும் ஏவளாளிகள் தான் புக்தி நாதர்கள் ஆவார்.


 ஒருவர் ஒரு துறையில் உயரிய இடத்தில் இருப்பதற்கும் அல்லது படிப்பதற்கும் லக்கனாதிபதி வலிமை மற்றும் நடக்கும் தசா புக்தி ஆகிய இரண்டையும் வைத்து தீர்மானிக்கப்படுகிறது.


  கிரகங்களின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப ஒரு ஜாதகருக்கு கிடைக்கக்கூடிய ஜாதக பலன் அமைகிறது.


 ஒரு கிரகம் நல்ல ஸ்தான வலிமையை பெற்று கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் வீடு கொடுத்த கிரகமும் நல்ல பலம் அடைந்த நிலையில் ஜாதகருக்கு நல்ல பலனை அளிக்கிறது.


ஒரு கிரகம் ஒன்றில் நின்றால் நல்ல பலனை தருமா ? அல்லது பத்தில் நின்றால் நல்ல பலனை தருமா ? என்று இது போன்ற வகையில் ஆய்வு செய்து பார்ப்பதன் மூலம் ஜாதக பலனை துல்லியமாக அறிந்து விட முடியாது.


 ஒரு தசை நடத்தும் கிரகத்தை மட்டும் ஆய்வு செய்து ஒரு ஜாதகத்தில் துல்லியமான பலனை கூறிவிட முடியாது.அந்த தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் கிரகம் ,தசை நடத்தும் கிரகத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்கள், மற்றும் லக்கனாதிபதி உடன் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகிய பல கிரக உதவியுடன் மட்டுமே ஒரு தசையில் துல்லியமான பலனை கூறி விட முடிகிறது.


தசை நடத்தும் கிரகத்தின் பலனை இன்னும் துல்லியமாக அளவிட அம்ச பீடத்தில் அந்த தசை நடத்தும் கிரகம் எப்படி அமைந்து உள்ளார் என்பதை பொறுத்தும் ஜாதக பலன் அமைகிறது.


 எனவே எந்த ஒரு ஜோதிட பலனும் தனிப்பட்ட ஒரு அமைப்பை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை.அவை பல்வேறு படி நிலை ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே ஜாதகரை பற்றி துல்லியமாக அளவிட முடிகிறது.


 இன்னும் சொல்ல போனால் கூடுதலான துல்லியமான படிநிலையில் ஆய்வு செய்வதற்கு ஒரு கிரகம் எந்த பாகை மற்றும் கலையில் அமர்ந்து உள்ளார் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட கிரக இணைவு அல்லது பார்வை எந்த நிலையில் உள்ளது என்பதை முடிவு செய்ய டிகிரி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 5 January 2026

தொழில் -வெளிநாடு-அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?

 தொழில் -வெளிநாடு -அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


      ஒருவர் தொழில் செய்யலாமா ? அல்லது வெளிநாடு செல்லலாமா ஃ? அல்லது அரசு வேலை கிடைக்குமா ? அல்லது பிறரிடம் வேலை பார்க்கலாமா;? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிப்பதே இந்த பதிவின் நோக்கமாக கருதப்படுகிறது.


    உங்க ஜாதகத்தில் தொழில் செய்யலாமா ? என்ற அமைப்பை ஆய்வு செய்து பார்க்க அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம், பத்தாமிட அதிபதி  மற்றும் தொழில் காரகன் சூரியன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரகன் சூரியன் மூன்றும் வலிமை பெற்ற‌ நிலையில் ஒருவர் தொழில் தொடங்கலாம் என்று முடிவுக்கு வரலாம்.பிறகு தொழில் தொடங்க மன வலிமைக்கு அதாவது தொழிலில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் விடாது இழுத்து பிடிப்பதற்கு லக்கனாதிபதி வலிமை மற்றும் சுப தன்மை அவசியம் தேவைப்படுகிறது.


தொழில் தொடங்குவதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுடைய ஜாதகத்தில் இலக்கன‌  யோக தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் அல்லது எந்த தொழில் செய்கிறோமோ அவை தொடர்புடைய கிரகங்கள் வலிமையாக சுப தன்மையாக இருக்கக்கூடிய காலகட்டங்களில் ஒருவர் வந்து ஒரு தொழிலை புதிதாக தொடங்கலாம்.


எந்த தொழில் என்பதை உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பில் எந்த கிரகம் முதன்மை சுப தன்மையை பெற்று உள்ளதோ அந்த கிரகம் தொடர்பு கொண்ட தொழிலை ஜாதகர் எடுத்து செய்யலாம்.இதற்கு அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டாம் இடமான தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம்  ஆகிய இரண்டு ஸ்தானங்களில் தொடர்பு கொண்ட நிலையில் அந்த கிரகம் தரும் தொழிலை தொடங்கலாம்.


     இவ்வாறு ஒருவர் தொழில் செய்யலாமா ? என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பிறகு அவர் ஜாதக கட்டப்படி எந்த தொழிலை செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அந்தத் தொழிலை எந்த காலகட்டத்தில் தொடங்கலாம் என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .


   சில நேரங்களில் அவ யோகத் தசைகள் நடக்கக்கூடிய காலங்களில் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அந்த காலகட்டங்களில் பெருத்த நஷ்டத்தை ஒருவர் சந்திக்க நேரிடும் என்பதால் தொழில் தொடங்கும் பொழுது நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் கோச்சாரப் பலன்கள் உங்களுடைய தொழில் விருத்திக்கு முக்கிய மூல காரணமாக அமைகிறது.


கோச்சார அடிப்படையில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அல்லது ஒரு ஜாதகத்தில் ஆறு மற்றும் எட்டுக்குடைய அவ யோகத் தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அந்தத் தொழில் கடைசியில் நஷ்டத்தில் போய் முடிந்து விடும்.


 எனவே ஒருவர் தொழில் தொடங்குவதற்கு நல்ல யோக தசைகள் அல்லது உகந்த தசை நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஆரம்பித்தால் பெருத்த லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு அமைந்து விடுகிறது .


    சிலர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப சரியான தொழிலை தேர்வு செய்ய தவறும் பட்சத்தில் ஜாதகர் தொழில் மூலமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகிவிடும்.


சில நேரங்களில் ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடமும் அதன் அதிபதியும்  மற்றும் தொழில் கார்க் கிரகமான சூரியன் ஆகியவை பலம் இழந்து ஆறாமிட அதிபதி மற்றும் சனி பகவான் வலுப்பெற்ற நிலையில் ஒருவர் பிறரிடம் வேலை பார்க்கும் சூழல் உருவாகிவிடும்.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் புதிதாக ஒரு தொழிலை தொடங்க கூடாது.


உங்களோட ஜாதகத்தில் பௌர்ணமி யோக அமைப்பில் லக்கனாதிபதி வலுப்பெற்ற நிலையில் ஒருவர் அரசாங்கத்தின் அல்லது அரசியலில் உயரிய பதவிகளில் அமர்வார்கள். 


உங்களுடைய ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியும் ஆன சூரிய பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் உகந்த தசை அமைப்பு வரக்கூடிய காலகட்டங்களில் அரசு வேலை பார்ப்பார்.


ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான், சந்திரன் பகவான்,புதன் பகவான் மற்றும் குரு பகவான் போன்ற அதிகார கிரகங்கள் வலுப்பெற்று சுபத்தன்மை அடைந்திருக்கக்கூடிய நிலையில் உயரிய பதவிகளில் அதாவது தலைமை பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டாகும். 


உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் சுபத்துவமாக வலுப்பெற்ற நிலையில் அரசின் கீழ்மட்ட பணியான  வாட்ச்மேன், இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் போன்ற கீழ்மட்ட பணிகளில் அமரக்கூடிய நிலை உருவாகும்.


    எவர் ஒருவர் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் இருந்து எட்டாம் இடமும் மற்றும் 12ஆம் இடமும் இயற்கை சுப கிரக பார்வை அதை சேர்க்கையை பெற்ற நிலையில் அதிக சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை ஜாதகர்கள் பெறுவார்கள்.

வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவ யோகத்தை தரும் தசையில் வெளிநாடு செல்ல கூடாது.அதே நேரத்தில் யோகத்தை தரக்கூடிய தசாபுத்தி காலங்களில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமைகிறது.


பொதுவாக ஒருவர் வெளிநாடு செல்வது செல்வதற்கு அவரது ஜாதகத்தில் சர ராசிகளில் ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) அமர்ந்த கிரக தசை  அல்லது நீர் (கடகம் ,விருச்சிகம் மற்றும் மீனம்) அல்லது காற்று ராசிகளில் (மிதுனம், துலாம் மற்றும் கும்பம்)  அமைந்த கிரக தசையில் வெளிநாடு செல்லும் பொழுது மிகுந்த யோகத்தை அடைவீர்கள். ஒருவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குரு பகவான் உடைய பார்வையை பெற்ற நிலையில் அந்த ராகு தசை நடப்பில் உள்ள காலங்களில் கடல்  கடந்து செல்லும் யோகம் உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


   097151 89647 


For other cell no : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

செவ்வாய் பகவான் தரும் யோக பலன்கள்

 செவ்வாய் பகவான் தரும் யோக பலன்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர்  ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பூமி காரகன் என்று அழைக்கப்படுகிறது.ஒருவர் ஜாதகப்படி அதிக இடங்களை வாங்கி சேர்க்கும் யோகம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஜாதக கட்டத்தில் செவ்வாய் பகவானை ஆராய்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும்.


செவ்வாய் பகவான் உங்கள் ஜாதகத்தில் உச்சம்,ஆட்சி  மற்றும் மூலதரிகோணம் போன்ற வகைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் அதற்குரிய யோக தசைகள் நடப்பில்  இருக்கும் பொழுது அதிக பூமி வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


  ஜாதகருடைய உடன் பிறந்தோரை பற்றி அறிந்து கொள்ள உதவக்கூடிய கிரகம் செவ்வாய் பகவான் ஆவார் . எனவே தான் செவ்வாய் பகவானை

" சகோதர காரகன்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் பகவான் விளக்குகிறார்.


  "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பார்கள்.  ஒருவர்  ஜாதகத்தில் செவ்வாய் பகவான்  சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை அல்லது பார்வையை பெறாத நிலையில் இயற்கை சுப கிரகங்கள் உடைய  தொடர்பு ஏற்பட்டு இருப்பின் அந்த ஜாதகர் உடன் பிறந்தோர் அதாவது சகோதரர்களின்  ஆதரவை கடைசிவரை பெறுவர் .சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.


செவ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்ற நிலையில்  லக்னத்தோடு தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர்  முரட்டுத்தனம் உடையவராக இருப்பார்.


    சிலர்  ஒருவரை வெட்டுவதற்கு முன்பாக  யோசிப்பார்கள் ஆனால் செவ்வாய் பகவானை வலிமையாக பெற்றவர்கள் வெட்டிய பிறகு யோசிப்பார்கள் ..அந்த அளவுக்கு ரத்தத்தை கண்டு பயப்படாத தன்மை மற்றும்  குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.


    செவ்வாய் பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரக தொடர்பினை  பெறும் பொழுது அவர் அடாவடித்தனம் உடையவர்களாகவும்,  ரவுடி குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.பொது இடங்களில்  பல நபரை வெட்டி வீழ்த்தி, குண்டு  வைத்து தகர்க்கும்  ரௌடிகளாக அல்லது தீவிரவாதிகளாக இருப்பார்கள்.


அதே நேரத்தில் செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையுடன் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில்  டாக்டர் படிப்பு படித்து பல நபரை அறுவை சிகிச்சை செய்து ரத்தம் பார்த்து அதற்காக அரசிடம் சம்பளம் வாங்கி மருத்துவம் சேவை செய்வார்கள்.


   செவ்வாய் பகவானின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப எம்பிபிஎஸ் அதை தொடர்ந்து சித்தா,, ஹோமியோபதி,, கால்நடை மருத்துவர் மற்றும் காது , மூக்கு, தொண்டை நிபுணர் ஆகும் யோகம் உண்டாகும் சுபத்துவ  படிநிலைக்கு ஏற்ப பதவி நிலை அமைந்து இருக்கும்.சுபத்துவ படிநிலை குறையும் போது இரத்தம் பரிசோதனை நிலையம் வைத்து நடத்துபவராக இருப்பார். விளையாட்டு வீரர்ராக கசாப்பு கடையில் கறி வெட்டும் நபராக திகழ்வார்.


செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ நிலையில் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் திக் பலம் பெற்ற நிலையில் போலிஸ், ராணுவம் போன்ற துறைகளில்  சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.இவர்கள் ரவுடிகளை அல்லது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி ரத்தம் பார்த்து இதற்காக பதக்கம் மற்றும் பட்டங்கள் பெற்று இதற்காக பேரும் புகழும் அடையக்கூடிய யோகத்தை செவ்வாய் பகவான் தருவார்.


ஒருவரது இரத்த வகைக்கும் (blood group)  செவ்வாய் பகவானுக்கும் தொடர்பு உண்டு.எனவே செவ்வாய் பகவான் இரத்த காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அடிப்படையில் தான் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற ஒரு அமைப்பு பேசப்பட்டு வருகிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி அல்லது சுக்கிரன் இருக்கும் இடம் இரண்டு நான்கு ஏழு எட்டு மற்றும்  பன்னிரண்டு போன்ற இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை செவ்வாய் தோஷம் என்று அழைக்கப்படுகிறது..


என்னைப் பொருத்தவரை செவ்வாய் தோஷம் என்ற ஒன்றிற்கு பயப்படத் தேவையில்லை செவ்வாய் தோஷம் மனித உயிர்களை பழிவாங்கி விடுவதில்லை. 


ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் பகவான் லக்னம் என்ற ஒன்றாம் இடம் குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தாலும் அல்லது பார்வை செய்தாலோ அவை திருமண தடையை சாதகருக்கு கொடுக்கிறது இவை தவிர பெரிய பாதிப்பை ஜாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.


இதில் சில விதிவிலக்குகள் இருப்பதாக மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது செவ்வாய் உச்சம்,ஆட்சி, நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறப்படுகிறது செவ்வாய் பகவனை வேறு கிரக பார்வை இருந்தாலும் தோஷ நிவர்த்தி அடைகிறது.


செவ்வாய் பகவான் காமக்கார கிரகம் ஆகும். செவ்வாயுடன் சனி, ராகு போன்ற கிரகங்கள் பார்வை சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவர் காம மிகுதியால் மனைவி அல்லாத மற்றொருவர் உடன் உறவு கொள்ளக்கூடிய நிலை உருவாகும் அதிக காம எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சுப கிரக பார்வை பெறும் பொழுது அதில் விதிவிலக்குகளும் உண்டு.


     ஒருவருடைய  வீர, தீர ,பராக்கிரம செயல்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் தேவைப்படுகிறது. செவ்வாய் பகவானை வலிமையாக பெற்ற ஜாதகம் முரட்டுத்தனம் கொண்டவராக இருப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.


 செவ்வாய் பகவான் லக்னத்தில் அல்லது லக்கினத்தை பார்த்தாலும்   முரட்டுத்தனம் படைத்தவர்களாக இருப்பார்கள் .இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது  கோபம் மற்றும் அனுசரித்து போகும் தன்மை அறவே அற்றவராக இருப்பார்கள்.


செவ்வாய் பகவான் உடன் சூரியன், சந்திரன் மற்றும் குருபகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையை அடைந்து சாதகருக்கு நல்ல பலனை அள்ளி கொடுப்பார் .அதே நேரத்தில் சனி ,ராகு போன்ற  இயற்கை பாவ கிரகங்களுடைய தொடர்பை பெறும் பொழுது இந்த செவ்வாய் தசை கடுமையான கஷ்டங்களை நஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.


 செவ்வாய் பகவான் நிழல் கிரகமான கேது பகவான் உடன் இணைந்த நிலையில் மறைமுக வலுவான சூட்சும வலிமையை பெறுகிறது.கேது பகவான் உடன் இணைந்த செவ்வாய் பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


  பொதுவாக பாவ கிரகங்கள் நேர் வலு பெறாமல் மறைமுக வலிமை பெற்று இருந்தால் அவை ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது. 


 உதாரணமாக துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் ஸ்தான வலிமை இழந்து மறைமுகமாக திக் பலம் பெற்று மறைமுக வலு பெற்ற செவ்வாய் பகவான் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.


 அதேநேரத்தில் கன்னி லக்கினத்திற்கு செவ்வாய் பகவான் மூன்று மற்றும் எட்டுக்கு உடையவர் மேலும் லக்கன அவ யோகர் ஆகும் . அதாவது கன்னி லக்கினத்திற்கு வரக்கூடாத  தசை செவ்வாய் தசை ஆகும்.இவர் ஐந்தாம் இடமான மகரத்தில் உச்சம் பெற்று நேர்வலு பெற்று இருப்பது சாதகருக்கு நல்ல பலனை தருவதில்லை.


செவ்வாய் பகவான் தரும் பாதிப்பிலிருந்து விலக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வணங்கி வழிபட உத்தமம். துவரம் பருப்பு ,சிவப்பு சேலை ரவிக்கை மற்றும் மஞ்சள் கயிறு இவற்றை சுமங்கலிக்கு தானம் செய்யலாம். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது. மாயவரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தாலும் பழனி மலைக்குச் சென்று முருகனை வழிபட்டாலும் செவ்வாயால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விலகலாம்.


 


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.). 



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ராகு பகவான் தரும் பலன்கள்

 ராகு பகவான் தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் கரும்பாம்பு என்று அழைக்கக்கூடிய ராகு பகவான் பாம்பு உடலையும் மற்றும் மனித தலையும் கொண்ட நிழல் கிரகம் ஆகும்.நவ கிரகங்களில் இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.


ராகு பகவான் பாவ கிரக வரிசையில் மிக முக்கியமான கிரகம் ஆகும்.இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.


  ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை பாவ தன்மையை அடைய வைப்பதில் முதன்மையானது ஆகும்.


  ராகு பகவான் உடன் இயற்கை சுப கிரகங்கள் இணையும் போது அந்த கிரகமானது பாவ தன்மையை அடைந்து அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை மட்டுப்படுத்தி விடுகிறது.அதே நேரத்தில் ராகு பகவான் சுப தன்மையை தன்னுடன் இணைந்த சுப கிரகத்தால் சுப தன்மையை அடைந்து விடுகிறார்.


  அதே நேரத்தில் ராகு பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகங்கள் உடன் இணையும் போது தான் இன்னும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து அந்த கிரகங்கள் இருக்கக்கூடிய இடத்தையும் கூடுதல் பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறார்.தன்னுடன் இணைந்த கிரகமும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


 எந்த அளவுக்கு தன்னுடன் இணைந்த கிரகத்தால் சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார் என்பதை டிகிரி அடிப்படையில் சதவீத அளவு கணக்கிடப்படுகிறது.


தன்னுடன் இணைந்த கிரகமானது எட்டு பாகைக்குள் இருந்தால் நூறு சதவீதம் பாதிப்பை அதாவது சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார்.பதின்மூன்று பாகை வித்தியாசத்தில் ஐம்பது சதவீதம் சுப/பாவ தன்மையை அடைகிறது . இருபத்தி இரண்டு பாகை வித்தியாசத்தில் ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தை முழுமையான பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை.இரண்டு கிரகங்களும் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பாதிப்பு அடைய செய்வதில்லை.


ராகு பகவான் ஆனவர் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களில் ராகு பகவான் இடம்பெற்றால் சர்ப்ப தோஷம் என்னும் நாக் தோஷத்தை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.


 இதே போல அந்த (1,2,7,8) அதிபதிகளுடன் சேர்ந்து நின்றாலும் திருமண தடையை உண்டாக்குகிறார்.


 களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய இரு கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பதில் தடையை உருக்குகிறார்.குரு பகவான் உடன் இணைந்த நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை அடைய வைக்கிறார்.


குரு பகவான் உடன் இணைந்த ராகு பகவான் ஆனவர் 'குரு சண்டாள யோகத்தை" தருகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை தருகிறார். பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருவதில் தாமதப்படுத்துகிறார்.


சுக்கிரன் உடன் ராகு பகவான் இணைந்த நிலையில் திருமணத்தடையை தருவது மட்டுமல்லாமல் தாம்பத்திய சுகம் அடைவதில் பிரச்சனை உருவாக்குவார். வண்டி, வாகன யோகம், வீடு வாசல் மனை அமைப்பது தாமதப்படுத்தவும் செய்கிறார்.


புதன் பகவானுடன் ராகு இணையும் போது தனது திறமையை தவறான வழியில் பயன்படுத்தி பிரச்சனையில் மாட்டிக் கொள்ள இயலும். தனது கணித மற்றும் கணிப்பொறி அறிவை தவறான வழியில் பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள இயலும். 


செவ்வாய் பகவான் ராகு பகவான் இணையும்போது கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுகிறது. டாக்டர் ஆகும் கனவு பாதிக்கப்படும். உடன்பிறந்த சகோதரர்கள் பிரச்சனைகள் உருவாகும் வீர தன்மை பாதிக்கப்படுகிறது.


ராகு பகவான் ஒளி கிரகமான சூரியன் உடன் இணைவு தந்தை வழி உறவு நிலை பாதிப்பு அரசியல் ஈடுபாடு அற்ற நிலை,அரசு வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.இதில் பலனில் மாறுபட ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ராகு பகவான் மற்றும் ஒரு ஒளி கிரகமான சந்திரன் உடன் சேர்க்கை ஜாதகரின் மனநிலை பாதிப்பை தருகிறார்.தாய் வழி உறவுகளில் பாதிப்பை தருகிறார்.தேய்பிறை சந்திரன் ஆக இருந்து ராகு பகவான் இணைந்த நிலையில் மன வளர்ச்சி குன்றிய நிலை உண்டாகும்.


ராகு பகவான் ஆனவர் இருள் கிரகமான சனி உடன் இணையும் போது கடுமையான பாதிப்பை சாதகருக்கு கொடுப்பார்.இவ்விரு கிரகங்கள் இணைந்த ஸ்தானம் கடுமையான பாதிப்பை அடைந்து விடுகிறது.இந்த நிலையில் ராகு அல்லது சனி தசை கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.


ராகு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நிற்பின் கடுமையான புத்திர தோஷத்தை தருகிறார்.


ராகு பகவான் தரும் தோஷங்களை போக்க திருநாகேஸ்வரம், பேரையூர் மற்றும் ஆந்திர சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று அங்கு வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no: 097151 89647 


My another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M A BEd

கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்

 கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவானை ஞான காரகன் என்று அழைக்கிறோம்.செம் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. .பாம்பு தலையும்,மனித உடலும் கொண்ட ஒரு கிரகம் கேது பகவான் ஆகும்.


 அஸ்வினி,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக கேது பகவான் திகழ்கிறது.கேது பகவான் தசை காலம் ஏழு ஆண்டுகள் ஆகும்.


கேது பகவான் சிம்மம் , விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று வீடுகளில் கேது பகவான் மிகுந்த யோகத்தை தரும் பலன்களை அள்ளித் தருகிறது.‍‍


கேது பகவான் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி மற்றும் செவ்வாய் உடன் தனித்தனியாக இணையும் போது சூட்சும வலுவை ஜாதகருக்கு கொடுக்கிறது.


கேது பகவான் உடன் இணைந்த குரு பகவான் கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தருகிறது.


    கேது பகவான் உடன் குரு மற்றும் சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆன்மீக வழியில் ஈடுபாடு அதிகமாக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.


கேது பகவான் சனி பகவான் உடன் இணைந்து 5,9 மற்றும் 12 ஆம் இடங்களில் நின்று குரு பகவான் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகருக்கு சித்தர்கள் வழி பாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.


கேது பகவான் அதிக சுபத்துவமாக தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் குறி சொல்லும் பூசாரி ஆக இருப்பார்.கோயில் ஸ்தலங்களில் கடை வைத்து நடத்துபவராகவும், கோவில் வழிபாட்டு பொருட்களை விற்பனை செய்பவராக இருப்பார்.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலன்களை அதிகரித்து நல்ல பலனை செய்ய வைப்பார்.ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் பாவ தன்மையை தரும் கிரகமாக செயல்படவில்லை.


 கேது பகவான் இயற்கை சுப மற்றும் பாவ கிரகங்கள் ஆகிய இரு வகையான கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் நல்ல பலனையே ஜாதகருக்கு அள்ளிக் கொடுப்பார்.


 கேது பகவான் திருமண ஸ்தானமான லக்கனம் என்று அழைக்கக்கூடிய ஒன்றாம் இடம், குடும்ப ஸாதானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில் நின்றால் நாக் தோஷம் என்னும் களத்திர தோஷத்தை தந்து திருமண தடையை உண்டு பண்ணுகிறார்.


புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தை தருகிறார்.


கேது பகவானால் உண்டாகும் தோஷத்தை போக்க கீழப்பெரும்பள்ளம் சென்று எம கண்டம் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட கேது பகவான் தரும் தோஷம் நீங்கி நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும் தன்மையை அடைகிறது.


 கேது பகவான் ஒரு நிழல் கிரகம் ஆகும்.பருப்பொருள் இல்லாத நிழல் கிரகம் ஆகும்.எனவே இவற்றிற்கு ஸ்தான வலிமை கிடையாது.பார்வை கிடையாது.சொந்த வீடு கிடையாது.திக் பலம் இல்லை.வாரத்தின் ஏழு நாட்களில் இவற்றிற்கு இடம் கிடையாது.


 எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகர இவை பின்னோக்கி நகரும் தன்மை உடையதால் வக்கிரம் கிடையாது.அஸ்தமன தோஷம் கிடையாது.


கேது பகவான் சூரியன் உடன் இணைய ஆன்மீக உலகில் தலைவராக ஆகும் தன்மை உண்டு.குரு பகவான் உடன் இணைய கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம்,கேது சுக்கிரன் உடைய இல்லற வாழ்வில் சிறக்க உதவுகிறது.புதன் பகவான் உடன் கேது இணைய வித்தையில் சாதுர்யம், சந்திரன் உடன் கேது இணைய முன்னாலே யூகித்து அறியும் சக்தி, செவ்வாய் உடன் கேது இணைவு வீரத்தை சரியான வழியில் பயன்படுத்தும் தன்மை போன்றவை உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


For another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் உ

 ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் ? அல்லது இருக்க கூடாது ?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்கள் ஆகும்.இதேபோல சுக்கிரன், புதன் மற்றும் சனி பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்கள் ஆகும். 


    ஒருவருடைய ஜாதகம் யோக ஜாதகமாக திகழ நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர கோணங்களில் தொடர்பு பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.அதே போல பகை கிரகங்களின் தொடர்பு பெறாத நிலையில் இருக்க வேண்டும்.


லக்கனாதிபதி வலிமை பெற்ற நிலையில் இருக்க வேண்டும் தொடர்ந்து 

நடக்கும் தசை யோக தசையாக இருக்க வேண்டும் .


  ஜாதகத்தில் இரண்டு அணிகள் உள்ளன 

அதில் ஒன்று குரு அணி மற்றொன்று சுக்கிரன் அணி ஆகும்.

மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம்,தனுசு மற்றும் மீனம் ஆகிய வீடுகள் குரு அணியை சேர்ந்தவை ஆகும்.


ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு வீடுகளும் சுக்கிரன் அணியை சேர்ந்தவை ஆகும்.


   நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவான் குரு அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு குரு அணியை சேர்ந்த வீடுகளில் ராகு மற்றும் கேது பகவான் அமர்வது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பு ஆகும்.


  இதே போல சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு ராகு மற்றும் கேது பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த வீடுகளில் அமர்வது நல்லது ஆகும்.


   ஒருவருடைய ஜாதகத்தில் பெரும்பாலன கிரகங்கள் குரு பகவானின் பார்வை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.அல்லது வளர்பிறை சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் நின்று சந்திரன் அதி யோகம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும். 


  ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் வீடு கொடுத்தவன் வலிமை பெற்ற நிலையில் அந்த குறிப்பிட்ட கிரகம் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளி கொடுக்கிறது.


பொதுவாக பாவ கிரகங்கள் ஸ்தான‌ வலிமை பெறாமல் அதே நேரத்தில் திக் பலம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.உதாராணமாக துலாம் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி நீசம் பெற்று ஸ்தான பலம் இழந்து திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.பத்தாம் இடத்தில் செவ்வாய் நீசம் அடைந்து ஸ்தான பலம் இழந்து பத்தாம் இடத்தில் திக் பலம் அடைந்து இருக்க வேண்டும்.


 கிரகங்கள் ராசியில் எப்படி இருந்தாலும் அவை அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் அந்த கிரகம் தரும் பலன்கள் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.குரு பகவான் வீடுகள் ஆன தனுசு, மீனம், சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் போன்ற வீடுகள் ஏறி நிற்பது சுப வர்க்கம் ஆகும்.சனியின் வீடுகளாக விளங்கும் மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளிலோ அல்லது செவ்வாய் பகவான் வீடுகளாக திகழும் மேஷம் மற்றும் விருச்சிகம் வீடுகளிலோ ஏறி நின்றால் அது பாவ வர்க்கம் ஆகும்.


முக்கியமாக கிரகங்கள் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இருக்க வேண்டும்.


ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீசம் அடைந்து இருந்தாலும் வீடு கொடுத்தவன் பலம் இழந்த நிலையில் அந்த கிரகம் நடத்தும் தசை யோக பலனை அள்ளி தராது.


லக்கனாதிபதி பலம் இழந்து நிற்க கூடாது .


பிறப்பிலிருந்து தொடர்ந்து அவ யோகத்தை தரும் கிரக தசைகள் தொடர்ந்து வர கூடாது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்).



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதக பலன் கணிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை.

 ஜாதக பலன் காணும் பொழுது கவனிக்க வேண்டியவை .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மை உடையதாக உள்ளதோ, அந்த கிரகம் அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களை சிறப்பாக ஜாதகருக்கு கொடுக்கிறது.


 ஆதிபத்தியம் தரும் பலன்களை அதன் தசை காலங்களிலும் மற்றும் காரக பலன்களை வாழ்நாள் முழுவதும் தரக்கூடிய தன்மையை பெறுகிறது.


 ஆதிபத்தியம் என்பது அவரவர் லக்கினத்தை பொறுத்து மாறுபடுகிறது.காரகத்துவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.


உதாரணமாக குரு பகவான் பணம், பதவி, பட்டம், புகழ் ,கல்வி ,ஞானம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரக்கூடிய ஒரே கிரகம் ஆகும்.


 அதே நேரத்தில் குரு பகவான் மேஷ லக்கனமாக இருந்தால் ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதியாக இருக்கும்.இவை பாக்கியம் மற்றும் விரய அதிபதியாக செயல்படுவார்.இவர் லக்கன யோகர் ஆவார்.இந்த லக்கனத்திற்கு குரு பகவான் தசை யோக தசையாக செயல்படுகிறது.


ஆனால் ரிஷபம் லக்கனமாக ஆக இருந்தால் இதே குரு பகவான் எட்டு மற்றும் பதினொன்றாம் இட அதிபதி ஆகி விடுவார் அதாவது அஷ்டம மற்றும் லாப அதிபதி ஆக செயல்படுவார்.இங்கு குரு பகவான் அவ யோகத்தை தரும் தசையாக அல்லது இந்த லக்கனத்திற்கு வர கூடாத தசையாக ஆகி விடுகிறார்.


எனவே எந்த ஒரு ஜாதக பலனை துல்லியமாக பலன் அளிப்பதற்கு லக்கனம் மற்றும் அதன் அதிபதி மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.லக்கனமே ஜாதகருக்கு அச்சாணியாக திகழ்கிறது.


 லக்கனத்தினை அடிப்படையாக கொண்டு தசா புக்தி பலன்கள் கணிக்கப்படுகிறது.கோச்சார பலன்களை ராசியை அடிப்படையில் கணிக்கப்படுகிறது.


சில நேரங்களில் விதி கெட்டால் மதி‌ என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஆதாவது உயிர் என்று அழைக்கப்படும் லக்கனம் கெட்டு விட்டால் ராசியை அடிப்படையாக கொண்டு தசா பலன்கள் அறியப்படுகிறது.சில நேரங்களில் ராசியும் கெட்டு விட்டால் சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு ஜாதக பலன் கணக்கிடப்படுகிறது.இதனை கதி என்று அழைக்கப்படுகிறது.


எந்த ஒரு காரக பலன்களை கணிக்க முற்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து ஜாதக பலனை அளிக்க முயல வேண்டும்.இதனை லக்கனம் மற்றும் ராசி என இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் 


காரகத்துவ பலன்களை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது உயிர் காரகத்துவம்‌ மற்றும் ஜட காரகத்துவம் என்று இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க படுகிறது.


உயிர் காரகத்துவ பலன்களை லக்கனம் மற்றும் ராசி என இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக புத்திர பாக்கியம் பற்றிய உயிர் காரகத்துவத்தை ஆராய்ந்து பார்க்க ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரு வழிகளில் ஆய்வு செய்து பலன் அறியப்படுகிறது.


கல்வி போன்ற ஜட காரகத்துவங்களை லக்கினத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டும் ஆய்வுக செய்து பார்த்தாலே போதுமானதாக உள்ளது.


ராசியில் ஒரு கிரகம் இருக்கும் இடத்தின் அதிபதி உடைய நிலை, பார்வை அல்லது சேர்க்கை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து பிறகு அமசத்தில் அதன் பாவ அல்லது சுப வர்க்கம் ஏறி இருக்கிறதா ? என்பதை ஆராய்ந்து நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகிய பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜாதக பலன் அறிய வேண்டும்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


For another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

புத்திசாலித்தனத்தை அள்ளித் தரும் புதன் பகவான்

 புத்திசாலித்தனத்தை அள்ளித் தரும் புதன் பகவான்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் புத்திசாலியாக விளங்க வேண்டும் எனில் ‌ ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானின் அருளாட்சி அவசியமாக தேவைப்படுகிறது.


 அறிவு ,புத்திசாலித்தனம், மற்றவர்களிடம் இருந்து மாறுபட்ட சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகிய 

அனைத்திற்கும் புதன் பகவான் காரண கர்த்தாவாக விளங்குகிறார்.


ஒருவர் கணிதத்தில் சிறந்து விளங்கினாலே எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க இயலும் என்றார் அரிஸ்டாட்டில்.அதேபோல ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் சிறந்து விளங்கினார் என்றால் அவர் கணித அறிவிலும், கணினி அறிவிலும் சிறந்த நிலையில் விளங்குவார்.


   ஒருவர் ஆலோசனை வழங்குவதில் மந்திரியாக திகழ்வது புதன் பகவான் ஆவார்.பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும்,புதிர்களை கண்டறிவதற்கும். புதன் பகவானுடன் பேராதரவு தேவைப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் வலிமை அடைந்து இருப்பின் அவர்கள் படிக்காமல் இருந்தாலும் பட்டறிவால் பார்த்தவுடன் கற்று கொள்ளும் ஞானம் படைத்தவராக இருப்பார்.


 சிலை வடித்தல், சிற்பங்கள் செய்தல் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற நுண்கலைகளில் வல்லவராக திகழ்வார்.இதேபோல கூடை முடைதல், பாய் பின்னுதல் போன்ற கலைகளில் ஆர்வம் உடையவராக இருப்பார் .


பாடல் எழுதுதல் , கவிதை புனைதல், இசையில் ஆர்வம் போன்ற நிலைகளுக்கு புதன் பகவான் முக்கியமானவர் ஆவார்.


புள்ளி விவரங்களை சேகரித்தல், தலையங்கம் எழுதுதல், நிகழ்ச்சி தொகுப்பாளர்,மேடை ஏறி பேசுதல்,பட்டி மன்றம் பேசுதல் போன்ற திறமைகளை ஒருவர் பெற்றிருப்பதற்கு புதன் பகவானே காரண கர்த்தாவாக விளங்குகிறார்.


புதன் பகவான் ஆனவர் பாவ கிரகங்கள் உடைய தொடர்பினை பெறாத வரை இயற்கை சுப கிரகமாக விளங்குகிறது.மாறாக பாவரின் தொடர்பினை பெற்ற நிலையில் அவை இயற்கை பாவ கிரகமாக செயல்படுகிறது.


புதன் பகவான் ஆனவர் மிதுனம் மற்றும் கன்னி ஆட்சி வீடாகவும், கன்னி வீட்டில் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெறுகிறார். மீனம் வீட்டில் நீசம் அடைகிறார்.லக்கனத்தில் திக் பலம் பெறுகிறார்.


ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்கிறார்.புதன் பகவான் 17 ஆண்டுகள் அதன் தசை காலம் ஆகும்.


புதன் பகவானை பொறுத்தவரை சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள் ஆகும். ரிஷபம், துலாம்,மகரம் மற்றும் கும்பம் ஆகிய நட்பு ராசிகள் ஆகும்.


 புதன் பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகமாகும் குரு , சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவை எதிர் 

தன்மையான கிரகம் ஆகும்.


 புதன் பகவான் லக்கனத்தில் திக் பலம் பெறுகிறார்.ஏழாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.


புதன் பகவான் சூரியன் உடன் இணைந்து அல்லது முன்பின் ஒரு ராசிகளுக்குள் இணைந்து காணப்படுவார்.எனவே இதனை 

"உள் வட்ட கிரகம் "என்று அழைக்கப்படுகிறது.


  புதன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் கால அளவு வாசம் செய்வார். மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களுக்கு வரக்கூடாத தசையாக புதன் பகவான் தசை அமைகிறது.


புதன் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக லக்கனங்களுக்கு நல்ல பலனை தர வேண்டும் எனில் அவை மேஷத்துக்கு ஆறாம் இடமும் ,விருச்சிக லக்னத்திற்கு எட்டாம் இடமும் அதிபதியாக வருவதால் இதனை அவ யோக தசையாக கருதுகிறோம்.


 இவ்விரு லக்கனத்திற்கு நல்ல பலனை தர மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இடத்திற்கு ஆறு, எட்டாம் இடத்தில் மறைந்து நின்றால் அதன் தசையில் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


புதன் பகவான் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை உடைய கிரகமாகும். இவை கண்டுபிடிப்பின் நாயகன் ஆகும் புதிய ஒன்றை படைக்கவும் புதிய ஒற்றை கண்டுபிடிக்கவும் புதன் பகவானுடைய வலிமை மிகவும் முக்கியமானது ஆகும் புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும் ஆலோசனை வழங்குவதில் சாதுரியமான எண்ணம் படைத்தவராகவும் காணப்படுவார்.


ஒருவர் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கவும் , ஷேர் மார்க்கெட் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபத்தை அடையவும் , இணையத்தை பயன்படுத்தி பொருள் ஈட்டவும் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் மூளையாக செயல்படுவர் புதன் பகவானே ஆவார்.


ஒருவர் வங்கித் துறை , பொருளாதார துறை ,நிதி துறை போன்ற துறைகளில் பணி புரிய புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


     ஜோதிட துறையில் இணையத்தை பயன்படுத்தி பெரிய அளவில் புகழ்பெற்ற சோதிடராக விளங்க புதன் பகவானுடைய சுபத் தன்மை அளவீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது.


 சிக்கலான விளையாட்டு, புதிர் போன்றவற்றை தீர்வு காண புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


புதன் பகவான் உடன் சனி, செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடைய சேர்க்கை அல்லது பார்வை புதன் பகவானை பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறது. பாவியோடு சேர்ந்த புதன் பாவத்தன்மை அடைந்து விடுகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


  097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

  M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.