சனி பகவான் எப்படி இருந்தால் யோகத்தை அள்ளி தருவார்?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
. சனிபகவான் இயற்கை பாவ கிரகம் என்பதோடு மட்டுமல்லாமல் அதிலும்
முழு பாவ கிரகமாக கருதப்படுகிறது.
சனி பகவான் ஜாதகருக்கு எவ்வாறு இருந்தால் யோகத்தை அள்ளித் தரும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சனி பகவான் நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற வகையில் நேர் வலு பெறக்கூடாது.
சனி பகவான் உப ஜெய ஸ்தானமான மூன்று,ஆறு,பத்து மற்றும் பதினொன்றாம் இடத்தில் நட்பு நிலையில் நின்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு சனி தசையானது மிகுந்த யோகத்தை அள்ளித் தருகிறது.
சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி மற்றும் மகரம் போன்ற லக்கனங்களுக்கு அதன் தசையில் அதிக யோகத்தை அள்ளித் தருகிறது.
ரிஷபம் மற்றும் துலாம் லக்கனங்களுக்கு சனி பகவான் தசையானது மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
சனி பகவான் மறைவிட ஸ்தானங்களில் உச்சம் , ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெற்று இருந்தாலும் ஜாதகருக்கு அதன் தசையில் யோகத்தை அள்ளித் தருகிறது.
சனி பகவான் நீசம் பெற்று வக்கிரம் பெறாத நிலையில் ஜாதகருக்கு சனி பகவான் யோகத்தை அள்ளித் தருகிறது.
சனி பகவான் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஜாதகருக்கு சனி பகவான் அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை சிறப்பாக ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
சனி பகவான் பார்வை சர்வ நாசத்தை தரும் என்றாலும் அதன் மூன்று,ஏழு மற்றும் பத்தாம் பார்வை ஆனது கெடுதலை தராமல் அதே நேரத்தில் நல்லதை அள்ளிக் கொடுக்காமல்
இருக்கிறது.
சனி பகவான் அதிக சுபத்துவ நிலையில் ராசி மற்றும் லக்கினத்திற்கு தன ஸ்தானமான இரண்டு மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சுபத்துவ படிநிலை தொடர்பு கொள்ள வழக்கறிஞர் ஆட்டோமொபைல்,ஏரோநாடிகல் இன்ஜினியர்,மெக்கானிகல் இன்ஜினியர் போன்ற துறைகளில் ஈடுபாடு அதிகமாக ஜாதகர இருக்கிறது.
அரசு பணிகளில் அலுவலக உதவியாளர்,இரவு காவலர், மற்று இளநிலை உதவியாளர் போன்ற அடிப்படை அரசு பணிகளில் அமர கூடிய யோகம் உண்டாகிறது.
சனி பகவான் அதிக சுபத்துவ நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்கள் பிரதிநிதியாக செயல்படுவார்.
சனிபகவான் பாவத்துவ மற்றும் சுபத்துவ படிநிலையின் கடைசி படி நிலை சுபத்துவ படிநிலையில் சொல்லிக் கொள்ள வெட்கப்படக்கூடிய செப்டிக் டேங்க்கில் மனித கழிவுகளை அள்ளுதல்,பிண வண்டி ஓட்டுதல், சுடுகாட்டில் வேலை, உடம்பு முழுவதும் மசகு அப்பி கொண்டு வேலை பார்த்தல், மெக்கானிக் , சுரங்கங்களில் வேலை,தார் போடுதல் போன்ற வேலைகளில் அமர வைப்பார்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEf
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்


No comments:
Post a Comment