ராகு பகவான் தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் கரும்பாம்பு என்று அழைக்கக்கூடிய ராகு பகவான் பாம்பு உடலையும் மற்றும் மனித தலையும் கொண்ட நிழல் கிரகம் ஆகும்.நவ கிரகங்களில் இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.
ராகு பகவான் பாவ கிரக வரிசையில் மிக முக்கியமான கிரகம் ஆகும்.இவை பருப்பொருள் இல்லாத கிரகம் ஆகும்.
ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை பாவ தன்மையை அடைய வைப்பதில் முதன்மையானது ஆகும்.
ராகு பகவான் உடன் இயற்கை சுப கிரகங்கள் இணையும் போது அந்த கிரகமானது பாவ தன்மையை அடைந்து அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை மட்டுப்படுத்தி விடுகிறது.அதே நேரத்தில் ராகு பகவான் சுப தன்மையை தன்னுடன் இணைந்த சுப கிரகத்தால் சுப தன்மையை அடைந்து விடுகிறார்.
அதே நேரத்தில் ராகு பகவான் ஆனவர் இயற்கை பாவ கிரகங்கள் உடன் இணையும் போது தான் இன்னும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து அந்த கிரகங்கள் இருக்கக்கூடிய இடத்தையும் கூடுதல் பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறார்.தன்னுடன் இணைந்த கிரகமும் கூடுதலான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.
எந்த அளவுக்கு தன்னுடன் இணைந்த கிரகத்தால் சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார் என்பதை டிகிரி அடிப்படையில் சதவீத அளவு கணக்கிடப்படுகிறது.
தன்னுடன் இணைந்த கிரகமானது எட்டு பாகைக்குள் இருந்தால் நூறு சதவீதம் பாதிப்பை அதாவது சுப அல்லது பாவ தன்மையை அடைகிறார்.பதின்மூன்று பாகை வித்தியாசத்தில் ஐம்பது சதவீதம் சுப/பாவ தன்மையை அடைகிறது . இருபத்தி இரண்டு பாகை வித்தியாசத்தில் ராகு பகவான் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகத்தை முழுமையான பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை.இரண்டு கிரகங்களும் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பாதிப்பு அடைய செய்வதில்லை.
ராகு பகவான் ஆனவர் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களில் ராகு பகவான் இடம்பெற்றால் சர்ப்ப தோஷம் என்னும் நாக் தோஷத்தை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.
இதே போல அந்த (1,2,7,8) அதிபதிகளுடன் சேர்ந்து நின்றாலும் திருமண தடையை உண்டாக்குகிறார்.
களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய இரு கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பதில் தடையை உருக்குகிறார்.குரு பகவான் உடன் இணைந்த நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை அடைய வைக்கிறார்.
குரு பகவான் உடன் இணைந்த ராகு பகவான் ஆனவர் 'குரு சண்டாள யோகத்தை" தருகிறார்.குருவின் இயல்பான பலனில் மாற்றத்தை தருகிறார். பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருவதில் தாமதப்படுத்துகிறார்.
சுக்கிரன் உடன் ராகு பகவான் இணைந்த நிலையில் திருமணத்தடையை தருவது மட்டுமல்லாமல் தாம்பத்திய சுகம் அடைவதில் பிரச்சனை உருவாக்குவார். வண்டி, வாகன யோகம், வீடு வாசல் மனை அமைப்பது தாமதப்படுத்தவும் செய்கிறார்.
புதன் பகவானுடன் ராகு இணையும் போது தனது திறமையை தவறான வழியில் பயன்படுத்தி பிரச்சனையில் மாட்டிக் கொள்ள இயலும். தனது கணித மற்றும் கணிப்பொறி அறிவை தவறான வழியில் பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள இயலும்.
செவ்வாய் பகவான் ராகு பகவான் இணையும்போது கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுகிறது. டாக்டர் ஆகும் கனவு பாதிக்கப்படும். உடன்பிறந்த சகோதரர்கள் பிரச்சனைகள் உருவாகும் வீர தன்மை பாதிக்கப்படுகிறது.
ராகு பகவான் ஒளி கிரகமான சூரியன் உடன் இணைவு தந்தை வழி உறவு நிலை பாதிப்பு அரசியல் ஈடுபாடு அற்ற நிலை,அரசு வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.இதில் பலனில் மாறுபட ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ராகு பகவான் மற்றும் ஒரு ஒளி கிரகமான சந்திரன் உடன் சேர்க்கை ஜாதகரின் மனநிலை பாதிப்பை தருகிறார்.தாய் வழி உறவுகளில் பாதிப்பை தருகிறார்.தேய்பிறை சந்திரன் ஆக இருந்து ராகு பகவான் இணைந்த நிலையில் மன வளர்ச்சி குன்றிய நிலை உண்டாகும்.
ராகு பகவான் ஆனவர் இருள் கிரகமான சனி உடன் இணையும் போது கடுமையான பாதிப்பை சாதகருக்கு கொடுப்பார்.இவ்விரு கிரகங்கள் இணைந்த ஸ்தானம் கடுமையான பாதிப்பை அடைந்து விடுகிறது.இந்த நிலையில் ராகு அல்லது சனி தசை கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.
ராகு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நிற்பின் கடுமையான புத்திர தோஷத்தை தருகிறார்.
ராகு பகவான் தரும் தோஷங்களை போக்க திருநாகேஸ்வரம், பேரையூர் மற்றும் ஆந்திர சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று அங்கு வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay no: 097151 89647
My another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M A BEd


No comments:
Post a Comment