Wednesday, 7 January 2026

ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.

 ஜாதகரை பற்றி துல்லியமான பலனை அறிய உதவுவது.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  

   ஒருவர் ஜாதகத்தில் என்ன தான் கிரகங்கள் பலம் அடைந்து சுப தன்மை உடன் இருந்தாலும் அந்த கிரகங்கள் அதன் தசையில் மட்டும் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.அந்த குறிப்பிட்ட கிரக தசை வராத பொழுது அந்த பலம் மற்றும் சுப தன்மை அடைந்து இருந்தாலும் அதற்கு உரிய பலனை அடைய இயலாது.


அவ்வாறு குறிப்பிட்ட கிரகம் அதன் தசை நடைபெறும் பொழுது நல்ல பலனை தர வேண்டும் எனில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் அடைந்து பாவ தன்மையை அடையாமல் இருக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட கிரக தசை வரவில்லை எனில் அதன் புக்திகளில் நல்ல பலனை தருமா ? தராதா? என ஆய்வு செய்து பார்த்தால் ஒரு தசை நடக்கும் போது தசா நாதன் மட்டும் முதலாளி போல் ஆகும்.புக்தி நாதர்கள் தசா நாதன் இட்ட வேலையை செய்யும் ஏவளாளிகள் தான் புக்தி நாதர்கள் ஆவார்.


 ஒருவர் ஒரு துறையில் உயரிய இடத்தில் இருப்பதற்கும் அல்லது படிப்பதற்கும் லக்கனாதிபதி வலிமை மற்றும் நடக்கும் தசா புக்தி ஆகிய இரண்டையும் வைத்து தீர்மானிக்கப்படுகிறது.


  கிரகங்களின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப ஒரு ஜாதகருக்கு கிடைக்கக்கூடிய ஜாதக பலன் அமைகிறது.


 ஒரு கிரகம் நல்ல ஸ்தான வலிமையை பெற்று கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் வீடு கொடுத்த கிரகமும் நல்ல பலம் அடைந்த நிலையில் ஜாதகருக்கு நல்ல பலனை அளிக்கிறது.


ஒரு கிரகம் ஒன்றில் நின்றால் நல்ல பலனை தருமா ? அல்லது பத்தில் நின்றால் நல்ல பலனை தருமா ? என்று இது போன்ற வகையில் ஆய்வு செய்து பார்ப்பதன் மூலம் ஜாதக பலனை துல்லியமாக அறிந்து விட முடியாது.


 ஒரு தசை நடத்தும் கிரகத்தை மட்டும் ஆய்வு செய்து ஒரு ஜாதகத்தில் துல்லியமான பலனை கூறிவிட முடியாது.அந்த தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் கிரகம் ,தசை நடத்தும் கிரகத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்கள், மற்றும் லக்கனாதிபதி உடன் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகிய பல கிரக உதவியுடன் மட்டுமே ஒரு தசையில் துல்லியமான பலனை கூறி விட முடிகிறது.


தசை நடத்தும் கிரகத்தின் பலனை இன்னும் துல்லியமாக அளவிட அம்ச பீடத்தில் அந்த தசை நடத்தும் கிரகம் எப்படி அமைந்து உள்ளார் என்பதை பொறுத்தும் ஜாதக பலன் அமைகிறது.


 எனவே எந்த ஒரு ஜோதிட பலனும் தனிப்பட்ட ஒரு அமைப்பை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை.அவை பல்வேறு படி நிலை ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே ஜாதகரை பற்றி துல்லியமாக அளவிட முடிகிறது.


 இன்னும் சொல்ல போனால் கூடுதலான துல்லியமான படிநிலையில் ஆய்வு செய்வதற்கு ஒரு கிரகம் எந்த பாகை மற்றும் கலையில் அமர்ந்து உள்ளார் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட கிரக இணைவு அல்லது பார்வை எந்த நிலையில் உள்ளது என்பதை முடிவு செய்ய டிகிரி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: