Monday, 5 January 2026

தொழில் -வெளிநாடு-அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?

 தொழில் -வெளிநாடு -அரசு வேலை இவற்றில் எது சிறந்தது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


      ஒருவர் தொழில் செய்யலாமா ? அல்லது வெளிநாடு செல்லலாமா ஃ? அல்லது அரசு வேலை கிடைக்குமா ? அல்லது பிறரிடம் வேலை பார்க்கலாமா;? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிப்பதே இந்த பதிவின் நோக்கமாக கருதப்படுகிறது.


    உங்க ஜாதகத்தில் தொழில் செய்யலாமா ? என்ற அமைப்பை ஆய்வு செய்து பார்க்க அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம், பத்தாமிட அதிபதி  மற்றும் தொழில் காரகன் சூரியன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரகன் சூரியன் மூன்றும் வலிமை பெற்ற‌ நிலையில் ஒருவர் தொழில் தொடங்கலாம் என்று முடிவுக்கு வரலாம்.பிறகு தொழில் தொடங்க மன வலிமைக்கு அதாவது தொழிலில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் விடாது இழுத்து பிடிப்பதற்கு லக்கனாதிபதி வலிமை மற்றும் சுப தன்மை அவசியம் தேவைப்படுகிறது.


தொழில் தொடங்குவதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுடைய ஜாதகத்தில் இலக்கன‌  யோக தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் அல்லது எந்த தொழில் செய்கிறோமோ அவை தொடர்புடைய கிரகங்கள் வலிமையாக சுப தன்மையாக இருக்கக்கூடிய காலகட்டங்களில் ஒருவர் வந்து ஒரு தொழிலை புதிதாக தொடங்கலாம்.


எந்த தொழில் என்பதை உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பில் எந்த கிரகம் முதன்மை சுப தன்மையை பெற்று உள்ளதோ அந்த கிரகம் தொடர்பு கொண்ட தொழிலை ஜாதகர் எடுத்து செய்யலாம்.இதற்கு அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டாம் இடமான தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம்  ஆகிய இரண்டு ஸ்தானங்களில் தொடர்பு கொண்ட நிலையில் அந்த கிரகம் தரும் தொழிலை தொடங்கலாம்.


     இவ்வாறு ஒருவர் தொழில் செய்யலாமா ? என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பிறகு அவர் ஜாதக கட்டப்படி எந்த தொழிலை செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அந்தத் தொழிலை எந்த காலகட்டத்தில் தொடங்கலாம் என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .


   சில நேரங்களில் அவ யோகத் தசைகள் நடக்கக்கூடிய காலங்களில் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அந்த காலகட்டங்களில் பெருத்த நஷ்டத்தை ஒருவர் சந்திக்க நேரிடும் என்பதால் தொழில் தொடங்கும் பொழுது நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் கோச்சாரப் பலன்கள் உங்களுடைய தொழில் விருத்திக்கு முக்கிய மூல காரணமாக அமைகிறது.


கோச்சார அடிப்படையில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அல்லது ஒரு ஜாதகத்தில் ஆறு மற்றும் எட்டுக்குடைய அவ யோகத் தசைகள் நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஒரு தொழிலை தொடங்கினாலும் அந்தத் தொழில் கடைசியில் நஷ்டத்தில் போய் முடிந்து விடும்.


 எனவே ஒருவர் தொழில் தொடங்குவதற்கு நல்ல யோக தசைகள் அல்லது உகந்த தசை நடப்பில் உள்ள காலகட்டங்களில் ஆரம்பித்தால் பெருத்த லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு அமைந்து விடுகிறது .


    சிலர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப சரியான தொழிலை தேர்வு செய்ய தவறும் பட்சத்தில் ஜாதகர் தொழில் மூலமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகிவிடும்.


சில நேரங்களில் ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடமும் அதன் அதிபதியும்  மற்றும் தொழில் கார்க் கிரகமான சூரியன் ஆகியவை பலம் இழந்து ஆறாமிட அதிபதி மற்றும் சனி பகவான் வலுப்பெற்ற நிலையில் ஒருவர் பிறரிடம் வேலை பார்க்கும் சூழல் உருவாகிவிடும்.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் புதிதாக ஒரு தொழிலை தொடங்க கூடாது.


உங்களோட ஜாதகத்தில் பௌர்ணமி யோக அமைப்பில் லக்கனாதிபதி வலுப்பெற்ற நிலையில் ஒருவர் அரசாங்கத்தின் அல்லது அரசியலில் உயரிய பதவிகளில் அமர்வார்கள். 


உங்களுடைய ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியும் ஆன சூரிய பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் உகந்த தசை அமைப்பு வரக்கூடிய காலகட்டங்களில் அரசு வேலை பார்ப்பார்.


ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான், சந்திரன் பகவான்,புதன் பகவான் மற்றும் குரு பகவான் போன்ற அதிகார கிரகங்கள் வலுப்பெற்று சுபத்தன்மை அடைந்திருக்கக்கூடிய நிலையில் உயரிய பதவிகளில் அதாவது தலைமை பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டாகும். 


உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் சுபத்துவமாக வலுப்பெற்ற நிலையில் அரசின் கீழ்மட்ட பணியான  வாட்ச்மேன், இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் போன்ற கீழ்மட்ட பணிகளில் அமரக்கூடிய நிலை உருவாகும்.


    எவர் ஒருவர் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் இருந்து எட்டாம் இடமும் மற்றும் 12ஆம் இடமும் இயற்கை சுப கிரக பார்வை அதை சேர்க்கையை பெற்ற நிலையில் அதிக சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை ஜாதகர்கள் பெறுவார்கள்.

வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவ யோகத்தை தரும் தசையில் வெளிநாடு செல்ல கூடாது.அதே நேரத்தில் யோகத்தை தரக்கூடிய தசாபுத்தி காலங்களில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமைகிறது.


பொதுவாக ஒருவர் வெளிநாடு செல்வது செல்வதற்கு அவரது ஜாதகத்தில் சர ராசிகளில் ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) அமர்ந்த கிரக தசை  அல்லது நீர் (கடகம் ,விருச்சிகம் மற்றும் மீனம்) அல்லது காற்று ராசிகளில் (மிதுனம், துலாம் மற்றும் கும்பம்)  அமைந்த கிரக தசையில் வெளிநாடு செல்லும் பொழுது மிகுந்த யோகத்தை அடைவீர்கள். ஒருவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குரு பகவான் உடைய பார்வையை பெற்ற நிலையில் அந்த ராகு தசை நடப்பில் உள்ள காலங்களில் கடல்  கடந்து செல்லும் யோகம் உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


   097151 89647 


For other cell no : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: