Wednesday 26 April 2017

கவிஞர் கண்ணதாசன் சாதகம்-ஓர் ஆய்வு

கவிஞர் கண்ணதாசன் சாதகம் -ஓர் ஆய்வு


                                          கிரகங்கள் படுத்தும் பாடு - ( 56 )

                                ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன் பாரம்பரிய முறையில் ஆய்வு செய்து கிரகங்கள் மனித வாழ்வினை எவ்வாறு எல்லாம் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதனை எனக்கே உரித்தான பாணியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பரம்பொருள் வழங்கிய ஞானத்தால் (படித்திருந்தால் மட்டும் போதாது) தொடர் பதிவாக எழுதி வருகிறேன். 

               இன்று
                                     வணிகம் செய்யும் நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சத்தில் பிறந்த ஒருவர் தமது வம்சத்திற்கே உரிய தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டாமல் கையில் பேனா பிடித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட திரை இசைப்பாடலகளையும்,கதைகள்,கட்டுரைககள் மற்றும் ஆன்மீக கட்டுரைகள் முதலியன எழுத வைத்ததன் காரணத்தை சோதிட அடிப்படையில் ஆராய்சி செய்து பார்ப்போம்.


                        உலகில் எந்த ஒரு ரகசியமும் பிரபஞ்சத்தில் தக்க மனிதர் வரும்வரை காத்திருக்கிறது.இப்படிதான் இவ்வுலகில் வாஞ்ஞானிகளும்,மெய்ஞானிகளும் கிரகங்களால்தான் உருவாக்கப்படுகிறார்கள்.


                       அதேபோல காரைக்குடிக்கு அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறுகூடல்பட்டியில் பிறந்த சிறு குழந்தை நாடுபோற்றும் மகத்தான கவிஞானாக மாற்றியது அவரது கிரக அமைப்புதான்.ஆம் "கவிஞர் கண்ணதாசனின் சாதகத்தினை ஆய்வு செய்து பார்ப்போம்.

                             ஒருவர் கவிஞராக இவ்வுலகில் கோலோச்ச வேண்டுமாயின் அவரது சாதகத்தில் கலைக்காரகன் #சுக்கிரபகவானும்,வித்தைகாரகர் #புதன்பகவானும் பலம் பெற்று சுபர் பார்வை பெற வேண்டும்.
இதோ இவரது ராசிக்கட்டத்தில் சுக்கிரனும்,புதனும் சேர்ந்து இருந்து குரு பகவானின் பார்வை பெறுவதோடு சந்திரனுக்கு கேந்திரத்திலும் உள்ளார்.இவ்வித அமைப்பே கலைத்துறையில் கவிஞனாக சாதிக்க வைத்தது.

                                 மேலும் சிம்ம லக்கனத்திற்கு ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் பகவானும்,பணிரெண்டாமிட அதிபதியான சந்திரபகவானும் பரிவர்தனை பெற்று இருப்பது சிறந்ததொரு ராஜயோக அமைப்பாகும்.
இளம்வயதில் தெய்வ மறுப்பு கட்சியில் இருந்த இவரை பின்னாலில் பக்திமிகு பாடல்களையும்,அர்த்தமுள்ள இந்துமதம்,இயேசுகாவியம் போன்ற நூல்களை எழுத வைத்தற்கான கிரக நிலைகள் பின்வருமாறு.

                                  இதேபோல சிம்மலக்கன யோகரான ஒன்பதாம் அதிபதியான (தர்மாதிபதி) செவ்வாய் பகவானும்,பத்தாமிட அதிபதியான(கர்மாதிபதி) சுக்கிரபகவானும் சேர்ந்திருப்பது "தர்ம-கர்மாதிபதி யோகம்" ஆகும்.அத்துடன் இந்த அமைப்புக்கு குரு பகவானின் பார்வையும் கிடைத்தது கூடுதல் பலம் கிடைத்துள்ளது.இந்த பலம்தான் இவரை ஆன்மீக சிந்தனையில்ஈடுபட வைத்தது.

                        மேலும் புத்திஸ்தானமான ஐந்தாமிடம் குருவின் வீடாக இருந்து அதில் ஞானக்காரகன் கேது பகவான் இருந்தது பிற்காலத்தில் ஞானமார்க்க வழியில் இழுத்து சென்றது.

            கவிஞர் கண்ணதாசன் சாதக கட்ட விபரம்


                                சிம்ம லக்கனம்,மேஷம் ராசி

                                              4-ல் சனி
                                               5-கேது
                                                  8-ல் குரு
                                               9-ல் சந்திரன்
                                                 11-ல் ராகு,சூரியன்
                                                   12-சுக்கிரன்,புதன்,செவ்வாய்.
***********************************

குறிப்பு;-தங்களுடைய சாதகங்களையும் இதேபோல ஆய்வு செய்து போனின் வழியாக வீட்டிலருந்தபடியே முழுப்பலனையும் பெறலாம்.கடடணம் உண்டு.தொடர்புகொள்க. தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)


அன்புடன்



                                     சோதிடர்ரவிச்சந்திரன்
                                                        M.SC,MA,BEd,
                                      சோதிட ஆராய்சியாளர்,
                                              வாழ்வியல் ஆலோசகர்,
                                                    ஓம்சகதி சோதிட நிலையம்
                                                             புதுக்கோட்டை மாவட்டம்.


எனது  வாட்ஸ்அப்  எண் ; 97 151 89 647
செல்:   740 257 08 99     97 151 89 647


My Email
masterastroravi@gmail.com


@@@@@@@