Friday 1 April 2022

ஜோதிட சூத்திரங்கள்-( 3 )

                

ஜோதிட சூத்திரங்கள்-3


  செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கிரகங்களை இயற்கை சுபர் மற்றும் இயற்கை பாவர் என இரு வகையாக ஒளி அளவின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.


       குரு, வளர்பிறை சந்திரன்,பாவிகளுடன்  சேராத தனித்த புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் இயற்கை சுபராக கருதப்படுகிறது. 

சனி, செவ்வாய், ராகு, கேது,பாவிகளுடன் சேர்ந்த புதன் , தேய்பிறை சந்திரன்  போன்றவை இயற்கை பாவ கிரகமாக வகைப்படுத்தப்படுகிறது.


  பாவ கிரகங்களில் சனி பகவானை முழூ பாவராகவும், செவ்வாய் பகவான் முக்கால் பாவராகவும் மற்றும் சூரிய பகவானை அரை பாவராகவும் செயல்படுகிறது.


        கிரகங்களை சுபத்துவ படுத்துவதில் குரு பகவான் முதன்மையானதாக அழைக்கப்படுகிறது.குரு பகவான் மட்டுமே  சர , ஸ்திர மற்றும் உபய ராசி ஆகிய மூன்றையும் தனது மூன்று பார்வைகளால் பார்க்கும் சிறப்புத் தன்மையை கொண்டது.

குரு பகவானுக்கு அடுத்து 

 சுப கிரக வரிசையில்  வளர்பிறைச் சந்திரன் பகவான் முக்கிய பங்கு வகிக்கிறது.


     பிறகு பன்னிரெண்டு லக்கனத்திற்கு உண்டான லக்கன யோகர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 


        மேஷ லக்கனத்திற்கு செவ்வாய் பகவான் லக்கனாதிபதியாக இருந்தாலும் அவரே அஷ்டமாதிபதியாகவும் வருவதால் முழுமையான லக்கன யோகர் அல்ல.சூரியன் ,குரு ஆகிய இருவரும் மிகுந்த லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


       ரிஷபம் லக்கனத்திற்கு சுக்கிரன் லக்கனாதிபதியாக இருந்தாலும் அவரே ஆறாம் அதிபதியாகவும் வருகிறது.எனவே லக்கன யோகராக புதன் மற்றும் சனி பகவான் வருகிறது.


       மிதுனம் லக்கனத்திற்கு புதன், சுக்கிரன் மற்றும் சனி பகவான் ஆகிய மூவரும் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


        கடகம் லக்கனத்திற்கு சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகிய மூவரும் லக்கன யோகராக செயல்படுகிறது.


           சிம்மம் லக்கனத்திற்கு சூரியன், குரு பகவான், செவ்வாய் ஆகிய மூவரும் லக்கன யோகராக செயல்படுகிறது.


           கன்னி லக்கினத்திற்கு சுக்கிரன்,புதன் மற்றும் சனி ஆகிய மூவரும் லக்கன யோகராக செயல்படுகிறது.


         துலாம் லக்கினத்திற்கு சுக்கிரன் லக்கனாதிபதியாக இருந்தாலும் அஷ்டமாதிபதியாகவும் வருவதால் முழுமையான லக்கன யோகராக கருத முடியாது.சனி , புதன் ஆகிய இருவரும் லக்கன யோகராக கருதப்படுகிறது.


     விருச்சிக லக்கனத்திற்கு செவ்வாய் லக்கனாதிபதியாகவும் வருவதால் முழுமையான லக்கன யோகராக இருக்க வாய்ப்பில்லை.குரு மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


 தனுசு லக்கினத்தில் குரு, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


 மகரம் லக்கனத்திற்கு சனி, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூவரும் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


கும்பம் லக்கனத்திற்கு சனி , புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


தனுசு லக்கனத்திற்கு குரு, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் லக்கன யோகராக அழைக்கப்படுகிறது.


  12 ராசிகள் அதனுடைய தன்மை அடிப்படையில் பல வகையாகப் பிரிக்கப்படுகிறது.


அவையாவன


  1)சர ராசி :

    

     சர ராசி என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது.


 -மேஷம், கடகம், துலாம், மகரம்


   2)ஸ்திர ராசி

  ஸ்திர ராசி என்பது ஓரிடத்தில் நிலைத்து நிற்பது.


  ரிஷபம் சிம்மம் , விருச்சிகம்,கும்பம்,


3) உபய ராசி


    இயங்கி கொண்டும்  ஓரித்தில் நிலைத்தும் இருக்கக்கூடிய ராசியாகும்.


  மிதுனம் கன்னி ,தனுசு, மீனம் ஆகும்,


      பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் ராசியை 

நெருப்பு ராசி, காற்று ராசி ,

ஜல ராசி, நில ராசி என்று பிரிக்கப்படுகிறது.


நெருப்பு ராசி

 மேஷம் சிம்மம், தனுசு,


நில ராசி

ரிஷபம் ,கன்னி, மகரம்


காற்று ராசி

மிதுனம், துலாம், கும்பம்


ஜல ராசி (நீர் ராசி)


கடகம், விருச்சிகம், மீனம்


     பால் வேறுபாடு அடிப்படையில்  ஆண்,பெண் ராசிகள் என்றும் வகைப்படுத்தப் படுகிறது.


  காலபுருஷ தத்துவத்தின்படி மேஷ ராசி ஆண் எனில் அடுத்த ராசி பெண்ணாகும் இப்படி தொடர்ந்து வகைப்படுத்தப்படுகிறது.


 ஆண் ராசி

மேஷம், மிதுனம் ,சிம்மம், துலாம், தனுசு கும்பம் முதலியன.


பெண் ராசி 

ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் , மகரம்,மீனம்


  பாதகாதிபதி


      பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது ஜாதகருக்கு அதன் தசையில் பாதகத்தை அதிகமாக தரும். ஆனால் பாதகாதிபதியை பாவக்கிரகங்கள் பார்த்து பலத்தை இழக்க செய்வது நல்லது.இவ்வாறு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்ட பாதகாதிபதி அதன் தசையில் தனது பாதகத்தை குறைத்துக் கொள்ளும் .இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் பாதக தன்மை அதிகமாகும்.


    சர ராசிக்கு பதினொன்றாம் இடத்தின் அதிபதி


ஸ்திர ராசிக்கு


 ஒன்பதாம் இட அதிபதி


உபய ராசிக்கு

  ஏழாம் இட அதிபதி


 சர ராசியான 

        மேஷ ராசிக்கு. கும்ப ராசி பாதக ஸ்தானமாக வரும்.  சனி பகவான் பாதகாதிபதியாக வருவார்.


        கடக ராசிக்கு. ரிஷபம் ராசி பாதக ஸ்தானமாக வரும் , சுக்கிர பகவான் பாதகாதிபதியாக வருவார்.


         துலா ராசிக்கு   சிம்மம் பாதக ஸ்தானமான வரும், சூரிய பகவான் பாதகாதிபதியாக வருவார்.


       மகர ராசிக்கு  விருச்சிகம் ராசி பாதக ஸ்தானமாக வரும்,  செவ்வாய் பாதகாதிபதியாக வருவார்.


 ஸ்திர ராசியான 


    ரிஷப ராசிக்கு மகரம் பாதக ஸ்தானமாக வரும், சனி பகவான் பாதகாதிபதியாக வருவார்.


    சிம்ம ராசிக்கு மேஷம் பாதக ஸ்தானமாக வரும், செவ்வாய் பாதகாதிபதியாக வருவார்.


      விருச்சக ராசிக்கு  கடகம் பாதக‌ ஸ்தானமாக வரும் , சந்திரன் பாதகாதிபதியாக வருவார்.

 

 கும்ப ராசிக்கு துலா ராசி பாதக ஸ்தானமாக வரும். சுக்கிரன் பாதகாதிபதியாக வருவார்.


 உபய ராசியான  மிதுனத்திற்கும்,கன்னிக்கும் குரு பாதகாதிபதியாக வருவார். மிதுனத்திற்கு தனுசும், கன்னிக்கு மீனம் ராசியும் பாதக ஸ்தானமாக வரும்.


      தனுசு மற்றும் மீனம் ராசிக்கு புதன் பாதகாதிபதியாக வருவார். தனுசு ராசிக்கு மீனமும் ,.  மீனம் ராசிக்கு கண்ணியும் பாதக ஸ்தானமாக வரும்


 மாரகாதிபதி


   பொதுவான மாரகாதிபதி என்பது இரண்டு மற்றும் ஏழாமிட அதிபதியாகும். பொதுவாக மாரகாதிபதி தனது தசையில் மாரகத்தை தந்து விடுவார் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. மாரகம் தருவதற்கு ஏனைய அமைப்புகளான பாதகாதிபதி, அஷ்டமாதிபதி , 

ஆயுள் காரகன் சனிபகவான்,சத்ரு ஸ்தானாதிபதி மற்றும் லக்கனாதிபதி வலுவை பொறுத்து அமைகிறது.


   பொதுவாக ஒருவருக்கு மாரகத்திற்கு நிகரான‌ கஷ்டத்தை

பாதகாதிபதி தசையில் மாரகாதிபதி புத்தி, 

பாதகாதிபதி தசையில் அஷ்டமாதிபதி புத்தி ,

பாதகாதிபதி தசையில் சத்ரு ஸ்தானாதிபதி புக்தி,

 அதேபோல அஷ்டமாதிபதி தசையில் மாரகாதிபதி புக்தி

 அஷ்டமாதிபதி தசையில் பாதகாதிபதி புத்தி 

அஷ்டமாதிபதி தசையில் சத்ரு ஸ்தானாதிபதி புத்தியில் தரும்.


  சில நேரங்களில் லக்கினாதிபதி வலுவாக இருந்தால் இது போன்ற அமைப்பில் ஏதாவது ஒரு கண்டத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து விடும்.


  சர ராசிக்கு 2 மற்றும் 7 க்கு உடையவர் பாதகாதிபதியாக வருவார்.

  ஸ்திர ராசிக்கு 3 மற்றும் 8-க்குடையவர் மாரகாதிபதியாக வருவார்.

உபய ராசிக்கு 7 மற்றும் 11ம் இட அதிபதி மாரகாதிபதி வருவார்.


   சர ராசிகளான 

மேஷ ராசிக்கு மாரகாதிபதி சுக்கிரன் பகவான் ஆவார். கடக ராசிக்கு அதிபதி சூரியன் மற்றும் சனி பகவானாவார். துலாம் ராசிக்கு  மாரக அதிபதி செவ்வாய் பகவானாவார் .மகர ராசிக்கு அதிபதி சந்திரன் மற்றும் சனி பகவானாவார்.


  ஸ்திர  ராசிகளான ரிஷப ராசிக்கு சந்திரன் மற்றும் குருபகவான் மாரகாதிபதி ஆவார் .

சிம்மம் ராசிக்கு சுக்கிரன் மற்றும் குரு பகவானாவார் .

விருச்சக ராசிக்கு சனி மற்றும் புதன் பகவானாவார் .

கும்பம் ராசிக்கு செவ்வாய் மற்றும் புதன் பகவானாவார்.


    உபய ராசிகளான 

மிதுனம் லக்னத்திற்கு குரு மற்றும் செவ்வாய் பகவான் மாரகாதிபதி ஆவார். கன்னி லக்னத்திற்கு குரு மற்றும் சந்திர பகவான் மாரகாதிபதி ஆவார்.

 தனுசு லக்னத்திற்கு புதன் மற்றும் சுக்கிரன் பகவான் மாரகாதிபதி ஆவார்.  மீன லக்கினத்திற்கு புதன் மற்றும் சனி பகவான் மாரகாதிபதி ஆவார்.


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647

   செல்

 9715189647

  7402570899


Email ! masterastroravi@gmail.com


                        



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம்.

‌.