Saturday 9 February 2019

பலன் சொல்லும் முறை


                           

                        

        பலன் சொல்லும் முறை


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

       கீழ்கண்ட எனக்கு தெரிந்த ஒரு நபரின் ஜாதகத்தினை உதாரண ஜாதகமாக  கொண்டு  சாதக பலன் சொல்லும் முறையினை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பாரப்போம்.

                         
                       

( ரிஷபம் லக்கனம்,கும்பம் ராசி , 1-ல் சுக்கிரன் ,2-ல் சூரியன் ,புதன் ,5-ல் குரு ,கேது ,7-ல் செவ்வாய் ,10-ல் சந்திரன் ,11-ல் ராகு ,12-ல் சனி ,மாந்தி )

   ஒரு சாதகத்தினை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாக திகழக்கூடியவர் லக்கனாதிபதி ஆவார்.லக்கனாதிபதி பலம்பெற்று ஏனைய அமைப்புகள் சரியாக அமையவில்லை எனினும் வாழ்வில் எதிர் நீச்சல்  போட்டு வெற்றி பெற்று விடலாம்.

  சாதகரது லக்னாதிபதி சுக்கிரன்  ஆட்சி பெற்று பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான மாளவ்யா யோகம் பெற்று லக்கனத்திலே ஆட்சி பெற்று இருப்பது மிக சிறப்பு ஆகும்.

   வாக்கு ஸ்தானம் எனப்படும் இரண்டாம் இட அதிபதி புதன் வாக்கு ஸ்தானத்திலே ஆட்சி பெற்று பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான பத்ரயோகம் பெற்றிருப்பதுடன் உயர்கல்வி ஸ்தானமான நான்காம் இட அதிபதியான சூரியன் உடன் இணைந்து '' புத-ஆதித்ய யோகம் பெற்றிருப்பதால் M.Sc,MPhil.MEd என பல பட்டம் பெற்றவர்.

  இவர் பல பட்டங்கள் பெறுவதற்கு ஏற்ற வகையில் உகந்த  திசை அமைப்பும் இளவயதினில் வந்ததும் ஒரு காரணம் ஆகும் .

  இவருக்கு ஒன்பது வயதிற்க்கு பிறகு வந்த லக்கன  யோகரான சனி திசையானது பல பட்டங்கள் பெற உதவியாக இருந்தது.

  பாவ கிரகமானது நேர்வலு பெறாமல் சூட்சும வலு பெறுவது சாதகருக்கு தனது திசையில் யோகத்தினை தரும் என்ற வகையில் சனி லக்கனத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்து ,நீசமடைந்து அந்த வீட்டிற்குரிய செவ்வாய் ஆட்சி என்ற வகையில் நீச பங்கமடைந்து காணப்பட்டதால் சனி திசையானது சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து பல பட்டங்களை பயிலகூடிய வாய்பினை சாதகருக்கு தந்தது.

  மேலும் புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் குரு+கேது இணைவும்,ஐந்தாம் அதிபதியான புதன் ஆட்சி பெற்றிருப்பதும் பல பட்டங்கள் படிக்கக்கூடிய அமைப்பினை தந்ததுடன் சாதகருக்கு ஆன்மீக ஈடுபாடும்,ஆன்மீக கதைகளையும்,தத்துவ நூல்களை விரும்பி படிக்கக்கூடிய ஆர்வமும் உண்டானது.

   பல ஆன்மீக ஸ்தலங்கள் சென்று வழிபடக்கூடிய ஆர்வம் இவரிடம் இயற்கையாகவே இவரிடம் அமைந்தது.

   புதன் பலம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் சோதிட சார்ந்த கருத்துக்களை என்னுடன் ஆர்வமாக உரையாடுவார்.

    பூர்வீக  ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி புதன் ஆட்சி பெற்று இருப்பதோடு ,பூமி காரகனான செவ்வாய் ஆட்சி பெற்று பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான ருசக யோகம் பெற்று திகழ்வதால் அதிக பூர்வீக நிலபுலன்களை பெற்றவர்.

    தனாதிபதியான புதன் ஆட்சி பெற்று இருப்பதால் எப்பொழுதும் யாருடைய காசோ, பணமோ இவரது கையில் புழங்கி கொண்டே இருக்கும்.

 களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதாலும்,ராசிக்கு ஏழாம் அதிபதியான  சூரியன் ஆட்சி பெற்ற புதன் உடன் இணைந்து லக்கனத்திற்கு தன ஸ்தானத்தில் அமர்ந்ததால் தனக்கு வந்த மனைவியும் ஆசிரிய பயிற்சி படிப்பு (DTEd)  படித்தவர்.இவரது சாதக அமைப்புப்படி தனக்கு வரக்கூடிய மனைவி அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற அமைப்பின் காரணமாக திருமணத்திற்கு  பிறகு இவரது மனைவிக்கு அரச ஆசிரிய பணி கிடைத்தது.

   லக்கனாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று ,களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று சம சப்தம பார்வையானது கணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்ய தன்மையில்லாமல் செய்து விட்டது.

  சாதகர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஜீவனாதிபதி சனியாக வந்து விரய ஸ்தானத்தில் நீசம் என்ற வகையில் இவருக்கு அரசு பணி கிடைக்கவில்லை.

  பூமி காரகன் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் அதிக நிலபுலன்களும்,
போர்செட்டும் வைத்து இருப்பதோடு வாழை,கரும்பு என பணப்பயிர் விவசாயம் செய்து பெரும் பணம் ஈட்டுவதற்கு பதிலாக ஆறாம் அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று பூமி காரகன் செவ்வாயை பார்ப்பதால் விவசாயம் செய்து  பல லட்சம் கடன் வாங்கி ,கடனை அடைப்பதற்காக பூர்வீக நிலபுலன்களை விற்று கடனை அடைக்வேண்டிய சூழல் உருவானது.

   இதனால் கணவன்-மனைவிக்கு  இடையே கருத்து வேறுபாடும்  வந்தது.

 லக்கனாதிபதி (சுக்கிரன் ) மற்றும் ஏழாம் அதிபதியும் (செவ்வாய் ) ஆட்சி பெற்று சமசப்தமாக பார்த்துக்கொள்வதால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுக்கிரன் திசையில் தனி ,வீடு வாடகைக்கு எடுத்து பிள்ளைளுடன் தனிகுடித்தனம் சென்று விட்டனர்.ஆரம்பத்தில் எதிர்த்த இவர் என் போன்ற சோதிடரின் ஆலோசனை பேரில் அவ்வெப்பெழுது வாடகை வீட்டுக்கு சென்று வருகிறார்.

    புத்திர ஸ்தானாதிபதி புதன்  ஆட்சி என்ற வகையில் பலமடைந்து இருப்பதால் ஒரு ஆண்,ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் இருந்தாலும் புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பது காரக பாவ நாஸ்தி என்ற வகையிலும் ,புத்திர காரகன் குரு பகவான்  உடன் கேது இணைந்து இருப்பது புத்திர தோஷம் என்ற வகையில் இவரது பிள்ளைகள் இவரை விட  இவரது மனைவி மீது அதிக பாசம் உடையவர்களாக இருந்தனர்.

நன்றி

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற, தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

 வாட்ஷ் அப்
  9715189647
      செல் 
 9715189646
  7402570899

  அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன் 
     M.Sc ,MA ,BEd 
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம் .

My email
  masterastroravu@gmail .com

Thursday 7 February 2019

திருமணம் காலதாமதம் ஆகிகொண்டே செல்வதன் காரணம் என்ன ?


      --வாசகர் கேள்வி

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

                         

   (மகர லக்கனம்,மிதுனம் ராசி .லக்கனத்தில் மாந்தி,4-ல் சனி ,5-ல் சந்திரன் ,கேது ,10-ல் செவ்,புதன்,சுக்கிரன் ,11-ல் சூரியன் ,குரு ,ராகு  )

      ஒரு சாதகருக்கு இளவயதினில் திருமணம் நடைபெற வேண்டும் எனில் அவரது சாதகத்தில் லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களும் அதன் அதிபதிளும் எந்த விதத்திலும் பங்கபடாமல் இருக்கப்பட வேண்டும் .இது லக்கனம் மற்றும் ராசி என இரு வகைகளிலும் பார்க்கப்பட வேண்டும் .

  இவை மட்டுமல்லாமல் களத்திர காரகன் சுக்கிரன்  மற்றும் காம காரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் பலம் இழக்ககூடாது.

   ஒரு கிரகம் பங்கப்படாமல் இருப்பது என்பதை எவ்வாறு காண்பது என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

  மேற்கண்ட ஸ்தானங்களிலும்,அதன் அதிபதிகள் உடன் ராகு ,கேது மற்றும் சனி சேர்க்கையோ அல்லது சாரமோ அல்லது  ஆறு ,எட்டாம் அதிபதி தொடர்போ பெறாமல் இருக்க வேண்டும் .

  மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் பகை,நீசம்,அஸ்தமனம் ,
வக்கிரம் மற்றும் மறைவு போன்ற நிலைகளில் ஒன்றாக இருக்க கூடாது.

  தங்களது சாதகத்தில் லக்கனத்திற்கு குடும்ப அதிபதியான குரு பகவானும் ,களத்திர ஸ்தான அதிபதியும் ஆன சூரியன் பகவானும் கரும்பாம்பு என அழைக்ப்படும் ராகு பகவான் உடன் சேர்ந்து நிற்பதாலும்,

  தங்களது ராசி மிதுனம் ஆகும் .ராசியிலே கேது பகவானும் ,ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் லக்கனம் மற்றும் ராசிக்கு  களத்திர ஸ்தான அதிபதியான குரு மற்றும் சூரியன் பகவான் உடன் ராகு சேர்ந்து நிற்பதாலும்,

 களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் ,
மங்களகாரகன் செவ்வாய் பகவானும்  கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து சனிபகவானால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் களத்திர காரகனான சுக்கிரன் சனி சாரம் பெற்றும் உள்ளது .

 மேற்கண்ட பல காரணங்களால் திருமணம் காலதாமதம் ஆகிகொண்டே உள்ளது .

       இவை மட்டுமல்லாமல் காம,களத்திர காரகன் சுக்கிரன் ,செவ்வாய் இணைந்து சனியின் பார்வை விழுவதால் சாதகர் காமம் எண்ணம்  உடையவராகவும் இருப்பர் .

     அதேநேரத்தில் மனநிலை காரகன் சந்திரன் ராகு சாரம் பெற்று கேதுபகவான் உடன் சேர்ந்து இருப்பதால் உறுதியான மனநிலை அற்று  திருமணம் செய்து கொள்வதில் பயத்தன்மை உடையவராவும் இருப்பர் .

    பெரும்பாலும் மிதுனம் ராசி காரர்கள் தூய்மை விரும்பிகளாகவும்,
செய்கின்ற வேலையினை நேர்த்தியாக செய்யக்கூடியவராகவும்,
சுயநல விரும்பிகளாகவும் இருப்பர்.

   தங்களது சாதகத்தில் தர்ம-கர்மாதிபதி யோகம் உள்ளது .அதாவது தர்மாதிபதி எனப்படும் ஒன்பதாம் இட அதிபதி சுக்கிரனும்,கர்மாதிபதி எனும் பத்தாம் இட அதிபதி செவ்வாய் ஆட்சியும் பெற்று இணைந்து நிற்பது தர்ம-கர்மாதிபதி யோகம் ஆகும் .இந்த அமைப்பே இவருக்கு அரசு வேலையினை பெற்று தந்தது.இந்த சுக்கிரன் +செவ்வாய்  சேர்க்கை மீது சனி பார்வையானது அரசு வேலை காலதாமதமாக கிடைத்தது.

  லக்கனத்திற்கு பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து புத்திரகாரன் குரு பகவான் உடன் அரவான ராகு சேர்க்கை மற்றும் புத்திர ஸ்தான அதிபதியான புதன் மீது சனி பார்வை  சாதகருக்கு கடுமையான புத்திர தோஷம் என்ற வகையிலும் கர்ம விதிப்படி திருமண யோகம் அற்றவராக உள்ளார்.

   சாதகப்படி குரு பகவான் உடன் ராகு சேர்ந்து '' குரு -சண்டாள யோகம் '' என்ற வகையில் சாதகம் மற்றும் தெய்வ நம்பி்க்கை அற்றவராகவும் இருப்பார்.

   பரிகாரம் ;-
  கும்பகோணம் அருகில் உள்ள  திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சனி கிழமை ராகு கால நேரத்தில் சென்று வெள்ளியால் செய்யப்பட பாம்பு படம் சாத்தி பாலாபிஷேகம் செய்ய நாகதோஷம் விலகும் .

  இதை தவிர இதர ராகு ஸ்தலமான பேரையூர்,திருப்பாள்புரம்,காளஹஸ்தி போன்ற ஏதேனும் ஒரு திருக்கோவில் சென்று ராகு கால நேரத்தில் நாகதோஷ பரிகாரம் செய்ய தோஷம் விலகி திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு .

  ராகு கால நேரத்தில் ஆஞ்சநேய வழிபாடு செய்து  ராமஜெயம் எழுதி வர தோஷம் விலகி திருமண யோகத்தினை தர வாய்ப்பு உண்டு .

நன்றி !

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

 வாட்ஷ் அப்
  9715189647
      செல்
 9715189647
   7402570899

                     

அன்புடன்

   சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA ,BEd ,
    ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம் .