Monday 26 August 2019

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரனின் கேள்வி-பதில்கள்

                           

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரனின் கேள்வி-பதில்கள்


செவ்வாய்ப்பட்டி. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  எனது முகநூல் பக்கத்தில் முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது "சோதிடர் சோ.ப ரவிச்சந்திரன் "
என்ற முகநூல் பக்கம்(facebook page) வழியாக பதிலளிக்கலாம் என்ற ஆர்வத்தில் என் பதிவை தொடங்குகிறேன்.


முதலில் சேலத்தை சேர்ந்த P. பார்த்திபா என்ற முகநூல் நண்பர் கேட்ட கேள்விக்கு விடையளிக்கலாம் .



அவர் கேட்ட கேள்வி 

இனி வருங்காலத்தில் அரசியலில் பதவி உயர்வு உண்டுங்களா, வாய்ப்பிருந்தால் அது எந்த காலகட்டம் அதாவது திசை புத்தியை குறிப்பிடவும்?



பிறந்த தேதி ; 03.10.1973

பிறந்த நேரம்:4.50 am
பிறந்த இடம்: சேலம்
(சிம்ம லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம்)


(2-ல் சூரியன்,3-ல் புதன், சுக்கிரன்,5-ல் சந்திரன், ராகு,6-ல் குரு 9-ல் செவ்வாய்,மாந்தி மற்றும் 12-ல் சனி, கேது)

                          


                          அரசியலில் ஒருவர் ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெற வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சிம்ம லக்கினமும், சூரியனும் பலம் பெற்றிருக்க வேண்டும் .

                      அந்த வகையில் இவரது ஜாதகத்தில் லக்கனம் சிம்மாகி லக்னாதிபதி சூரியன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து  மற்றொரு அரசாங்க காரக கிரகமான சந்திர பகவானின் நட்சத்திர சாரம் பெற்று ,
ராசியில் நீசம் பெற்று இருந்தாலும் அம்சத்தில் உச்சம் பெற்ற குரு பகவானின் பார்வையை பெற்றிருப்பதும், லக்கனத்திற்கு 9-க்குடைய அதாவது தர்மாதிபதியான செவ்வாய் பகவானும், 10-க்குடைய கர்மாதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும்.

மேற்கண்ட இவ்விரு சாதக அமைப்புகளும்  சாதகர் அரசியலில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்த கிரக அமைப்புகள் ஆகும்.

                                 தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்

"சொல்லுமையா பாக்கியத்தோன்,
பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !
தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர்  பல பேரும் உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையோடு வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"

                                  அதனால் இவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் இவருக்கு தனம் நிறைந்திருப்பதோடு , இவர் இட்ட ஏவல்களுக்கு தட்டாமல் செய்யக்கூடிய ஆள்பலம் இவரைச் சுற்றி இருக்கும்.

                          சாதகருக்கு தற்பொழுது கோசரப்படி  ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பில் இருப்பதாலும், செவ்வாய் திசையில் சனி புத்தி 05.01.2019 முதல் 14.02.2020 வரை நடப்பில் உள்ளது. பொதுவாக செவ்வாய் திசையில் சனி புத்தி சனி திசையில் செவ்வாய் புத்தி ஒருவருக்கு சிறப்பாக அமையாது. எனவே அரசியல் யோகம் இருந்தும் தற்சமயம் அரசியலில் ஜொலிக்க இயலாத நிலையில் உள்ளார்.

                     சாதாகர்  கேட்ட கேள்விப்படி அரசியலில் உயர்பதவியில் அமர செவ்வாய்திசை ஆனது தர்ம-கர்மாதிபதி திசையாக இருப்பதால் செவ்வாய் திசையில் சுக்கிரன் புத்தியில்(09.07.2021 முதல் 09.09.2022 வரை ) அரசியலில் உயர் இவரை பதவிகள் தேடிவரும்.
..........................................


இரண்டாவது நபர் ஈரோட்டிலிருந்து வேலவன் சின்னச்சாமி கேட்ட கேள்வி



 எனக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.திருமணம் எப்பொழுது நடக்கும்?  திசை புத்தியை குறிப்பிடவும்.


பிறந்த தேதி; 09.08.1989

பிறந்த நேரம்; 8.30 pm
பிறந்த இடம்: ஈரோடு



(ஜென்ம லக்கனம் : கும்பம் ஜென்ம ராசி:  துலாம்

 ஜென்ம நட்சத்திரம்: விசாகம்)

(1-ல் ராகு,5-ல் குரு,6-ல் சூரியன்,7-ல் செவ்வாய், சுக்கிரன், புதன்,கேது ,9-ல் சந்திரன் 11-ல் சனி)

                      



                                    பொதுவாக ஒருவருக்கு திருமணம் காலதாமதமாக தள்ளிக்கொண்டே செல்வதற்கான காரணம் சோதிட அடிப்படையில் என்ன ? என ஆராய்ச்சி செய்து பார்த்தால் "ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் ,குடும்ப ஸ்தானமான இரண்டாம்  இடம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் இந்த இடங்களில் அரவுகளான ராகு ,கேது மற்றும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம்பெற்றிருப்பது முக்கிய காரணமாக இருக்கலாம். இவை மட்டுமல்லாது களத்திரகாரகன் சுக்கிரனும் மேற்கண்ட வகையில் பாவ கிரகங்கள் தொடர்பு இருப்பின் திருமணம் கால தாமதமாகிக் கொண்டே செல்லும்.

                                     இவைதவிர லக்கனம், இரண்டாம் இடம்,  ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இட அதிபதிகள் பலமிழந்து இருந்தாலும் திருமணம் காலதாமதமாகி கொண்டுசெல்லும்.

                           மேற்கண்ட அமைப்புக்கள் பெற்று கோசாரப்படியும் மற்றும் நடக்கும் திசையும் உகந்ததாக இல்லை எனினும் திருமணம் ஒருவருக்கு கால தாமதம் ஆகிக் கொண்டே செல்லும்.

                        இவரது ஜாதகத்தில் லக்கனத்தில் ராகுவும், ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது என்ற இரண்டு பாவ கிரகங்கள் தொடர்பு,  இலக்கனத்தையும் லக்கினத்தில் அமர்ந்த ராகுவையும் , குடும்ப அதிபதியான குருவையும் சனி பகவான் தன்னுடைய மூன்றாவது மற்றும் ஐந்தாம் பார்வையால் பார்வை செய்கிறார் . மாங்கல்ய ஸ்தானாதிபதி புதன் பகவானும்  ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களான கேது, செவ்வாய் சேர்க்கை பெற்று உள்ளது.

                         ஏழாம் அதிபதி ஆறில் மறைந்து, அஷ்டமாதிபதி புதன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளது.

                           ராசிப்படி பார்த்தாலும் ராசியாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதியான சுக்கிரனும் , குடும்ப மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான செவ்வாய் பகவானும் அரவான ராகு,கேது பிடியில் மாட்டிக் கொண்டனர்.

                                  மேற்கண்ட இதுபோன்ற திருமணம் கால தாமதமாகிக் கொண்டு செல்கிறது.

 26.08.2016 விருந்து 03.07.2019 வரை சனி திசையில் ராகு புத்தியும் நடப்பில் இருந்தது.தற்பொழுது நடைபெறும் சனி திசையில் குரு புத்தி 13.01.2022 வரை நடப்பில் இருப்பதால் இந்த குரு புத்தி தங்களுக்கு மணவாழ்வினை அமைத்து தரும். நன்றாகப் பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொள்ளுங்கள்.
..............................................

மூன்றாம் நபர் முருகன் தியா முருகன் தியா கேட்ட கேள்வி 

                        "சொந்தத் தொழில் எப்பொழுது  தொடங்கலாம்?"



பிறந்த தேதி: 10.06.1987

பிறந்த நேரம்; 8.50  am



(2-ல் மாத்தி,3-ல் கேது,5-ல் சந்திரன்,சனி ,9-ல் குரு, ராகு,11-ல் சூரியன், சுக்கிரன்,12-ல் புதன், செவ்வாய்)



                         


                              ஒருவரது ஜாதகத்தில் சொந்த தொழிலை தெரிந்து கொள்ள அவரது ஜாதகத்தில்  ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தையும் அதன் அதிபதியும் நன்கு ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். இதனை இலக்கனம் மற்றும் ராசி என்ற இருவகையிலும் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.


                                         பத்தாம் இடத்தை பார்க்கின்ற , சேர்ந்துள்ள மற்றும் பத்தாம் அதிபதி பெற்றுள்ள  இடத்தையும் அதன் சாரநாதன் பெற்றுள்ள இடத்தையும் நன்கு ஆராய்ந்து ஒருவரது தொழிலை முடிவு செய்ய வேண்டும்.


                                        இவை மட்டுமல்லாது பத்தாம் அதிபதி அம்சத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்தும் ஒருவரது ஜீவனை நிலை அமையும். மேலும் பத்துக்கு பத்தாம் இடமான ஏழாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


                                          இவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாமிடமான செவ்வாய்  லக்கனத்திற்கு விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்திலும், ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திலும் மறைந்து உள்ளது. ஆதலால் இவருக்கு இன்னும் சரியாக தொழில் அமையவில்லை.


                                             அத்துடன் தற்பொழுது லக்னத்திற்கு மூன்று மற்றும் விரய ஸ்தானமான புதன் திசையில் ராகு புத்தி 30.07.2018 முதல் 16.02.2021 வரை  நடப்பில் உள்ளது.


                                     லக்கனத்திற்கு 11-க்குடைய சுக்கிரனும் மற்றும் 12 உடைய புதன் பகவானும் ஆட்சி பெற்று ராகு பகவான் லக்கனத்திற்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்து இருப்பதால் தற்பொழுது இவர் சுயதொழில் செய்யாமல் வெளிநாடு சென்று பணம் ஈட்டலாம்.


.......................................



நான்காம்  நபர்  முகநூல் நண்பர் அம்பாள் சரவணன் கேட்ட கேள்வி



                    ஐயா எனக்கு பொருளாதார நிலை எப்போது சீராகும்?



பிறந்த தேதி; 20.01.1970

பிறந்த நேரம் : 8.20 am


(லக்கனம் கும்பம் ,

   ராசி : மிதுனம்
நட்சத்திரம்: திருவாதிரை)



(1-ல் ராகு,2-ல் செவ்வாய்,3-ல் சனி,4-ல் மாத்தி,5-ல் சந்திரன்,7-ல் கேது,9-ல் குரு,11-ல் புதன்,12-ல் சூரியன், சுக்கிரன்)




                         



                               பொதுவாக ஒருவரது பொருளாதார நிலையை கண்டறிய "தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் ,தனகாரகன் குருவும் கெடாமல் இருக்க வேண்டும்".

                                 மேலும் நடக்கும் திசையும் மற்றும் கோச்சார பலன் உகந்ததாக இல்லை எனில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது.

                              அதாவது ருண ரோகாதிபதி, அஷ்டமாதிபதி போன்ற மறைவிட அதிபதிகளின் திசையோ அல்லது நடக்கும் திசையானது நீசம் அஸ்தமனம் பகை மற்றும் மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தாலும்
அல்லது நடக்கும் திசையானது லக்கனாதிபதிக்கு பகையாக இருந்தாலும் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும்.

                                          ஏழரை, அஷ்டமச்சனி காலங்களிலும், பாதகாதிபதி திசையிலும் ஒருவருக்கு பொருளாதார இறக்கங்கள் உண்டாகலாம்.

                                   ஜாதகருக்கு தனாதிபதியும், தனகாரகனுமான  குருபகவான் ராசியில் பகை பெற்ற இடத்தில் அமர்ந்து அம்சத்தில் நீசம் அடைந்து பலம் இழந்துள்ளது

                                   ஜாதகருக்கு தனாதிபதியும், தனகாரகனும் ஆன  குரு லக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பகை பெற்ற இடத்தில் அமர்ந்து நீசம் பெற்ற சனியினை  தனது சம சப்தமாக  பார்வை செய்வதால் 26.09.2018 க்கு முன்பு நடந்த சனி திசையின் 19 ஆண்டுகளும் சிறப்பாக அமையவில்லை.

                               இவருக்கு பொதுவாக பிறந்ததிலிருந்து ராகு திசை, அடுத்து அம்சத்தில் நீசம் பெற்று பலம் இழந்த குரு திசை மற்றும் நீசம் பெற்ற சனி திசை என  தொடர்ந்து வந்து ஜாதகருக்கு பொருளாதார நிலை சரியாக அமையவில்லை.

                                 எப்பொழுது இவருக்கு பொருளாதார நிலை சரியாகும்?  என ஆய்வு செய்தால் 26.09.2018 க்கு பிறகு புதன் திசை ஆரம்பித்து உள்ளது.

                                 ஒருவருக்கு யோகத்தை தர வேண்டும் எனில்  அவரது வாழ்வில் 1 ,5 ,9 க்கு உரிய திசை நடப்பில் இருக்கவேண்டும் .அந்த வகையில் புதன் திசை இவருக்கு லக்கனத்திற்கு 5-க்குடைய யோக தசையாக வருவதால் மேலும் புதன் லக்னத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திலும், ராசிக்கு ஏழாம் இடத்திலும் அமைந்துள்ளதால் இந்த புதன் திசை இவருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற நிலை உருவாக்கும் .

                                 எந்த ஒரு தசையும் அதன் சுய புத்தியில் யோகத்தை தராது.அந்த வகையில் இவருக்கு புதன் திசை புதன் புத்தி 21.02.2021 வரை நடப்பில் இருப்பதால் அதன் பிறகு சாதகருக்கு பொருளாதார நிலை சீராகும்.

..........................................

நிறைவாக முகநூல் நண்பர் ரா. குணசேகரன் கேட்ட கேள்வி


                                      எனக்கு எப்பொழுது சொந்தவீடு அமையும்?



பிறந்த தேதி: 14.03.1981

பிறந்த நேரம்: 3.45 am



(லக்னம் ; மகரம்

 ராசி      :மிதுனம்
நட்சத்திரம் :திருவாதிரை)



(1-ல் கேது,2-ல் சூரியன், புதன், சுக்கிரன்,3-ல் செவ்வாய்,6-ல் சந்திரன்,7-ல் ராகு,9-ல் குரு,சனி மற்றும் 12-ல் மாந்தி)




                             



                                                   பொதுவாக ஒரு நபருக்கு சொந்த வீடு அமைய நாலாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் , இதேபோல சுக்கிர பகவானும் பலம் இழக்க கூடாது.

                                                   ஒருவருக்கு நான்காம் அதிபதி பலமிழந்து நான்காம் இடத்தில் கேது, மாந்தி போன்ற பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு சொந்த வீடு அமையாது.


                                               ஜாதகருக்கு நான்காம் அதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் மறைந்து சனிபகவான் பார்வை பெற்றதால் சொந்த வீடு அமைவது காலதாமதம் ஆகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்பொழுது வீடு யோகத்தை தரக்கூடிய  சனி திசையில் சுக்கிர புத்தி நடப்பில் (14.11.2016 முதல் 15.01.2020 வரை) இருப்பதால் இந்த சுக்கிர புத்தியில் சொந்த வீடு அமையும்.


நன்றி.


தொடர்ந்து முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவில் பதில் அளிக்கப்படும்.



  வாட்ஸ் அப்    9715189647


      செல்   9715189647    7402570899




(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


My blog.Click here
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
My email
masterastroravi@gmail.com
                        



அன்புடன் 

சோதிடர் 
சோ.ப. ரவிச்சந்திரன்
     M.Sc,M.A,BEd
 (ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சனி பகவான் தரும் கோச்சார பலன்கள்


                                    

சனி பகவான் தரும் கோச்சார பலன்கள்.


              செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                          சனி பகவான்தான்  ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகம் ஆகும். அதாவது ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்கிறது. இவ்வாறாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் 12 ராசியை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகிறது.

                        சனி பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் வரும் பொழுது சனிபகவான் வக்கிரம் அடைகிறது. சனிபகவானுடைய வக்ர கதி காலம் ஆனது நான்கு முதல் ஐந்து மாதம் வரை நீடிக்கிறது.

                      சனிபகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் வக்கிர கதி நிலையில் உள்ளது. ஏழு ,எட்டில் அதி வக்கிர கதி அடைகிறது . சூரிய பகவான் ஒன்பது , பத்தாம் இடத்திற்கு வரும்போது சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆகிறது.

                             சனி இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடம் வரும்வரை அதாவது நான்கு அல்லது ஐந்து மாத காலம் சனி பகவான் வக்கிர கதி காலமாகும்.

                             சனி பகவான் பாவ கிரகம் என்ற வகையில் அவை வக்கிரம் அடையும் பொழுது அதன் இயல்பான பலனில்  மாற்றம் ஏற்பட்டு நற் பலனைத் தருகிறது.

                                                                                  



                               அர்த்தாஷ்டமச் சனி



                                            சனிபகவான் ஆனவர் சந்திரன் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்திற்கு வரும் பொழுது அதனை "அர்த்தாஷ்டமச் சனி" என்பார்கள்.

                                         நான்காம் இடமானது  தன் சுகம், தாய் சுகம் கல்வியால் சுகம் , வீடு மற்றும் வாகனத்தால்  சுகம் ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் சனிபகவானை வரும்பொழுது மேற்கண்ட ஸ்தான  பலன்களை பாதிக்கிறது.



                                          கண்டச்சனி


                                         சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு சனிபகவான் வரும் காலம்" கண்டச் சனி" என்பார்கள். "கண்டச்சனி தண்டச் செலவு தரும்" என்பது கோட்சாரப் பலன் ஆகும். எனவே இது போன்ற தருணங்களில் கண்ட செலவை சுப செலவாக மாற்றிக்கொள்ள வீடு கட்டுதல், நிலபுலன்கள் வாங்குதல்  இதன் மூலம்  தண்ட செலவினை சுப செலவாக  மாற்றிக் கொள்ளலாம்.



                                            ஏழரை சனி 


                                            சந்திரபகவான் இருக்கும் இடத்திற்கு பன்னிரண்டாம் இடத்திற்கு சனி பகவான் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் காலத்தை ஏழரைச் சனி ஆரம்ப காலம் எனலாம்.

                                              சந்திரனுக்கு பன்னிரெண்டில் சனி பகவான் வாசம் செய்யும் இரண்டரை ஆண்டுகளும் "விரயச்சனி காலம்" என்பார்கள் .


                                           இது போன்ற தருணங்களில் வீண் விரயங்களை தவிர்ப்பதற்கும் இதனை  சுப விரயங்களாக மாற்றிக் கொள்வதற்கு பூமி வாங்குதல், அணிகலன்கள் வாங்குதல் மற்றும் நிலபுலன்கள் வாங்குதல் போன்ற வகையில் சுப விரயச் செலவுகளாக மாற்றிக்கொள்ளலாம்.


                                       சந்திரன் இருக்கும் இடத்திற்கு அதாவது ராசிக்கு சனி பகவான் வரக்கூடிய காலத்தை "ஜென்மச் சனி" என்பார்கள்.


                                   வாழ்வில்   எல்லாவற்றையும் இழந்து நிற்பவனை  பார்த்து சாதாரணமாக "ஜென்மச்சனி பிடித்தவனாக இருப்பான் போல" என்று கூறுவது வழக்கம். இந்த கூற்றினை மெய்ப்பட வைக்கும்படியாக  ஜாதகரை ஜென்மச் சனி காலம் ஆன இக்காலகட்டத்தில் உறவுகளின் நிலை, உண்மையான நட்பு மற்றும் கணவன், மனைவி உறவு நிலைகள் இவற்றின் உண்மை நிலைகளை அறிந்து வாழ்வின் உன்னத தத்துவ நிலைக்கு சாதகரை சனிபகவான் பக்குவப்பட செய்வதால்தான் சனி பகவானை  சனீஸ்வரன் என்று அழைக்கிறோம்.

                                      சனி பகவான் சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாம் இடத்திற்கு வரும் பொழுது அதனை 'பாதச்சனி' என்றழைப்பார்கள் இக்காலகட்டத்தில் சனி பகவான் தான் தந்த இன்னல்களிலிருந்து மெல்ல சாதககரை விடுவிப்பார்.

                                          பொதுவாக சனி பகவான் தனது ஏழரைச் சனி காலங்களில் ஏழரை ஆண்டுகளும் சாதகரை கஷ்டப்பட வைப்பார் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிலருக்கு ஏழரைச் சனி காலங்களில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வசதி வாய்ப்புகளைத் தந்து கூட இருக்கும் ஆனா அதே நேரத்தில் மூன்றே முக்கால் நாழிகையோ  அல்லது  33/4 மணி நேரமோ அல்லது 33/4 நாள்களிலோ அது தன் கஷ்டத்தை ஒட்டுமொத்தமாக தந்து நிலை குலைய வைத்து விடும்.

                                          பொதுவாக ஏழரைச் சனி மேஷம் ,விருச்சிகம் மற்றும் சிம்மம் ராசிக்கு அதிக இன்னல்கள் தரக்கூடிய வாய்ப்பு உண்டு .அதேநேரத்தில் சொந்த ராசியான மகர, கும்ப ராசிக்கு ஏழரைச்சனி பெரும் பாதிப்புகளை தந்து விடுவதில்லை.

                                    ஓரு சில புதுமண  தம்பதிகளுக்கு ஏழரை சனி காலங்களில் குழந்தையானது ஜெணிக்குமாயின்  அக் குழந்தை பிறந்த நேரம் தம்பதிகளுக்கு இடையே கருத்து மாறுபாடு ஏற்பட்டு அவர்களுக்கிடையே மன அளவில் பிரிந்து வாழக்கூடிய சூழலை உருவாக்கும்.

                                      சனிபகவான் ஆனவர் ஒருவரது ஜாதகத்தில் குறைந்தபட்சம் மூன்று சுற்றுகளை சுற்றி வரும். முதல் சுற்று ஏழரைச் சனியை நாம் "மங்கு சனி" என்று அழைக்கிறோம். இரண்டாம் சுற்று ஏழரைச் சனியை" பொங்கு சனி" என்று அழைக்கிறோம். மூன்றாம் சுற்று ஏழரைச் சனியை "மரணச் சனி" என்று அழைக்கிறோம்.

                                        ஒரு ஜாதகருக்கு முதல் சுற்று வரும் ஏழரைச் சனிதான் வாழ்வில் அதிக கஷ்டங்களை தந்து வாழ்வின் உண்மையான நிலைகளை உணரவைக்கும்.

                                          முதல் சுற்று சிலருக்கு மிகக் குறைவான காலங்கள் இருக்கக்கூடிய அமைப்புக்களை  பெற்றவர்கள், இரண்டாம் சுற்றே , முதல் சுற்றான மங்குசனியை போல செயல்பட்டு இன்னல்கள் பல தரும்.


                                             அஷ்டம சனி


                                    சந்திரபகவான் இருக்கும் இடத்திற்கு எட்டாம் இடத்திற்கு சனிபகவான் வரும் காலம் "அஷ்டமச் சனி" காலம் ஆகும் அஷ்டமச்சனி ஆடு,மாடு விரயம், விவசாயத்தில் நஷ்டம், செய்கின்ற தொழில்களின் மீது ஆர்வமின்மை, வம்பு வழக்கு, விபத்து மற்றும் ஆயுள்  போன்றவற்றிற்கு பாதிப்பு உண்டாகும்.



                                                                பரிகாரங்கள்



                                              இதுபோன்ற ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி காலங்களில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்தல், சனி ஸ்லோகம் சொல்லுதல் மேலும் காகத்திற்கு விரதம் இருந்து சாதம் வைத்தல், பிராமணர்களுக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல்.

                                                இரவு படுக்கும் போது தலையணைக்கு அடியில் பச்சரிசியை ஒரு சிறு துணிப்பையில் மடித்து வைத்து படுத்திருந்து காலையில் அந்த அரிசியை தானே கைப்பட அரைத்து விநாயகருக்கு முன் அரிசி மாவு கோலமிட்டு விநாயகரை வழிபடவும் அவ்வாறு இட்ட அரிசிமாவு கோலத்தை எறும்புகள் பொறுக்கி செல்ல இன்னல்கள் பல தீரும்.


                                     துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று எள்ளுப் பொட்டலம் வாங்கி போட்டு விட்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்

  9715189647
    செல்
  9715189647
   7402570899

                       


  அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd,
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பகுடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email id

  masterastroravi@gmail.com.

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com.


...,........................................

லக்னாதிபதி பலம் இழந்தால்....

                                    


                              லக்னாதிபதி பலம் இழந்தால்...


                          செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

                             மானிட தேரை வழிநடத்திச் செல்லும் அச்சாணியாகத் திகழ்வது ஒரு ஜாதக கட்டத்தில் லக்னாதிபதியே ஆவார்.

                                ஜாதக கட்டத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து இருப்பினும் இலக்கினாதிபதி மட்டுமே உச்சம், ஆட்சி, நட்பு... போன்ற நிலைகளில் கேந்திர ,கோணங்களில் பலம் பெற்று இருப்பின் அந்த ஜாதகர் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர் நீச்சல் அடித்து வாழ்வின் உன்னத பயணத்தை சிறப்புடன் செம்மையாக வழிநடத்திச் செல்லக்கூடிய சூழலை உருவாக்கித் தரும்.


                             ஆனால் அதே நேரத்தில் ஏனைய கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருந்தாலும் லக்கனாதிபதி மட்டும் பலமிழந்து இருப்பின் அச்சாணி இல்லாத தேர் போலவே அவரது வாழ்வு தடம் புரண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.


                               சாதகருக்கு நடைபெறக்கூடிய ஒரு திசையானது லக்னாதிபதிக்கு நட்பாக, லக்கனாதிபதி இருக்கும் இடத்திற்கும் மற்றும் இலக்கணம் இருக்கும் இடத்திற்கும் கேந்திர கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் அந்த திசையானது  ஜாதகருக்கு  யோக தசையாக அமைந்து வாழ்வின் உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

                          மாறாக சாதகருக்கு  நடைபெறும் திசையானது லக்னாதிபதிக்கு பகையாக அமைந்து  லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கும்  மறைவிடங்களில் இருப்பின் அந்த கிரகமானது உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நல்ல ஸ்தான பலத்தை பெற்றிருந்தாலும் அந்த தசையானது சாதகருக்கு யோக பலனை அதிகம் தராது.


                               ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி மட்டும் பலம் இழந்தால் அந்த ஜாதகர் செயல்களில் மந்த தன்மை உடையவராகவும், பொறுமை, தெளிவு அற்றவராகவும், வெளிவேடக்காரராகவும்  இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். லக்னாதிபதி ஆனவர் சாதகரது ஆயுள் காரகனுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் லக்கனாதிபதி பலம் இழந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும்.


                                லக்கனாதிபதி லக்கனத்திலே ஆட்சி பெற்ற அமைப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள் .
மேலும் இந்த லக்னத்திலேயே பலம் பெற்ற லக்னாதிபதியை இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசாபுக்தி காலங்களில் யோக பலனை அதிகம் தரும்.

                            ராசியில் லக்னாதிபதி பலமிழந்த அமைப்பை பெற்றிருந்தாலும் அம்சத்தில் அந்த லக்னாதிபதியானவர் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் போது இந்த லக்கனாதிபதி ஆனவர் பலமடைந்த லக்னாதிபதியாகவே  கருதப்படுவார். 

                              ராசியில் பலமிழந்து அமையப் பெற்ற லக்கனாதிபதி ஆனவர் ராசியிலும் ,அம்சத்திலும் ஒரே இடத்தில் நின்று வர்கோத்தமம் பலனும் பெற்ற லக்னாதிபதி பலம் பெற்ற லக்கனாதிபதியாகவே கருதப்படுவார்.


                                      லக்னாதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து நின்று மறைவிடம் ஏறியிருந்தாலும் அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகள் உடைய நட்சத்திர சாரமும் அல்லது பாவருடைய நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அல்லது பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும் லக்னாதிபதி பலத்தில் சற்று பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

                              சூரியன் ,சந்திரன் கிரகங்களை தவிர ஏனைய கிரகங்களுக்கு  இரண்டு வீடுகள் என்ற வகையில்  ஒரு வீடு லக்கினாதிபதியாக இருந்து, மற்றொரு வீடு மறைவிட ஸ்தானமாகவே (3,6,8,12)  இருந்தால் லக்னாதிபதி என்ற வகையில் பலம் இழக்காது .ஆனால் அதே நேரத்தில் மறைவிட ஸ்தானங்களில் லக்னாதிபதி ஆட்சி பெறாமல்  லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பின் மிகுந்த யோகம் உண்டு.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணம் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

    9715189647

    செல்
  9715189647
   7402570899

                           

  அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroraviGmail.com

my 

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம்--(2)

                           

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம் -( 2)

                     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை.

                         நமது குடும்ப உறவுகளை ஜாதக கட்டத்தில் எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதையும் , கிரகங்களுக்கும் உறவுக்கும் உள்ள தொடர்புகளையும் இப்பொழுது நாம் பார்ப்போம் .

                        ஜாதக கட்டத்தில் தந்தை ஸ்தானத்தினை பற்றி அறிய 9-ஆம் இடத்தையும், தந்தைக்கு காரகனான சூரியனையும் ஆராய்ந்தறிய வேண்டும்.

                       தாய் ஸ்தானத்தை பற்றி அறிய மாதுர்காரகன் சந்திரனையும், நான்காம் இடத்தையும் ஆய்ந்து அறியவேண்டும்.

                     சாதகர் உடன்பிறந்த சகோதரனைப் பற்றி அறிய சகோதர காரகன் செவ்வாய் பகவானையும், சாதக கட்டத்தில் இளைய சகோதரனை  பற்றி அறிய மூன்றாமிடத்தையும், மூத்த சகோதரர் பற்றி அறிய 11-ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

                       சாதகர் உடைய அம்மா வழி மாமன் வர்க்கத்தை பற்றி அறிய புதன் பகவானையும் , ஜாதக கட்டத்தில் நான்காம் இடத்தையும் ஆய்வு செய்து அறிய வேண்டும்.

                      சாதகரது  மனைவியோட நிலையைப் பற்றி அறிய களத்திரகாரகன் சுக்கிரனும் ,மங்கள நாயகன்  செவ்வாயையும், இதேபோல ஜாதக கட்டத்தில் 7-ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

                       சாதகனுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளை பற்றி அறிய புத்திரகாரகன் குரு பகவானையும், புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

                       பாட்டன் வழி உறவுகளை பற்றி அறிந்துகொள்ள ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், தந்தை வழி பாட்டனைப் பற்றி அறிந்துகொள்ள ராகு பகவானும், தாய் வழி பாட்டனைப் பற்றி அறிந்துகொள்ள கேது பகவானையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.

                                                                              

                                 ஜாதகரது ஆயுள் பற்றி அறிந்துகொள்ள அஷ்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தையும், அஷ்டம ஸ்தானத்திற்கு அஷ்டம ஸ்தானமான மூன்றாம் இடத்தையும் இதேபோல கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவானையும் ஆய்ந்தறிய வேண்டும்.

                                    ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுக்கு பார்வை பலம் பெற்றுள்ளது .எல்லா கிரகங்களும் தாம் வாசம்  செய்யும் இடத்திலிருந்து 7-ஆம் இடத்தை பார்வை செய்யும் . எல்லா கிரகங்களும் ஏழாம் இடத்தை முழு பலத்தோடு பார்வை செய்கிறது.


                     "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும் அல்லது அவதிகள் மெத்த உண்டாகும்"  இக்கூற்றுப்படி   குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக நன்மைகளை செய்வார்.


                                      குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5-ஆம் இடத்தையும் ,7-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார்.

  கிரகங்களது பார்வைகள் மூலம் கிடைக்கும் பலனை "திருக் பலம் "என்கிறோம்.

                                       குரு பகவானுடைய மூன்று பார்வைகளில் எந்த பார்வைகளுக்கு எப்படி திருக்பலம்  உள்ளது என்பதை காண்போம். 

                                      குரு பகவானுடைய பார்வையில் ஒன்பதாம் பார்வைக்கு முக்கால் பலம் உண்டு. ஐந்தாம் பார்வைக்கு அரை பலம் உண்டு .ஏழாம் பார்வை முழு பலம்  ஆகும்.

                               சனி பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிகமாக பாதிக்கிறார். சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3 , 7 மற்றும் 10-ம் இடங்களை பார்வை செய்கிறார்.

                           சனி பகவானின் திருக் பலம் சனிபகவான் தனது ஏழாவது பார்வையின் மூலம் முழு பலத்தையும், மூன்றாவது பார்வை மூலம் அரை பலத்தையும் பத்தாவது பார்வை மூலம் கால் பலத்தையும் பெறுகிறார்.


                           செவ்வாய் பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு ,ஏழு  மற்றும் எட்டாம் இடங்களை பார்வை செய்கிறார்.


                             செவ்வாய் பகவானின் திருக்பலமானது  எட்டாம் பார்வைக்கு முக்கால் பலமும்,   நான்காம் பார்வைக்கு அரை பலமும் மற்றும் ஏழாம் பார்வைக்கு முழு பலமும் கிடைக்கிறது.


                                 கிரகங்களில் திக்பலம் பெற்று தெரிந்து கொள்வோம் .

குரு பகவானும், புதன் பகவானும் லக்னத்தில் நின்றால் முழுமையான திக்பலம் உண்டு.இதேபோல சந்திரனும் ,சுக்கிரனும் நான்காம் இடத்தில் நின்றால் முழுமையான திக்பலம் உண்டு. சனிபகவான் ஏழாம் இடத்திலும் , சூரியன், செவ்வாயும் பத்தாம் இடத்தில் நின்றாலும் முழுமையான திக்பலம் உண்டு.  மேற்படி கிரகங்கள் நின்ற வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் நிற்கும் பொழுது திக்பலம் குறைவு.

                                     
                                              ஜேஷ்டா பலம் என்ற வகையில் உத்திராயனம் காலத்தில் சூரியன், சந்திரன் ஜோஷ்டா பலம் பெறும்.

                                    செவ்வாய் ,புதன் குரு சுக்கிரன் வக்கிர கதியில் சேஷ்ட பலம் பெறுகின்றன.

                                       செவ்வாய் புதன் ,குரு, சுக்கிரன், சனி மிதுனம் கன்னி ராசியை கடக்கும்போது ஜேஷ்டா பலம் அடைவார்கள். அடைவார்கள்.

 தொடரும்....

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்   9715189647   செல்9715189647  7402570899
                  




 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்சியாளர் )
, ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
...,........................................
my email id : masterastroravi@gmail.com

my website
www.astroravichandransevvai.blogspot.com

www.astroravichandran.blogspot.com

............................................................................................................................

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம் -(1)

            

சோதிடம் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம் .ஒரு நீண்ட தொடர்.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    "தன்னை அறிதல் மெய்ஞானம்" ஆகும். "பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறிதல் விஞ்ஞானம்" ஆகும். பிரபஞ்ச ரகசியங்களை எல்லோராலும் கண்டறிய முடியாது .அந்த ரகசியங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுத்து அவர் வாயிலாகவே அந்த சூட்சும உண்மைகள் மனித சமுதாயத்திற்கு வெளிப்படுகிறது.

   பஞ்சபூதங்களில் கலப்பே பிரபஞ்சமாகும். மனித உடலும் பஞ்ச பூதங்களின் கலப்பால் உள்ளது இந்த பிரபஞ்சத்தில் தாக்குதல் மண்ணில் பிறந்த அனைவரையும் பாதிக்கிறது . எனவேதான் ஒரு ஆன்மீகப் பெரியோர்கள் "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்  உள்ளது" என்றார்கள்.

   கல்வியின் போது வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான விந்து அணுக்களில்  ஏதோ ஒன்று தான் அண்டத்தில் நுழைந்து முழுமையாக வளர்ச்சியடைந்த  கருமுட்டை ஆகிறது. இதனை சைகோட்  என்கிறோம். இந்த கருமுட்டையாக உருவான 
 காலத்திலிருந்து ஒரு குழந்தையின் மீது பிரபஞ்ச கதிர்களின் தாக்குதல் ஆரம்பமாகிறது. ஆனால் இந்த கரு உருவாகும் நிகழ்ச்சி ஒரு அக நிகழ்வாகும். இதனை சாதரன மனிதர்களால் கண்டறிய முடியாது என்பதால் குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிரபஞ்சத்தை தொடும் நேரத்தையே பிறந்த நேரமாக  கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

  குழந்தையின் தலையானது பிரபஞ்சத்தை தொடும் காலத்தையே பிறந்த நேரமாக பயன்படுத்தப்படுகிறது.  அந்த நேரத்தில் வானவீதியின் தொடுவானத்தில்  புலப்படும்  நட்சத்திரத்தினை "ஜென்ம நட்சத்திரமாக" கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

       நட்சத்திரம் இடம்பெறும் ராசியை "ஜென்ம  ராசியாகக்" கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    27 நட்சத்திரங்கள் 12 ராசிகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படுகிறது.. ஒரு ராசிக்கு 21/4 நட்சத்திரம் வீதம்   12 ராசிகளுக்கும்  பிரித்து வழங்கப்படுகிறது.

  ஒரு நட்சத்திரம் நான்கு பாதம் கொண்டது .ஆக இருபத்து ஏழு நட்சத்திரத்திற்கும்
 27× 4= 108 பாதங்களை கொண்டது. ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வீதம்  பன்னிரண்டு ராசிக்கும் 12×9= 108 பாதங்கள் வருகிறது.

   ஒரு சில நட்சத்திரங்களுக்கு மட்டும்  இரண்டு ராசிகளுக்கு பந்தம் உடையதாக ஆகிறது.

   உதாரணமாக கார்த்திகை 1-ஆம் பாதம் மேஷ ராசிக்கும் , ஏனைய 2, 3, 4 ஆம் பாதங்கள் ரிஷப ராசிக்கு வருகிறது.

மேஷ ராசி

 அசுபதி, பரணி கார்த்திகை முதல் பாதம் மட்டும்.

 ரிஷப ராசி 

கார்த்திகை 2 ,3 ,4 பாதம் ரோகிணி, மிருகசீரிடம்
 1, 2ம் பாதம்.

மிதுன ராசி

மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை,
 புனர்பூசம் 1 ,2 ,3 பாதம்

கடக ராசி 

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம் ,ஆயில்யம் முழுவதும்.

 சிம்ம ராசி 

மகம், பூரம் ,உத்திரம் முதல் பாதம் மட்டும்.
 கன்னி ராசி 

உத்திரம் 2, 3, 4 ,
அஸ்தம் 
சித்திரை 1 ,2 ம் பாதம்.

 துலா ராசி

 சித்திரை 3, 4 
சுவாதி
 விசாகம் 1, 2 ,3ஆம் பாதம்.

 விருச்சக ராசி

 விசாகம் 4ஆம் பாதம், அனுசம் ,கேட்டை முழுவதும் .

தனுசு ராசி

 மூலம், பூராடம் உத்திராடம் முதல் பாதம் மட்டும் .
மகர ராசி 

உத்திராடம் 2, 3 ,4 திருவோணம் 
அவிட்டம் 1 ,2 ம் பாதம்.

 கும்ப ராசி 

அவிட்டம் 3, 4 ம் பாதம், சதயம் ,பூரட்டாதி 1 ,2 ,3 ஆம் பாதம்.

 மீன ராசி

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி ,ரேவதி முழுவதும் ஆகும்.

    ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு அதன் ஜெனன கால திசை இருப்பு கண்டறியப்படுகிறது. ஜாதகர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ  அந்த நட்சத்திர சார நாதன் அதன் தொடக்க தசையாக கருதுதப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ள படுகிறது.

     ஜாதக கட்டத்தில் ஒன்பது கோள்களும் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளதோ அதன் அடிப்படையில் ஜாதக கட்டத்தில் இடம்பெறுகிறது.

 ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நட்சத்திர சார நாதன் என்னவென்று கீழ்க்கண்டவாறு தெரிந்து கொள்வோம் .

சூரியன்

 கார்த்திகை, உத்திரம் உத்திராடம்.

சந்திரன்

 ரோகிணி, ஹஸ்தம் திருவோணம்

 செவ்வாய் 

மிருகசீரிடம், சித்திரை அவிட்டம்.

 ராகு

 திருவாதிரை, சுவாதி சதயம் 

குரு 

புனர்பூசம், விசாகம் பூரட்டாதி 

சனி

 பூசம் அனுஷம் உத்திரட்டாதி

 புதன் 

ஆயில்யம், கேட்டை ரேவதி 

கேது

அசுபதி மகம் மூலம்

சுக்கிரன் 

பரணி ,பூரம் ,பூராடம் முதலியன ஆகும்.

  உதாரணமாக ஒரு ஜாதகர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருடைய  ஜென்ம ராசி மீனம் ஆகும் .
அவரது ஜெனன கால திசை ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார் .எனவே புதன் திசையினை ஜெனன கால திசையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

   திசை அளவானது கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு  கோளுக்கும் அமைகிறது. திசையானது கீழ்க்கண்ட வரிசையில் அமைந்துள்ளது.

சூரியன் -6 வருஷம்

 சந்திரன் -10 வருடம்

 செவ்வாய்- 7-ம் வருடம்

ராகு- 18 வருடம் 

குரு- 16 வருடம் 

சனி -19 வருடம் 

புதன்- 17 வருடம் 

கேது -7 வருடம்

 சுக்கிரன் -20 வருடம்

 மொத்தம் 120 வருடம் ஆகும்.

  மேற்கண்ட உதாரண படி புதன் தசை ஜெனன கால திசை இருப்பு எனில் அதன் இருப்பிலிருந்து அடுத்து கேது திசை, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு குரு, சனி என திசைகள் அடுத்தடுத்து வரும்.

  சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்கும் சித்திரை மாதம் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீன ராசி வரை சூரியன் நடந்து செல்லும்.

  எனவே ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் என்ன மாதத்தில் பிறந்துள்ளார் என்பதை எளிமையாக கண்டடைய கண்டறியலாம்.

  அடுத்தபடியாக புதனும், சுக்கிரனும் சூரியனுக்கு அருகில் உள்ள உள்வட்ட கிரகங்கள் ஆகும். புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிகளில் தங்கும். சுக்கிரன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியன் இருக்கும் ராசிக்கு முன் பின் இரண்டு ராசிகள் தள்ளி தங்க கூடியது.

 சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் வீதம் 12 ராசியையும் சுற்றி வருகிறது.

   சூரியன் இருக்கும் ராசியில் சந்திரன் அடையும் பொழுது அது அமாவாசை காலமாக கருதப்படுகிறது. சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சந்திரன் வரும் காலம் பொளர்ணமி காலமாகக் கொள்ளப்படுகிறது. சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து இரண்டு முதல் ஆறாம் ராசி வரை ஜெனிக்கும் குழந்தை வளர்பிறை சந்திரனில் பிறந்து உள்ளதாக கருதப்படுகிறது. இக்காலத்தினை 
சுக்ல பட்சம் அல்லது பூர்வபட்சம் என்று கருதப்படுகிறது. இக்காலங்களில் சந்திரன் இயற்கை சுபராக கருதப்படுகிறது.

   சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் வரும் காலம் பவுர்ணமி காலமாக கருதப்படுகிறது. எட்டாமிடத்தில் இருந்து பன்னிரண்டாம் இடம் வரை சந்திரன் உள்ள காலம் தேய்பிறைகாலம் என அழைக்கப்படுகிறது. இதனை கிருஷ்ணபட்சம்‌ அல்லது அமர பட்சம் என்போம் .இக்காலத்தில் சந்திரன் இயற்கை பாவராக கருதப்படுகிறது.

 செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றறை மாதகாலம் தங்கும் . உள்வட்ட கிரகங்களான புதனும், சுக்கிரனும் ஒரு ராசிக்கு ஒரு மாத காலம் வாசம் செய்யும். 

  குரு ராசிக்கு ஒரு வருடம் காலம் தங்குவார்.
அரவுகளான இராகு, கேதுக்கள் ஒரு ராசிக்கு ஒன்றறை ஆண்டுகள் வாசம் செய்யும் .ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய  ஒரே கிரகம் சனிபகவான் ஆவார். இவர் ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகாலம் தங்குவார்.

 -- தொடரும்........

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
 9715189647

   செல்
 9715189647
   7402570899


                       

 அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd.
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்.)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
....,.......................................