Monday 29 July 2019

இளமைக்கும்,புதுமைக்கும் காரகர் புதன் பகவான்.

                   இளமைக்கும், புதுமைக்கும் காரகன்     புதன் பகவான்.


                     

                      செவ்வாய்ப்பட்டிஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

        காடுகளில் ஆடையின்றி இலை, தழைகளை ஆடையாக அணிந்து நாடோடியாக வாழ்ந்து தெரிந்த மனிதன் இன்று 4G  level இணையத்தை பயன்படுத்தும் அளவிற்கு உயர்ந்து  நிற்ப்பதற்க்கும், பூமி தவிர இதர கோள்களான சந்திரனில் சந்திராயன் மூலமாகவும், செவ்வாயில் மங்கள்யான் மூலமாகவும் வாழ்வதற்குரிய வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கும் மனிதனாக தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதனாக உயர்ந்தது நிற்ப்பதற்க்கு மூளையாக மனிதனுக்கு செயல்படுவதும் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு நிகர் புதன் பகவானாவார்.

                 தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பார்கள்.மனிதனுக்கு தேவையின் நெருக்கடி ஏற்படும்போது அவனது சிந்தனையின் விளைவாக செயலாக வெளிப்படுவது கண்டுபிடிப்பாகும் இந்தக் கண்டுபிடிப்பில் இரண்டு வகையாகச் சொல்லலாம் ஒன்று இல்லாத ஒன்றை தனது ஞானத்தால் படைப்பது இதனை invention என்பார்கள். மற்றொன்று தனது சூட்சும அறிவால் அதாவது உள்ளுணர்வால் இயற்கையிலிருந்து ஏற்கனவே இருந்த ஒன்றை கண்டுபிடித்து தருவது discovery என்பார்கள்.

                     இந்த இல்லாத ஒன்றை படைப்பதற்கும்,   ஏற்கெனவே இயற்கையில் இருக்கின்ற ஒன்றை தன் ஞானத்தால் மற்றவருக்கு பிடிபடாத ஒன்றை கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கும் வித்தகரான புதன் பகவானின் அருளாசி தேவை.

                   இதுவரை கண்டுபிடித்ததற்கும், இனிமேல் கண்டுபிடிக்க போவதற்கும் மூளையாக செயல்படக்கூடியவர் புதன் பகவானாவார்.

               காவியங்களைப் படைப்பதற்கும், இலக்கண, இலக்கிய நூல்களை எழுதுவதற்கும் கதை, கவிதை, கட்டுரை மற்றும் பாடல்கள் போன்றவற்றை புனைவதற்கும் புதன் பகவானின் அருளாசி கட்டாயம் தேவை.

                     ஒரு மனிதன் சிறந்த எழுத்தாளராக, கவிஞனாக, இலக்கியவாதியாக,  சிறந்த பேச்சாளராக கணித மற்றும் அறிவியல் அறிவில் வித்தகனாக , புள்ளிவிவரங்களைப் சேகரிப்பவனாக, பிரச்சினைகளை தீர்ப்பதில் வித்தகனாக என்றும் பொருள் அறிவுடனும் ஞானத்துடனும் விளங்குவதற்கு பகவானே காரகர் ஆவார்.

                  ஒருவனை தனது நல்ல சிந்தனை மற்றும் செயல் விளைவாக என்றும் தன்னை இளமையாக வைத்துக் கொள்ளும் மனநிலைக்கு கிரகம் புதன் பகவானாவார்.

                இசையில் நாட்டம் உடையவராகவும், புதியன படைத்தல் போன்ற செயல்கள் மூலம் தன்னை என்றும் இளமையாக வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு காரகன் புதன் பகவானாவார்.

                                பிரச்சினை என்று வரும் இடங்களில் எல்லாம் உடனடியாக ஓடிச்சென்று புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சேகரித்து அவற்றை தலையங்கம் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் பத்திரிகையில் தந்து அதன் மூலம் தீர்வு கண்டு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் மூளைக்கு காரகர் புதன் பகவானாவார்.

                              சிற்பம் வடித்தல் ,ஓவியம் வரைதல் ,கூடை முடைதல் பாய் பின்னுதல் போன்ற நுண்கலை  விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி தனது மனதை என்றும் இளமையாகவும், புதுமையாகவும் வைத்துக் கொள்ளும் நிலைக்கு காரகன் புதன் பகவானாவார்.

                           சோதிடவியலில் கணிப்பொறி துறையை பயன்படுத்தி உலகளாவிய சோதிடராக உயர்ந்து நிற்பதற்கும் புதன் பகவான் காரணமாகும்.

                                          ஒரு மனிதன் தனது அறிவால் தனக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சேர்க்கும் மனநிலை உடையவர் அவரது ஜாதகத்தில் புதன் பகவான் பலமடைந்து பாவ நட்சத்திர சாரம் பெற்று இருக்கும்.

                                        அதேநேரத்தில் புதன் பகவான் பலமடைந்து சுபகிரக அல்லது நட்சத்திர சார தொடர்புடையவர்கள் இந்த உலகிற்கு தனது அறிவின் மூலமும் பயன்படக்கூடிய  புதிய ஒன்றை தனது படைப்பாற்றல் மூலம் கண்டறிந்து வெளிப்படுத்தி அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு பயன் பயன்படும் நிலைக்கு அர்ப்பணித்து  பெயரும், புகழும் பெற்று தன்னை இளமையாகவும் , புதுமையாகவும் வைத்துக் கொள்வார்.

                                         புதன் பகவான் சிக்கல்களை தீர்ப்பவர், புதியன படைப்பவர், புள்ளிவிவரங்களை சேகரிப்பவர், சாதகரை என்றும் இளமையாகவும், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயல்பவர் ஆவார்.
 எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் புதன் பகவானுடைய அருளாசி தேவை .

                     தனது ஜாதகத்தில் புதன் பகவான் பலம் இழந்த நிலையில் பெற்றவர்கள் அதனை பலம் பெறச் செய்ய கீழ்க்கண்ட பரிகாரங்கள் மூலமாக அதனை நிவர்த்தி செய்யலாம்.

    1) தனது விரலில் மரகதப்பச்சை நவரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

    2) புதன் கிழமை அன்று அருகில் உள்ள விஷ்ணு கோயில் சென்று விஷ்ணு வழிபாடு செய்யலாம்.

    3) ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது உத்தமம்.

   4) பாசிப்பயிறு தானம் செய்யலாம் .

   5) சீர்காழி அருகிலுள்ள திருவெண்காடு என்ற ஊருக்குச் சென்று புதனை வழிபட்டாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சொக்கநாதரை வழிபட்டாலும் நல்லது.

நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்
  9715189647


     செல்
 9715189647
  7402570899


     
                                                                     

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்),
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

my emailmasterastroravi@gmail.com
my blogastroravichandransevvai.blogspot.comastroravichandran.blogspot.com

.....................................................................................................................................................

சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனே காரகர் ஆவார்.

சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனே காரகர் .


                   

        செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                                               மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சொகுசான வாழ்க்கையை
 அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவாக இருக்கும்.

                                             சொகுசான வாழ்வு என்பது கார் ,பங்களா ,ஆடை, ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை பெறுவது ஆகும்.இவை மட்டும் அல்லாமல் இன்ப களியாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ந்து இருப்பது ஆகும்.

                                        சாதக கட்டத்தில் சொகுசான வாழ்க்கையை தருவதில் சுக்கிரன் பகவானே காரகர் ஆவார்.ஏனெனில் சுக்கிரன்தான் மேற்கூறிய அனைத்திற்கும் முக்கிய காரகன் ஆவார்.

                          சுக்கிர பகவானே வண்டி வாகனத்திற்கு காரகர் ஆவார் ஒரு ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலம் பெற அவருக்கு வண்டி வாகன யோகம் உண்டு(நான்காம் வீட்டையும் கவனிக்கப்பட வேண்டும்). ஆதலால் ஆடம்பரமான கார்களில் பவனிவர அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் தரக்கூடிய அருளாசியை காரணமாகும்.

                             இதேபோல ஒருவர் ஆடம்பரமான பங்களா போன்ற வீடுகளை அமைப்பதற்கு அவரது ஜாதகத்தில் சுக்கிரபகவான் உடைய நிலையைப் பொருத்து அமைகிறது. சுக்கிரனை பலமாக பெற்றவர்கள் ஆடம்பரமான பங்களாக்களில் மட்டுமில்லாமல் ஆடம்பரப் பொருட்களை பயன்படுத்தும் யோகமும் அவர்களுக்கு அமையும்.

                             சுக்கிரன் கலைரசனைகளின் அதிபதி என்பதால் வீடுகளை  சிற்பங்கள், ஓவியங்கள், கம்பளங்கள்  மற்றும் திரைச்சீலைகள் போன்றவற்றால் அலங்காரம் செய்து மற்றவர் பார்த்து வியக்கும் வண்ணம்  கலை  ரசனையுடன் ரசித்து கட்டக்கூடிய தன்மை அவருக்கு இயல்பாக அமைகிறது.

                                ஒருவருக்கு கிடைக்கக்கூடிய ஆடை, அணிகலன்களுக்கு காரகன் சுக்கிர பகவானாவார். ஆதலால் பாதிக்கப்படாத பலமடைந்த சுக்கிர பகவான் விலை உயர்ந்த பிளாட்டினம், வைரம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து மகிழும் யோகத்தை சாதகருக்கு தருபவர் சுக்கிர பகவானாவார்.

                              இயல் ,இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழுக்கும் காரகராக விளங்குவது சுக்கிர பகவானாவார் .ஒரு ஜாதகத்தில் பலமடைந்த சுக்கிரனை பெற்றவர்கள் முத்தமிழ் மீதும் தனியாக தாகம் உடையவர்களாக இருப்பார்கள் .அதனால் சினிமா, பத்திரிக்கை மற்றும் இலக்கிய உலகில் புகழ்பெற்றவராக திகழவும் அல்லது அந்த துறை மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளவும் சுக்கிரனே காரகன் ஆகும்.

 எந்த ஒரு பொருளிலும் புதிய மாடல்கள் வந்தால் அதை உடனே வாங்குவதில் அதிக ஈடுபாடு கொண்ட மனநிலையினை உடையவர்களுக்கும் சுக்ரனே காரகர் ஆவார்.

                                         தன்னை மற்றவர்களிடம் அழகாக காட்டிக் கொள்வதற்காக செய்யப்படும் சிகை அலங்காரம், முக அலங்காரம் மற்றும் உடை அலங்காரம் அனைத்திற்கும் சுக்கிர பகவானே காரகர் ஆவார்.

                                       ஒரு சராசரி மனிதருக்கு போதுமான அளவிற்கு அவரது தேவைகள் நிறைவேறி இருந்தாலும் மேலும் ,மேலும் புத்தம்புது விஷயங்களிலும், பொருட்களை வாங்கி சேர்ப்பதிலும் அதிக ஈடுபாடு காட்டும் மனநிலைக்கு சுக்கிர பகவானே காரணமாகும்.

                                     பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற நவநாகரீக உணவகங்களில் இரவு தேனி விருந்துகளில் கலந்து கொள்ளும் மனநிலை உடையவர்களுக்கும் சுக்கிர பகவானே காரகர் ஆவார்.

                                   மது, மாது மற்றும் சூது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு இன்ப சுகங்களை அனுபவித்து இறுதியில் நோய்வாய்ப்படும் நிலைக்கும் சுக்கிர பகவான் காரகன் ஆவார்.

நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்
.)


வாட்ஸ் அப்
  9715189647


  செல்
 9715189647
 7402570899

                 

அன்புடன்
 சோ.ப. ரவிச்சந்திரன்
      M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி. புதுக்கோட்டை மாவட்டம்.

email 
masterastroravi@gmail.com

my blog.com
astroravichandransevvai.blogspot
astroravichandran.blogspot.com
..............................................................................................................................

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை துணையாக அமையும்?

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை துணையாக அமையும்?


                 

         செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

                                           இன்றைய பெரும்பாலான இளைஞர்கள்/இளைஞிகளின் கனவுகளில் வந்து அலக்கழிப்பது அவர்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய வாழ்க்கைத்துணை பற்றிய கற்பனை உணர்வே காரணமாகும்.

                                            இன்றைக்கு நான்கு இளைஞர்கள் ஓரிடத்தில் கூடி கிண்டலடிப்பதும் ,
கசு -குசு என்று பேசி சிரிப்பதும் வருங்கால வாழ்க்கைத் துணையைப் பற்றிய இனம்புரியாத கற்பனை உணர்வே காரணமாகும்.

                                  இன்றைக்கு இளைஞர்கள் திருமண பந்தம் என்ற வட்டத்திற்குள் எப்பொழுது நுழைவது என்ற கற்பனை உணர்வில் காலம் தள்ளுகிறார்கள். ஆனால் திருமண பந்தத்தில் ஈடுபட்டவர்களுடைய மனநிலையோ திருமண பந்தம் என்ற வட்டத்திற்குள் இருந்து வெளியில் வரவே ஆசைப்படுகிறார்கள்.

                                       ஒரு நவநாகரிக இளைஞன் கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரடீஸிடம் சென்று" ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்வது நல்லதா? செய்துக்கொள்ளாமல் இருப்பது நல்லதா? என்று கேள்வி கேட்டார் "அதற்கு அவர் புத்திசாலித்தனமாக   "இந்த இரண்டில் எந்த ஒன்றை முடிவாக எடுத்தாலும் பின்னால் வருத்தப்படுவாய் தம்பி" என்றாராம்.

                                        ஒரு ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய மனைவியைப் பற்றி அறிய அவர்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தினையும் அதன் அதிபதியையும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனும் கவனிக்கப்பட வேண்டும்.

                                       ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் எந்தப் பாவ கிரகங்கள் தொடர்பு பெறாமல் , ஏழாம் அதிபதி ஆனது சுப கிரகமாக இருந்து கேந்திர, கோணங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்ற அமைப்பிலிருந்து இயற்கை சுபக்கிரகங்களான குருவால் பார்க்கப்பட்டால் அவருக்கு யோகமான மனைவி வாழ்க்கையில் அமையும் .

                   ''   வீட்டில் அந்த பெண்  கால் எடுத்து வைத்த நேரம்  அவரது புகழ், அந்தஸ்து, செல்வம் எல்லாமே கிடுகிடுவென்று உயர்ந்துச்சு  ஐயா" என ஊர் போற்றும்படியான மனைவி அமைவாள்.

                        ஏழாம் அதிபதி சர ராசியாக  இருந்தால் வெளியூர் பெண் வாழ்க்கை துணையாக அமைவாள். ஸ்திர ராசியாக இருந்தால் "நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்" என்ற வகையில் உள்ளூரிலேயே மனைவி அமைவாள். உபய ராசியாக  இருந்தால் உள்ளூரில் கொஞ்ச காலம் வசித்து  பிறகு வெளியூர் சென்று வாழும் குடும்பத்து மனைவி அமையும்.

                              ஏழாம் அதிபதி சர ராசியில் (மேஷம் கடகம் துலாம் மற்றும் மகரம்)  அல்லது ஜல ராசியில் (கடகம் விருச்சிகம் மீனம்) அமர்ந்து ராகு சாரம் பெற்றோ
 அல்லது ராகுவுடன் தொடர்பு பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவி வெளிநாட்டு வாசம் புரியும்பெண்  வாழ்க்கை துணையாக அமைவாள்.

                                ஏழாம் இடத்திலோ அல்லது ஏழாம் அதிபதி  சந்திரனாக இருந்தால் அழகு வதனம் படைத்த மனைவி வாழ்க்கை துணையாக அமைவார்.

                               ஏழாம் அதிபதி சூரியன், புதன் உடன் தொடர்புகொள்ள அரசாங்கத்தில் வேலை பார்க்கும் பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                                          ஏழாமிடத்தில் இயற்கை சுப கிரகமான குரு சுக்கிரன், பாவியுடன் சேராத புதன், மற்றும் வளர்பிறை சந்திரன் இருந்து இதை இலக்கனத்திற்கு சுப ஆதிபத்யம் பெற்று இருக்க வேண்டும்.பாவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் .ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் பலம் பெற்று சுபர்களின் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இப்படி அமைந்த கணவனுக்கு கல்வி மற்றும் செல்வம் மிகுந்த மனைவி வாழ்க்கை            துணையாக அமைவார்.

                                           ஏழாம் அதிபதி பன்னிரெண்டாம் இடத்திலிருந்து சுபகிரக பார்வை படும்போது வெளிநாட்டு வாசம் செய்யும் மனைவி வாழ்க்கை துணையாக அமையும்  .

                                     ஏழாம் அதிபதி ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ள காதலித்த பெண்ணை மனைவியாக அமைவாள்.

                                  களத்திரகாரகன் ஏழாமதிபதி அல்லது சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ள கலப்பு இன் பெண் வாழ்க்கைத் துணையாக அமையும்.

                                     ஏழாம் அதிபதி ஒருவருக்கு சுக்கிரன் ஆக அமையும் பட்சத்தில் அல்லது சுக்கிரன் சாரம் பெறும் பட்சத்தில் கலையார்வம்  உள்ள பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                                         ஏழாம் அதிபதி புதன் அல்லது ஏழாம் அதிபதி புதனின் சாரம் பெற்று குரு பார்வை பெற்ற அமைப்பு பெற்ற பெண் மேடையேறி பேசக்கூடிய அல்லது எழுத்தார்வம் கொண்ட பெண் வாழ்க்கை துணையாக அமையும்.

                               ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து ,ஏழாமிடத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் அவனுக்கு கட்டாயம் ஏறுக்குமாறான பெண் மனைவியாக அமைவாள்.
                                 "கட்டிய மனைவி ஏறுக்கு மாறாக இருந்தால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்" என்ற வார்த்தைக்கு இணங்க சந்நியாச வாழ்க்கை மேற்கொள்வதே சிறந்தது.

                                ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து சனி பார்வை பெற்ற அமைப்பு உடையவர்களுக்கு கோபக்கார பெண் வாழ்க்கை துணையாக அமைவார்.

(மேற்கண்ட ஜோதிட கருத்து ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்)


நன்றி


(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்
 9715189647
   செல்
 9715189647
  7402570899


அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி online சோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

ரிஷப ராசி அன்பர்களின் குணநலமும், வாழ்வின் தன்மையும்

ரிஷப ராசி அன்பர்களின் குண நலமும், வாழ்வின் தன்மையும்.


                   



செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

"சேய்சனி புதன் பொன் நட்பு
சீரிய புகரோன் ஆட்சி தூய்மைசேர் மதியே உச்சம்
துயர் தரும் பாம்பு நீசம் காய்கதிர் பகையே யாகும் கண்டனர் இடபம் தன்னில் ஆய்தரு  பொருள்க ளெல்லாம்
அறிந்தினி  துரைக்க லாமே!"
   -சாதக அலங்காரம்


                                         ரிஷபம் ராசியில்


நட்பு-செவ்வாய் ,சனி ,புதன் குரு.
ஆட்சி -சுக்கிரன்
உச்சம் -சந்திரன்
நீசம் -ராகு கேது
பகை -சூரியன்


                                                  ரிஷப ராசி ஆனது நிலம் ராசி, ஸ்திர ராசி மற்றும் பெண்தன்மையான ராசி ஆகும் .
                                                 ரிஷப ராசி அன்பர்கள் உண்மையைப் பேசுபவர்கள் .
கொஞ்சமாக உண்பவன். குண்டு உடம்புகாரன். பிறருக்கு கீழே வேலை செய்பவன் .
                                                 புளிப்புச்சுவை ஆசையுள்ளவன். கணித சாஸ்திரத்தில் வல்லுநர். உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து இருப்பான்.
                                                  மிருதுவான காது மடல்களை உடையவன் புத்திசாலி ,சிறுபிள்ளையைப்போல விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வான்.


                                         பேராசையுடன் பிறர் உடைமைகளை அபகரிப்பவன். இருமல் முதலிய கபம் சார்ந்த நோய்களை உடையவன். தன் பிள்ளைகளின் மழலைச் சொற்களை கேட்பதில் மாறாத ஆசையுள்ளவன் .

                                           ஐந்தாம் வயதில் அக்கினி பயத்திற்கு ஆட்படுவான். பதினாறாம்  அகவையில் கழுத்து வியாதியால் கஷ்டப்படுவார். பத்தொன்பதாம் பிராயத்தில் இருமலால் இன்னலுக்கு உள்ளாவான். இருபதாம் வயதிலும், இருபத்தெழாம் வயதிலும் காய்ச்சல் வரும் இலக்னத்தை சுபக்கிரகங்கள் பார்வையிட்டால் எழுபத்து ஏழு வயது வரை ஆயுள் உண்டு .

                                             இவை அனைத்தும் பொதுப்பலன்கள் லக்னாதிபதி தன்மை சுபகிரக பார்வை, இவற்றைப் பொறுத்து ராசியின் பலன் மாறுபடும்.

                              ரிஷப ராசி ஸ்திர ராசி என்பதால் ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி ஆகும். அவ்வாறு பார்க்கையில் சனி பகவானாவார் ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உடையவராக வந்து அதே நேரத்தில் சனிபகவான் இலக்கன யோகராக இருந்தாலும் ,
பாதகாதிபதி என்ற வகையில் அதன் தசாபுத்திகளில் ஒரு சில பாதகங்களையும் தர வாய்ப்பு உண்டு.

                               ரிஷப ராசியை பொறுத்தவரை சனி தசை யோக தசை ஆகும். எனவே சனி பகவான் ஆனவர் பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகம் அதிகமான இன்னல்களை தரும் என்ற வகையில் பாதக ஸ்தானமான 9 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது அதன் தசாபுத்திகளில் அதிக யோகங்களை தர வாய்ப்பு உண்டு.

                            ரிஷப ராசிக்கு அடுத்த லக்கன யோகராக புதன் திசை விளங்குவதால் பாவிகளோடு தொடர்பு பெறாத புதன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் திசை புத்திகளில் யோக பலன்களைத் தர வாய்ப்பு உண்டு.

                       ரிஷப ராசிக்கு சுக்கிரன் பகவான் ருண,ரோக பிணி பீடைகள் தரக்கூடிய ஆறுக்குடையவன் என்றபோதிலும் அவை இலக்கினாதிபதி என்ற வகையில் அதன் தசா புத்திகளின்  யோக பலனை தர வாய்ப்பு உண்டு.

                                     ரிஷப ராசிக்கு சுக்கிரன் ராசியாதிபதியாக இருப்பதால் அசுர குருவான சுக்கிராச்சாரியார் தேவகுருவான பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான் பகை கிரகமாக வருவதால் குரு திசை காலங்கள் மிகுந்த இன்னல்களை சாதகருக்கு தந்துவிடுகிறது. இது போன்ற தருணங்களில் வியாழன்தோறும் குருபகவானை வழிபட குரு பகவான் தரக்கூடிய இன்னல்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாம் .

                               ரிஷப ராசிக்கு 2, 5-க்குடைய புதன் கன்னியில் உச்சம் பெற்று லாபஸ்தானமான பதினோராம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் கல்வி கேள்விகளில், வித்தைகளில் புலமை பெற்றவராக , நிரம்பக் படித்தவராக மற்றும் தனயோகம் உடையவராக காணப்படுவார்.
                                 தனாதிபதியான புதன் பகவானை, தனகாரகன் குருவால் பார்க்கப்படும்போது எந்நாளும் காசு பணத்திற்கு குறைவில்லாது வாழ்வார்.

                                ரிஷப லக்னத்திற்கு 12-க்குடைய செவ்வாய் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற அமையப் பெற்றவர்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பெற்றவராக திகழ்வார்.

நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                                            


அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd,
 (ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..
My blog
AstroRavichandransevvai.blogspot.com

மேஷ ராசி அன்பர்களின் குண நலமும், வாழ்வின் தன்மையும்

மேஷ ராசி அன்பர்களின் குணநலம், வாழ்வின் தன்மையும்.

                             
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

                                        பொதுவாக மேஷ ராசி அன்பர்கள் சற்று வீம்பு பிடித்தவர்கள் என்றும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அற்றவர்கள் என்றும் சொல்லலாம். இவர்களிடம் விவாதத்திற்கு சென்றால் இறுதியில் சண்டை சச்சரவுடன்தான்  முடியும். இவர்களைப் போன்றவர்களை பாராட்டி தான் வேலை வாங்க முடியமே தவிர மிரட்டி வேலை வாங்கிவிட  முடியாது

                                        யுத்த காரகன் மற்றும் ரத்த காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் லக்கினாதிபதியாக கொண்டதால் சற்று அசட்டு தைரியமும், எதையும் சமாளித்து விடலாம் என்று வரட்டு தைரியமும் இவர்களிடம் மிகுந்து காணப்படும்.

                                         மற்றவர்களுக்கு உதவும் குணமும் பொதுநலத்தில் ஈடுபடும் நாட்டமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஒரு அமைப்பில் தலைவராக இருக்கும் பொழுது விடாப்பிடியாக நின்று தான் கொண்ட அமைப்பின் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்படுவார்கள்.

                                   மேற்கண்டவை அனைத்தும் பொது பலன்களே . இது அந்த ராசியில் உள்ள கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் அவற்றின் தன்மையை பொருத்து பலனில் மாறுபட வாய்ப்பு உண்டு.

                                          மேஷ ராசி சர ராசி, ஆண் ராசி மற்றும் நெருப்பு ராசி எனலாம்.
 செவ்வாய் பகவானை ஆட்சி வீடாகவும், சூரியனை உச்ச வீடாகவும், சனி பகவானை நீச வீடாகவும், குரு, சந்திரன், சூரியனை நட்பு கிரகமாகவும் , சுக்கிரனையும், சனியையும் சமமாகவும் மற்றும் புதன் ,ராகு ,கேது ஆகிய கிரகங்களை பகை கிரகமாகும் கொண்டுள்ளது.

                                       மேஷ ராசி சர ராசி என்பதால் பதினோராம் அதிபதியான சனி பகவானே பாதகாதிபதியாகவும் ,.  இரண்டு மற்றும் ஏழுக்குடையவர் மாரகாதிபதி என்ற வகையில் சுக்கிரன் மாரகாதிபதி ஆகவும் செயல்படுகிறார்.

                                        மேஷ ராசிக்கு யோகராக லக்னாதிபதியான செவ்வாய், ஐந்தாம் அதிபதி சூரியன் மற்றும் ஒன்பதாம் அதிபதியான குரு பகவான் ஆகியோர் லக்கன‌ யோகராக செயல்படுகிறார்.

                                      எனவே மேஷ ராசிக்கு குரு, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய மூவரும் பாவருடன் கலப்பின்றி உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் அதன் திசை,புத்தி காலங்களில் ஜாதகருக்கு‌ யோக பலன்களை தருகிறது.

                                          மேஷ ராசிக்கு மறைவிட‌ ஸ்தானமான மூன்று மற்றும் ஆறுக்குடைய புதன் திசை வரும்பொழுது கடன் தொல்லைகளாலும், அல்லது நோய் தொல்லைகளாளும் அல்லது எதிரிகளாலும்  தொல்லைகள் உண்டாகி அதிக கடன்களை தனது திசை காலத்தில் சாதகருக்கு  தந்து கஷ்டப்படுத்தி பார்க்கும்.

                                           மேஷ ராசியில் பொருத்தமட்டில் புதன் பலம் இழந்து நிற்பது நல்லது. இவ்வாறு பலமிழந்து இருப்பின் அதன் தசை புத்தி காலங்களில் இன்னல்களை அதிகம் தராது. அதேநேரத்தில் புதனுக்குரிய காரக பலன்கள் பாதிக்கப்படும்.

                         மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் அஷ்டமாதிபதி ஆக இருந்தாலும் அவையே லக்கனாதிபதியாகவும் இருப்பதால் தனது தசா காலங்களில் அதிக கஷ்ட நிலையைத் தராது.

                           மேஷ ராசிக்கு சனி பகவான் ஜீவன மற்றும் லாபாதிபதியாக இருப்பினும் 11-க்குடைய  பாதகாதிபதி என்ற வகையில் அது பதினொன்றாம் இடத்தில் அமராமல் பத்தாம் இடத்தில் அமர்ந்து ஆட்சி பெறுவது சிறப்பான யோக பலன்களை தரும்.

                       மேஷ ராசிக்கு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் குரு ஆட்சி பெற்று ராசியையும், ராசிக்கு ஐந்தாம் இடமான திரிகோண ஸ்தானத்தில் உள்ள சூரியனை பார்க்கின்ற அமைப்பை பெற்றவர்கள் யோகமான அமைப்பைப் பெற்றவர்கள் ஆவார்.

நன்றி


(தங்களது ஜாதகப் பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்
    9715189647
  செல்
   9715189647
    7402570899



அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோchandranதிட ஆராய்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்ட
ம்

              my email
masterastroravi@gmail.com
my blogspot
astroravichandransevvai.blogspot.com
astroravichandran.blogspot.com

யோகமுள்ள மனைவி யாருக்கு?

யோகமுள்ள மனைவி யாருக்கு?
                           
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை.

     ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்து உச்ச, ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இயற்கை சுப கிரகங்களான குரு பகவானால் பார்க்கப்பட்டு நின்று பாவர் தொடர்பின்றி இருக்க, இதேபோல  லக்கனம், இரண்டாம் இடம், ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவற்றில் பாவ கிரக தொடர்பின்றி  அந்த வீட்டு அதிபதிகளும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் பலம் பெற்றிருக்க யோகம் உள்ள மனைவி வாழ்க்கை துணையாக அமைவாள். திருமண நேரத்தில் உகந்த யோக திசையும்  நடப்பில் இருக்க வேண்டும்.

  யோகம் உள்ள மனைவி அமைவதற்கு சோதிட நூல்களில் உள்ள பாடல்கள் மற்றும் அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

  "பெரிய ஜோதிட சில்லறைக் கோவை' என்னும் நூலில் உள்ள பாடல்

'பொன்னவன் புதனும் சந்திரன் புகரும் ஏழிடத்திருந்தால் கன்னிகை தனை மணப்போன் கல்வியும் பொருளும் வாய்த்து மன்னவன் போலிருப்பான் மங்கையை மணம்புரிந்து பொன் பொருள் பூஸ்தியோடு அன்பாய் பொருந்தி வாழச்செய்வாரே"

ஏழாம் இடத்தில் இயற்கை சுபரான குரு ,புதன், சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் அமர்ந்துள்ள நல்ல பெண்ணை மணந்தவன் கல்வியும் செல்வமும் பெற்று மன்னவன் போல் வாழ்வான்.

"உதயத்தில் வெள்ளியும் ஒரு  மூன்றில் கணிதனும் ஈருரெண்டில் அரசனும் பலமாகி நிற்கும் பாவையரை  வாழ்க்கை துணையாக கொண்டவன்
 வாழ்வினில் வசந்தம் வாழ்வு தேடி வரும் "

பாடல் விளக்கம்

  ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தில் சுக்கிரனும், மூன்றாமிடத்தில் புதனும், நான்காம் இடத்தில் குரு பகவான் கொண்ட அமைப்பு பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் வாழ்வினில் வசந்தங்கள் தேடி வரும்.

 "வளர்பிறை அம்புலி சுகமேறி உச்சம் பெற இவளை அரசன் அசையாமல் நோக்கும் கிரகநிலை உடைய பாவையை மணந்த  மன்னவன் மகுடம் சூடி மகிழ்வான்"

விளக்கம்:-
 வளர்பிறை சந்திரன் நான்காம் இடத்தில்  உச்சம்  பெற்று நிற்க  குரு பகவானின் பார்வையினை பெற்ற அமைப்பினை உடைய பெண்ணை மணந்தவன் மன்னவன் போல் வாழ்வான்.

"வளர்பிறை மதி
லக்கனத்தில் உதயமாக பகலவன்  லாபமேறி உச்சநிலை மோனத்தில்  அமர
கர்மத்தில் கணியனை கொண்ட பாவையை மணந்த மணாளன் மன்னனுக்கு நிகரானவன் மாசில்லா மைந்தன்"

பாடல் விளக்கம்:-

 அரசனுக்கு நிகரான புகழ்பெற விரும்புவோர் லக்கனத்தில் பூரணச்சந்திரன், லாபத்தில் அதாவது பதினொன்றாமிடத்தில் சூரியன் உச்சமாக இருந்து பத்தாம் இடத்தில் புதன் அமர்ந்து உள்ள பெண்ணை மணப்பான்.

 உச்ச வீட்டில் மால் அமர்ந்து அது உதயத்தோன் வீடாகி லாபத்தில் அரசன் உச்சமாக கொண்டவளை
மனையாளாக மணந்தவன் மன்னனுக்கு என மாந்தர்க்கு உரையடி தோழி"

 விளக்கம்:- புதன் உச்ச வீட்டில் அமர்ந்து அதுவே லக்னமாக அமைந்து லாபாதிபதியான பதினோராம் இடத்தில் குரு உச்சம் பெற்ற அமைப்பைக் கொண்ட பெண்ணை மணந்தவன் மன்னனுக்கு நிகரானவன்.

சாதக அலங்காரம் பாடல்

 எடுத்த பத்தாமதிபதி ஏழிறை கடுத்த மித்திரராகிப் பலனுடன் கொடுத்த உத்தமர் வீட்டினிற் சூழ்ந்திடப் படைத்த பாரியினால் வரும் பாக்கியம்"

பாடல் விளக்கம்:-

  பத்தாம் ராசி அதிபதியும், ஏழாம் ராசி  அதிபதியும் மித்ருவாகி பலம் பெற்று , பலனைத் தரத்தக்க உத்தமர் வீடுகளில் இருக்க அந்த சாதகனுக்கு தன் மனைவியால் மேலான செல்வம் புகழ் கீர்த்தி உண்டாகும் என்று சாஸ்திர வல்லோர் கூறுவர் .

ஜாதக பாரிஜாதம் என்னும் ஆராய்ச்சி நூலில் உள்ள பாடல்

''புந்தியும் குருவும் ஏழில் பொருந்திடப் புனிதப் பெண்டிர்
 வந்திடும்நல்ல பிள்ளை வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர் உதவியாய் ! குளிகன் கேது
சொந்தமாய் ஏழு வாக்கில் தூரத்ரீ ரோடு வாழ்வான்!''

பாடல் விளக்கம்

புதனும், குருவும் கூடி ஏழாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் உத்தமமான பெண்ணை மனைவியாக அடைவான்.

    ஏழாம் ஸ்தானத்தில் சுக்கிரன் நின்றிருந்தால் நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் பெண் மனைவியாவாள். மனைவிவழி உதவியும் அவனுக்கு உண்டு.

  குளிகனும், கேதுவும் கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான்.

  "கேந்திரங் களிலே  ஏழுக் குடையவன் கெதியாய் வாழ வாய்ந்த நல் சுபரே பார்க்க வந்திடும் ராசி நாதன் சார்ந்திடும் சுபாங்கி சத்தில் தாழ்ந்திட சாத கற்கு ஆழ்ந்த நல் திரியே ஒன்றாய் அமைந்திடும் அறிந்து பாரே"

பாடல் விளக்கம் கேந்திர ஸ்தானங்களில் 7க்குடையவன் நன்னிலையில் நின்றிருக்க, அவனை சுபர்கள் பார்வையிட அவன் நின்ற ராசிநாதன் நவாம்சத்தில் சுபர்களின் வீட்டில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் உத்தமமான ஒரு மனைவியை பெற்றிருப்பான்.

சாதக அலங்காரம் என்னும் நூலில் இருந்து பாடல் எண் 700

"கொள்ளும் நற் களத்தி ராதிகா குருவுடன் கூடி யாவும் தெள்ளிய பார்வை முற்றும் திடமும் தலன்உற் யாவும் மெள்ளவே பிருகு தானும் வெகுதிட மாக் உன்னால் ஒன்றிய தான தர்மம் உள்ளவள் வருவாள் தானே!"

பாடல் விளக்கம்
   7க்குடையவன் குருவுடன் இணைந்திருக்க அல்லது நல்ல ஸ்தானங்களில் குருவின் பார்வையைப் பெற்றிருக்க , சுக்கிரன் நன்கு பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகனின் மனைவி தானங்களும் இதர அறங்களும் செய்கின்ற உத்தியாக  இருப்பாள்.

நன்றி!

(தங்களது ஜாதகபலன் திருமணப்பொருத்தம் மற்றும் ஜனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்ய கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

   செல்
  9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கறம்பக்குடி. புதுக்கோட்டை மாவட்டம்.