Tuesday, 3 November 2026

 வெளிநாடு செல்வதற்கு தேவையான யோகம் தரும் ஜாதக அமைப்பு.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!



 திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள்.

வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட 


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு"என்கிறார்.


இன்றைய காலகட்டத்தில் பொருளீட்டல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.உள்நாட்டில் பெரிய அளவு சம்பாதித்து மீதபடுத்த முடியாது.என்பதால் தான் எல்லோரும் கடல் கடந்து வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார்கள்.


வெளி நாடு செல்வதற்கு தேவையான கிரக அமைப்புகள் மற்றும் முக்கிய வீடுகளின் பங்களிப்புகள் மற்றும் வெளிநாடு செல்ல உகந்த நேரம் போன்ற சிலவற்றை விரிவாக பார்ப்போம்.


  ஜாதக அமைப்பின் படி ஒருவர் வெளிநாடு செல்வதற்கும், அங்கு தங்கிப் பணி புரிவதற்கும் அல்லது குடியேறுவதற்கும் சில குறிப்பிட்ட வீடுகளும் கிரகங்களும் வலுவாக இருக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டு மற்றும் பண்ணிரெண்டாம் வீடுகள், மற்றும் ராகு, சந்திரன், சனி ஆகிய கிரகங்களே வெளிநாட்டு யோகத்தைத் தீர்மானிக்கின்றன.

வெளிநாடு செல்லும் யோகத்தைத் தரும் முக்கிய ஜாதக அமைப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:


1. முக்கிய வீடுகளின் பங்களிப்பு 


  ஒன்பதாம் வீடு (பாக்ய ஸ்தானம்): 


    இது நீண்ட தூரப் பயணங்கள், உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுப் பயணங்களை குறிக்கும்.


பன்னிரெண்டாம்வீடு (அயன சயன போக ஸ்தானம்): 


     இதுவே வெளிநாட்டில் வசிப்பதையும், அந்நிய தேசத்தில் குடியேறுவதையும் குறிக்கும் மிக முக்கியமான வீடாகும்.


மூன்றாம் வீடு:-


  இது குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் வீட்டை விட்டு இடம்பெயர்வதைக் குறிக்கும்.


  எட்டாம் வீடு:-


 கடல் கடந்து செல்லும் பயணங்களைக் குறிக்கும்.


2. முக்கிய கிரகங்கள்-


   ராகு பகவான்: 


      ராகு போக காரகன் மற்றும் அந்நிய தேசத்திற்கு அதிபதி. ஜாதகத்தில் ராகு வலுவாக இருந்தால், அவர் கண்டிப்பாக ஒருவரை வெளிநாடு அழைத்துச் செல்வார்.


சந்திரன்:-


     சந்திரன் இடப்பெயர்ச்சிக்கும், கடல் கடந்து செல்லும் பயணங்களுக்கும் காரகர் (நீர் கிரகம்).


சனி :-

       ஜீவன காரகன். வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கு சனியின் அருள் அவசியம்.


3. வெளிநாட்டு யோகம் தரும் சிறப்பான கிரக நிலைகள்:-


   ஒன்பதாம் மற்றும் பன்னிரெண்டாம் அதிபதிகளின் தொடர்பு: ஒன்பதாம் அதிபதியும் , பன்னிரெண்டாம் அதிபதியும் இணைந்து அமர்வது, அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது, அல்லது பரிவர்த்தனை (இடமாற்றம்) பெற்றிருப்பது மிகச் சிறந்த வெளிநாட்டு யோகமாகும்.


  லக்னாதிபதி பன்னிரெண்டாம் இடத்தில் மறைவது: ஜாதகத்தின் முதல் வீட்டுக்கு உரியவர்  அதாவது லக்னாதிபதி ஆனவர் பன்னிரெண்டாம் வீட்டில் போய் அமர்ந்தால், அவர் தனது சொந்த ஊரை விட வெளிநாட்டில் அல்லது வெளியூரில் தான் பெரும் புகழும் வசதியும் பெறுவார்.


   சர ராசிகளின் ஆதிக்கம்: 


  மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் 'சர ராசிகள்' (நகரும் தன்மை கொண்டவை) எனப்படும். லக்னமோ அல்லது லக்னாதிபதியோ, சந்திரன் அல்லது ராகுவோ இந்த ராசிகளில் இருந்தால் அடிக்கடி பயணம் செய்யும் யோகம் உண்டாகும்.


  பத்து மற்றும் பன்னிரெண்டாம் அதிபதிகள் சேர்க்கை: தொழில் ஸ்தானமாகிய பத்தாம் அதிபதியும் , பன்னிரெண்டாம்  அதிபதியும் தொடர்பு கொண்டால் வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் தேடி வரும்.


ராகுவின் பலம்: 


  ராகு பகவான் 3, 6, 10, 11 அல்லது 12 ஆகிய வீடுகளில் சுப கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்தால் அந்நிய தேச யோகம் நிச்சயம் உண்டு.


எப்பொழுது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்?


ஜாதகத்தில் இந்த அமைப்புகள் இருந்தாலும், அதற்கான தசா புத்திகள் வரவேண்டும். குறிப்பாக:

 ராகு மகா தசா அல்லது புத்தி நடக்கும் போது.

   ஒன்பதாம் அல்லது பன்னிரெண்டாம்  அதிபதிகளின் தசா புத்தி காலங்களில்.


  சந்திரன் தசா அல்லது எட்டாம் அதிபதியின் தசா காலங்களில் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தானாகவே கைகூடி வரும்.


  உங்கள் ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகள் மற்றும் ராகுவின் நிலை எப்படி உள்ளது என்பதை பொறுத்து ஒருவருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.


நன்றி 


For online appointment 


Cell &. WhatsApp. & GPay 


 097151 89647 


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


 சொந்த வீடு கட்டுவதற்கான ஜாதக யோக அமைப்புக்கள்



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     சொந்த வீடு கட்டுவது என்பது பலருக்கு நீண்ட நாள் கனவாக இருக்கும்.முண்டாசு கவிஞர் பாரதியார் கூட சொந்த வீடு கட்டி தர வேண்டி பராசக்தியிடம் பின்வருமாறு முறையிடுகிறார்.


காணி நிலம் வேண்டும் – பராசக்தி 

காணி நிலம் வேண்டும்,

அங்குத் தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்,

அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும், என்கிறார்.


 ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீடு அமைவதற்கான  முக்கிய வீடுகள் ,காரக கிரகங்கள் ,வீடு அமைய சிறப்பான யோகம் தரும் அமைப்புக்கள் மற்றும் எப்பொழுது வீடு கட்டும் யோகம் அமைகிறது போன்ற பல விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


   , ஒருவருக்கு சொந்த வீடு, மனை அல்லது சொத்து அமையும் யோகத்தை தீர்மானிப்பதில் நான்காம் வீடு மற்றும் செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. லக்னத்திற்கு நான்காம் வீடு என்பது 'சுக ஸ்தானம்' அல்லது 'மாத்ரு ஸ்தானம்' என்று அழைக்கப்படுகிறது. இதுவே ஒருவரின் வீடு, வாகனம் மற்றும் நிலபுலன்களைக் குறிக்கும் முதன்மை வீடாகும்.

சொந்த வீடு கட்டுவதற்கான முக்கிய ஜாதக அமைப்புகளின் சுருக்கமான விளக்கம் இதோ:


1. முக்கிய வீடுகள் 


      நான்காம்-ஆம் வீடு (சுக ஸ்தானம்): -


         இந்த வீட்டின் அதிபதி (நான்காம் அதிபதி) பலமாக இருக்க வேண்டும். நான்காம் வீடு சுப கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலோ அல்லது சுப கிரகங்கள் அங்கு அமர்ந்திருந்தாலோ சொந்த வீடு யோகம் மிக எளிதாகக் கூடிவரும்.


    ஒன்றாம் ஆம் வீடு (லக்னம்): -


     ஜாதகரின் ஆரோக்கியம் மற்றும் முயற்சியை குறிக்கும் லக்னாதிபதி பலமாக இருந்தால் மட்டுமே, அவரால் வீட்டை வெற்றிகரமாகக் கட்டி முடிக்க முடியும்.


    பதினொன்றாம் ஆம் வீடு (லாப ஸ்தானம்):-


        இந்த வீடு பலமாக இருக்கும்போது, வீடு கட்டுவதற்குத் தேவையான பணவரவும், எதிர்பார்த்த லாபமும் தடங்கலின்றி கிடைக்கும்.


2. காரக கிரகங்கள் 


     செவ்வாய் (பூமி காரகன்): -


     நிலம் வாங்குவதற்கும், செங்கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் கொண்டு வீடு கட்டுவதற்கும் செவ்வாயின் அருள் மிக முக்கியம். ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், சொந்த நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டாகும்.


     சுக்கிரன் (ஆடம்பர காரகன்): 


     கட்டும் வீடு அழகாகவும், வசதிகள் நிறைந்ததாகவும், ஆடம்பரமாகவும் அமைவதற்கு சுக்கிரனின் பலம் தேவை.


   குரு (பகவான்): -


வீடு கட்டும் முயற்சியில் பெரிய தடைகள் ஏதுமின்றி, சுப காரியமாக அது நிறைவேறுவதற்கு குருவின் பார்வை அல்லது பலம் அவசியம்.


3. வீடு அமையும் சிறப்பான யோக அமைப்புகள்


    லக்கனாதிபதியும் நான்காம் அதிபதியும் பரிவர்த்தனை (இடமாற்றம்) பெற்றிருப்பது அல்லது இருவரும் கூடி சுப வீடுகளில் அமர்வது.


 நான்காம் அதிபதி ஆட்சி (சொந்த வீடு) அல்லது உச்சம் பெற்று பலமாக இருப்பது.


   செவ்வாய் கிரகம் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அல்லது 1, 5, 9 ஆகிய திரிகோண வீடுகளில் பலமாக அமர்வது.


எப்பொழுது வீடு கட்டும் யோகம் நடக்கும்?


   ஜாதகத்தில் நான்காம் அதிபதியின் தசை அல்லது புத்தி நடக்கும் காலங்கள்.


பூமிக்காரகனான செவ்வாய் அல்லது சுக்கிரனின் தசை நடக்கும் காலங்கள்.


கோட்சார ரீதியாக குரு பகவான் ஜாதகத்தின் நான்காம் வீட்டையோ அல்லது நான்காம் அதிபதியை யோ பார்க்கும் காலம்.


பொதுவான இந்த அமைப்புகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள லக்னம் மற்றும் கிரகங்களின் கூட்டு சேர்க்கையைப் பொறுத்தே துல்லியமான பலன்களை அறிய முடியும்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay 

 097151 89647 


அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

 இள வயதிலேயே  அழகான நல்ல வாழ்க்கை துணை அமைவதற்கு ஜோதிட விதிகள்.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது "

                                       -குறள் 

     "ஒருவருக்கு திருமணம்இள வயதிலேயே நடக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் லக்னம் என்ற‌ ஒன்றாம் இடம் 

குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் 

களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம்

 மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கபடும் எட்டாம் இடம் அதன் அதிபதிகள்,  ஆகிய ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் பகவான் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


 இவை மட்டுமல்லாது தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் பகவான் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரும் பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இருக்க வேண்டும்.


    எவர் ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தையும், ஏழாம் இட அதிபதி அதிபதியையும்  குரு பகவான் பார்வை செய்த நிலையில் நல்ல யோகம் தரும் தசைகள் நடப்பில் இருந்தால் இள வயதிலேயே அழகான வாழ்க்கை துணை அமையும்.


 சில நேரங்களில் ஒரு சிலருக்கு ராசிக்கு ஏழாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்து ஏழாம் அதிபதியை பார்வை செய்தாலும் நல்ல யோகம் தரும் தசையும் நடப்பில் இருந்தால் நல்ல இள வயதிலேயே நல்ல அழகான மற்றும் யோகமான வாழ்க்கை துணை அமைந்து விடுகிறது.


 ஏழாம் அதிபதி பாவராக உள்ள ரிஷபம்,துலாம் ஆகிய இரு ராசிகளுக்கு ஏழாம் இட அதிபதி செவ்வாய் ஆக வரும் கடகம்,சிம்மம் ஆகிய இரண்டு லக்கனங்களுக்கு சனி பகவான் ஏழாம் இட அதிபதியாக வரும்.


   ஏழாம் இட அதிபதி பாவராக இருக்கும் பட்சத்தில் ஏழாம் இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் நல்ல வாழ்க்கை துணை அமையும்.


தாம்பத்திய சுகத்தை தரும் களத்திர காரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் பகவான் ஒருவருக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்து தருவதில் நவ கிரகங்களில் முன்னிலை வகிப்பவர் ஆவார்.


எவர் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல முறையில் அமைந்து விட்டார் எனில் அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து ,நல்ல முறையில் தாம்பத்திய சுகத்தை அனுபவித்து நன்மக்களை பெறக்கூடிய பேறு உண்டாகும்.


ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம், ஆட்சி ,மூலத்திரிகோணம் போன்ற நிலையில் வலுப்பெற்று கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் நல்ல மண வாழ்க்கை அமையும்.


அதேபோல ஒருவர் நல்ல புதல்வர்ககளை பெற ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்று அழைக்க கூடிய ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் இயற்கை சுப கிரகமான புத்திர காரகன் குரு பகவான் நன்முறையில் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


 உங்களுடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் ஐந்தாம் இடத்தை இயற்கை சுப கிரகங்கள்  பார்வை செய்த நிலையில் அதாவது ஐந்தாம் இடத்தையும் மற்றும் ஐந்தாமிட  அதிபதியையும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் இருந்தால் நிச்சயமாக நல்ல யோகம் உள்ள குழந்தை பிறக்கும்.


திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் போன்ற கேள்விகளுக்கு ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரு வலிகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் மற்றும் அதற்குரிய காரணங்களையும் காரக கிரகங்களை ஆய்வு செய்து பார்த்து நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை பொறுத்து முடிவு செய்ய வேண்டும் நன்றி 


நன்றி


 துல்லியமான ஜோதிட பலனை அறிய எனது அனுபவத்தில் நான் கண்ட  உண்மைகள்.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனித வாழ்விற்கும் வான வீதியில் எங்கே உள்ள கிரகங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் .இது எல்லாம் காசு சம்பாதிக்கும் யுக்தி என்று தான் சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாத அனைவரது கேள்வியாக இருக்கிறது.இதே போல் தான் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நினைத்து இருக்கிறேன்.


 மறைந்த எனது தாய் மாமன் கலியுகம் பிள்ளை அவர்கள் எனது ஜாதகத்தினை பார்த்து "எதிர் காலத்தில் நீ சிறந்த ஜோதிடராக வருவாய் " என்று கூறிய போ


து கூட நான் அதை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.பிறகு திருமணம் ஆன பிறகு எனது மாமாவே முன் வந்து ஜோதிட கலையை எனக்கு பிள்ளையார் சுழி போட்டு அடிப்படை வகுப்பை நடத்தி ஜோதிட கலையை கற்கும் ஆர்வத்தை எனக்கு ஊட்டி சென்றார்.


அதன் பிறகு தொடர் முயற்சியால் எங்கள் ஊர் செவ்வாய்ப்பட்டியில் எழுந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளியம்மன் அருளாசி உடன் இன்றைக்கு ஜோதிடம் தொடர்பாக முகநூலில் நிறைய பதிவுகள், வீடியோக்கள் மற்றும் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.


 இன்றைக்கு முதுகலை வேதியியல் மற்றும் ஆங்கிலம் படித்த நான் ஜோதிடராக ஆன பிறகு எனது ஜாதக கட்டத்தினை ஆய்வுகள் செய்து பார்க்கும் போது தான் ஜோதிட உண்மைகள் புரிகிறது.எனது சாதக கட்டத்தில் பொளர்னமியை நெருங்கும் சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் ஆனவர் நிற்பதால் தான் நான் ஜோதிடராக ஆனதன் சூட்சுமம்  புரிகிறது.


மீன லக்கனம் மற்றும் மீன ராசிக்கு வரக்கூடாத தசையான சுக்கிரன் தசை வந்த போது எவ்வளவு திறமைகள் இருந்தும் உரிய இடத்தை அடைய முடியாமல் போராட வேண்டியதாக இருந்தது.


மேற்கண்ட   வகையில் எனது ஜாதகம் இதே போல என்னை சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜாதகத்தை எல்லாம் ஆய்வு மனப்பான்மை நோக்குடன் ஆய்வுகள் செய்து பார்த்த போது தான் எந்த அளவுக்கு ஜோதிட பலன்கள் துல்லியமாக உள்ளது என்பது புரிய வந்தது.


 தொடர்ந்து பல ஜாதகங்களை துல்லியமாக பலன் கண்டறிய பல விதமான முறைகளை பயன்படுத்தி பார்க்கும் போது அந்த ஜோதிடவியல்ல் உள்ள நுணுக்கங்கள் புரிய வந்தது.


 ஜாதக பலனை துல்லியமாக கண்டறிய பின்வரும் பல வித நுணுக்கங்கள் தேவையாக இருந்தது.


1.ஜாதகத்தில் முதலில் லக்கனம், ராசி மற்றும் அதன் அதிபதிகள் இவற்றை கவனிக்க வேண்டும்.


2)  எந்த ஒரு ஸ்தானத்தை ஆய்வு செய்து பார்க்கும் போதும் அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்தானம் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்றையும் ஆய்வுகள் செய்து பார்க்கப்பட வேண்டும்.


3) ஒரு குறிப்பிட்ட பலன் கொடுக்கும் கிரகம் பலம் பெற்று இருக்கிறதா ? பலம் இழந்து நிற்கிறதா? பாவ தன்மை அடைந்து இருக்கிறதா? சுப தன்மையை அடைந்து இருக்கிறதா ? என்ற வகைகளில் ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்.


4) சுப கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை ஒரு குறிப்பிட்ட கிரகத்தை சுப தன்மையை அடைய வைக்கிறது.பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை ஒரு கிரகத்தை  பாவ தன்மையை அடைய வைக்கிறது.


5) ஒரு குறிப்பிட்ட கிரகமானது நீசம், அஸ்தமனம்,பகை வீடு ஏறி விற்கிறதா? என்ற வகைகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.இவ்வாறு இருந்து சுப தொடர்பு ஏற்படாத பட்சத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகம் பலவீனம் அடைந்ததாக கருதப்படுகிறது.


6) ஒரு குறிப்பிட்ட கிரகம் பாவ அல்லது சுப தன்மை அடைதல், பலவீனம் அடைதல் போன்றவற்றை டிகிரி அடிப்படையாக கொண்டு ஆய்வுகள் செய்து முடிவு செய்ய வேண்டும்.


7 ) நவ கிரகங்கள் அம்சத்தில் சுப வர்க்கம்  ஏறியிருக்கிறதா? பாவ வர்க்கம் ஏறி இருக்கிறதா?  என்பதை பொறுத்து கிரக வலிமை முடிவு செய்யப்படுகிறது.சுப வர்க்கம் ஏறி இருந்தால் அவை பலமடைந்ததாக கருதப்படுகிறது.பாவ தன்மையை அடைந்து இருந்தால் பலவீனம் அடைந்து உள்ளது .


8) ஒரு கிரகமானது ராசியிலே  பலவீனம்/பாவ தன்மையை அடைந்து இருந்தால் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் ஒரளவு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறி விடுகிறது.சில நேரங்களில் ராசியில் பலமடைந்து / பாவ தன்மையை அடையாமல் இருந்து அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி இருந்தால் அந்த தசையில் கெட்ட பலனையே ஜாதகருக்கு கொடுப்பார்.


9) கிரக பலன்களை ஆய்வுகள் செய்து பார்க்கும் போது திதி சூன்யம், நட்சத்திர சாரம் போன்றவற்றை கொண்டு ஆய்வுகள் செய்து பார்க்க கூடாது.இந்த வகைகளில் ஆய்வு செய்து பார்க்கும் போது ஜாதக பலன்கள் தவறாகி விடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


10) மனித வாழ்வினை வழிநடத்தி செல்வது தசா புத்திகளே ஆகும்.தசா புக்திகள சரியான உங்களது வாழ்வியல் உண்மைகளை எடுத்து காட்டுகிறது.ஒரு மனிதன் எந்த எந்த காலகட்டத்தில் என்ன என்ன? நடந்தது என்பதை  எடுத்துக் காட்டுகிறது.


மேற்கண்ட பல வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தி ஜாதக பலனை சொல்லும் போது அந்த பலன்கள் அனைத்தும் நூறு சதவீதம் சரியானதாக இருக்கும்.

நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


 097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


 கேள்வி என்னும் வேதம் -தொடர் ( 4)


 கோள்கள் என்ன செய்யும்? என்ற தலைப்பில் யோகி பக்த பிரசாத் காரசாரமாக உரையாற்றி கொண்டு இருந்தார்.வானத்தில்  எங்கே உள்ள கோள்கள் மனித வாழ்வினை எப்படி பாதிக்கிறது? என்று விதன்டவாதமாக கூட்டத்தில் இருந்த ஒரு பையன் கேள்வி கேட்டான் " .

     கோள்கள் மனித வாழ்வினை சீரமைக்க உதவுகிறது .வான் வீதியில் எங்கே உள்ள கோள்கள் எப்படி மனித வாழ்க்கை சுழற்சியினை சீரமைக்கின்றது. என்பதனை அறிவியல், ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் ஆகிய மூன்று வகையான அறிவு கொண்டு உற்று நோக்கினால் உண்மை புலப்படுகின்றது.


   மனித மனதிற்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு  உண்டு.அமாவாசை  மற்றும்  பொளர்ணமி காலங்களில் மனித மனம் ஒரு வித தன்மைக்கு உட் படுகிறது. அமாவாசையின் போது  கோபம், முரட்டுத்தனம், பயம், மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தீவிரமடைகிறது.

பௌர்ணமியில்   தூக்கமின்மை காரணமாக மனக் குழப்பம், அதிகப்படியான உற்சாகம் அல்லது அலைபாயும் உணர்ச்சிகள் அதிகரிக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்ந்து நோக்கினால் உண்மை புலப்படுகின்றது.


சந்திரனின் உள்ள ஈர்ப்பு விசைக்கும் மற்றும் மனித மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் தான் பெளர்ணமி தினத்தில் தியானம் மற்றும் கிரிவலம் போன்றவை மேற்க்கொள்ளும் போது மிகப்பெரிய ஆன்மீக மாற்றம் மனிதனுக்குள் நிகழ்வதாக ஆன்மீகம் சொல்கிறது..


ஜோதிடத்தில் தேய்பிறை சந்திரன் பாவ கிரகமாக கருதப்படுகிறது.தேய்பிறை சந்திரனின் பார்வை அல்லது சேர்க்கை முழு பாவ கிரகமான சனியின் பார்வை அல்லது சேர்க்கைக்கு நிகரான பாவ தன்மையை தருகிறது. ஒருவர் தேய்பிறை சந்திரனில் பிறந்து அதனுடன் நிழல் கிரகமான ராகு சேர்க்கை பெற்று பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக பிறக்கிறது.இது  போன்ற அமைப்பு கொண்ட ஜாதகங்கள் பலவற்றை பார்த்து அதன்படி சொன்ன அடுத்த நிமிடமே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.இதிலிருந்து நான் உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் எங்கே உள்ள சந்திரனுக்கும்,நமது 

மனதுக்கும் நிச்சயமாக தொடர்பு என்பது உண்டு.இதனால் தான் சந்திரனை மனநிலைக்காரகன் என்று அழைக்கப்படுகிறது.


அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் அலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்கிறது விஞ்ஞானம்.கடல் நீரில் உள்ள ரசாயன பொருட்களின் சதவீதம் நமது உடலில் உள்ள நீரின் உள்ள ரசாயன சதவீதமும் ஒன்றே.சந்திரன் கடல் நீரை அந்த குறிப்பிட்ட காலங்களில் பாதிப்பதை ஏற்படுத்துவது போல மனித மனங்களிலும் பாதிப்பை சந்திரன் தருகிறது.நான் இப்பொழுது சந்திரன் என்ற ஒரு கிரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்கி கொண்டு இருக்கிறேன்.இதே போல எல்லா கிரகங்களும் அண்டத்தை பாதிக்கிறது. "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" என்றார்.


   பிறகு ஏதோ நினைத்த மாதிரி இருந்து விட்டு அவரே தொடர்ந்தார் அதே நேரத்தில் வளர்பிறை சந்திரன் இயற்கை சுப கிரகமான குரு பகவானின் பார்வை அல்லது சேர்க்கைக்கு நிகரான நல்ல பலனை தருகிறது.வளர்பிறை சந்திரனின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற கிரகங்கள் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய அமைப்பை பெறுகிறது.


எனவேதான் பௌர்ணமியில் பிறந்தவர்கள் அரசியலில் அல்லது அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் அமர்கிறார்கள். .இது ஏனைய பிற கிரகங்கள் அமைப்பை பொருத்து அமைகிறது.இல்லையெனில் தான் சார்ந்த துறைகளில் உயரிய தலைமை பதவி அவர்களுக்கு கிடைக்கிறது."இவை அனைத்தும் ஜோதிடவியல் தரும் உண்மைகள் ஆகும்."

என்றார் .


 இவர் மேலும் அமாவாசை காலங்களில் நமது முன்னோர்களுக்கு தர்பணம் செய்தலும்,பொளர்ணமி காலங்களில் கிரிவலம், தியானம் மற்றும் இறை வழிபாடு போன்றவை செய்தலும் மேற்க் கொள்ளப்படுகிறது."என்றார்.


 இவ்வாறு யோகி பக்த பிரசாத் நீண்ட உரையில் பேசி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர்.


ஒரு சீடன் எழுந்து ஐயா நீங்கள் பேசும் பொழுது அமாவாசை, பொளர்ணமி, வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பல சொற்களை பயன்படுத்தி உள்ளீர்கள் இந்த சொற்றொடர்கள் பற்றிய விரிவான விளக்கம் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் "-என்றார்.


இதற்கு முதலில் ஜோதிட ரீதியாக  விளக்கம் தந்து விடுகிறேன்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒளி கிரகங்கள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான்  இவர் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்வார்.

சித்திரை மாதம் மேஷ ராசியில்  இருந்தால் வைகாசி மாதத்தில் ரிஷப வீட்டிற்கு வந்து விடுவார்.இவ்வாறாக நகர்ந்து பங்குனி மாதம் மீனம் ராசிக்கு வந்து விடுவார்.ஒருவர் எந்த தமிழ் மாதம் பிறந்து உள்ளார் என்பதை சூரியன் எந்த ராசியில் உள்ளார் என்பதை வைத்து கண்டு பிடித்து விடலாம்.இதனால் சூரியன் மாதக் கோள் என்று அழைக்கப்படுகிறது.


ஆனால் சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் மட்டும் தங்குவார்.இதனை நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தினை "ஜென்ம ராசி "என்று அழைக்கப்படுகிறது.சந்திரன்  எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றதோ அதனை ஒருவரது " ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

 சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறை ஆகவும், அடுத்த பதினைந்து நாட்கள் தேய்பிறை ஆகவும் செயல்படுகிறது.


   ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்தினை எட்டு பாகைக்குள்ளாக சந்திரன் பகவான் நெருங்கிய நிலையில் அமாவாசை உண்டாகிறது.சூரியனை விட்டு சந்திரன் விலகி சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகை கடக்கும் போது அதாவது சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டிற்கு சந்திரன் வந்ததால் பொளர்னமி ஆகும்.இந்த இடைப்பட்ட சந்திரனை வளர்பிறை என்று அழைக்கப்படுகிறது.இதனை பூர்வ பட்சம் என்றும்,சுக்ல பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.


இதேபோல் பொளர்னமியை விட்டு  விலகி மறுபடி 180 பாகை கடந்து அதாவது எட்டாம் வீட்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு தாண்டும் வரை உள்ள சந்திரனை தேய்பிறை காலம் என்று அழைக்கப்படுகிறது.இதனை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.இதில்  சில நுட்பமாக ஆய்ந்தால் சில விதிவிலக்குகள் உண்டு.அதை பற்றி இன்னும் தெளிவாக விளக்க போனால் உங்களுக்கு புரியாமல் போய்விடும் அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்." என்றார்.


சரி குருஜி தெளிவாக புரியும் படி விளக்கி விட்டீர்கள்.திதி என்றால் என்ன? என்பதையும் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் குருஜி 


சற்று நிதானமாக யோகி பக்த பிரசாத் திதி என்பது மேலே கூறப்பட்ட விஷயத்தின் தொடர்பு தான் தம்பி.சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் அல்லது கோண அளவு வேறுபாடு திதி ஆகும்.இது பிரதமையில் தொடங்கி பொளர்ணமியில் நிறைவடைகிறது.ஒரு திதி 12 பாகைக்குள் நிறைவடைகிறது.முப்பது திதிகள் கொண்டது ஒரு சந்திர மாதம் ஆகும்.பதினைந்து திதி ஒரு பட்சம் ஆக கருதப்படுகிறது.இதில் வளர்பிறை திதி பூர்வ பட்சம் எனவும், தேய்பிறை திதி அமர பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது."என்றார்.


மேலும் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டே நன்றாக மூச்சை நன்றாக ஆழ்ந்து இழுத்து விட்டுக் கொண்டு எதையோ யோசித்தவாறு பேச ஆரம்பித்தார்.


திதி என்பது வெறும் காலக் கணக்கு மட்டுமல்ல. மனிதன் இயற்கையின் இயக்கத்தோடு எவ்வாறு வாழ்ந்தான் என்பதற்கான ஒரு பழமையான கால அளவீட்டு முறையாகும்.


சந்திரன் வளர்வதும் தேய்வதும் இயற்கையின் மாற்றத்தைக் காட்டுகிறது.

அதுபோலவே மனித வாழ்க்கையிலும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி வருகின்றன.

காலத்தை அறிந்தவன் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான். இயற்கையைப் புரிந்து கொள்பவன் வாழ்க்கையின் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறான்" என்று தத்துவார்த்தமான முறையில் பேசி விளக்கினார்.


ஒரு சீடன் பஞ்சாங்கம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் எடுத்து பார்க்கிறார்கள்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை குருஜி.முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன?  ஐயா.

குருஜி சிரித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார்.


  இந்து பஞ்சாங்கத்தில் ஒரு நாளின் நல்ல நேரம், விரதம், பூஜை, திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றுக்கு

 திதி உள்ளிட்ட பல காலக் கூறுகள் கவனிக்க படுகின்றன.அவற்றில் முக்கியமானவை:


1)திதி

2)வாரம்

3)நட்சத்திரம்

4)யோகம்

5)கரணம்

இவை ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் ஆகும்." என்றார்.


அடுத்த கேள்வி கேட்பதற்குள் யோகி பக்த பிரசாத்தை பார்க்க வெளியூரில் இருந்து பழைய சீடர்கள் வந்ததால் இத்துடன்  கலந்துரையாடலை நிறுத்தி கொண்டு பழைய சீடர்களை பார்க்க யோகி புறப்பட்டு விட்டார்.அவர் திரும்ப வந்து விளக்கும் வரை நாமும் காத்திருப்போம்.நன்றி


அன்புடன் 

 செவ்வை சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 துல்லியமாக ஜாதக பலன்களை கணிக்க...



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை?


  ஒரு ஜாதக பலன்களை துல்லியமாக கணிக்க முதலில் பிறப்பு விவரங்கள்  சரியாக இருக்க வேண்டும்.சரியான பிறப்பு விவரங்களை  கொண்டு ஜாதகத்தை கணித்து எடுக்க வேண்டும்.சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று நிமிட வித்தியாசத்தில்  லக்கனம் மாறுவதாக இருந்தால் அந்த ஜாதகர் லக்கன சந்தியில் பிறந்து இருக்க வேண்டும்.


  லக்கனம் மாறும் நிலை இருந்தால் அதாவது லக்கன சந்தியில் பிறந்து இருந்தால் அந்த ஜாதகத்தில் எது சரியான லக்கனம் ?  என்பதை கண்டுபிடிக்க தசா புக்திகளை கொண்டு ஜாதக பலன்களை சொல்லி பார்க்க வேண்டும்.எந்த லக்கன பலன் சரியாக இருக்கிறதோ அந்த லக்கனத்தை ஜென்ம லக்கனமாக கொண்டு ஜாதக பலனை அறிய இயலும்.


என்னிடம் ஜாதகம் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் சிம்ம லக்கனம் அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் புதன் பகவான் மற்றும் பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் உள்ளார்.லக்கனத்தில் சனி பகவான் அமர்ந்த நிலையில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் ராகு பகவான், எட்டாம் இடத்தில் கேது பகவான், ஆறாம் இடத்தில் சூரியன், சுக்கிரன்,ஒன்பதாவது இடத்தில் சந்திரன் உச்சம் மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார்.


   நான் அவரது ஜாதகத்தை பார்த்து "ஐந்துக்கு உடைய குரு பகவான் பதினொன்றாம் இடத்துக்குரிய புதன் பகவான்  ஆகிய இருவரும் தங்களுக்குள் இடம் மாறி நின்று பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். சிம்ம லக்கினத்திற்கு குரு தசை யோக திசை எனவே குரு தசையில் நிறைய சம்பாரித்து இருப்பீர்கள். சனி திசையில் கடுமையாக கஷ்டப்படுவீர்கள் " என்று கூறினேன்.


     அவர் "சார்  நான் ஜாதக பலன் பார்த்த எல்லா ஜோதிடர்களும்  அப்படியே பலன் சொன்னாங்க .ஆனால் நான் குரு தசையில் தான் கடுமையான கஷ்டங்கள் மற்றும் நஷ்டங்களை சந்தித்தேன். இப்ப நடக்கிற சனி தசையில் நிறைய சம்பாதித்து உள்ளேன்" என்றார் .


  அப்படின்னா உடனே எனக்கு அவருடைய சாதகத்தில் உள்ள லக்னத்தில் சந்தேகம் வந்தது.அவருடைய லக்கனத்தை கன்னி லக்கனமாக கொண்டு பலன் பார்த்தால் கன்னி லக்கினத்திற்கு குரு  தசை பாதக மற்றும் மாரக அதிபதி என்பதால்.கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுத்திருக்கும்.ஆனால் சனி தசை லக்கன யோகர் என்பதால் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.அதன்படி ஜாதகருக்கு சனி தசை மிக சிறப்பாக இருந்தது.


இவ்வாறாக  லக்கனம் தவறாக இருந்தால் பலன்கள் அனைத்தும் மாறி விடும்.எனவே ஜாதக பலன் பார்க்க முற்படும் போது முதலில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியை முழுவதும் நன்றாக கவனிக்க வேண்டும்.இவ்விரண்டும் சரியாக அமைந்து விட்டால் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு  வெற்றி பெற்று விட முடியும்.


   உங்கள் லக்கனத்திற்கு எந்த தசை யோக மற்றும் அவ யோக தசை என் கண்டறிய வேண்டும்.யோகத்தை தரக்கூடிய தசைகள் யோகத்தை தரும் வகையில் உள்ளதா ? என்பதை கவனிக்க வேண்டும்.


 ஒரு சமயம் யோகத்தை தரக்கூடிய தசைகள்  சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது பகவான் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அவை யோகத்தை தரக்கூடிய தசைகளாக  இருந்தாலும்  யோகத்தை தராது.அதே போல அவ யோகத்தை தரக்கூடிய தசைகள் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அவை அவ  யோக தந்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் அவை யோகத்தை தரக்கூடிய தசையாக மாறுகிறது


ஒரு குறிப்பிட்ட பலனை துல்லியமாக எடுக்க

ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரக பலன்கள் என் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 குறிப்பாக ஒருவர் தனக்கு வரக்கூடிய மனைவி பற்றி அறிய களத்தின் ஸ்தானமான ஏழாம் இடத்தையும்,அதன் அதிபதி ஆன களத்திர ஸ்தான அதிபதியையும் மற்றும் காரக கிரகமான களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்று வழிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு நடக்கும் தசை புக்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு துல்லியமான. ஜாதக பலன்களை கண்டறிய உதவுகிறது.


தசை நடத்தும் கிரகம் ஆனது அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ? பாவ வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து பலன் அறிய உதவுகிறது.சில நேரத்தில் ராசியில் ஒரு கிரகம் கெட்டு அல்லது பாவ தன்மையை அடைந்து இருந்தும்  ஒரு தசை நல்ல பலனை தந்தால் அதற்கான காரணம் அந்த தசை நடத்தும் கிரகம் ராசியில் கெட்டு இருந்தாலும் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் நல்ல பலனை தந்து இருக்கிறது என்பதை உணரலாம்.


நன்றி 


For online appointment 


CELL & WhatsApp & Gpay 


 097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 


  சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

 ஒரு கிரகம் பலமா ? பலவீனமா ? 



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு கிரகம் எப்பொழுது தனது பலத்தை இழக்கிறது ,எப்பொழுது ஒரு கிரகம் பலம் பெற்று நிற்கிறது என்பதையெல்லாம் இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம்.


  ஒரு கிரகம் எப்பொழுது பலத்தை இழக்கிறது என்பதை முதலில் பார்ப்போம் ஒரு கிரகம் ஒளி கிரகமான சூரியனிடம் எட்டு பாகைக்க்குள் நெருங்கும் பொழுது , சூரியனால் அந்த கிரகம் அஸ்தங்கம் அடைந்து அவை தனது பலத்தை இழந்து நிற்கிறது.


  ஒரு கிரகம் ஆனது இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு ,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


   ஒரு கிரகம் ஆனது பகை வீடுகளில் ஏறி நிற்கும் போது அந்த கிரகம் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


  ஒரு கிரகம் ஆனது நீசம் அடைந்து அவை 

நீசபங்கம் அடையாத நிலையில் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


ஒரு கிரகம் ஆனது அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி நிற்கும் போது தனது பலத்தை இழந்து நிற்கிறது.


 பொதுவாக பாவ கிரகங்கள் மற்றும் ஆறு , எட்டாம் அதிபதிகள் தனது பலத்தை இழந்து நிற்பது நல்லது .அதே நேரத்தில் லக்கன யோகர்கள் பலம் இழந்து நிற்பது நல்லது அல்ல என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.


இதேபோல் ஜாதகத்தில் ஒரு கிரகம் எப்பொழுது பலத்தை அடைகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


   ஒரு கிரகம் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் முழு வலிமை பெற்று நல்ல பலனை தரும் அமைப்பை பெறுகிறது.


   ஒரு கிரகம் ஆனது வர்க்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை போன்ற நிலைகளில் பலம் அடைந்து காணப்படுகிறது.


      ஒரு கிரகம் ஆனது நீசபங்கம் அடைந்த நிலையில் நீசபங்க ராஜயோகம் அமைப்பை பெற்று நீசமான அந்த கிரகம் முன்னிலும் பல மடங்கு வலிமை அடைந்த நிலையில் காணப்படுகிறது.


   ஒரு கிரகம் ஆனது அம்சத்தில் சுப வர்க்கம் அடைந்த நிலையில் அவை பலமடைந்த கிரகமாக காணப்படுகிறது.


  ஒரு இயற்கை சுப கிரகம் ஆனது வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நிற்கும் போது சந்திர அதியோகம் பெறுகிறது.

 

 அம்சத்தில் ஒரு கிரகம் இயற்கை சுப வர்க்கம் ஏறி நின்றால் அந்த கிரகம் பலமடைந்த கிரகமாக விளங்குகிறது.


   ஒரு கிரகம் ஆனது உச்சம்,மூல திரிகோணம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்ற கிரகம் ஆனது பலம் அடைந்த கிரகம் ஆக செயல்படுகிறது.


  திக் பலம் பெற்ற கிரகங்கள் பலம் அடைந்த கிரகம் ஆக செயல்படுகிறது.


 பொதுவாக இயற்கை சுப கிரகங்கள் சுபரின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் கூடுதலான பலனை பெறுகிறது.அதே நேரத்தில் பாவ கிரகங்களும் இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஓரளவு சுப தன்மையை அடைந்து பலம் அடைந்து விடுகிறது.அதே நேரத்தில் இயற்கை பாவ கிரகங்கள் மேலும் பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற கூடுதலான கெட்ட பலனை தரும் அமைப்பை பெறுகிறது.


நன்றி.


For online appointment 

  Cell & WhatsApp & Gpay no 


  097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd 

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.