Wednesday 17 May 2017

இசை ஞானத்தால் சினிமாவில் சாதித்தவர்கள் ஓர் கிரகநிலை ஆய்வு


இசை ஞானத்தால் சினிமாவில் சாதித்தவர்கள்-(5)



கிரகங்கள் படுத்தும் பாடு-( 65 )


"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையப்பா"

"கத்தும் குயிலோசை என் காதில் விழ வேண்டும்"

       ----கவிஞர்பாரதியார்.

இசைஞானம் என்பது  எல்லோருக்கும் வருவதில்லை.அது ஒரு தெய்வீக கலை ஆகும்.இந்த ஞானத்தை பெற்றவர்கள் தெய்வ அம்சம் நிரம்பியவர்கள் எனலாம்.

இசைஞானம் பெறுவதற்குரிய பொதுவான கிரகவிதிகள்:-

1)  இசைஞானம் பெறுவதற்கு  அவரது சாதக கட்டங்களில் இசைக்கு காரகனான #சந்திரபகவானும்,கலைக்கு அதிபதியான #சுக்கிரபகவானும் பலம் அடைந்திருக்க வேண்டும்.

2)  இசைஞானத்தை அளிக்ககூடிய  #சரஸ்வதியோகம் மற்றும் #புதனாதிக்கயோகம் என்று சொல்லக்கூடிய சூரியனும்,புதனும் இணைந்து இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ பலம்பெற்றிருக்கவேண்டும்.

3)குரு பகவான் பலம்பெற்று சுப பார்வை பார்க்கவேண்டும்.

இதுபோன்ற பலம்பெற்றுள்ள மூன்று இசை மேதைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

முதலில் கர்நாடக இசை உலகில் சாம்பவனாக திகழ்ந்த "இசை உலகின் முடிசூடா மன்னன்"தியாகராஜ பாகவதர்" அவர்களின் சாதக நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.அவருடைய சாதக கட்டத்தில் இசையில் சாதித்தற்கு உகந்த கிரகங்கள் பலம் பெற்று அமைந்தனவா ?என பார்ப்போம்.

தியாகராஜ பாகவதர் சாதக கிரகநிலை விபரம்

கடக லக்கனம்

கடக ராசி
1) ல்-சந்திரன்,கேது
2)-ல் குரு
7)ல்-ராகு
10)ல் சூரியன்,புதன்
11)ல்-சுக்கிரன்,சனி
12)-ல் செவ்வாய்

இசைஞானம் தந்த பலன்களை மட்டும் ஆராய்வோம்.

இவரது சாதக கட்டத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக இருந்து லக்கனத்திலே இசைக்கு காரகனான சந்திரபகவான் ஆட்சி பெற்று ஞானக்காரகன் கேது பகவானோடு இணைந்திருப்பது இசைஞானத்தோடு தெய்வ அணுக்கிரகமும் சேர்ந்திருந்து.பொதுவாக கடக கேதுவும்,மகர ராகுவும் ஆன்மீகநிலையின் உச்சநிலைகள் தரும் என்பதால் தனது இசைஞானத்தால் கடவுள்மீது பல  கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

மேலும் வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்து வாக்காதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி மற்றும் புகழை தரக்கூடிய மூன்றாமிடம் மற்றும் விரயஸ்தானதி புதனுடன் (வித்தைக்காரகன்) இணைந்து லக்கனத்திற்கு பத்தில் அமர்ந்து திக் பலம் பெற்றுள்ளார்.இவை இசை அறிவை தரக்கூடிய "புத ஆதித்யயோகம் மற்றும் சரஸ்வதியோகமாகும்.இந்த இணைவிற்கு குருவின் ஒன்பதாம் பார்வையையும் பெற்று முழுப்பலம் பெற்றதால்தான் பிறவியிலே இசைஞானத்தோடு பிறந்துள்ளார்.

மேலும் இந்த அமைப்பு(சூரி-புதன் இணைவு)வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு திரிகோணஸ்தானமான ஒன்பதாம் இடம் ஆகும்.

இத்துடன் சினிமா மற்றும் கலைக்காரகனான சுக்கிரன் லாபஸ்தானத்தில் ஆட்சியும் பெற்று இருப்பதால் சினிமா உலகிலும் பல சாதனைகளை சாதிக்கமுடிந்தது.

*************************************
அடுத்தப்படியாக இசை என்பது  மேல்தட்டு மக்களுக்கு உரிய ஒன்று என்பதை உடைத்தறிந்தவர்.கிராமத்துவாசிகளையும் ,கிராமத்து பக்கம் தமிழக ரசிகர்களை திரைதிருப்பிவிட்டவர்.கலைஞர் முதல்வராக இருந்தபோது "இசைஞானி"இவருக்கு வழங்கி கொளரவித்தார்.

இவர் இசைஞானியானதற்கான கிரகநிலை விபரமும் விளக்கமும்

ரிஷபலக்கனம் மற்றும் ரிஷபராசி

1)-ல் சூரியன்,புதன்,சந்திரன்,சனி
3)-ல் குரு,சுக்கிரன் மற்றும் ராகு
9)ல் கேது
11)-ல் செவ்வாய்

இவருடைய சாதகத்தில் பாருங்கள் இசைக்காரகனான சந்திரன் மூன்றாமிட ஆதிபத்தியம் பெற்று லக்கனத்தில் உச்சம் பெற்றும் மற்றும் லக்கனாதிபதியான சுக்கிரன் மூன்றில் பரிவர்தனை பெற்று பலம் பெற்றிருப்பதை கவனியுங்கள்..மேலும் கீர்த்திஸ்தானத்தில் குருபகவானும் உச்சம்பெற்று தனது லாபஸ்தானத்தை பார்த்து தான் சார்ந்த தொழில் பேரும்புகழும் அடைய காரணமாகியது.

மேலும் குரு உச்சம்பெற்று ஞானக்காரகன் கேதுவை பார்த்தது "ஜனனி ஜனனி  ஜகம்நி "போன்ற தெய்வீக பாடல்களை தானே இசையமைத்து பாடவைத்தது.
தொழில்காரகன் சனிபகவான் லக்கனத்தில் நின்று தன்ஸ்தானத்தை பார்ப்பது தொழிலில் சிறந்துவிளங்கவும் காரணமாகிறது.இசைக்கு பல கருவிகளை பயன்படுத்தும் யோகத்தை வழங்கியது.
மேலும் லக்கனத்தில் சூரியனும்,புதனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தையும் பெற்றுள்ளது.

***********************/*******/**

தமிழக திரைப்படத்தை உலகமே வியந்து பார்க்கவைத்தவர். தமிழ்திரைப்படத்தை தனது நவீன தொழில்நுட்ப திறமையால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியதில் இவரை விஞ்சியவர் யாருமில்லை.

ஆஸ்கார் அவாடு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.இவர் ஒரே படத்தின் மூலம் இரு ஆஸ்கார்விருதை தட்டியவர்.ஆஸ்கார் மேடையில் ஏறிய முதல்தமிழன்.அங்கு "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் பேசி தமிழரின் புகழை அகிலம் உணர செய்த     திருவாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது சாதகநிலையை ஆராய்வோம்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சாதகம்

ரிஷப லக்கனம் மற்றும் ரிஷபராசி

1)-ல் சந்திரன்
3)ல்-குரு
4)-ல் செவ்வாய்
6)-ல் கேது
10)-ல் சூரியன்,புதன்
11)-ல் சுக்கிரன்,சனி
12)-ல் ராகு

இவருடைய சாதகத்தில் லக்கனாதிபதி கலைக்காரகன் சுக்கிரன் உச்சம் பெற்று லாபஸ்தானமேறி அதில் கணிப்பொறிகாரகன் சனி பகவானும் சேர்ந்து குரு மனையேறி உச்ச குருவின் ஒன்பதாம் பார்வை பெற்றதால் கனிப்பொறியை இசைக்குள் புகுத்தி பல புதிய சாதனை புரிந்துள்ளார்.

மேலும் மூன்றுக்குரியவரும் இசைக்காரகருமான சந்திரபகவான் லக்கனத்தில் உச்சம் பெற்று அந்த வீட்டு அதிபர் சுக்கிரனும் உச்சம் பெற்று மேலும் சுக்கிரன் உச்சம் பெற்ற வீட்டின் அதிபர் குருபகவானும் உச்சம்பெறுவது "டிரிபிள் டெபாஸிட்டர்"முறையில் பலம்பெற்றதால்தான் இளவயதிலே அகில உலகமும் வியக்கும் வகையில் இசையும்,பாடலும் பாடி ஆஸ்கர்நாயகனாக சாதனையாளக கிரகங்கள் மாற்றியிருக்கிறது என ஆய்ந்து விளக்குகினேன்.

இவரது சாதகத்திலும் பாருங்கள் "சூரியனும்,புதனும் "இணைந்து #புதயாதிக்கயோகமான சரஸ்வதியகமானது தொழில்ஸ்தானமான பத்தில் அமர்ந்து திக்பலம் பெற்றும் உள்ளார்.

மேற்கண்ட மூவரும் இசையில் சாம்பவனாக திகழ்வதற்கு உகந்த கிரகநிலைகள் ஆரம்பத்தில் கூறிய பொது மற்றும் சிறப்பு விதிகளோடு ஒத்திருக்கிறது என்பதை எனது சோதிட அனுபவத்தோடு ஆராய்சி செய்து விளக்கியிருக்கிறேன்.எல்லாம் பரம்பொருளின் சித்தம் .நான் என்பது ஒரு கருவியே.

இப்படிக்கு

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

தங்களது சாதகங்களை ஆய்வுசெய்து உங்களது சாதகத்தில் எவை பலம் உடைய கிரகங்கள் மற்றும் பலவீனமான கிரகங்கள் அவற்றால் உண்டாகும் பலன்களை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவலை எனது வாட்ஸ்அப் எண்ணான
97 151 89 647 க்கு தெரிவிக்கவும்.

Online Astro consult conduct my cell

செல்: 97 151 89 647
செல்: 740 257 08 99

My Email

masterastroravi@gmail.com

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

******************************

Sunday 14 May 2017

பேரரறிஞர் அண்ணா சாதகம் ஓர் ஆய்வு

பேரரறிஞர் அண்ணா சாதகம் ஓர் ஆய்வு



கிரகங்கள் படுத்தும் பாடு- ( 63 )

சினிமாவில் சாதித்தவர்கள்-(4)

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

   ஒருவர் எழுத்துத்துறையில் சிறந்து விளங்க அவரது சாதக கட்டத்தில் மூன்றாம் பாவமும் மற்றும் ஒன்பதாம் பாவமும் பலம் பெற்றிருக்கவேண்டும்.கிரகங்களில் புதன் பலம்பெற்றிருக்கவேண்டும்.அதிலும் சினிமாவில் கதை,திரைகதை ,பாடல்கள் மற்றும் நாடகத்துறையில் சிறந்துவிளங்கவும் மேற்கண்ட அமைப்போடு சுக்கிரன் பகவானும் பலன்பெற்றிருக்கவேண்டும்.

இதற்கு தகுந்த உதாரணமாக யாருடைய சாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணியதில் என் மனதில் தோன்றியது தமிழகத்தின் முன்னால் முதல்வர் "பேரறிஞர் அண்ணா"அவர்களது சாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் சாலச்சிறந்தது.

இவர் எழுத்தாளர்,நாடகம்,சினிமாவில் பாடல்கள்,கதை மற்றும் கட்டுரை என பல்கலை வித்தகர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா அவர்களது சாதக கிரகநிலை.

மகர லக்கனம்
சிம்ம ராசி
3-ல் சனி (வக்கிரம்),செவ்வாய்(வக்கிரம்)
5-ல் ராகு
8-ல் சூரியன்,சந்திரன்
9-ல் புதன்,குரு
10-ல் சுக்கிரன்
11-ல் கேது

சகோதர தோஷம்

சுக மற்றும் லாபாதிபதியான அதேநேரத்தில் சகோதரகாரகனான செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று சகோதர ஸ்தானத்தில் அமர்ந்தது காரக பாவ நாஸ்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் லக்கன மற்றும் சனி பகவானும் வக்கிரம் பெற்று  சகோதரஸ்தானமான மூன்றாம் பாவத்தில் சனி-செவ்வாய் சேர்க்கை பெற்று அமர்ந்தது இளைய சகோதர தோஷத்தை அளித்திருக்கிறது.

எழுத்து துறையில் ஜொலிக்க
இவரது சாதகத்தில் ஆறு மற்றும் ஒன்பதாம் அதிபதியான வித்தைகாரகர் புதன் பகவான் உச்சம்,ஆட்சி மற்றும் திரிகோணம் என்ற முப்பெரும் பலம் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.மேலும் மூன்று (கீர்த்தி) மற்றும் பணிரெண்டாம் அதிபதியான குரு பகவான் புதனுடன் இணைந்து மூன்றாம் ஸ்தானமான தனது சொந்தவீட்டை பார்த்ததால் மூன்றாமிடம் பலம்பெறுவதோடு அதில் உள்ள கிரகங்களான சனி,செவ்வாய் வக்கிரத்தன்மை நீங்கி நற்பலனை அளித்தது.

இப்ப புரிகிறதா ?இவர் எதனால் எழுத்து துறையில் சாதித்தார் என புரிந்திருக்கும்.சாதிப்பதற்கு தேவையான மூன்று மற்றும் ஒன்பதாம் பாவம் மற்றும் புதன்பகவான் பலம்பெற்றதால் ஆகும்.

சினிமாவில் சாதனை
கலைக்காரகனும் சாதககட்டத்தில் பூர்வபுண்ணிய மற்றும் தொழில்ஸ்தான அதிபதியான சுக்கிரன் பகவான் தனது தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்றதால் ஆரம்ப கட்டத்தில் நாடகங்களுக்கு கதை எழுதுவதும் ,நடிப்பதும் தொழிலாக இருந்து பிறகு திரைப்படத்திற்கு கதை ,வசனம் எழுதினார்.ஓர் இரவு,வேலைக்காரி முதலியவை இவரது புகழ்பெற்ற நாடகங்களாகும்.மேலும் தனது பேச்சாலும் புதுமையை புகுத்தக்கூடிய தன்மையை மேற்கண்ட கிரக அமைப்புகள் இவருக்கு வழங்கியது.

நாத்தீக கொள்கை

மூன்றாம் இடத்தில் உள்ள சனிபகவானும்,செவ்வாய்பகவானும் சேர்ந்து வக்கிரம் பெற்று ஒன்பதாம் இடத்தையும் குருபகவானையும் பார்த்ததால் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்தார்.

இளைஞர் ஆதரவு

சந்திரனுக்கு பத்தாம் இடத்தினை சனி பகவான் பார்த்ததும்,சிறந்த பேச்சு மற்றும் எழுத்து திறமையும் இளைஞர்களின் பேராதரவை பெற்று தந்தது.

அரசியல் யோகம்.

சந்திரனுக்கு பத்தில் ராகு இருப்பது அரசியலில் ஈடுபடும் யோகத்தை தந்தது.
அரசாளும் யோகம்.
ஒன்பதாம் அதிபதி புதன் ஒன்பதிலே ஆட்சி,பத்தாம் அதிபதி சுக்கிரன் பத்திலே ஆட்சி பெற்று இருப்பது #தர்மகர்மாதிபதியோகமாகும்.இதனால்தான் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டிருந்தாலும்"ஏழையின் சிரிப்பிலேதான் இறைவனை காண முடியும்"எனும் கொள்கையையும்"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"எனும் உயரிய கொள்கையை கொண்டிருந்தார்.

மேலும் சூரியனும் ,சந்திரனும் சேர்ந்திருந்து அமாவாசை யோகம் பெற்று அதில் சூரியன் ஆட்சி பெற்றதும் தமிழக முதலமைச்சராக்கி கிரகங்கள் அழகு பார்த்தது.அதேநேரத்தில் சூரியனும்,சந்திரனும் சேர்ந்திருந்தது இளமையில் தந்தையை இழந்த நிலையையும் இவரது வளர்ச்சியை தந்தை காணமுடியாத நிலையை தந்தது.
இவர் நாடகம்,எழுத்து,சினிமா மற்றும் அரசியல் என எல்லா துறையிலும் புகழ்பெற்று விளங்கினார்.

இவரது சாதகத்தில் ஆறாம் அதிபதியாகவும் புதன் பகவான் இருப்பதால் இவை ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்றதால் இவர் இறப்பு பிணியால்(புற்றுநோய்) முடிந்தது.அதே புதன் பலம்பெற்றதால் டாக்டர்கள் அண்ணாவிடம்" ஆப்ரேஷனுக்கு நேரமாகிவிட்டது "என அழைத்தபோதும்  அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை படித்து முடித்துவிட்டுதான் வருவேன்"என மறுத்துவிட்டாரம்.அவர் இறந்தபிறகு" சிறிது நேரத்திற்கு முன் அறுவைசிகிச்சை செய்திருந்தால் பிழைத்திருப்பார்"என்றார்களாம்.எனவே இறுதிவரை உயிரைவிட படிக்கும் பழக்கத்தை முக்கியமாக கொண்ட அவதார புருஷர் ஆவார்.

-----தொடரும் சாதனையாளர்கள்----

தங்களது சாதகங்களை ஆய்வு செய்து பார்க்கவும்,விவாகபொருத்தம் முதலியவையை கணித்து போன் வழியாக பலன்பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்தேதி,நேரம் மற்றும் பிறந்த இடத்தை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு
( 97 151 89 647 ) அனுப்பிவைக்கவும்.கட்டணவிபரம் அதில் தெரிவிக்கப்படும்.

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் : 97 151 89 647
செல்: 740 257 08 99

My Email

masterastroravi@gmail.com

My website.Click hear

AstroRavichandransevvai.blogspot.com
********************************
Online Astro consult conduct my cell and whatsup.

Saturday 13 May 2017

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாதகம் ஓர் ஆய்வு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-சாதக ஆய்வு



கிரகங்கள் படுத்தும் பாடு-(62)

சினிமாவில் சாதித்தவர்கள்-(3)

சாதரணமான மனிதர்களையும் ,சரித்திரம் போற்றும் நாயகர்களாக மாற்றிய பங்கு கிரகங்களுக்கு உண்டு என்பதை சுட்டி காட்டவே இப்பதிவை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இன்று சாதரண நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய இவரது வாழ்க்கையை கிரகங்கள் நடத்தும் கோளாட்டத்தால் மக்கள் போற்றும் மகத்தான சூப்பர் ஸ்டாராக மாற்றியது.

1975-ல் "அபூர்வ ராகங்கள்"-திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசித்து இன்று 41-வருடங்களாக திரை துறையில் இன்றைய இளம் நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறார்.
இவரது புகழை சொல்லிக்கொணாடோ போகலாம்.ஆனால் இவரை இந்த நிலைக்கு உயர்த்திய கிரக நிலைகளை பற்றி பார்ப்போம்.

கிரகநிலை 

சிம்ம லக்கனம்
மகர ராசி
விஷ்ணுவின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம்
1-ல் கேது
2-ல் சனி
4-ல் சூரியன்
5-ல் புததன்,சுக்கிரன்
6-ல் செவ்வாய்,சந்திரன்
7-ல் குரு,ராகு

இவருக்கு சிம்ம லக்கனம் என்பதால் யாருக்கு அடிபணியாமல் தன் மனதுக்கு பட்டதை துணிச்சலாக பேசக்கூடியவர்.மேலும் லக்கனத்தில் ஞானக்காரகன் கேது இருந்து பூர்வபுண்ணிய குருவின் பார்வை பெறுவதால் ஆன்மீக நாட்டத்தை வழங்கியது.

அதே நேரத்தில் லக்கனத்தில் கேது ,மற்றும் ஏழாம் இடத்தில் ராகு பகவான் இருந்து காலசர்ப்ப யோகத்தை வழங்கியதால் முப்பத்தொரு வயது வரை சோதனையும் அதற்கு மேல் அரிய பல சாதனைகளையையும் செய்ய வைத்தது.
திரை துறையில் சாதிக்க
இவருக்கு கலைக்காரகனான சுக்கிர பகவானும் கீர்த்தி மற்றும் புகழைத்தரக்கூடிய சகாயஸ்தானம்  மற்றும் தொழில் ஸ்தான அதிபதியாக இருந்து வாக்கு மற்றும் லாப ஸ்தான அதிபதியும் வித்தைக்காரகனான புதன் பகவானோடு லக்கனத்திற்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அவர் செய்த பூர்வபுண்ணிய பலத்தினால் திரைத்துறையில் சாதிக்க முடிந்தது.

ஒருவர் திரைத்துறையில் சாதிக்கவேண்டுமாயின் புதன் மற்றும் சுக்கிரன் பலம்பெற வேண்டும் என்ற கருத்து எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது பார்த்தீர்களா? 

மேலும்.திரைதுறையில் இருந்துகொண்டு ஆன்மீகவாதியாகவும் மாறியதற்கு   காரணம் ராசிக்கு தர்மாதியான புதனும் மற்றும் கர்மாதிபதியான சுக்கிரனும் இணைந்து தர்ம-கர்மாதிபதியோகத்தை அளிக்கிறது.இதனால் இவர் மக்கள்போற்றும் மகத்தான காதாநாயகர் ஆனார்.இவர் சினிமாவில் முகம் காட்டினாலே போதும் ரசிகர்களிடம் ஆராவரத்தை பார்த்திருப்பீர்கள்.இவை அனைத்தும் தர்ம-கர்மாதிபதி யோகத்தால்தான் ஆகும்.

இந்த இணைவு ஐந்தாம் இடத்தில் இருந்ததால்தான் இவரிடம் மக்களை சுண்டி இழுக்கும் வசிய சக்தியைப்பெற்றார்.
புதன் மற்றும் சுக்கிரன் பலப்பட்டதைப்போலவே மூன்று மற்றும் ஒன்பதாம் இடமும் பலப்பட்டதே திரை துறையில் ஜொலிக்க காரணம் எனும் கருத்தை இவரது சாதகம் வாயிலாக நாம் எடுத்துக்கொள்வோம்.

ஆணையிடும் அதிகாரம்

இவர் சிம்ம லக்கனம் அதன் அதிபதியானது தைரியகாரகன் செவ்வாய் வீட்டில் உள்ளார்.செவ்வாயே மகர வீட்டில் அதாவது எதிரிகளை வெல்லக்கூடிய ஆறாம் இடத்தில் உச்சம்பெற்று சந்திரனுடன் இணைந்து "சசி மங்களயோகத்தை" பெறாறுள்ளார்.இதனால்தான் இவரது ஒரு வார்த்தைக்காக அதாவது அரசியலிலுக்கு வருவாரா?என எல்லா அரசியல் தலைவர்களும் பயத்தோடு காத்துநின்றனர்.மக்களும் ஆர்வத்தோடு வருவார் என எதிர்பார்த்து நிற்கவைத்தது அவரது கிரக அமைப்பே ஆகும்.

ஆனால் இவரை பதவிக்கு ஆசைப்படாமல் உதவி செய்ய ஆசைப்படுபவராக மாற்றியது சந்திரமங்கள யோகம்தான் ஆகும்.இவருக்கு நல்ல கற்ற நல்ல மனைவியை தந்ததும் இதுவே காரணமாகும்.

சப்தமஸ்தானமான ஏழாம் இடத்தில் ராகு அமர்ந்து காதல் கலப்புமணத்தை இவருக்கு தந்ததோடு மேலும் புத்திரகாரகன் குருவும் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் இவரது மகளுக்கும் காதல் கலப்பு மணத்தை தந்தது.

புத்திரஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் இணைவு இவரது புத்திரத்தையும் சினிமாவில் நுழைந்து புகழ் பெறும் யோகத்தை வழங்கியது.

ராஜயோகம்

பணிரெண்டாம் அதிபதி சந்திரன் ஆறாம் இடத்தில் அமர்ந்து "கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்"எனும் விபரீதராஜயோகத்தை வழங்கியது.இதனால் எல்லா செல்வ வளங்களோடும் நிறைவாக வாழவைத்தது.
எனவே எந்த ஒரு மனிதனும் திரைத்துறையில் சாதிக்கவேண்டுமாயின் அதற்குரிய கிரக அமைப்புகள் இல்லாமல் இயலாது.

.............நன்றி தொடரும்

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொறுவருக்கும் ஏதாவது அமைப்பை கடவுள் அளித்திருப்பார்.ஜெனிக்கும்போது அவரது சாதக கட்டத்தில் உள்ள கிரகநிலை கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம்.தங்களது சாதக அமைப்பை இதுபோல ஆய்வு செய்துபோன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் கட்டாயம் உண்டு தொடர்புகொள்ளவும்.

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
    M.SC,MA,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

  வாட்ஸ்அப் எண்; 

           97 151 89 647

   செல்

740 257 08 99
97 151 89 647

(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்க தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது இமெயிலிலெ மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளை பெறலாம் )

My Email

masterastroravi@gmail.com

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

@@@@@@@@@@@@@@@@@@@@@