Sunday 13 June 2021

அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமைய ?

 அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமைய ?

               


செவ்வாய்ப்பட்டி 

ஸ்ரீபத்திரகாளி அம்மன் துணை!


   திருமணம் செய்ய துடிக்கும் இன்றைய இளைஞர்களின் பெரும்பாலான எதிர்பார்ப்பு   தனக்கு வரக்கூடிய மனைவியானவள் 

நல்ல அழகாக இருக்க வேண்டும் என்பதே முதல் கோரிக்கையாக இருக்கும்.


  "அழகு என்பது மனது சம்பந்தப்பட்ட ஒன்றாகும்". இது தான் அழகு என்று வரையறுத்துக் கூற முடியாது". 


     ஒருவருக்கு அழகாகத் தெரியும் பெண் மற்றவர் பார்வைக்கு அழகாக தெரியாமல் போகலாம் அல்லது தெரிய  வேண்டிய அவசியமுமில்லை. 

அழகு என்பது அவர்களது ஆத்மாவின் தாளமாகும்.


  பொதுவாக 

சராசரி மனிதன் எதிர்பார்க்கும் அழகு என்பது " வெளிப்புற அங்க அவய வடிவங்கள், நிறம், நளினம், நடை, உடை ,பாவனை அனைத்தையும் சேர்த்துதான் ஆகும்".


 சோதிடவியல் அடிப்படையில் தனக்கு வரக்கூடிய மனைவியின் அழகு நிலை பற்றி அறிந்து கொள்ள இயலும்.

ஒருவருக்கு அழகுடைய மனைவி வாய்க்க 

"அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் வீடு இயற்கை சுபக்கிரகத்தின் வீடாகவும் அமைந்து , ஏழாம் அதிபதி

கேந்திர, கோண வீடுகளில்

(1-4-7-10-5-9) அமர்ந்து

சுபக் கிரகங்களாகிய குரு , தனித்த புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரன் பார்வை பெறும் அமைப்பில் காணப்பட்டாலும் அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவியாக அமைவாள்.


      ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் வீடு சனியின் வீடாக அமைந்து சனி ஏழாம் வீட்டிலே ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து வேறு ஏதேனும் சுப கிரக பார்வை  பெறாமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் அல்லது ஏழாம் வீட்டிலோ சனி அமர்ந்து ஏழாம் அதிபதியும் சனியின் தொடர்பு பெற்ற அமைப்பை பெற்று இருந்தாலும் அழகற்ற மனைவி அமைவாள்.


                     



 அதேநேரத்தில் களத்திரகாரகன் ஆகிய சுக்கிர பகவான் உடன் பாவக்கிரகங்கள் (சனி ,செவ்வாய், ராகு ) இணைந்து காணப்பட்டாலும், சுக்கிரன் பகவான் நிற்கும் ராசியில் இருந்து ஏழாம் ராசியில் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு அமர்ந்து இருந்தாலும் விகார முகமுடைய அழகற்ற மனைவி அமைவாள்.


   களத்திர காரகனான சுக்கிரனும் மற்றும்  புத்திர காரகனான குருவும் சேர்ந்து களத்திர ஸ்தானத்தில் வலுப் பெற்று காணப்பட்டால் ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி அழகாகவும் அந்தஸ்தாகவும மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.


   ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மீனம் இலக்கனமாகவும் அதில் சுக்கிரன் அமர ,

குருவின் பார்வையை தவிர மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தால் அந்த பெண் கண்டவர் மயங்கும் பேரழகு வாய்ந்தவளாகவும், கவர்ச்சி கன்னியாகவும் திகழ்வாள் .இதே ஆணின் சாதகமாக இருந்தால் பல கலைகள் கற்றவராகவும், மனைவியின் தாசனாகவும் வாழ்க்கையில் ஒரு குறைவின்றி வாழ்வார்.


    ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும் இருந்து இதே சந்திரன் நவாம்சத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ சப்த வர்க்கத்தில் நல்ல முறையில் பலம் பெற்று காணப்படுகின்ற நிலையில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்து விட்டால் இந்த அமைப்பில் பிறந்த பெண் குடிசையில் பிறந்தாலும் அல்லது எந்த குடியில் பிறந்தாலும் இப் பெண்ணிற்கு வாய்க்கின்ற கணவன் ஓர் அரசனுக்கு நிகரான ராஜயோக வாழ்க்கை வாழ்கின்ற சுக அனுபவம் பெற்ற செல்வந்தனாக இருப்பான்.


  ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கும் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கும், இதேபோல

 ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து 5-ஆம் இடத்திற்கும் மற்றும் ஏழாம் இடத்திற்கும் குருபார்வை அமைந்து இருக்குமேயானால் அவர்களுக்கு நல்ல மனைவியும் மனைவியின் மூலம் பொருள் சேர்க்கையும், புகழ், கவுரவம் மகிழ்ச்சியும் ஏற்படும். அறிவு மிகுந்த குழந்தைகள் பிறப்பார்கள் குழந்தைகள் அழகு, கல்வி, தொழில், வாழ்க்கை மற்றும் ஆயுள் ஆகியவை பரிபூரணமாக பெற்றிருப்பார்கள். 


                       



    இந்த யோகம் பெற்ற சாதகரின்  குழந்தைகள் பிற்காலத்தில் தந்தையிடம் அளவுகடந்த பாசத்தை பொழிவார்கள். இது முதல்தரமான யோகமாகும்.ராசிஅல்லது இலக்கினத்திற்கு ஏதேனும் ஒன்றிற்கு கிடைத்து இருந்தால் இந்த யோகம் உண்டு.


   களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அமர்ந்து ஏழாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து பாவ கிரக தொடர்பு பெறாமல் இருப்பின் அழகு வதனம் உடைய மனைவி அமைவாள்.


நன்றி.


My website

  www.astroravichandransevvai.in


வாட்ஸ் அப்

   9715189647


   செல்

 9715189647

  7402570899


                        



அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Friday 11 June 2021

லக்கினம் மற்றும் லக்கினாதிபதி காட்டும் பலன்கள்-(2)

 லக்கினம் மற்றும் லக்கினாதிபதி காட்டும் பலன்கள்-Part-(2)


                        


  செவ்வாய்ம்பட்டி ஸ்ரீ

பத்திரகாளி அம்மன் துணை.


        லக்கினத்தில் சூரியன் குரு இணைந்து இருந்தாலும் அல்லது இருவரும் ஐந்தாம் இடத்தில் நின்றாலும் அல்லது இருவரும் உச்சம் பெற்று நின்றாலும் அல்லது அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தாலும் தங்களுக்கு சம சப்தமாக பார்த்திருந்தாலும் சிவராஜயோகம் பெற்று புகழுடன் வாழ்வார்.


   லக்னாதிபதியுடன் பாபக் கிரகமான சூரியன், செவ்வாய் ,சனி  மற்றும் ராகு இணைந்து இருந்தால் பணத்திற்காக எதையும் செய்யும் எண்ணம் உடையவனாக திகழ்வான்.


   லக்கினத்தில் செவ்வாய் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் லக்னாதிபதி பலமிழந்த சூழலிலும் வேறு ஏதேனும் வகையில் லக்கனத்திற்கு சுபத்துவம் பெறாத நிலையிலும் அந்த சாதகர் ஹோமோ செக்ஸில் ஆர்வம் மிக்கவராக இருப்பார்.


   லக்கினத்தில் சூரியன், சனி இணைந்து நின்றால் அவர் சிறந்த வியாபார தந்திரங்களை கொண்டவராக திகழ்வார். சுபகிரகங்கள் பார்வை பெறாத சூழலில் தந்தை மீது அதிக பாசம் கொண்டிராதவராக இருப்பார்.


                        



   லக்கினாதிபதியும் ஜீவன ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் நல்ல பதவி ,அந்தஸ்து, அரசுடன் தொடர்பு  மற்றும் அரசாங்கத்தின் உயர் பதவி போன்றவை கொடுக்கும்.


  இலக்கினத்தில் சனியும், ராகுவும் இணைந்து பாப கிரகமான செவ்வாய்  பார்வையைப் பெற்றால் ஜாதகன்  துர்குணம் படைத்தவராக கோபம் மிகுந்தவராகவும் காணப்படுவார் வாழ்க்கைத் துணையுடன் விட்டுப் பிரிந்து வாழ்வார்.


 லக்கினாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுவது ராஜ யோகம் கிட்டும்.   திருப்பணிகள் அதிகமாக செய்வார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உண்டாகும் .


  லக்கினாதிபதியும், களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதியும் இணைந்து மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் கால தாமதமாக நடைபெறும் அல்லது திருமணம் தடைபெறலாம்.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தின் பரல்களை விட களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் மனைவியின் ஆட்சிதான் அவர்கள் வீட்டில் நடைபெறும். அதேசமயம் ஏழாம் இடத்தை விட லக்கனத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகர் சகல அதிகாரமும் கொண்டவராக குடும்பத்தை அவரை ஆட்சி செய்வார்.


 களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் இணைந்து இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலும் ஜாதகருக்கு மனைவி இல்லை. ஏனைய பிற அமைப்புகளை பொருத்து பலன் மாறுபடலாம்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெறுவது நல்லது. உதாரணமாக சிம்ம லக்கினமாக இருந்து மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவது ஆட்சி செய்யும் அதிகாரத்தை சாதகர் பெறுவார்.


  லக்னத்தில் சுபகிரகங்கள் இருந்து லக்கினாதிபதி நன்றாக பலம் பெற்று இருந்தால் சிறு வயது முதல் வாழ்க்கை  மற்றும் உடல்நலம் சிறப்பாக இருக்கும். மாறாக லக்கினத்தில் சனி, செவ்வாய் ,ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்து, லக்கினாதிபதியும் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பலவீனப்பட்டு இருந்தால் வாழ்க்கை மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும்.


  லக்கினத்தில் சந்திரன் இருக்கப் பெற்றவர் அழகானவன் . ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கப் பெற்றால் தனக்கு வரக்கூடிய மனைவி அழகு வதனம் படைத்தவராக இருப்பார்.


     லக்கினத்தில் சுக்கிரன்  மன்மதனை போன்றவர். லக்கினத்தில் செவ்வாய் அபரிதமான திறமைசாலி. சிம்ம லக்கினக்காரர்கள் கதாநாயகர்கள். மகரம் கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள்.


                     



 கடக லக்கினக்காரர்கள் அரசியல் தலைவர்கள், நாட்டாமைகள்  மற்றும் தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


  ரிஷபம் ,துலாம் லக்னக்காரர்கள் கலைப் பிரியர்கள்.


  மேஷம் ,விருச்சிக லக்னகாரர்கள் போராட்ட குணம் இருக்கும். யாருக்கும் பயப்படாத குணம், ராணுவம், போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள்.


  தனுசு, மீனம் லக்கினக்காரர்கள் மிகவும் அறிவாளிகள்.  போதிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள், ஆலோசனை வழங்கும் மந்திரிகள் போன்றவர்கள் ஆவர்.


 கன்னி லக்கினக்காரர்கள் மற்றவர்களை எளிதாக கவர்ந்து இழுத்து விடுவார்கள்.


 மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகானவர்கள். மிதுனத்தில் சுக்கிரன் நின்றாலும்  மற்றும் பார்த்தாலும் தீர்க்க புகழுடன் வாழ்வார்.


  சூரியன் மற்றும் குரு பகவான் இணைந்து சிம்மம் அல்லது தனுசுவில் இருக்கும் சாதகர் ராஜ யோகம் உடையவர்.


 ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் புதன் மற்றும் கேது இருந்து குருவால் பார்க்கப்பட்டால் தாய்மாமன் உதவி பரிபூரணமாக கிடைக்கும்.


  லக்னத்தில் குரு பகவான் மற்றும் புதன் பகவான் திக்பலம் பெற்று திகழ்கிறார்.லக்கனத்தில் குருவையும், புதனையும் டிப் பலமாக பெற்றவர்கள் சிறந்த கல்வியாளராகவும் மற்றும் வித்தையில் சாதுர்யம் மிகுந்தவர்களாகவும் காணப்படுவர்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647

      செல்

   9715189647

‌.   8402570899


My website

  www.astroravichandransevvai.in


                        



   அன்புடன்

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

   (ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி ,

புதுக்கோட்டை மாவட்டம்.

லக்கினம் மற்றும் லக்கினாதிபதி காட்டும் பலன்கள்.

 லக்கினம் மற்றும் லக்கினாதிபதி  காட்டும் பலன்கள் -(1)

                       


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !


     இலக்கினாதிபதி மற்றும் ஜீவன காரகனான பத்துக்குடையவன் ஆகிய இருவரும் மறைவிட ஸ்தானமான 6, 8 ,12-ல் மறைந்து வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாமல் பலவீனப்பட்டு இருந்தால் ஜாதகருக்கு கஷ்ட ஜீவனம் உண்டாகும்.


   அதே நேரத்தில் மாறாக லக்கினாதிபதியும் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியும் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில்

(1,4,5,7,9,10)  இருந்தால் ஜாதகன் பிறந்த ஊரிலேயே பிரபலமாக இருப்பான். பலருக்கும் உதவி செய்பவராகவும் இருப்பார்.


  லக்கினாதிபதி , 

தனம், பாக்கியம் மற்றும் ஜீவன மற்றும் லாபாதிபதி ஆகிய ஸ்தானங்களும் மற்றும் அதிபதிகள் பலம் பெற்று தங்களுக்குள் பரிமாறி நின்று உரிய திசை அமைப்பு நடைமுறையில் இருக்கும் காலத்தில் கோடீஸ்வரராக திகழ்வார்.

                         


  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி பலமிழந்து ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாமல் பலவீனப்பட்டு நின்றால் வாழ்வில் என்றும் தீராத பிரச்சினைகள் தொடர்ந்து வரும்.


  லக்னத்தில் ராகு அல்லது கேது நின்றால் திருமணத்திற்கு தாமதம் ஆகும். இந்த அமைப்பு "சர்ப்ப தோஷம்' அமைப்பாகும் இதனால் கல்வியில் தடை பெறும்.


   லக்கினத்தில் அல்லது 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் பகவான் ஆனவர் சூரியனுடன் கூடி நின்றால் ஜாதகரின் மனைவி மலடி ஆக இருப்பாள். இது பெண்களுக்கு இந்த அமைப்பு களத்திர தோஷமாகும்.


  லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டு அதிபதியும் ஒன்றாகக்கூடி சனியுடன் இணைந்து மறைவிட ஸ்தானமான

 6, 8, 12-ல் மறைந்தால்  சாதகர் விஷத்தால் மரணம் அடைவார். இவருடன் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் தூக்கிலிட்டு மரணம் அடைவார். ( இங்கு  உயிரைக் குறிப்பது லக்கினாதிபதி ஆகும்) அரசு தண்டனைகளும் சிறைவாசமும் கிடைக்கும்.


  லக்னாதிபதியும் , மறைவு ஸ்தானமான பன்னிரண்டாம் இட அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் துர்ப்பாக்கிய ஏழ்மை நிலை உண்டாகும். இன்னல்கள் பல அடைவார்.


  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் சுக மற்றும் பாக்கியாதிபதி மறைவு ஸ்தானமான எட்டில் அமர்ந்தால் வறுமை நிலை உருவாகும்.


  லக்னத்தில் சனி, ராகு மற்றும் செவ்வாய் கூடி நின்றால் விரைவாத நோய் உண்டாகும். லக்னத்தில் சூரியன் மற்றும் சந்திரன் கூடி நின்றால் அந்தப் பெண் அறிவு தேர்ச்சியோடு இருப்பாள். சூரியன் புதன் கூடி நின்றால் நுட்பமான அறிவு புகழும் அடைவான்.


                          



   லக்கினத்தில் ராகு நின்று லக்னாதிபதியும் பலவீனமடைந்து இருந்தால் கல்வித் தடைபடும் . மேலும் வித்தைக்காரர் புதனுடன் ராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக கூடி என்றால் கல்வியில் நாட்டம் இருக்காது.


  லக்னாதிபதியுடன் ஐந்தாம் வீட்டு அதிபதி கூடி நின்றால் அல்லது பார்வை மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் காதல் திருமணத்திற்கு வழி வகுக்கும். மேலும் இவ்வகை இணைவு ஐந்தில் அமர ராஜயோகத்தைக் கொடுக்கும்.


  ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பலம் பெற்றால் அந்த கிரக தசை யோக தசையாக அமையும். அந்தவகையில் லக்னாதிபதி அமர்ந்த வீடு பலம் பெற்றிருந்தால் வாழ்க்கையில் ஒரு உன்னதமான உச்சநிலை அது தொடர்புடைய தசை காலங்களில் வந்தே தீரும் .


  லக்னத்தில் சுபகிரகங்கள் அமர்ந்து சுபகிரக பார்வை பெற்று நிற்பதும், மேலும் லக்னாதிபதியானவர் பலம் பெற்று சுபத்துவம் பெற்ற நிலையில் நிற்பதும் ஜாதகருக்கு நல்லதைச் செய்யும் யோகம் உண்டாகும். செல்வ சுகம், இளகிய மனம் , ஏற்றத்தாழ்வுகள் மறந்து அனைவரிடமும் பரோபகார சிந்தனையுடன் பழகி வரும் குணம் உண்டாகும்.அதனால் வசதிகளையும் புண்ணியத்தையும் சமமாக அடைவார்.


  ஒருவரது ஜாதகத்தில் இலக்கணத்தையும் மற்றும் ராசியையும்

 ராசி கட்டம்  மற்றும் அம்ச கட்டங்களில் சனி பார்த்தால் முன் பிறப்பில் "விட்ட குறை தொட்ட குறையாக"  விட்டுப் போனதை பூர்த்தி செய்யவே மீண்டும் இப்பிறப்பு எடுத்துள்ளார் என கட்டாயம் கூறலாம்.


  லக்கினத்தில் 

குரு, சந்திரன் பலம்பெற்று அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ , இதேபோல லக்கினத்தில் லக்னாதிபதி பலம் பெற்று அமர்ந்தால் அல்லது பார்த்தால் ஜாதகன் படிப்படியாக முன்னேற்றம்  அடைவர்.


   லக்கினமும் , ராசியும் இணைவது வாழ்க்கையில் உயர்வான நிலையை அளிக்கும்.


  லக்கினத்தில்  நான்காம் வீட்டு அதிபதி அமைந்தாலும் அல்லது களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சுலபமாக சொந்த வீடு அமையும் யோகமும் உண்டாகும்.


 லக்கினத்தில் குரு அமர்ந்து உள்ள  சாதகம் பாக்கியசாலி, பூர்வீக சொத்துகள், நல்ல தந்தை நல்ல புத்தி சாலித்தனம்  ஜாதகர்களிடம் காணப்படும்.


 லக்கினாதிபதியும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து ஐந்தில் அமர்ந்து உள்ள சாதகர் யோகத்தை அடைவார்.


 லக்னாதிபதியுடன் சத்ரு ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டு அதிபதி இணைந்து இருந்தால் வாழ்வில் என்றும் பிரச்சனை தீராது தொடர்ந்து வரும். சுபத்துவம் பெற்ற நிலையில் பலன் மாறுபடும்.


  லக்கினாதிபதி மறைவு ஸ்தானமான 12-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பிறந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வாழும் நிலையைத் தரும். இவரின் வாழ்க்கை இவருக்கு பயன்படாது. திருப்பணிகள் அதிகமாக செய்வார். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். லக்கினாதிபதி 12-ஆம் இடத்தில் பலமில்லாமல் இருந்தால் பிறரின் உதவியின்றி தனித்து வாழ முடியாது. இலக்கனம் மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகள் பரிவர்த்தனை துர்பாக்கியத்தை கொடுக்கும். இது

 அவயோகம் நிலையாகும்.


  தொடரும்...


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


My website

  www.astroravichandransevvai.in


வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


        செல்

 9715189647

   7402570899

                     

                       


 அன்புடன்

   சோதிடர்

 சோ.ப. ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..

மன நலம் (Mental Health )

 மனநலம் (Mental Health) 

                         


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      ஒருவர் ஜாதகத்தில் மன நலத்திற்கு நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.


   சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை இருப்பதுபோல மனதிற்கும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டு பக்கம் உண்டு.


   ஒரு மனிதனுக்கு ஏற்படும் பயம், பீதி, கவலை, பொறாமை, எரிச்சல், தாழ்வு மனப்பான்மை மற்றும் உயர்வு மனப்பான்மை போன்றவை ஏற்பட நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இவை அனைத்தும் மனம் போடும் தப்பு தாளங்கள் ஆகும்.


  இதேபோல முன்னுணர்வு (intution), தன்னம்பிக்கை 

(Confidence),மன முதிர்ச்சி (Maturity) போன்றவை மனம் போடும் விந்தைகள் ஆகும்.


      மன அழுத்தம் (Stress),மன முறிவு, மனப்பிறழ்வு ,multiple pesonality,Spilit pesonality போன்றவை மனதால் விளையும் நோய்களாகும்.


 பைத்திய தன்மைக்கும், நிறைமதிக்கும்

(பொளர்ணமி) நெருங்கிய தொடர்பு உண்டு .

முழுமதி காலங்களில் பைத்தியக்காரரிடம்  பைத்தியதன்மை அதிகரிக்கிறது.


      மனோகாரகன் சந்திரன் ஆனவர் சனி மற்றும் ராகுவுடன் இணைந்து  சுபத்துவம் பெறாத நிலையில் அவர் பைத்தியக்காரனாக இருப்பான்.


  மனநிலை காரகன் சந்திரனுடன் சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரக இணைவு 8 பாகைக்குள் இருப்பின் அவரது மனதில் தேவையில்லாத பயம், பீதி, உறுதியற்ற மனநிலை உடையவராக இருப்பார்.


   சந்திரன், சனி மற்றும் ராகு பகவான் எட்டு பாகைக்குள்ளாக  இணைந்து செவ்வாய் பார்வை செய்தால் வேறு ஏதேனும் சுபத்துவம பெறாத நிலையில் ஜாதகரது  மூளை பாதிக்கப்படும்.


  குருபகவானும், சனியும் இணைந்து ஆறாமிடத்தில் காணப்பட்டாலும் மனநிலை காரகன் சந்திரன் இரு பாவர்கள் மத்தியில் அகப்பட்டுக் கொண்டாலும், சந்திரன் புதனுடன்.  இணைந்து ஆறாம் இடத்தில் அமையப் பெற்று பாவர்களுடைய பார்வை பெற்றாலும் அவர்களுக்கு மனநோய் ஏற்படுகிறது.


    ஒருவர் ஜாதகத்தில் இலக்கினாதிபதியே அச்சாணியாக செயல்படுகிறார். ஒருவருடைய உறுதியான மனநிலைக்கு லக்கினாதிபதியின் வலிமையும் மற்றும் சந்திரன் வலிமையையும் மிக முக்கிய காரணமாகும்.


    ஒருவரது ஜாதகத்தில் இலக்கினாதிபதியானவர் மறைவிட ஸ்தானமான எட்டாம் இடத்தில் மாந்தி மற்றும் ராகுவுடன் சேர்ந்து பஞ்சமாதிபதியும் நீசமடைந்து இருந்தால் சாதகர் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாமல் கை ,கால் விளங்காமல் பிறந்து இறப்பார்.


       ஒருவருக்கு  ஏழரைச் சனி காலத்தில்  ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி பகவான் வாசம் செய்யும் காலத்தில் தேவையில்லாத பயம்,பீதி மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647


           செல்

    9715189647

‌.    7402570899


My website

 www.astroravichandransevvai.in


                        



   அன்புடன்

சோதிடர்

சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

காதலா ? காமமா ?

   காதலா ? காமமா?

                        


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


         ஒருவரது ஜாதகத்தில்  காதல் உணர்வு பற்றியும் மற்றும் காம உணர்வு பற்றியும் அறிந்து கொள்ள  உதவும் ஸ்தானம் மற்றும் காரக கிரகம் பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்ள முயல்வோம்.


   காம உணர்வு பற்றி அறிந்துகொள்ள 

மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம்  இடங்கள் போன்ற ஸ்தானங்கள் உதவி புரிகிறது.


      கிரகங்களில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பகவானை கொண்டு அறிந்து கொள்ள முயலலாம்.


  மூன்றாமிடம் ஒருவரது வீரியத்தன்மை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. 

       காம வாழ்வில் அவனது/ அவளது செயல் திறனையும் மற்றும் அதில் ஈடுபடும் ஆர்வத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது.


   மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் ,காம காரகன் கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்  சுபத்தன்மை அடைந்து இருப்பின் முறையான வழியில் காம உணர்வினை வெளிப்படுத்தும் தன்மை சாதகரிடம் மிகுதியாக காணப்படும். மாறாக பாவ கிரகங்களான சனி,ராகு மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரக தொடர்பு ஏற்பட்டு பாவதன்மை அடைந்திருப்பின் முறையற்ற வழியில் மற்றும் தரங்கெட்ட முறையில் காம உணர்வினை வெளிப்படுத்துவனாகவும் மற்றும் அனுபவிப்பவனாகவும் இருப்பான்.


       ஏழாம் இடம் என்பது தனக்கு வரும் வாழ்க்கை துணையின்  கற்புநிலை மற்றும் அவர்களுக்கு இடையே உருவாகும் 

காம உறவின் நிலை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.


                        


   

  ஏழாம் இடம் மற்றும் அதன் ‌அதிபதி , களத்திரகாரகன் சுக்கிரன் உடன் இயற்கை சுப கிரகங்கள்  தொடர்புகொண்டு சுபத்துவ நிலையினை அடைந்த நிலையில் "மலரினும் மெல்லிது காமம், சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" 


" ஊடலில் தோற்றவர் வென்றார்" என்ற வகையில் வள்ளுவர் காட்டும் வழி நின்று தனக்கு வரும் இணையோடு மென்மையான முறையில் அன்பான முறையில் மனதை கவரும் வகையில் காம களியாட்டங்களில் ஈடுபடுவார்கள்.


  12-ஆம் இடம் என்பது அயன, சயன ,முக்தி போன்றவற்றை தரும் ஸ்தானமாகும். இங்கு சயனம்  என்பது படுக்கை சுகம் அல்லது கட்டில் சுகத்தை  குறிக்கும் ஸ்தானமாகும்.


     நவகிரகங்களில் களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் காமகாரகன் செவ்வாய் உடன் பாவ கிரகங்களான சனி, ராகு போன்றவை தனித்தனியாக அல்லது சேர்ந்தோ ஜாதக கட்டத்தில் மூன்று,ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்களுடன் சுபத்துவம் பெறாத நிலையில் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் மாறுபட்ட சற்று கூடுதலான காம உணர்வு உடையவராகத் திகழ்வார்.


    மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பகவான் சுபத்துவ நிலை அடைந்து இருப்பின் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய  நிலையில் படுக்கை சுகத்தில் திருப்தி அடையும் நிலையை குறிக்கும். பாவத்துவம் ஆன நிலையில் 

"பல மலரில் தேன் பருகும் வண்டுபோல" திருப்தியற்ற நிலை உடையவராக இருப்பார்.


   சுக்கிர பகவானை காதலுக்கு உரிய கிரகமாக கருதமுடியாது. இதனை "களத்திரகாரகன்" என்றும் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க உதவும் கிரகம் என்றும் கொள்ளலாம். 


   ஒருவரது ஜாதகத்தில் நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் ஆனவர் வக்கிரம், அஸ்தமனம் மற்றும் பகை வீடு ஏறி நிற்கும் பொழுது தாம்பத்திய சுகம் கிடைப்பதில் காலதாமதம் ஆகும் அல்லது தாம்பத்திய சுகம் மறுக்கப்படும்.


   ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பாவத்துவ நிலை அடையாமல் இருந்து சுக்கிரன் தொடர்புடைய தசா, புத்தி  மற்றும் அந்தரங்களிலோ அல்லது சுக்கிரன் தொடர்புடைய வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் தசைகளிலும் ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை அவர் பெறுவார் என்ற வகையில் அந்த நேரத்தில் அவருக்கு திருமணம் நடக்க வைக்கும்.


   ஒருசிலருக்கு இளவயதில் சுக்கிர தசை வந்து பாவத்துவ நிலையை அடைந்து இருப்பின் பெற்றோர்களை விட்டு கண்டதும் காதல் என்ற வகையில் உடலியல் கவர்ச்சிக்கு ஆட்பட்டு தனக்கு பிடித்தவருடன் வீட்டைவிட்டு ஓடிச் செல்லும் நிலையோ அல்லது காதல் வயப்படும் நிலையோ ஒருவருக்கு உண்டாகும். இதனால்தான் 

"குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்பார்கள்.


   ஒருவரது ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஏழுக்குடையவர்கள் தொடர்புகொண்டு சுபத்துவ நிலையினை அடைந்து இருப்பின் காதல் வயப்படும் உணர்வினை ஜாதகருக்கு உரிய தசா புத்திகளில் தரும்.குறிப்பாக சுக்கிரன் தசைகளிலோ அல்லது சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் வீடுகளுடன் தொடர்பு கொண்ட கிரகங்கள் புத்திகளிலோ இவர்களது காதல் நிறைவேறும் .


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உடன் ஐந்து , ஏழு மற்றும் ஒன்பதுக்குடையவர்கள் சுபத்துவ நிலையில் தொடர்பு கொள்ள காதல் கைகூடும்..


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


        செல்

    9715189647

      7402570899


My website

   www.astroravichandransevvai.in

                           


  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம்.


                      


காரக பாவ நாஸ்தி

 காரக பாவ நாஸ்தி-புது விளக்கம்


                 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு சில விஷயத்தை(matter) ஆராய்ந்து பார்ப்பதற்கு சாதக கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானமும் மற்றும் அந்த ஸ்தானத்துடன் தொடர்புடைய காரகமும் இருக்கும்.


   ஒருவருக்கு கிடைக்க கூடிய தனத்தையும் மற்றும்  புத்திரத்தையும் ஆராய்ந்து பார்க்க தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடமும் மற்றும் புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடமும் உள்ளது. இவ்விரண்டிற்கும் தன மற்றும் புத்திர காரகர் குரு பகவான் உள்ளார்.


  சகோதர ஸ்தானத்தை பற்றி பார்க்க மூன்றாம் இடமும் மற்றும் சகோதர காரகன் செவ்வாய் பகவானும் உள்ளார்.


     தாய் ஸ்தானத்தை பற்றி அறிந்து பார்க்க 4-ஆம் இடமும் மற்றும் தாய்க்கு காரகரான சந்திர பகவான் உள்ளார் .


        தந்தை ஸ்தானத்தினை பற்றி ஆராய்ந்து பார்க்க ஓன்பதாம் இடமும் மற்றும் தந்தைக்கு காரகரான சூரிய பகவான் உள்ளார்.


     களத்திர ஸ்தானத்தை பற்றி ஆராய்ந்து பார்க்க ஏழாம் இடமும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பகவானும் உள்ளார்.


 ஒரு காரகர் தங்களின், காரக ஸ்தானத்தில் நின்று இருந்தால் அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் கெடும் என்பதையே" காரக பாவ நாஸ்தி" என்கிறோம்.


   உதாரணமாக  மனைவிக்கு பொறுப்பு வகிக்கும் கிரகமான களத்திரகாரகன் சுக்கிரன்

களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகனுடைய மனைவிக்கு கெடுதல் நேரும் என்பதை சோதிட வல்லுநர்கள் கணித்து ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.


இவ்வாறாக காரகர்கள் அந்த காரக ஸ்தானத்திலேயே நின்று இருப்பதையே காரக பாவ நாஸ்தி என்று கூறுவோம்.


      இந்த அடிப்படையில்  தந்தைக்கு காரகரான சூரியன் ஒன்பதாம் இடத்தில் நின்று இருப்பதையும்,


  மாதுர் காரகன் சந்திரன் நான்காம் இடத்தில் நின்று இருப்பதையும், 


  குரு பகவான்  இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடத்தில் நின்று இருப்பதையும் காரக பாவ நாஸ்தி என்று அழைக்கப்படுகிறது.


  ஆனால் அதே நேரத்தில் கல்விக்கு காரகனாகிய புதன் கல்வி ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திலோ அல்லது வித்தை  ஸ்தானமான நான்காம் இடத்தில் நின்றிருப்பது காரக பாவ நாஸ்தி என்ற பிரிவில் வருவதில்லை.


   புதன்பகவான் மேற்கண்ட இரண்டு மற்றும் நான்காம் இடத்தில் நிற்பது கல்வியும் மற்றும் வித்தையும் மேம்படுத்தும் அமைப்பாகத்தான் இருக்கிறது.


 அதேபோல வாகன காரகனாகிய சுக்கிரன் வாகன ஸ்தானமான நான்காம் இடத்தில் இருப்பதையும் காரக பாவ நாஸ்தி என்று கூற இயலாது . நான்காம் இடத்தில் சுக்கிர பகவான் நிற்பதுவே மிகுந்த வாகன யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும்.


 விதிவிலக்கு


   காரக பாவ நாஸ்திக்கு இன்னொரு விதிவிலக்கும் இருக்கிறது .

அதாவது காரக கிரகம் அந்த காரக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது காரக பாவ நாஸ்தி ஆகாது.


       உதாரணமாக மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அது காரக பாவ நாஸ்தி அல்ல. மேஷத்திற்கு ஏழாம் வீடு  சுக்கிரனின் ஆட்சி வீடு ஆகிறது. அங்கே சுக்கிரன் நின்றிருப்பது மனைவிவழியில் சாதகனுக்கு நன்மை தரக்கூடிய அமைப்பாகும். மனைவிக்கு நன்மை தரக்கூடியவை என்றும் கூறுவதே பொருத்தமாகும்.


 மேற்கண்ட எல்லாம் பொதுப் பலன்களே உடன் சேரும் மற்றும் பார்க்கும் கிரகங்கள் ஏற்ப பலன்கள் மாறுபடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


 காரக பாவ நாஸ்தி ஏற்பட்டிருப்பதாலேயே அந்தகாரகம் சார்ந்த நற்பலன்கள் எதுவும் நடக்காது என்று தீர்மானித்து விடக்கூடாது. ஒருபக்கம் காரக பாவ நாஸ்தி ஏற்பட்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த காரக ஸ்தானாதிபதி நன்னிலை இருக்கலாம் அப்போது அந்தகாரகம் சார்ந்த நற்பலன்கள் கிட்டும்.


   உதாரணமாக மீன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் நின்று காரக பாவ நாஸ்தி அடைந்திருந்தாலும் ,அந்த காரகம் தொடர்புடைய ஏழாம் இட அதிபதியான புதன் பகவான் நன்னிலையில் இருப்பின் அந்தகாரகம் சார்ந்த பலன்கள் நற்பலன்களாக அமையும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

‌.  9715189647

       செல்

   9715189647

   7402570899

                           



அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ  கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம்

ஜாதக கட்டத்தில் ஸ்தான அதிபதியும் அது தொடர்புடைய காரக கிரகம்

 "ஜாதக கட்டத்தில் ஒரு ஸ்தானதிபதியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரக கிரகமும்"-ஓர் ஆய்வு.

                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒரு ஜாதகத்தில் எந்த விஷயம் (matter)  பற்றிய பலனைப் பார்க்க வேண்டுமோ, அந்த விஷயம் தொடர்பான ஸ்தானத்தின் அதிபதி மற்றும் அந்த விஷயம் தொடர்பான காரக கிரகம் ஆகிய இரண்டையும் கட்டாயம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


    அவ்வாறு ஆய்வு செய்து பார்க்கப்படும் போது அவ்விரு கிரகமும் , லக்னாதிபதிக்கு நண்பர்களாக இருந்தால் அந்த விஷயம் சார்ந்த நற்பலன்கள் சாதகனுக்கு முழுமையாக கிட்டும்.


  அந்த ஸ்தான அதிபதியும் மற்றும் காரக கிரகமும் லக்னாதிபதிக்கு பகைவர்களாக இருந்தால் அந்த விஷயம் சார்ந்த நற்பலன்கள் ஜாதகருக்கு முழுமையாக கிட்டுவதில்லை.


  அந்த ஸ்தான அதிபதியும் மற்றும் காரக கிரகமும் லக்னாதிபதிக்கு நண்பர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உச்சம், ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் முதலிய வகைகளில் பலம்பெற்று நின்றிருந்தால அந்த விஷயம் சார்ந்த நன்மைகளை சாதகன் எந்நாளும் அடைந்து கொண்டிருப்பான்.


 உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு மேற்கூறிய "ஸ்தானாதிபதியும் மற்றும் காரகனும்"- என்ற அடிப்படையில் ஆய்வு செய்து பார்ப்போம்.


  மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு வாகனம் சார்ந்த பலன்களை பார்க்க வேண்டுமென்று உதாரணமாக வைத்துக் கொள்வோம். 


       வாகன ஸ்தானம் என்பது நாலாம் இடம் ஆகும். மேஷலக்னத்திற்கு நான்காம் இட அதிபதி சந்திரன் ஆவார். 

இந்த சந்திரன் லக்னாதிபதியான செவ்வாய்க்கு நெருங்கிய நண்பர் ஆவார். அதேபோல வாகன காரகன் சுக்கிரன் ஆவார். சுக்கிரனும் லக்னாதிபதியான செவ்வாயுடன் பகையோ, நட்போ இல்லாத சமம் என்ற நிலையில் உள்ளவர் .ஆக அடிப்படையில் வாகனம் சார்ந்த நன்மைகளே மேஷ லக்னத்திற்கு எட்ட வேண்டும் என்று ஆகிறது.


    ஆனால் இது ஒரு பொதுவான பலன்தான் சந்திரனும்  மற்றும் சுக்கிரனும் பலவீனப்பட்டு மோசமான நிலையில் நின்றிருந்தால் வாகனம் சார்ந்த நற்பலன்களுக்கு பதிலாக  தீய பலன்களே அதிகம் நடைபெறும்.


 இதேபோல மற்றொரு உதாரணமாக மீன லக்னத்தில் எடுத்துக் கொள்வோம். மீன லக்னத்திற்கு நான்காம் இட அதிபதி புதனும் மற்றும் வாகன காரகனான சுக்கிரனும் லக்னாதிபதியான குருவுக்கு ஆகாதவர்கள் ஆவார்கள் . எனவே அடிப்படையிலேயே வாகனம் சார்ந்த கெடுபலன்களை மீன லக்கினத்திற்கு நடைபெற வேண்டும் என்று ஆகிறது. ஆனால் புதனும், சுக்கிரனும் நன்னிலையில் பலம் பெற்றிருந்து இருப்பார்களேயானால் தீய பலன்களுக்கு பதில் நற்பலன்களே மிகுதியாக நடைபெறும்.


 இந்த அமைப்பில் என்னதான் நற்பலன்கள் மிகுதியாக நடைபெற்ற போதிலும் அடிப்படையில் வாகன ஸ்தானாதிபதியான புதனும் மற்றும் வாகன காரகனுமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் லக்னாதிபதிக்கு ஆகாதவர்கள் என்பதால் மிகக் குறைந்த அளவில் அதாவது எந்த வகையிலாவது வாகனம் சார்ந்த கெடுபலன்கள் நடக்கவே செய்யும்.


எதைப் பற்றிய பலன் அறிய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன பொது விதியை கவனத்தில் எடுத்துக்கொண்டு கிரகங்கள் அமைந்திருக்கின்ற விதங்கள், பலம் மற்றும் பலவீனங்கள் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து பலன் நிர்ணயித்தால் பலன்களை கூடுதல் துல்லியத்துடன் சொல்ல முடியும்.


   ஒரு ஸ்தானத்திற்குரிய அதிபதியும் மற்றும் அந்த ஸ்தானத்திற்கு உரிய காரக கிரகமும் நட்பு ,ஆட்சி மற்றும்  உச்சம் போன்ற பலமான நிலையில் நின்று இருந்தாலும், சுபர்களுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தாலும் , இவ்வாறு இருப்பதோடு மட்டுமல்லாமல் லக்னாதிபதிக்கு இவ்விரு கிரகங்களும் நண்பர்களாக இருந்தால் மட்டுமே அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் அந்த சாதகன் அபரிதமாக அனுபவிக்கும் யோகத்தை பெறுவான்.


 ஸ்தான மற்றும் காரக பலன்கள் பங்கப்படுதல்.


       ஒரு ஸ்தானத்தின் அதிபதியோ அல்லது காரகரோ  இருக்கின்ற ராசியில் உடன் பாவர்கள் இணைந்து இருந்தாலும்,


       அல்லது 


      அந்த ராசிக்கு இருபுறமும் பாவிகள் இருந்து "பாவ கர்த்தாரி யோகம்" அடைந்து இருந்தாலும்,

   

       அல்லது 


     அந்த ராசிக்கு 5 ,9 எனும் திரிகோண ராசிகளில் பாவர்கள் வீற்றிருந்தாலும் 


    அல்லது 


    பாவர்கள் பார்வையிட்டு இருந்தாலும் அந்த ஸ்தானம் மற்றும் காரகம் சார்ந்த நற்பலன்கள் குறைந்து போய்விடும்.


  ஆனால் மேற்கண்ட இந்த விதிகளில் சில விதிவிலக்குகள் அடிப்படையில் பலன்கள் மாறுபடக்கூடும்.


    1) ஒரு ஸ்தானாதிபதி உடனோ  மற்றும் காரகருடனோ பாவர் இணைவது அது சார்ந்த பலன்களை குறைவுப்படுத்தும் என்பது சொல்லப்பட்டிருந்தாலும், ஆனால் இணைவில் ஏதாவது யோக அமைப்பு வலுவாக உண்டாகி இருக்குமானாலோ அல்லது இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு சுபத்துவ நிலை அடைந்திருந்தாலும் அந்த நற்பலன்கள் குறைவதற்கு பதிலாக கூடவே செய்யும்.


   உதாரணமாக சந்திரன் ஒரு ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் பாவக்கிரகம் இணைந்து விட்டது. எனவே இந்த ஸ்தானத்தில் பலன்கள் பாதிக்கப்படும் என்று முடிவுகட்டி விடக் கூடாது. ஏனெனில் சந்திரன்+செவ்வாய் சேர்க்கை என்பது 

"சந்திர மங்கள யோகம் என்ற பிரிவின்கீழ் வரும் இவ்விரு கிரகங்களும் நல்ல ஆதிபத்தியம் பெற்று நல்ல ஸ்தானங்களில் பலமாக நின்று இருந்தால் சந்திரமங்கள யோகத்தின் பலன்கள் நன்முறையில் நிச்சயம் கிட்டும் எனவே இந்த சேர்க்கையை நன்மைகளைத் தரும் சேர்க்கையாக கருத வேண்டுமே அல்லாமல் தீமைகளை மிகுதியாக கொடுக்கும் சேர்க்கையாக எண்ணிவிடக்கூடாது.


       2) பாவ கர்த்தாரி அமைப்பு

   ஸ்தான அதிபதி அல்லது காரக கிரகத்தின்  இருபுறமும் பாவ கிரகங்கள் இடம் பெறும்போது அவை பாபகர்த்தாரி அமைப்பை பெற்று அந்த கிரகம் பலவீனம் அடையும் என்பது பொதுவிதி.


  உதாரணமாக வாகனத்தை பற்றி ஆய்வு செய்யும் மேஷ லக்னத்திற்கு நான்காம் இடத்தில் சந்திரன் ஆட்சி பெற்ற நிலையிலிருந்து, மிதுன வீட்டில் சனியும் மற்றும் சிம்ம வீட்டில் ராகுவும் அமர்ந்து இருக்கும் பொழுது பாபகர்த்தாரி அமைப்பு பெற்றாலும் அந்த சந்திரன் ஆட்சி போன்ற ஸதான நிலையில் இருப்பதால் அவை பாதிப்புக்குள்ளாவது இல்லை. எனவே நற்பலன்களை தரும்.


   3) இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை தொடர்பு பெற்ற அமைப்பை பெருமானால்  அந்த பாவ கிரக சேர்க்கை சுபத்தன்மை அடைந்து நன்மையை தந்துவிடும்.


   3)   வந்து சேருகின்ற பாவ கிரகத்தின் ஆதிபத்தியத்தை எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .


     உதாரணமாக ஒன்பதாம் அதிபதி யோடு ஒரு பாவ கிரகம் இணைவதாக கொள்வோம். அந்தப் பாவ கிரகமானது  ஸ்தான அடிப்படையில் பத்தாம் இடத்து அதிபதியாக இருந்தால் அந்த சேர்க்கையில் "தர்ம-கர்மாதிபதி யோகம் ஏற்பட்டு விடும். அந்த அடிப்படையில் அந்த சேர்க்கையானது நற்பலன்களை மிகுதியாக வழங்கும்.


 எனவே ஒரு விஷயத்தில் பலனை அளிக்க 

முற்படும் பொழுது பல கூறுகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் ஒவ்வொரு விதிகளுக்குள்ளும் ஒரு விதிவிலக்குகளும் மற்றும் சூட்சும உண்மைகளும் இருக்கும் என்பதை அனுபவ பூர்வமாக ஆராய்ந்து உணர்ந்து பலன் அளிக்கப்பட வேண்டும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


      செல்

   9715189647

   7402570899


My website

  www.aatroravichandransevvai.in

                      



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்

மறைவிட ஸ்தனங்கள் (6,8,12) அல்லல் தருமா ? நன்மை? தருமா ?

மறைவிட ஸ்தானங்கள் (6-8-12 ஆம் இடம் )

அல்லல் தருமா? நன்மை தருமா?


                  


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     6 -8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கிரகங்களும்,

       6 -8 -12ஆம் இடங்களுக்கு அதிபதிகளாக வருகின்ற கிரகங்களும் ,


         6- 8- 12ஆம் இடத்து அதிபதிகளோடு சேர்ந்து இருக்கின்ற கிரகங்களும்,


       பகை வீட்டிலோ அல்லது நீச்ச வீட்டிலோ இருக்கின்ற கிரகங்களும், 


      பாவ கிரகங்களோடு இருக்கின்ற கிரகங்களும் தீமைகளைச் செய்திடும் அல்லது நன்மைகளை நல்குவதில்லை.


   இது பொதுவான அடிப்படை விதியாகும்.இந்த பொது விதியானது சில விதிகளின் அடிப்படையிலும், ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடும்.


அவற்றை பற்றி சிந்திப்போமோக,


   1) 6- 8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கோள்கள் இலக்கனத்தின் அடிப்படையில் அவர்கள் பாவர்களாக வந்தால்

 அவை நன்மைகளை வழங்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.


  2) 6- 8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கிரகங்கள்  இயற்கை சுப கிரகமான வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றின்  தொடர்பினை அடையும் பொழுது அவை சுபத்துவம் ஆகி அதன் தசா புக்தி காலங்களில் யோக பலன்களை தந்து விடுவது உண்டு.


  3)  6 -8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கோள்கள், அந்த

 6 -8- 12க்கு உரிய சிறப்பு யோகங்களில் சம்பந்தப்பட்டிருந்தால் நன்மைகளை மிகுதியாக வழங்கும்.


 4) இயற்கை பாவ கிரகங்கள் ஆகிய செவ்வாய், சனி, சூரியன் ராகு மற்றும் கேதுக்கள் ஆறாமிடத்தில் நின்று இருக்கும்போது நன்மைகளையே அதிகம் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்.


  3) 6- 8 -12-ஆம் இடத்திற்கு அதிபதியாக வருகின்ற கிரகங்களுக்கு, திரிகோண ஸ்தானமான 5, 9  ஆம் ஆதிபத்தியம்

 இருக்குமானால் அவர்கள் நன்மையையே அதிகம் நல்க வேண்டியது ஆகிறார்கள்.


 4) 6- 8- 12ம் இட  

அதிபதிகளோடு இதர கிரகங்கள் சேரும் போது அந்த சேர்க்கையில் ஏதாவது வலுவான யோக அமைப்பு உருவாகுமானால் அந்த இதர கிரகங்கள் நன்மைகளையே அதிகம் வழங்குவார்கள்.


 5) 6-8-12 ஆம் இட அதிபதிகள் எந்த இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் அதை இயற்கைச் சுபக்கிரகமான வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது அந்த அதிபதிகள் அதன் தசை காலங்களில் நற்பலனை தந்து விடுகிறது.


 6) பகை வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கின்ற கிரகங்கள் ஸ்தான பலத்தாலும், இதர கிரகங்களின் நல்ல சேர்க்கை மற்றும் பார்வையாலும், நீசபங்க யோகம் போன்றவற்றாலும் பலப்பட்டு நன்மைகளை அதிகம் நல்கக்கூடியவர்களாக மாறிவிடுகின்றது.


 இவ்வாறு விதிகள் மற்றும் விதிவிலக்குகள் ஆகிய இரண்டையும் சேர்த்து பார்த்தே பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.


எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த ஒரு ஜாதகத்திலும் முழுக்க, முழுக்க அதிக நன்மையை மட்டும் வழங்குகின்ற கிரகம் என்று எதுவும் இருக்க முடியாது. அதே போல முழுக்க , முழுக்க அதிக கெடுதல் மட்டும் வழங்கும் கிரகம் என்று எதுவும் இருக்க முடியாது வேண்டுமென்றால் நன்மைகளை அதிகம் வழங்கும் கிரகம் மற்றும் தீமைகளை அதிகம் வழங்குகின்ற கிரகம் என்று தான் கிரகத்தினை வகைப்படுத்த முடியும்.


நன்மைகளை அதிகம் வழங்கும் கிரகங்களை "லக்கின யோகர்கள்" என்று கூறப்படுகின்றன. தீமையே அதிகம் நல்கும் கோள்களை 

"லக்கினப் பாவர்கள்" என்று கருதப்படுகிறது.


கிரகங்கள் அமைந்திருக்கின்ற விதங்களை பொருத்து லக்கின யோகர்கள் தீமைகளை அதிகம் வழங்க கூடியவர்களாகவும், லக்கினப் பாவர்கள் நன்மைகளை அதிக வழங்கக் கூடியவராகவும் மாறிவிடக்கூடும்.எனவே ஜாதகத்தில் எதையும் அறுதியிட்டு கூற முடியாது.


  இயற்கைப் பாபக் கிரகமாக சனி, செவ்வாய், சூரியன், ராகு  மற்றும் கேதுக்கள் இருக்கும் இடம் மற்றும் தொடர்பு பெறும் கிரகங்களை பொருத்தும் நன்மைகளை செய்து விடுவது உண்டு.


  இதே போல இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தான் பெற்ற மற்றும் தொடர்பு பெறும் ஸ்தானத்தை பொருத்தும் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களை பொருத்தும் கெடுதலை தந்து விடுவதும் உண்டு.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


       செல்

  9715189647

‌.  7402570899


My website

www.astroravichanransevvai.in


அன்புடன்

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.