Saturday 19 September 2020

ஜோதிட கேள்வி பதில்கள் (கேள்வியும் நானே பதிலும் நானே)

                


ஜோதிட கேள்வி-பதில்கள்

( கேள்வியும் நானே பதிலும் நானே ) by Astro Ravichandran Sevvai


கேள்வி (1)


இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள்  எந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்?


   செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  சாதக கட்டத்தில் சூரியன்(சிம்மம்) மற்றும் சந்திரன் (கடகம்) பகவானைத் தவிர ஏனைய கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியங்கள் உண்டு.


     குருபகவானுக்கு மீனம் மற்றும் தனுசு ஆகும்.


      சனி பகவானுக்கு மகரம் மற்றும் கும்பம்  ஆகும்.


     செவ்வாய் பகவானுக்கு மேஷம் மற்றும் விருச்சகம் ஆகும்.


     சுக்கிர பகவானுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ஆகும்.


    புதன் பகவானுக்கு மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.


     இவ்வாறு இரண்டு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் அதன் திசை காலங்களில் எந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்? என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகங்களில் ஒன்றாகும்.


    உங்கள் சந்தேகங்களை போக்குவதற்கு நான் தரும் பதில் இரண்டு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் எந்த ஆதிபத்தியதோடு அதிக தொடர்பு கொண்டுள்ளதோ அந்த ஆதிபத்திய பலனை முதலில் தரும்.


    தசை காலங்களில் அதிகமாக தொடர்பு கொண்டுள்ள  ஸ்தான ஆதிபத்திய பலனை 80% செய்யும். மீதம் 20 சதவீதம் மற்ற ஆதிபத்திய பலனை தருகிறது.


  உதாரணமாக மிதுன லக்னத்திற்கு புதன் பகவான் மூன்று மற்றும் ஆறாம்  இடத்திற்கு உரியவர் ஆவார். மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் அந்தஸ்து , வீரியம்,எழுத்து , கற்பனை சக்தி ,சகோதர ஸ்தானம்   போன்றவற்றை குறிக்கும் இடமாகும்.ஆறாம் இடம் என்பது ருன, ரோகம்,ஆளடிமை, கடன் மற்றும் வெற்றியைத் தரக்கூடிய இடமாகும்.


  மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால் எல்லா கிரகத்துக்கும் ஏழாம் இடத்திற்கு பார்வை உண்டு என்பதால் அது ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் மூன்றாம் இடத்தை விட ஆறாமிடத்தில் தொடர்பு கொண்டுள்ளது என்ற வகையில் ஆறாமிட பலன்களான கடன், பிணி மற்றும் எதிர்ப்பை அதன் தசை காலங்களில்  அதிகமாகவும், முதலிலும்  தரும். 


  மாறாக லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது 6-ஆம் இடத்தின் பலனை விட, மூன்றாம் இட பலன்களான கீர்த்தி, புகழ் அந்தஸ்து, சகோதர பலம் போன்றவற்றை அதிகமாகவும் முதலிலும் தரும்.


   மேலும் மேஷ லக்கினத்திற்கு புதன் பகவான் லக்கன பாவி மற்றும் பகை கிரகம் என்ற வகையில் ஆறாமிடத்தில் நின்று உச்சம் ,ஆட்சி மற்றும் முலதிரிகோணம் என்ற வகையில் பலம் பெறுவதை விட மூன்றாம் இடத்திலிருந்து ஆட்சிபெற்று நிற்பதே நல்லது.


  ஆறாமிடத்தில் புதன் மேற்கண்ட வகையில் பலம் பெற்று, லக்னாதிபதியான செவ்வாயும் பலமிழந்த சூழலில் அதன் தசை காலங்களில் அதிக இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.


 எந்தவகையிலும் ஒரு கிரகம் அதன் இரண்டு ஆதிபத்தியத்துடன் தொடர்பு கொள்ளவில்லை எனில் இரண்டு ஆதிபத்திய பலன்களையும் சமமாக அதன் தசைகளில் தரும்.


  இது ஒரு உதாரணம் மட்டுமே இதே வகையில் மற்ற கிரக ஆதிபத்திய பலன்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


  பொதுவாக இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஒன்று மறைவிட ஸ்தானமாகவும்(3,6,8,12), மற்றொன்று கோணம் (1,5,9) அல்லது கேந்திர ஸ்தானமாக (1,4,7,10)  வரும் போது அதில் மறைவு ஸ்தான அதிபதிகள் பலம் பெறாமல் ஏனைய கேந்திர மற்றும் கோணம் அதிபதி ஸ்தானம் பலம் பெறுவது நல்லது.அதன் தசை காலங்களில் நல்ல பலன்களை தரும்.


    அவ்வாறு மீறி மறைவு ஸ்தான அதிபதி பலம் பெற்று நிற்கும் பொழுது அதாவது வளர்பிறைச் சந்திரன் ,குரு, சுக்கிரன் மற்றும் தனித்த புதன் ஆகியவை தொடர்பு பெரும்பொழுது அந்த கிரகம்  சுபத்துவ தன்மையை அடைந்து ஸ்தான பலம் வலிமையடைந்து  அதன் தசா காலங்களில் அந்த ஸ்தானத்திற்கு உரிய கெடுதலான பலன்களை அதிகமாக தருகிறது.மாறாக பாவ கிரக தொடர்பு அல்லது நீசம் , அஸ்தமனம் பெற்று அந்த கிரக வலிமை குறைவாக பெறும்போது அந்த மறைவிட ஸ்தானம் வலுவிழந்து கெடு பலன்களை குறைவாக தருகிறது.


 மற்றொரு கேள்வி


ஒரு கிரகம் லக்கனத்திற்கு யோகராகவும், அதே நேரத்தில் பாதகாதிபதியாகவும் வரும்பொழுது அந்த கிரகமானது அதன் தசை காலங்களில் யோகத்தை தருமா? பாதகத்தை தருமா?


    ஒரு கிரகம் பாதகாதிபதியாகவும் அதே நேரத்தில் லக்கன யோகராகவும் வரக்கூடிய அமைப்பு ஸ்திர ராசிகளுக்கு மட்டுமே ஆகும்.


  ஸ்திர ராசிகள் எனப்படுவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகும். இந்த ராசிகளுக்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி ஆகும். அதே நேரத்தில் ஒன்பதாம் அதிபதி பெருங்கோணம் என்ற வகையில் இலக்கன யோகர் ஆவார்.


  எனவே ஒன்பதாம் அதிபதி திசையில் பாதகத்தை தருமா? சாதகருக்கு யோகத்தை தருமா ? என்பது எல்லோருடைய மனங்களிலும் எழ வேண்டிய கேள்வியாகும்.


  பொதுவாக பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருக்கும்போது அதிக கெடுபலனைத் தரும்.இன்னும் சொல்லப்போனால் பாதகாதிபதிகளைவிட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் அதன் தசைகளில் அதிக கெடுபலனை தரும்.


  பாதகாதிபதியினை பாவக்கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவை பார்க்கும்பொழுது அல்லது சேர்ந்து இருந்தாலும் அதனுடைய பாதகதன்மை மேலும் குறைவு அடைகிறது.


 பாதகாதிபதி நீசம், அஸ்தமனம் போன்ற வகையில் பலம் இழந்தால் அதன் பாதக தன்மை குறைந்தாலும் ஸ்தான அடிப்படையிலான யோகபலம் குறைந்துவிடும்.


  பொதுவாக பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் இல்லாமல் மற்ற இடங்களில் பலம் பெற்று நின்று இயற்கை சுப கிரகங்கள் பார்க்கப்படும் அமைப்பை பெரும்பொழுது யோகப் பலனைத் தருகிறது.


    ரிஷப லக்கினத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெறாமல் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பது  யோக பலனை தருகிறது.இதில் ஒரு விதிவிலக்காக பாவகிரகங்கள் நேர்வலு பெறக்கூடாது என்ற வகையில் நேரடியாக உச்சம், ஆட்சி பெறுதல் நல்லதல்ல.


  இதேபோல சிம்ம லக்னத்திற்கு பாதகாதிபதியான செவ்வாய் நான்கு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், ஒன்பதாம் இடத்தில் ஆட்சிபெற்று நிற்காமல், நான்காமிடத்தில் ஆட்சி பெற்று நிற்பது பாதக தன்மை குறையும். இதில் மறைந்திருக்கும் சூட்சும உண்மை என்னவென்றால் "பாதகாதிபதியான செவ்வாய் பாதக ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு எட்டாம் இடத்தில் மறைந்து ஆட்சி பெற்றிருப்பதால் அதன் தசை காலங்களில் பாதக தன்மை குறைந்து யோகராக செயல்படுகிறது" .மேலும் மற்றொரு ஜோதிட விதியான "பாபக்கிரகங்கள் கேந்திரத்தில் அமர்வது நல்லது தரும்" என்ற விதியும் பொருந்துகிறது


  விருச்சக லக்கினத்திற்கு பாதகாதிபதியாக சந்திரன் வருவதால் அது ஒரே ஆதிபத்தியம் பெற்ற கிரகம் என்பதால் பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இல்லாமல் இருத்தல் நல்லது. அதேநேரத்தில் அதனுடைய யோகம்  அமைப்பும் பங்கப்படும்.


  சந்திர பகவான் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்று நின்றாலும் அல்லது ஏழாம் இடத்தில் உச்சம் பெற்று நின்றாலும் அல்லது லக்கனத்தில் நீசம் பெற்று பௌர்ணமி யோகத்தில் அமைந்திருந்தாலும் அதன் பாதக தன்மையையும் தந்து யோக பலன்களையும் தருகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதால் பலம் இழப்பதும் நல்லதல்ல.


     கும்ப லக்கினத்திற்கு சுக்கிர பகவான் நான்கு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக செயல்படுகிறது. அதே நேரத்தில் பாதகாதிபதியாக சுக்கிரன் வருவதால் அது ஒன்பதாம் இடமான துலாத்தில் ஆட்சி பெறுவதைவிட பாதக ஸ்தானத்திற்கு மறைவிட ஸ்தானமான எட்டாம் இடத்தில் அதாவது லக்கனத்திற்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று நிற்கும் பொழுது பாதகதன்மை குறைந்து யோக பலனை தருகிறது.


   ஸ்திர ராசிகளுக்கு ஒன்பதாம் இட அதிபதி பாதகாதிபதியாகவும் மற்றும் யோகராகவும் செயல்படுகிறது. எனவே ஒன்பதாம் இட அதிபதி பலம் இழந்தால் பாதக தன்மை குறைவதோடு யோக பலனும் குறைந்துவிடுகிறது.

பலம் பெற்றால் பாதக தன்மை அதிகரித்து அதேநேரத்தில் யோகபலமும் அதிகரிக்கிறது. பாதகாதிபதி அதன் தசை காலம் முழுவதும் பாதக தன்மையினை  தந்து விடுவதில்லை.


  நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

‌‌   9715189647


  செல்

    7402570899

‌‌.     9715189647


                       



  அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


    My website.Click here

 www.astroravichandransevvai.in

ஜோதிட நுணுக்கங்கள்

                             


     ஜோதிட நுணுக்கங்கள் 


     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு ஜாதகத்தில் பாவ கிரகங்களாகவே இருந்தாலும் திரிகோணாதிபதிகளான ஒன்று , ஐந்து மற்றும் ஒன்பதுக்கு  உடைய நட்சத்திர சாரம் பெற்றிருக்கும்போது அதன் திசை காலங்களில் யோக பலனை சாதகருக்கு தந்து விடுகிறது.


  அந்த வகையில் தான் ஒரு கிரகம் பாபக் கிரகமாக இருந்தாலும் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் நிற்கும்பொழுது அவை பெரும்பாலும் கோண அதிபதிகள் உடைய நட்சத்திர சாரத்தில் கட்டாயம்  நிற்க்கும் என்ற வகையில்  அந்த ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் யோக பலனை தரும் என்றார்கள்.


  உதாரணமாக மீன ராசியாக எடுத்துக்கொண்டால் மூன்றாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் லக்னாதிபதி குருவுக்கு யோகத்தை தரக்கூடிய நட்பு கிரகங்களான சூரியன்,  ஐந்தாமிடம் அதிபதியான சந்திரன்  மற்றும் ஒன்பதாமிட அதிபதியான செவ்வாயின் நட்சத்திரக் காலில் நிற்கும் . (அதாவது கார்த்திகை ரோகினி மற்றும் மிருகசீரிடம்).


   இதேபோல பதினொன்றாம் இடத்தில் நிற்கும் கிரகங்கள் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகங்களான சூரியன் 5-க்குடைய சந்திரன் மற்றும் 9-க்குடைய செவ்வாய் நட்சத்திர காலில் இருக்கும்.( அதாவது உத்திராடம் ,திருவோணம் அவிட்டம்).


   ஒரு ஜாதகருக்கு எந்த தசை மிகுந்த யோக பலனைத்தரும் என்ற பொதுவான வினாவை எழுப்பினால் ஜோதிடர்களாகிய நாம்  அனைவரும் தரக்கூடிய பதில் கோணாதிபதிகள் மற்றும் கேந்திர அதிபதிகள் என்பதே ஆகும்.


   இதில் கேந்திராதிபதி களைவிட கோண அதிபதிகள் மிகுந்த யோகத்தை தரும் என்பதன்  உள் அர்த்தத்தை கவனித்துப் பார்த்தால் கோணத்தில் நிற்கும் கிரகங்களின் நட்சத்திர சாரம் ஒரே நட்சத்திர சாரம் உடையதாக இருக்கும். 


   உதாரணமாக ஒருவர் மேஷ ராசியில் ஜெனித்து இருப்பாராயின் அதன் திரிகோண ஸ்தானங்களாவன மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகும்.


  மேஷத்தின் நட்சத்திர பாதம்

 அசுபதி முழுவதும் (கேது பகவான்)

பரணி முழுவதும் (சுக்கிரன் பகவான்)

கார்த்திகை முதல் பாதம் (சூரியன் பகவான்)


சிம்மத்தில் நட்சத்திர பாதம்

 மகம் முழுவதும் (கேது பகவான்)

பூரம் முழுவதும் (சுக்கிரன் பகவான்)

உத்ராடம் முதல் பாதம் (சூரியன் பகவான்)


 தனுசு ராசி நட்சத்திர பாதம்.

  மூலம் முழுவதும் (கேது பகவான்)

பூராடம் முழுவதும் (சுக்கிரன் பகவான்)

உத்ராடம் முதல் பாதம் (சூரியன் பகவான்)


  ஆக மூன்று திரிகோணாதிபதி ஸ்தானங்களும் கேது, சுக்கிரன் மற்றும் சூரியனுடைய நட்சத்திர பாதங்களையே கொண்டுள்ளது.


 இதுவே கோண அதிபதிகள் யோகங்களை தரவல்லது என்பதன் சூட்சும உண்மைகள் ஆகும்.


  கேந்திராதிபதிகள் இயற்கை சுப கிரகங்களாக இருக்கும்பொழுது அது கேந்திர ஸ்தானமான 

1, 4, 7, 10 அமையாமல் மறைவிடங்களில் அல்லது கோணங்களில் அமரும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகனுக்கு தருகிறது.


   இயற்கை சுப கிரகங்களாக கேந்திராதிபதிகள் இருந்து அது கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பலம் பெற கேந்திராதிபத்திய தோஷத்தை  தந்து விடுகிறது. எனவே அவை தரும் பலன்கள் மட்டுப்படுத்தப்படுகிறது.


  பாவ கிரகங்கள் கேந்திரங்களில் அமரும்பொழுது மிகுந்த யோக பலனை தந்து விடுகிறது.


   மேலும் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது.


  ஒரு கிரகம் எந்த நிலையில் பலவீனப்பட்டாலும் அதாவது அஸ்தமனம்,மறைவிடம் ,

பகை ,பாவ கிரக தொடர்பு போன்ற வகைகளில் பலவீனப்பட்டு நிற்கும் கிரகங்களை வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பகவான் தொடர்பு கொள்ள அந்த கிரகங்களின் பாவத்துவ தன்மை மாறி சுபத்துவ தன்மையை அடைகிறது.


  கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பது  ஆட்சிக்கு நிகரான பலன்களை ஜாதகருக்கு  தாங்கள் சொந்தவீடு வழியாக அதன் பாபத்துவம் மற்றும் சுபத்துவ தன்மைக்கு ஏற்ப தனது தசை காலங்களில் செய்கிறது.


  சூரியனை குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கி வரும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது. அவ்வாறு அஸ்தமனம் செய்யும் கிரகத்தின் பலனை சூரியன் தனது தசை காலங்களில் செய்கிறது.


  முழுமதி சந்திரனின் பார்வை பலனானது சமசப்தமான ஏழாம் வீட்டில் விழும்போது அதன் ஒளி சிதறல் ஆறு மற்றும் எட்டாம் வீடுகளிலும் விழும் என்பதால் சந்திரனுக்கு 6,7,8 ல் அமரும் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், மற்றும் தனித்த புதன் மிகுந்த யோக பலனை தருகிறது.பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பினும் அதன் பாவ தன்மை நீங்கி அதன் தசை காலங்களில் நல்ல பலனை தந்து விடுகிறது.


  பொதுவாக இயற்கை சுப கிரகமான குரு பகவானுக்கு 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்கிறது.குரு பார்க்கும் ஸ்தானங்களும் மற்றும் அதில் அமர்ந்து இருக்கும் கிரகங்களும் சுமத்தும் அடைகிறது என்பது பொதுவான விதியாகும்.


  சில நேரங்களில் குரு பகவான் பார்வையானது மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் விழுந்து அந்த ஸ்தானத்தையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்தாமல் இருந்து விடுவது உண்டு.அதன் தசை காலங்களில் யோக பலனை தராமல் போய்விடுகிறது .


காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும்போது நாம் கிரகங்கள் பார்வையினை பாகை அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் அதன் உண்மை புலப்படுகிறது.


   மீன வீட்டில் 28 டிகிரிக்கு பிறகு அமரும் குரு பகவான் கடக வீட்டில் முதல் மூன்று டிகிரிக்குள் அமரும் ராகு பகவானை பார்வை செய்வது இல்லை. இங்கு குரு பார்வை ஐந்தாம் வீட்டில் விழுவதைவிட மிகுதியாக ஆறாம் வீட்டினையே அதிக பார்வை செய்கிறது.


 இதனடிப்படையில் ஏனைய பார்வை ஸ்தானமான ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களுக்குப் பதிலாக எட்டு மற்றும் பத்தாம் இடங்களுக்கு மிகுதியாக குருபகவான் பார்வை செய்கிறது.


    இயற்கை சுப கிரகங்கள் பாவ கிரகங்கள் உடன் இணையும் பொழுது சுபக்கிரகங்கள் தனது சுபத்தன்மை இழக்கிறது. பாவ கிரகங்கள் சுபத்தன்மை அடைகிறது.

இந்த வகையில் குரு சனி இணைவு குருவால் சனிபகவான் சுபத்துவம் அடைகிறது.


  உச்சம் பெற்ற கிரகங்கள் நீசம் பெற்ற கிரகங்கள் உடன் இணையும்போது உச்சம் பெற்ற கிரகங்கள் தனது உச்ச ஒளியை நீச்சம் பெற்ற கிரகங்களுக்கு தந்து அதன் ஒளி அளவை இழுக்கிறது.


  மீன வீட்டில் சுக்ரன், புதன் இணைவு நீசம் பெற்ற புதன் உச்ச சுக்கிரன் ஒளியைப் பெற்று அதை திசை காலங்களில் சுக்கிரனை விட மிகுந்த யோக பலனை தருகிறது.


   இயற்கை பாவ கிரகங்கள் அல்லது அவயோக கிரகங்கள் உபஜெய ஸ்தானமாகிய 3,6,10,11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் நிற்க அதன் தசை காலங்களில் நல்ல பலன்களை தருகிறது.


  ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அதன் திசை காலங்களில் யோக பலனை தருகிறது.


   ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் 22 பாகைக்குள் இருப்பினும் ஒரே வீட்டில் இருப்பதாக கருத முடியாது.வெவ்வேறு வீட்டில் இருப்பினும் 8 அல்லது 13 பாகைக்குள் இரு கிரகங்கள் இருப்பின்  ஒரே வீட்டில் இருப்பதாக கருதி பலன் எடுக்கப்பட வேண்டும்.


  நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


  செல்

     9715189647

      7402570899


                           



   அன்புடன் 

சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


My website

 www.astroravichandransevvai.in

அதிக சுபத்துவம் ஆன கிரகத்தை கண்டறிவது எப்படி?

 

                               


அதிக சுபத்துவம் ஆன கிரகத்தினை கண்டறிவது எப்படி?


 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    வேதியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று ஆசிரியப் பணியிலும், இலக்கியத்தையும் மற்றும் கதை புத்தகங்களையும் தேடி விரும்பிப் படிக்கும்  ஆர்வம் உடைய எனக்கு எப்படி சோதிடத்தின் மீது ஆர்வம் வந்தது என்பதை ஆராய்வதன் வழியாகவே இந்த சுபத்துவமான தன்மை தரும் பலன்களை அறிந்து கொள்ள இயன்றது.


   இரசாயன ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய என்னை அவ்வழி தவிர்த்து கிரக ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது எவ்வாறு என ஆய்வு செய்ய மேற்கண்ட சுபத்துவதன்மைதான் காரணம் என்பதை எண்ணும்போது கிரகங்கள் நடத்தும் கோளாட்டத்தை எண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை.


  மீன் லக்கனம் மற்றும் மீன் ராசியில் பிறந்த என்னை ஆசிரியராகவும் மற்றும் சோதிடராகவும் மாற்றியதில் வியப்பு‌ஏதும் இல்லை.


  மீன லக்கனத்தில் வளர்பிறைக்கு அருகில் அமைந்த சந்திரன் ஏழாம் பார்வையாக கன்னியில் உச்சம் பெற்ற புதனை பார்வை செய்து அதிக சுபத்துவம் பெற்ற கிரகமாக புதன் பகவான் மாறியதன் விளைவாக இந்தத் துறையில் என்னை அறியாமல் எனக்கு மிகுந்த ஈடுபாடு வந்தது. தற்பொழுது சோதிடத்தை தவிர வேறு எந்த நூல்களையும் படிப்பதில்லை என்ற நிலையில் என்னை ஆழ்த்தியது. கூடுதலாக இலக்கனத்தில் ஆட்சி பெற்ற குரு பகவானும் அமைந்தது புதன் பகவானை அதிக சுபத்துவபடுத்தி நடப்பு சந்திர திசையில் சமூக ஊடகங்களின் மூலம் ‌புகழ்பெற்று வலம் வரும் சிறந்த ஜோதிடராக என்னை ஆழ்த்தியதில் வியப்பு ஏதுமில்லை.


   அதேநேரத்தில் ஏழாமிடத்தில் கேந்திர ஸ்தானத்தில் பாதக ஸ்தானத்தில்  அமர்ந்த புதன் பகவானை பங்கப்படாத குருவின் பார்வை பெற்ற சனி பகவான் பார்ப்பதும், லக்கன யோகரான தன மற்றும் பாக்கியாதிபதியுமான செவ்வாய் பகவான் மிதுனத்தில் அமர்ந்து நான்காம் பார்வையாக பார்ப்பதாலும் 

கேந்திராதிபத்திய தோஷத்தையும்,

பாதகத்தன்மையையும் மட்டுபடுத்தியது.


  லக்கனாதிபதியும் மற்றும் தனகாரகனுமான குருபகவான் ஆட்சி நிலையில் அமர்ந்து லக்கனத்தில் திக் பலம் பெற்று தன் ,பாக்கிய மற்றும் லாபாதிபதிகள் தொடர்பு மஹாதனயோகத்தினை சந்திரன் மற்றும் செவ்வாய் தசையில் தரும்.

 

 ஜாதகத்தில் குரு,சந்திரன் புதன் பகவான் வலுத்து இருப்பதால் கணிதம், கணிப்பொறி இயக்கும் ஆர்வம்,தமிழ் மீது ஆர்வம், ஆசிரியர் தொழில், பட்டிமன்றம் பேச்சாளர் போன்றவை சார்ந்த துறையில் ஈடுபாடு ஆகும்.


  இதே வகையில் இதே வகையில் ஒரு ஜாதகத்தில் அதிகமான சுபத்துவம் பெற்ற கிரகத்தை கண்டறிய கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றபட வேண்டும்.


  1) வளர்பிறை சந்திரனின் பார்வை பெற்ற கிரகம்,


  2)   பங்கப்படாத குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன்  மற்றும் தனித்த புதன் ஆகியவை தொடர்பு பெற்ற கிரகமானது அதிக சுபத்துவம் பெறும்.


  சுபத்துவம் ஆன கிரகம் என்பது கேந்திர மற்றும் கோணத்தில் தான் கிரகங்கள் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதல்ல. மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் மேற்கண்ட குறிப்பிட்ட தொடர்பு அமையப் பெற்ற கிரகங்கள் சுபத்துவம் பெற்ற கிரகங்கள் ஆகும். இதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.


   இயற்கை சுப கிரகங்களான வளர்பிறைச் சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றுடன் பாவியான சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் ,அஸ்தமனம் ,வக்ரம் மற்றும் மறைவிடங்களில் ஏறி நின்றாலும் வளர்பிறைச் சந்திரன் குரு சுக்கிரன், தனித்த புதன் தொடர்பு பெற்ற கிரகங்கள் சுபத்துவ தன்மையினை அடையும்.


   நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647

      செல்

    9715189647

‌‌.     7402570899


                  



   அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(Teacher & Astro Researcher),

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My website

www.astroravichandransevvai.in


.......

சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனின் பங்கு.

                    


 சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனின் பங்கு .


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      ஒருவரது ஜாதக கட்டத்தில் சுக்கிர பகவானை பலமாக பெற்றவர்கள் ஆடம்பரப் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கும் யோகம் பெற்றவர்களாகவும் ,ஆடம்பர வாழ்வினை மேற்கொள்பவர் களாகவும் இருப்பார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உயர்வான அந்தஸ்து பெற்றவர்களாக திகழ்வார்கள். ஆனால் மனதளவில் திருப்தியற்றவர்களாக இருப்பார்கள்.


மாளவ்யா யோகம் 


      பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்யா யோகமானது சுக்கிர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர ஸ்தானமான 1,4,7 ,10-ஆம் இடங்களில் நிற்க சாதகருக்கு மாளவ்யா யோகத்தை வழங்குகிறது


         * சுக்கிர பகவான் கலைக்காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் சுக்கிரன் பலம் பெற்று நின்று அவை தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று  அந்தத் திசை நடப்பில் உள்ள காலங்களில் (அதாவது சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி அல்லது பத்தாம் அதிபதி திசை)

" கனவு தொழிற்சாலை" என அழைக்கப்படும் சினிமா, தொலைக்காட்சி, போன்றவற்றில் நடிப்பு நடனம் தொகுப்பாளினி(ளர்) மற்றும் சினிமா சார்ந்த ஏதாவது தொழிலில் பணம் சம்பாதித்து புகழ் என்னும் உச்சி வானில் கொடி கட்டி பறப்பார்.


         * சுக்கிர பகவானை பலமாக பெற்றவர்கள் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், மற்றவர்களை  அழகுபடுத்துவதிலும் சிறந்தந்த ரசனை உடையவர்களாக இருப்பார்கள். எனவே முக அலங்காரம், சிகை அலங்காரம், மெஹந்தி போடுதல், மற்றும் உடை அலங்காரம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள் .மேற்கண்ட வகையிலான தொழிலை உண்டாக்கி பணம் ஈட்டுவார்கள். சினிமாவில் சிறந்த மேக்கப் மேன் அல்லது உமன் ஆக திகழ்வார்கள்.


       * பலமடைந்த சுக்கிர பகவானை தனது ஜாதகத்தில் கொண்டவர்கள் மார்க்கெட்டுக்கு வரும் எந்த ஒரு புதிய மாடல்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதிலும் அதனை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதிலும் மற்றும் அவற்றினை வாங்கிச் சேர்ப்பதிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எனவே இது போன்றவர்கள் புதிய மாடலை அறிமுகம் செய்யும் நபராக மாறி யூடியூப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றில்

 நிறைய பொருள் ஈட்டுவார்கள்.


        * நுண்ணிய கைவேலைப்பாடுகளான  கூடை முடைதல், பாய் பின்னுதல், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய எம்பிராய்டிங், வண்ணவண்ண கை வேலைப்பாட்டுடன் கூடிய பூங்கொத்துகள் போன்றவற்றில் சிறந்து விளங்க கூடிய தன்மை ஜாதகத்தில் பலம் அடைந்த சுக்கிரனால் ஏற்பட்டு இதன்மூலம் பொருளீட்டி சொகுசு வாழ்க்கையை அடைவார்.


        * நுண்கலைகளான சிற்பம் வடித்தல், சிலை செய்தல், ஓவியம் வரைதல் , திரைச்சீலைகள் மற்றும் சிலைகளைக் கொண்டு வீடு மற்றும் மேடைகளை அலங்கரித்தல் போன்றவை சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். இவை மட்டுமில்லாமல் சினிமாவில் புகழ்பெற்ற  ஆர்ட் டைரக்டர்களாகவும் சிறந்து விளங்குவார்கள்.


      * சுக்கிரபகவான் நடன மற்றும் நாட்டிய காரகர் என்பதால் ஒருவர் பரத நாட்டிய கலைஞராகவும், சினிமாவில் நடன கலைஞர்களாகவும் சிறந்து விளங்கி பொருளீட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்வார்.


      * சுக்கிரபகவான் வாகன காரகர் ஆவார். ஆதலால் சுக்கிரன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய சாரம் மற்றும்  இயற்கை சுப கிரகங்கள் தொடர்புபட்டு நிற்க பல வாகனங்களுக்கு முதலாளியாக திகழ்வார். பேருந்து இயக்கும் முதலாளியாகவும் மற்றும் லாரி வைத்து தொழில் நடத்தும் முதலாளி, ட்ராவல் ஏஜென்சி வைத்து நடத்துபவராக இருப்பார்.


   * மாறாக சுக்கிரபகவான் பலமடைந்து பாவத்துவ அமைப்பு பெற்ற நிலையில் வாகனங்களை ஓட்டும் டிரைவராகவும் மற்றும் அந்த வாகனங்களை சரிபார்க்கும் மெக்கானிக்கராகவும் விளங்குவார்.


         * சுக்கிர பகவானை சுபத்துவமான நிலையில் பெற்றவர்கள் விதவிதமாக சாப்பிடும் ஆர்வம் உள்ளவர்களாகவும், உணவகங்களை நடத்தும் முதலாளியாகவும் திகழ வைப்பார்.


       * மாறாக சுக்கிரன் பாவ தொடர்பு பெற்று அதன் வலிமை நிலையின் அடிப்படையில் குறைவான பலம் பெற்று திகழும்போது உணவகங்களில் வேலை பார்க்கும் நபராகவும் மற்றும் சமையல் கலை, வல்லுநராகவும் விளங்குவார்.


        * சுக்கிர பகவான் ஆபரணகாரகன் என்பதால் பலமாக சுக்கிர பகவானை பெற்றவர்கள் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றை விற்பனை செய்யும் ஜூவல்லரி நகை கடை நடத்தும் முதலாளியாக புகழ்பெற்று விளங்குவார்கள்.


       * வளையல், பொட்டு பாசிகள் போன்றவற்றில் விதவிதமாக அணியும் ஆசை உடையவர்களாகவும் ,

ஒரே மேட்சிங்காக தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். இது போன்ற ஆசை கொண்ட நபர்கள் பேன்சி ஸ்டோர் ஜவுளி கடை வைத்து நடத்தும் முதலாளிகளாகவும் திகழ்வார்கள்.


       * சுக்கிர பகவான் களத்திர காரகன் என்பதால் ஒருவருக்கு விரும்பும் வகையில் நல்ல மணவாழ்க்கை அமைய சுக்கிர பகவானின் அருளாசி தேவைப்படுகிறது. பலமான சுக்கிரனை பெற்றவர்கள் மனைவி வழியில் சொகுசு வாழ்க்கையினை பெறுவார்கள்.


         * சுக்கிர பகவான் கொடுக்கல்- வாங்கல் செய்வதற்கு உரியவர் என்பதால் பைனான்ஸ், வட்டிக்கடை மற்றும் சிட்பண்ட்ஸ் வைத்து நடத்தும் முதலாளிகளாகவும் திகழ்வார்கள்.


      * சுக்கிர பகவானை பலமான அமைப்பு பெற்றவர்கள் இனையத்தை அதிகம் பயன்படுத்தும் நபராகவும், கணினியை இயக்கும் அறிவு பெற்றவராகவும் திகழ்வார்கள். ஆன்லைன் வர்த்தகர்களாகவும், சமூக ஊடங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் விளங்குவார்கள்.


         * சுக்கிரபகவான் ஆனவர் சாதக கட்டத்தில்

காமகாரகன் செவ்வாய் பகவான் மற்றும் பாவிகளான சனி, ராகு போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது இளைஞர்களிடம் காதல் மற்றும் கற்பனை உணர்வுகளை நிரம்பப் பெற்று காதல் கடி மணம் புரிபவர்களாகவும்,

மாறுபட்ட காம எண்ணத்தால் சிலரை தடம் மாறி செல்பவர்களாகவும் கிரக பலன்களால் மாற்றம் அடைகிறது.


       * சாதக கட்டத்தில் சுக்கிர பகவான் நான்காம் இடமும் மற்றும் அதன் அதிபதியும் பலம் பெற்று திகழ ஆடம்பரமான பங்களா போன்ற வீடுகளை கட்டி அழகு பார்ப்பார்களாக விளங்குவார்.


      * வீடுகளில் திரைச்சீலைகள், கம்பளங்கள், கலை நுணுக்கம் உடைய படங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை அழகாகவும் மற்றும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தவர்களாக திகழ்வதற்கு சுக்கிர பகவானே காரணமாகும்.


 இவ்வாறாக மானிட குலத்திற்கு சொகுசு வாழ்க்கையை தருவதில் நவக்கிரங்களில் சுக்கிர பகவானே முழுமுதல் காரகர் ஆவார்.


 நன்றி.


("ஜோதிட அரசு"- ஜனவரி-2020- மாத இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை ஆகும்.)


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                          


   அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

          M.Sc,M.A,BEd

(Teacher & Astrologer)

Omsakthi online astro consulting centre,

Karambakkudi,Pudukkottai District.


வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


     செல்

9715189647

  7402570899


My website


www.astroravichandransevvai.in