சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-சாதக ஆய்வு
கிரகங்கள் படுத்தும் பாடு-(62)
சினிமாவில் சாதித்தவர்கள்-(3)
சாதரணமான மனிதர்களையும் ,சரித்திரம் போற்றும் நாயகர்களாக மாற்றிய பங்கு கிரகங்களுக்கு உண்டு என்பதை சுட்டி காட்டவே இப்பதிவை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.
இன்று சாதரண நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய இவரது வாழ்க்கையை கிரகங்கள் நடத்தும் கோளாட்டத்தால் மக்கள் போற்றும் மகத்தான சூப்பர் ஸ்டாராக மாற்றியது.
1975-ல் "அபூர்வ ராகங்கள்"-திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசித்து இன்று 41-வருடங்களாக திரை துறையில் இன்றைய இளம் நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறார்.
இவரது புகழை சொல்லிக்கொணாடோ போகலாம்.ஆனால் இவரை இந்த நிலைக்கு உயர்த்திய கிரக நிலைகளை பற்றி பார்ப்போம்.
கிரகநிலை
சிம்ம லக்கனம்
மகர ராசி
விஷ்ணுவின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம்
1-ல் கேது
2-ல் சனி
4-ல் சூரியன்
5-ல் புததன்,சுக்கிரன்
6-ல் செவ்வாய்,சந்திரன்
7-ல் குரு,ராகு
2-ல் சனி
4-ல் சூரியன்
5-ல் புததன்,சுக்கிரன்
6-ல் செவ்வாய்,சந்திரன்
7-ல் குரு,ராகு
இவருக்கு சிம்ம லக்கனம் என்பதால் யாருக்கு அடிபணியாமல் தன் மனதுக்கு பட்டதை துணிச்சலாக பேசக்கூடியவர்.மேலும் லக்கனத்தில் ஞானக்காரகன் கேது இருந்து பூர்வபுண்ணிய குருவின் பார்வை பெறுவதால் ஆன்மீக நாட்டத்தை வழங்கியது.
அதே நேரத்தில் லக்கனத்தில் கேது ,மற்றும் ஏழாம் இடத்தில் ராகு பகவான் இருந்து காலசர்ப்ப யோகத்தை வழங்கியதால் முப்பத்தொரு வயது வரை சோதனையும் அதற்கு மேல் அரிய பல சாதனைகளையையும் செய்ய வைத்தது.
திரை துறையில் சாதிக்க
இவருக்கு கலைக்காரகனான சுக்கிர பகவானும் கீர்த்தி மற்றும் புகழைத்தரக்கூடிய சகாயஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தான அதிபதியாக இருந்து வாக்கு மற்றும் லாப ஸ்தான அதிபதியும் வித்தைக்காரகனான புதன் பகவானோடு லக்கனத்திற்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அவர் செய்த பூர்வபுண்ணிய பலத்தினால் திரைத்துறையில் சாதிக்க முடிந்தது.
ஒருவர் திரைத்துறையில் சாதிக்கவேண்டுமாயின் புதன் மற்றும் சுக்கிரன் பலம்பெற வேண்டும் என்ற கருத்து எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது பார்த்தீர்களா?
மேலும்.திரைதுறையில் இருந்துகொண்டு ஆன்மீகவாதியாகவும் மாறியதற்கு காரணம் ராசிக்கு தர்மாதியான புதனும் மற்றும் கர்மாதிபதியான சுக்கிரனும் இணைந்து தர்ம-கர்மாதிபதியோகத்தை அளிக்கிறது.இதனால் இவர் மக்கள்போற்றும் மகத்தான காதாநாயகர் ஆனார்.இவர் சினிமாவில் முகம் காட்டினாலே போதும் ரசிகர்களிடம் ஆராவரத்தை பார்த்திருப்பீர்கள்.இவை அனைத்தும் தர்ம-கர்மாதிபதி யோகத்தால்தான் ஆகும்.
இந்த இணைவு ஐந்தாம் இடத்தில் இருந்ததால்தான் இவரிடம் மக்களை சுண்டி இழுக்கும் வசிய சக்தியைப்பெற்றார்.
புதன் மற்றும் சுக்கிரன் பலப்பட்டதைப்போலவே மூன்று மற்றும் ஒன்பதாம் இடமும் பலப்பட்டதே திரை துறையில் ஜொலிக்க காரணம் எனும் கருத்தை இவரது சாதகம் வாயிலாக நாம் எடுத்துக்கொள்வோம்.
ஆணையிடும் அதிகாரம்
இவர் சிம்ம லக்கனம் அதன் அதிபதியானது தைரியகாரகன் செவ்வாய் வீட்டில் உள்ளார்.செவ்வாயே மகர வீட்டில் அதாவது எதிரிகளை வெல்லக்கூடிய ஆறாம் இடத்தில் உச்சம்பெற்று சந்திரனுடன் இணைந்து "சசி மங்களயோகத்தை" பெறாறுள்ளார்.இதனால்தான் இவரது ஒரு வார்த்தைக்காக அதாவது அரசியலிலுக்கு வருவாரா?என எல்லா அரசியல் தலைவர்களும் பயத்தோடு காத்துநின்றனர்.மக்களும் ஆர்வத்தோடு வருவார் என எதிர்பார்த்து நிற்கவைத்தது அவரது கிரக அமைப்பே ஆகும்.
ஆனால் இவரை பதவிக்கு ஆசைப்படாமல் உதவி செய்ய ஆசைப்படுபவராக மாற்றியது சந்திரமங்கள யோகம்தான் ஆகும்.இவருக்கு நல்ல கற்ற நல்ல மனைவியை தந்ததும் இதுவே காரணமாகும்.
சப்தமஸ்தானமான ஏழாம் இடத்தில் ராகு அமர்ந்து காதல் கலப்புமணத்தை இவருக்கு தந்ததோடு மேலும் புத்திரகாரகன் குருவும் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் இவரது மகளுக்கும் காதல் கலப்பு மணத்தை தந்தது.
புத்திரஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் இணைவு இவரது புத்திரத்தையும் சினிமாவில் நுழைந்து புகழ் பெறும் யோகத்தை வழங்கியது.
ராஜயோகம்
பணிரெண்டாம் அதிபதி சந்திரன் ஆறாம் இடத்தில் அமர்ந்து "கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்"எனும் விபரீதராஜயோகத்தை வழங்கியது.இதனால் எல்லா செல்வ வளங்களோடும் நிறைவாக வாழவைத்தது.
எனவே எந்த ஒரு மனிதனும் திரைத்துறையில் சாதிக்கவேண்டுமாயின் அதற்குரிய கிரக அமைப்புகள் இல்லாமல் இயலாது.
.............நன்றி தொடரும்
இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொறுவருக்கும் ஏதாவது அமைப்பை கடவுள் அளித்திருப்பார்.ஜெனிக்கும்போது அவரது சாதக கட்டத்தில் உள்ள கிரகநிலை கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம்.தங்களது சாதக அமைப்பை இதுபோல ஆய்வு செய்துபோன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் கட்டாயம் உண்டு தொடர்புகொள்ளவும்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
வாட்ஸ்அப் எண்;
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்க தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது இமெயிலிலெ மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளை பெறலாம் )
My Email
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment