Monday, 6 March 2017

யாருக்கு பயங்கரமான கனவுகள் வரும் ?

யாருக்கு பயங்கரமான கனவுகள் வரும் ?


                                                  கிரகங்கள் படுத்தும் பாடு-

                                      செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
கனவுகள் ஏன் வருகிறது ? யாருக்கு அதிகமாக வருகிறது ? -உளவியல் அடிப்படையில் முதலில் ஆராய்வோம்.

                             கனவு என்பது மனதின் நிறைவேறாத ஆசையின் வெளிபாடு ஆகும்.
                             மனம் போடும் கூச்சலே கனவு ஆகும்.பகலில் நம் மனதிற்கு எது தொடர்பான வேலைகள் கொடுக்கிறோமோ , அந்த வேலைகளில் மனம் செலுத்தும் தீவிரமான ஈடுபாடும் அதில் அவர்கள் சந்திக்கும் சம்பவங்களும் சிலருக்கு இரவில் கனவாக வந்து தொல்லை தரும்.

                                சில நேரங்களில் நாம் பார்க்கும் மற்றும் படிக்கும் சம்பவங்களில் அதிகமாக ஒன்டிப்போவதால் (involvement ) அதன் வெளிப்பாடும் கனவுகளாக வந்து தொல்லை தரும்.

                              சில நேரங்களில் தமது உயர்நம்பிக்கை (superiority complex) மற்றும் தாழ்வுமனப்பான்மை (inferiority)
இதன் பலனாகவும் இரவில் கனவுகளாக வந்து தொல்லை தருகிறது.


                                ஒன்று   கனவில் ஒரு மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக எண்ணிக்கொள்கிறான்.அங்கு அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது.அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது.இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி கொள்கிறான்.

                                     மற்றொன்று  சில நேரங்களில் தன்னை தாழ்வுபடுத்திக்கொண்டு தன்னை யாரோ துரத்துவதுபோலவும் ,தன்னை துன்பப்படுத்துவதுபோலவும் மற்றும் எதனையோ ஒன்றை இழந்ததை போலவும் எண்ணி தன்னை துன்பப்படுத்திக்கொண்டு உறக்கத்திலிருந்து அலறியபடியே எழுந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

                                     கனவுகள் என்பது ஒரு தனி உலகம் ஆகும்.இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் நடக்கவிருப்பதை முன்னரே கனவாக வந்து காட்டும்.இது ஒரு சில அறிஞர்கள் ,கவிஞர்கள்,மருத்துவர்கள் ,தத்துவ ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் கனவில் சிந்தனைகள் தோன்றி அதன் விளைவாக பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கிறது.

                                   சிலரது கனவில் பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் முன்னரே அவர்களது கனவில் வந்து காட்டியிருக்கும்.பிறகு அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ததைப்போலவே நடப்பதை கண்டு பேரதிர்ச்சி கொள்வார்கள்.

                                 சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் வராத புதிர்களுக்கான விடைகள்     சிலரது கனவில் விடையாக கிடைத்திருக்கிறது.

                                     விலங்கு செல்லின் உட்கருவில் உள்ள பாரம்பரிய பண்பிற்கு காரணமான ஜீன்களின் ஒன்றான   DNA -வின் அமைப்பை பலமுறை வரைந்து தூக்கி எறிந்த வாட்சனுக்கு அவரது கனவில் இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொள்வதுபோல கனவுகள் தோன்றி உடனே எழுந்து அந்த டி.என்.ஏ வின் வடிவத்தை வரைநது அதன் விளைவாக நோபல் பரிசும் பெற்றார்.

                          அதிகாலையில் காணும் கனவு அப்படியே பலிக்கும் என்பர்.எனவே கனவுகளில் நல்ல கனவும் உண்டு.தீய கனவும் உண்டு.
சில நேரங்களில் ஒரு மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும்.நாம் மனதிற்கு எதனை கொடுக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வருகிறது.பேய் படங்களை பார்த்துவிட்டு படுக்க செல்லும் இளைஞனின் கனவில் பேய் வந்து பயமுறுத்துவதும் ,காதல் மற்றும் காமசுகம் ததும்பும் படங்களை பார்த்துவிட்டு செல்லும் இளைஞனின் கனவில் அழகிய பெண்களின் அருகில் செல்வதுபோல கனவு காண்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் ஆகும்.

                         எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ ' அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.மனதிற்கு யோகா ,மூச்சுபயிற்ச்சி  மற்றும் தியானம் செய்து மனதினை பக்குவப்படுத்திக்கொள்வபர்களது உறக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை.

                         கனவுகள் ஏன் வருகிறது ?  யாருக்கு அதிகம் வருகிறது ?-ஜோதிடத்தில் இதற்கான விளக்கங்களை ஆராய்வோம்.

                       ஒரு மனிதனை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் லக்கனமும் அதன் அதிபதியும் ஆகும்.இவ்விரண்டும் பலவீனப்பட்டாலோ மற்றும் மனநிலைக்காரகன் எனப்படும் சந்திரபகவான் பலவீனமடைந்து இருந்தாலோ அவர்களது இரவில் கனவுகள் வந்து தொல்லைப்படுத்தும்.

                        ஒருவனது லக்கனத்தில் விரயஸ்தானாதிபதி இருந்தாலும் அல்லது லக்கனாதிபதி அஸ்தமனமாக இருந்தாலோ அல்லது லக்கனாதிபதி 6,8,12  போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அவர்களுக்கு கனவுகள் வரும்.

                              மனநிலைக்காரகன் சந்திரபகவான் அரவுகளான ராகு ,கேதுவோடு தொடர்புகொண்டிருந்தாலோ அல்லது லக்கனத்திற்கு 6,8,12 போன்ற மறைவுஸ்தானம் ஏறியிருப்வர்களுக்கும் கனவுகள் வரும்.

                             ஒரவரது சாதகங்களில் கோசார அடிப்படையில் ஏழரை ,அட்டமசனி நடந்துகொண்டு ஸ்ரீராகுபகவான் திசை நடப்பில் இருப்பவரின் கனவில் தேவையில்லாத  கனவுகள் வந்து பயமுறுத்தும்.

                           மனதிற்காரகன் சந்திரபகவானுக்கு எட்டாமிடத்தில் கர்மக்காரகன் சனிபகவான் இருக்க பிறந்தவர்களுக்கு ஏனைய பிற அமைப்பினை பொறுத்து பூர்வஜென்ம வினையால் கனவுகள் தோன்றும்.இதற்கு பூர்வபுண்ணிய ஸ்தான தொடர்பும் அவசியமாகும்.

                            பின்னர் நடக்க போவதை முன்னரே உணரும் சக்தி படைத்தவர் யார் ?
ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் ,செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் மேற்கண்ட பலன் உருவாகும்.

                          கனவுகள் ஏன் வருகிறது ? எதற்கு வருகிறது ?-மருத்துவ அடிப்படையில் இதற்கான விளக்கம் பின்வருமாறு..

                                கனவுகள் வராமல் தடுக்க
                    மனித சரீரத்தில் சளி அதிகம் இருந்தால் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் கனவுகள்  அதிகமாக வரும்.
 
                       வயிற்றில் பித்தம் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு இடைவெளிவிட்டு கனவுகள் வரும்.அவ்வப்போது தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இருக்க வைக்கும்.
வாயு தொல்லைகளும் சிலருக்கு கனவுகளை வரவழைக்கும்.

                             வாத,பித்த மற்றும் சிலோத்தும நாடிகளினை சரியாக பேணி காக்கவேண்டும்.

                       பலவீனமான உடல்நிலை மற்றும் மனநிலையும் கனவுகளுக்கு காரணம் என்பதால் உடற்பயிற்ச்சியும் ,மனபயிற்சியும் தினம்தோறும் செய்துவர பழகவேண்டும்.

                         ஸ்ரீராமபக்தனான ஆஞ்சநேய வழிபாடு கனவுகள் வரவிடாம் தடுக்கும்.எனவே ஆஞ்சநேய ஸ்தோத்திரம் உறங்க செல்வதற்கு முன் சொல்லிவிட்டு ஸ்துதி செய்து படுக்கைக்கு செல்லுங்கள்.
நன்றி.

    (தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டண விவரங்களை பெறலாம் )


                                                                   செல்
                                                                      740 257 08 99                                                                                          97 151 89 647

                                                  வாட்ஸ்அப்                                                                                   97 151 89 647




                                                      அன்புடன்
                                     சோதிடர்ரவிச்சந்திரன்
                                                            M.SC,MA,BEd.
                                                   சோதிட ஆராய்ச்சியாளர்,
                           ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
                                            கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


                Myemail.                                               astroravichandransevvai@gmail.com                                                    masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com*******astroravichandransevvai.blogspot.in/?m=1@@@@@@@@@@@@@@@@@@@@

No comments: