உங்கள் ஜாதகத்தில் தலைமை பண்பை தரும் சூரியன் .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனிதன் வாழ்வினை வழி நடத்தி செல்வதில் கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
நவ கிரகங்களில் தலைமை ஏற்று செல்பவர் சூரியன் பகவான் ஆவார்.இவர் தந்தைக்கு காரக கிரகமாக திகழ்கிறது.இவர் லக்கினத்திற்கு காரக கிரகமாக விளங்குகிறது.ஆத்மா காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.இவை ஒளி கிரகம் ஆகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் வலிமை அடைந்து இருந்தால் ஆளுமை தன்மை மிக்கவராக திகழ்வார்.ஒரு தொழிலாளி ஆக இருந்தாலும் அதில் தொழில் சங்க தலைவராக ஜாதகர் திகழ்வார்.
ஒருவருடைய ஜாதகத்தில் சிம்மம் வீடும் மற்றும் அதன் அதிபதியும் வலிமை பெற்று இருந்தால் அரசு வேலை கிடைக்கும்
சிம்மமும், சூரியனும் பலம் அடைந்து இருந்தால் தந்தை மூலமாக ஆதாயம் பெறுவார்.அப்பா வழி உறவுகள் ஆதரவு தரும் உறவுகளாக அமையும்.
பொளர்னமி அல்லது பொளர்னமியை நெருங்கும் அல்லது விட்டு விலகும் சந்திரனாக இருக்கும் நிலையில் சூரியன் பகவான் முழுமையான ஒளி கிரகமாக திகழும் அமைப்பை பெற்றவர்கள் அரசாங்கம் அல்லது அரசியலில் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை பெறுவார்கள்.
சூரியன் பகவான் சிம்மம் ஆட்சி வீடாகவும்,மேஷத்தினை உச்ச வீடாகவும் மற்றும் துலாம் ராசியை நீச வீடாகவும் கொண்டு உள்ளது. சூரியன் பகவான் கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்வார்.
சூரியன் பகவானுக்கு குரு, சந்திரன், செவ்வாய் நட்பு கிரகங்கள் ஆகும்.சூரியன் பகவான் குரு அணியினை சேர்ந்த கிரகம் ஆகும்.
சூரியன் பகவானுக்கு நட்பு வீடுகளாக மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம் மற்றும் கடகம் ஆகிய வீடுகள் திகழ்கிறது.
சூரியன் பகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளை விட திக் பலம் பெற்று இருக்கும் பொழுது அவை அதன் தசையில் மிகுந்த நல்ல பலனை தருகிறது.சூரிய பகவான் பத்தாம் இடத்தில் திக் பலம் பெற்று விளங்குகிறார்.அதே நேரத்தில் நான்காம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.
சூரியன் பகவானுக்கு குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சிவராஜ யோகம் என்னும் மிகுந்த யோகத்தை தருகிறார்.குறிப்பாக தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவை நிரம்ப பெறுகிறார்.அரசு மற்றும் அரசியல் ஆதரவை நிரம்ப பெற்றவராக திகழ்கிறார்.
சூரியன் பகவானுக்கு மிகவும் அதி நண்பராக புதன் பகவான் விளக்குகிறார். சூரிய பகவான் புதனுடன் இணையும் பொழுது "புதன் ஆதித்ய யோகம்" என்னும் பல பட்டம் பெரும் யோகத்தை பெறுகிறார்.
சூரியன் பகவான் புதனுடன் இணைந்து எட்டு ,நான்கு, ஒன்றாம் இடங்களில் இருக்கும் பொழுது அரசாங்க வேலை அவருக்கு இள வயதிலேயே கிடைக்கும்.
சூரியன் பகவான் புதனுடன் இணைந்து இயற்கை சுப கிரகமான குரு பகவாலுடைய பார்வையை பெற்ற நிலையில் அல்லது பௌர்ணமி அமைப்பை பெற்ற நிலையில் அரசாங்க வேலை சாதகருக்கு கிடைக்கும் இதற்கு உரிய தச அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
சூரிய பகவான் செவ்வாயுடன் இணைந்து திக் பலம் பெற்று சுபத்துவமான நிலையில் இருப்பின் போலீஸ், ராணுவம் போன்ற பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும். இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் ரவுடிகளை சுட்டு வீழ்த்தி பதக்கங்களும் ,பட்டங்களும் பெறுவார்கள் .
சூரிய பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இணைந்து எந்த இடத்தில் இருந்தாலும் இள வயதிலேயே விதவை ஆவார் என்று கூறப்பட்ட மூலநூல் பாடல்களை அப்படியே எடுத்துக் கொண்டு பயப்பட வேண்டாம் நிச்சயமாக பாதிப்பை தருவதில்லை.
சூரிய பகவான் சுக்கிரனுடன் நெருக்கமாக இணைந்து அஸ்தங்கம் அடைய செய்த நிலையில் தாம்பத்திய சுகத்தை பெறுவதில் காலதாமதத்தை உண்டாக்குவார் .இவை குறிப்பாக ஏழாம் இடத்தில் இருப்பது கணவன் மனைவி உறவு நிலைகளில் பாதிப்பை தரும் இவற்றை குரு பார்க்க அல்லது வேறு விதமான சுபத்துவமான நிலையில் பலன்களில் மாற்றம் உண்டு.
சூரியனை பலவீனப்படுத்தும் கிரகங்களில் முதன்மையானது சனி மற்றும் ராகு பகவான் ஆவார். சூரியனுடன் சனி அல்லது ராகு இணைந்த நிலையில் அல்லது சூரியனை சனி பகவான் பார்வை செய்த நிலையில் தந்தை மகன் உறவு மிகப்பெரிய பாதிப்பை தரும்.வேறு ஏதேனும் சுபத்துவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பை பெறும் பொழுது பலனில் மாற்றம் ஏற்படும் பயப்பட தேவையில்லை.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் பகவான் மற்றும் சிம்மத்தை சனி பார்வை செய்த நிலையில் அரசு வேலை கிடைப்பதில்லை.அரசியலில் ஈடுபட முடியாது.அரசியல் ஆதாயம் பெற முடியாது.சில நேரங்களில் வேறு ஏதேனும் வகையில் சுப கிரக தொடர்பு ஏற்படும் பொழுது பலனில் மாற்றம் ஏற்படும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு அமர்ந்து ஒன்பதாம் இடத்தினை சனி பகவான் பார்வை செய்து ஒன்பதாம் இட அதிபதியையும் சனி பார்வை செய்த நிலையில் சூரியன் தசையே நடப்பில் உள்ள காலங்களில் தந்தை மரணம் அடையும் நிலை உண்டாகும்.
உதாரண ஜாதகமாக தனுசு லக்னம் ஒன்பதாம் இடத்தில் ராகு அமர்ந்து சனி பகவான் கும்ப வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் சம சப்தமாக ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து உள்ள ராகு பகவானை பார்வை செய்த நிலையில் சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் ஒன்பதாம் இடம் அதிபதி மற்றும் தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பகவானை தனது பத்தாம் பார்வையால் விருச்சிக வீட்டில் உள்ள சூரியனை பார்வை செய்த நிலையில் சூரியன் அல்லது சனி அல்லது ராகு இந்த மூன்று கிரகத்தில் ஏதாவது ஒரு தசை அல்லது புத்தி நடப்பில் உள்ள நிலையில் தந்தை உயிருக்கு கண்டம் உண்டாகும்.
சூரியன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் கால வீதமாக பன்னிரெண்டு ராசிகளை சுற்றி வர ஒரு ஆண்டு காலம் ஆகிறது.சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் வீட்டை வந்து சேருகிறார்..
சூரியன் பகவானை ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது
அஸ்தமனம் அடைந்த கிரகம் தனது பலத்தை சூரியன் இடம் இழக்கிறது.
சூரியன் தனது தசையில் முழு பலம் பெற்ற கிரகமாக மாறி தன்னால் அஸ்தமனம் அடைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்கிறது.
நன்றி.
For online appointment
Cell & a WhatsApp & gpay no
097151 89647
For another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்





.jpeg)







.jpeg)

.jpeg)

.jpeg)


