Sunday, 30 July 2017

உங்களது சாதகங்களை முன் ஆய்வு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

"உங்களது சாதகங்களை முன் ஆய்வு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன ? "

                                                     

கிரகங்கள் படுத்தும் பாடு-( 158 )

செவ்வாய்ப்பட்டிஅருள்மிகுதேவி  ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் துணை!

              சில நேரங்களில் ஆறறிவு படைத்த மனிதன் அ்்றினையான விலங்குகளிடமிருந்தும், பறவைகளிடமிருந்தும் பல பாடங்களை கற்றுக்தொள்ளவேண்டிய அவசியம் நேரிடுகிறது.
ஒற்றுமை உணர்வினை காகங்களிடமிருந்தும்,நன்றி உணர்வினை நாய்களிடமிருந்தும்,உழைப்பையும்,சேமித்து வைக்கும் தன்மையினை எறும்புகளிடமிருந்திம்,சுறுசுறுப்பினையும்,
கூடிவாழும் சமூகத்தன்மையினையும், தேனீக்கள் இடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

          அதேபோல தமக்கு என வாய்ப்பும்,உரிய காலமும் வரும்வரை காத்திருத்தல் என்பது அவசியமான ஒன்றாகும்.இதற்கு "பொறுமையும்,சகிப்பு தன்மையும் மிக மிக அவசியமாகும்.இப்பண்பிணை கொக்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள லேன்டியுள்ளது.

            இதனை  ஒளவை மூதாட்டியார் தனது மூதுரை -5 ம் பாடலின் வழியாக கடைசி இரண்டு வரியில்
" ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு ' என்கிறார்.

          கொக்கானது எப்படி சிறு குஞ்சு மீன்களையெல்லாம் ஒட விட்டுவிட்டு தவநிலை முனிவரைப்போல ஒற்றைக்காலில் தனக்கு தேவையான பெரிய மீன் வரும்வரை காத்திருப்பதுபோல மனிதர்களாகிய நாமும் உரிய நேரம் வரும்வரை காத்திருக்க பழகிக்கொள்ளவேண்டும்.

உரிய காலம்

        மனிதனாக பிறப்பு எடுக்கும் ஒவ்வொறு மனிதனையும் வழிநடத்தி செல்லுவதில் நவகோள்களுக்கு  முக்கியமான பங்கு உண்டு.எனவே மனிதன் ஆக பிறப்பு எடுத்த நாம் நமது சாதகத்தினை கோளாராய்ச்சி செய்து தம்மை பலப்படுத்தக்கூடிய கிரகங்கள் எவை ? எவை ? எனவும்,அதேபோல எக்கிரகங்கள் நமது வளர்ச்சியை பலவீனப்படுத்தும் எனவும் அறிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு தெரிந்துகொண்ட பின் தம்மை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லக்கூடிய திசையானது வரும்வரை பொறுமை காக்க பழகவேண்டும்.

கோணாதிபதிகள்

           பொதுவாக ஒருவருக்கு அதிக யோகங்களை தந்து வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதில் கோணாதிபதிகளுக்கு ( 1,5,9 ) அதிக பங்கு உண்டு.இதனால்தான் ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதி,ஐந்தாமிட அதிபதி மற்றும் ஒன்பதாமிட அதிபதிகளை லக்கன யோகராக எடுத்துக்கொண்டு அவர்களது திசைகள்.  Thisaigal ஆனாது மானிடருக்கு நன்மை பயக்கும் திசைகளாக கருதப்படுகிறது.இக்கோணாதிபதிகள் பலவீனப்படாத சூழலில் யோகங்களை தந்து குப்பையில் இருப்பவனையும்,கோபுர கலசமாக உச்சத்தில்  வாழவைக்கும்.

கேந்திர அதிபதிகள்

             கேந்திராதிபதிகளுத்கு கோணாதிபதியை அடுத்துதான்  பங்கு உண்டு.கேந்திர அதிபதிகள் கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெறும்போது "கேந்திராதிபத்திய தோஷத்தை " தந்து தரக்கூடிய பலனில் பங்கத்தை உண்டாக்கிவிடுவதால்தான் கேந்திர அதிபதிகளை (1,4,7,10 ) லக்கன யோகர்களாக கருதுவதில்லை.

        கேந்திராதிபதிகள் யோகங்களை தர இவைகள் திரிகோண நிலைகளையோ அல்லது மறைவிட ஸ்தாளங்களிலோ நின்று திசையானது நடப்பின் யோகங்களை தரக்கூடிய நிலை உருவாகும்.

        கேந்திர ,கோணாதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று அத்திசையானது நடைபெறும் காலங்களிலும் யோகங்களை வாரி வழங்கும்.கேந்திர ஸ்தானங்களில் பாப கிரகங்கள் இடம்பெறுவதும்,திரிகோணங்களில் சுப கிரகங்கள் இடம்பெறுவதும் நல்லது.

பணபர ஸ்தானங்கள்

       2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானங்களில் தன,லாபதிகளின் (2,11) திசைகள் நடைபெறும் காலங்களிலும் யோகங்களை வழங்கும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலங்கள்;-

          ஒருவர் தனது லக்கன ,ராசிக்கு பாதக,மாரகாதிபதிகள் மற்றும் மறைவுஸ்தானத்தில் (6,8,12 ) இடம்பெற்ற மற்றும் அதன் அதிபதிகளின் திசைகளில் சற்று எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு புதிய முயற்ச்சிகள் செய்யாமல் இருத்தல் நலம் பயக்கும்.

         இதுபோன்ற தருணங்களில் அக்கிரகங்களின் அதிபதிகளுக்கு உரிய தெய்வங்களுக்கு பரிகார பூஜைகள் மற்றும் மந்திர உச்சாடனங்கள் செய்வது நல்லது.

          அதிலும் குறிப்பாக ஆறாம் இடம் என்பது ருண,ரோக மற்றும் கடன் பிரச்சினைகளை தரும் திசை என்பதால் அத்திசை காலங்களில் கொடுக்கல்,வாங்கல் மற்றும் புதிய தொழில் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

            அத்தருணங்களில் பரிகார பூஜைகள் அவசியம் ஆகும்.உதாரணமாக ஆறாமிடத்தில் ராகுபகவான் நின்று அத்திசையானது நடப்பில் இருப்பின் ஆஞ்சநேய வழிபாடு ராகுகாலத்தில்  செய்யலாம்.வடைமாலை சாத்தி வழிபடலாம்.அனுமான் ராமபக்தர் என்பதால்  ராம ஜெயம் ஆயிரம் தடவை எழுதி மாலையாக கட்டி ஆஞ்சநேயகருக்கு சாத்தலாம்.சனிக்கிழமை வழிபட உகந்த நாட்களாகும்.

           இவை மட்டுமல்லாது துர்க்கை வழிபாடு,காலபைரவருக்கு மிளகு தீபம ஏற்றி வழிபட்டு கஷ்டங்களிலிருந்து விலகலாம்.
திருநாகேஷ்வரம்,பேரையூர் ,திருப்பாள்புரம் மற்றும் காளஹஸ்தி போன்ற ராகுஸ்தலங்களுத்கு சென்று வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புபடம் அடித்துவைத்து பரிகார பூஜைகள் செய்யலாம்.

          சனிபகவான் ஆக இருக்கும் பட்சத்தில் காகத்திற்கு சோறுவைத்தல்,ஒரு கைப்பிடி அரிசியினை துணியில் கட்டி இரவு படுக்கும்போது தலையனை அடியில் வைத்து காலையில் எழுந்து பொடிசெய்து விநாயக வழிபாடு செய்து கோலமிட அவ்வரிசியினை எறும்புகள் பொறுக்கி செல்ல சகலபாவங்களும் விலகும்.

          பிராமணர்களுக்கு கறுப்பு வஸ்திரம தாளம் செய்தல்.திருநள்ளாறு சென்று ஆயில்குளியல் செய்து சனீஸ்வரபகவானை வழிபடல் மூலம் அக்கிரகங்களால் உண்டாககூடிய கஷ்டங்களை தங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தினை மனிதர்களுக்கு தரும்.

          இதேபோல அஷ்டமாதிபதி திசையானது நடப்பில் இருக்கும் காலங்களில் வம்பு,வழக்கு,பிரச்சினை ,ஆயுள்பங்கம்
,வாகனவிபத்து மற்றும் சிறை செல்லல் போன்ற கஷ்டங்களை தரும் என்பதால் பொதுவாக பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்க பயிற்ச்சி மேற்கொள்ள பழகவேண்டும்.

              முடிந்தவரை வீண்விவாதங்களில் விலகி நிற்க பழகவேண்டும். கூடுமானவரை ஒதுங்கி வாழ முயற்ச்சி மேற்கொள்ளவேண்டும்.
பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நாக்குதான் காரணம் என்பதால் இதுபோன்ற தருணங்களில் "நாகாத்தல் அவசியமாகும்.

             எனவேதான் லான்புகழ் கொண்ட வள்ளுவர் கூட
" யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
 சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
என்கிறார்.நாக்குக்குதான் நரம்பு இல்லையென பேச ஆரம்பித்தால் இறுதியில் சொற்குற்றத்தில் அகப்பட நேரிடும் என இறுதியாககூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி!நன்றி!

      (தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
 
    97 151 89 647

           செல்

  97 151 89 647
     740 257 08 99
                                                       
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastrorav@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments: