Saturday, 5 August 2017

ஆரோக்கிய வாழ்வில் கிரகங்களின் முக்கியத்துவம் என்ன ?

ஆரோக்கிய வாழ்வில் கிரகங்களின் முக்கியத்துவம் என்ன ?

                                      

கிரகங்கள் படுத்தும் பாடு -(159)

                         "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பார்கள்.
  சுவர் இ்ருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் உள்ளநலம் சிறப்பாக அமையும்.
"Sound body sound mind''

                         ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு கிரகங்களின் பங்கு அத்தியவாசமானது.ஒரு மனிதனுத்கு நலவாழ்வினை தருவதில் லக்கனாதிபதி,சுகாதிபதி மற்றும் ருணரோகாதி ஆகிய ஸ்தானங்களுக்கும் (1,4,6 ) அவற்றின் அதிபதிகளுக்கும் முக்கிய பங்களிப்பானது உண்டு.இதனைப்போல மனோகாரகன் சந்திரபகவானும் பலவீனம் அடையக்கூடாது.

                                 யாருடைய சாதகத்தில் லக்கனாதிபதி,சுகாதிபதி, ஆகிய ஸ்தானம் பலமடைந்து ஆறாம்அதிபதியின் நட்சத்திர சாரமோ அல்லது ஆறாம் அதிபதியுடனான தொடர்பற்று இருக்கவேண்டும்.மேலும் லக்கன மற்றும் சுகாதிபதி அரவுகளான ராகு,கேதுபகவான் தொடர்பற்று இருப்பின் சாதகருக்கு ஆரோக்கிய வாழ்வு நிச்சயம் ஆகும்.

                                ஒரு மனிதனுக்கு லக்கனாதிபதியானது நீசம்,அஸ்தமனம்,பகை மற்றும் மறைவுஸ்தானங்களான 6,8,12 போன்ற இடங்களில் நின்று லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியோடோ அல்லது  ஆறாம்அசுிபதியின் தொடர்பு உருவாகி லக்கனாதிபதியின் திசையோ அல்லது ஆறாம் அதிபதியின் திசையோ நடைபெற்றால் உடலின் ஆரேக்கியதன்மை குறைவு உண்டாகும்.

                    இதேபோல  ஆரோக்கிய வாழ்வினை பெற ஒருவரது சாதகத்தில் மனோகாரகனான சந்திரபகவானின் இருபுறமும் பாவிகளால் சூழப்பட்டு "பாவகர்த்தாரியோகம் பெற்றிருக்காமலோ அல்லது  மனதுக்காரகன் சந்திரபகவான் உடன் அரவுகளாள ராகு,கேதுபகவான் தொடர்பு இன்றி இருத்தல் வேண்டும்.மேலும் ஆறாம் அதிபதியுடன் சந்திரபகவான் தொடர்பு கொண்டு மனோகாரகன் பலவீனம் அடையாமலும் இருக்கவேண்டும்.

                      ராகுபகவான் ஊழ்வினைக்குரிய நோய்களையும்,கேதுபகவான் கர்ம வினைக்குரிய நோய்களையும் தருவதில் வல்லவர்கள் ஆவார்.
   லக்களாதிபதியுடன்,ஆறாம்அதிபதியானது கூடி ஒரு ராசியில் நின்று இவர்களுடன் ராகு,கேது தொடர்பு பெற்று நின்று இவர்களது திசை காலங்களில் சாதகன் பிணியடைய வாய்ப்பு உண்டு. சாதகரின் சாதகத்தில் சுகாதிபதியும் கெட சாதகர் படுத்த படுக்கையாக இருப்பர்.

                     லக்கனாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று ஆறாம் அதிபதி திசை நடப்பில் இருப்பின் சாதகருக்கு வியாதி உண்டாகலாம்.

                      பொதுவாக ஒருவரது சாதகத்தில் லத்கனாதிபதி, சுகாதிபதி பலமிழந்து ஆறாம் அதிபதியானது பலமான அமைப்பை பெற்றவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு அமையாமல் இருக்கும்.

                    ஆதலால் ஒருவர் ஆரோக்கிய வாழ்வு வாழ லக்கனம் மற்றும் ராசி அதிபதி,சுகாதிபதி பலப்ப்படவேண்டும்.

நன்றி !
                      (தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்பு

  வாட்ஸ்அப் எண்
  9715189647

    செல்
7402570899
  9715189647

                                                     


                                                     
                                        அன்புடன்
                                           சோதிடர்ரவிச்சந்திரன்
                                                                  M.Sc,MA,BEd,
                                               சோதிட ஆராய்ச்சியாளர்
                           ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
                                                            karambakkudi,pudukkottai
masterastroravi@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
.......................................................................

No comments: