முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க....
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!
ஒரு மனிதனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் மிக முக்கியமான பங்கு நவக்கிரகங்களுக்கு உண்டு.
ஒரு மனிதனை கற்றவனாக மற்றும் படிப்பாளியாக ஏற்றிச்செல்ல அவர்களது ஜாதகத்தில் இரண்டாமிடம், நான்காம் இடம், ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாமிட இடம் அதிபதிகளான கிரகங்கள் பலம் பெற்று நிற்பதோடு கல்விக்கு உரிய கிரகமான குருவும் புதனும் பலம் பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக லக்னாதிபதியும் பலம் பெற்றிருப்பதோடு உரிய தசையும் படிக்கும் காலத்தில் நடப்பில் இருக்க வேண்டும். ஒருசமயம் அந்த ஸ்தான கிரகங்கள் பாவிகளான சனி செவ்வாய் ராகு போன்ற கிரகங்களுடன் சேர்ந்து பங்கமடைந்து நின்றாலும் , நீசம் பகை மற்றும் மறைவிடம் போன்ற இடங்களில் பலமிழந்து இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன் ,குரு மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களது தொடர்பினை பெரும்பொழுது அது முழு பலம் பெற்று அதன் தசா காலங்களில் சாதகரை கற்றவனாக மாற்றிவிடுகிறது.
சில நேரங்களில் இயற்கை சுப கிரகங்களாக மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் இருந்து உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அது கேந்திரங்களில் அமரும்பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை தந்து அதன் தசை அழைப்பில் இருந்தாலும் சாதகனை படிக்கவிடாமல் செய்து விடுவதும் உண்டு.
உதாரணமாக மிதுன லக்னமாக இருந்து நான்காமிடத்தில் புதன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷத்தை பெற்றுள்ள நிலையில் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாமல் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உண்டு.
இவை தவிர அந்த கிரகங்கள் பெற்ற நட்சத்திர சாரநாதன் பலமிழந்த சூழ்நிலையிலும் ஜாதகரை கல்வி நிலையில் உயர்ந்து செல்ல முடியாத துர்பாக்கிய நிலையை தந்துவிடும் உண்டு.
எனவே பலன் அளிக்கும் பொழுது பலவற்றை ஆராய்ந்தறிந்து பலன் அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி பலம் பெற்று மகா தனயோகம் என்று அழைக்கக்கூடிய
2 ,9, 11-க்குடைய கிரகங்கள் சேர்ந்து அல்லது பார்த்துக்கொண்டாலோ அல்லது பரிவர்த்தனை பெற்று தனகாரகன் குரு பகவானது தொடர்பினை பெற்ற நிலையில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகரை பொருளாதாரத்தில் மேல் நோக்கிய நிலையில் தந்து விடுவதும் உண்டு.
ஒருவரது ஜாதகத்தில் குரு, சனி மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் ஜாதகரை ஆன்மீக வழியில் அழைத்துச் செல்வது உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் இலக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டாமிடம் ஆகிய இடங்களுடன் பாவிகளான சனி, செவ்வாய் மற்றும் நிழல் கிரகங்களான ராகு ,கேது தொடர்பு இல்லாத சூழலில் அந்த ஸ்தானாதிபதிகள் பலம் பெற்ற நிலையில் புத்திர தோஷம் அற்றவராக இருப்பின் அந்த ஜாதகர் இளம்வயதிலேயே திருமணம் செய்து குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவித்து இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வார்.
ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபத்துவம் ஆன நிலையில் இருக்கின்றதோ, அந்த கிரகங்களின் திசை நடப்பில் உள்ள காலங்களில் அந்த கிரகத்தின் ஆதிபத்திய மற்றும் காரக பலன்களுக்கு ஏற்றவாறு தனது வாழ்வை மாற்றிக் கொள்வார்.
ஒருவர் ஜாதகத்தில் குரு மற்றும் புதன் பலம் பெற்று இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொண்டு அதன் தசை நடக்கும் காலங்களில் அவர் பிறருக்கு போதிக்கும் ஆசிரியராகவோ அல்லது போதகராகவோ தமது வாழ்வினை அமைத்துக் கொள்வார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் பலமடைந்து வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்து சுபத்துவம் பெற்ற நிலையிலும் மற்றும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நல்ல ஜோதிடராக சமூகத்தின் மத்தியில் வலம் வந்து பொருளீட்டி புகழ் பெற்று வாழ்வார்.
ஒருவர் ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடமும், விரய ஸ்தானமான 12-ஆம் இடங்களும் பலம்பெற்று அதன் தசை நடப்பில் உள்ள காலங்களுடன் சாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.
ஒருவர் ஜாதகத்தில் ராகு பகவான் அந்நிய தேசம், அந்நிய மொழி மற்றும் அந்நிய நாட்டில் வசிக்கக் கூடிய யோகத்தை தரக்கூடிய கிரகம் என்பதால் அது சுபத்துவம் பெற்று நிலையில் 8 12ஆம் இடங்கள் தொடர்பு பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் ஜாதகர் கடல் கடந்து சென்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.
ஒருவரது ஜாதகத்தில் ஒளி கிரகங்களின் வீடுகளான கடகம் மற்றும் சிம்மம் பலம் பெற்று அதன் அதிபதிகளான சூரியன் மற்றும் சந்திரன் பலம் பெற்ற சூழலில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் ஒருவர் அரசாங்கத் பதவியைப் பெற்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.
ஒருவரது ஜாதகத்தில் பெரும் கோணமான ஒன்பதாம் அதிபதியும், பெருங்கேந்திர ஸ்தானமாகிய பத்தாம் அதிபதியும் தங்களுக்குள் தொடர்பு பெற்ற சூழலில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் அரசு உயர் பதவியில் அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஒருவரது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டில் சுபக்கிரகங்கள் இருந்து அதன் தசை நடக்கும் காலங்களில் ஜாதகர் வாழ்வில் உயரிய அந்தஸ்துக்கு இட்டுச்செல்லும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று இரண்டாம் இடத்தில் சனி மற்றும் ராகு தொடர்பு பெற்ற நிலையில் புகழ் பெற்ற வழக்கறிஞராக வலம் வரும் யோகம் ஜாதகத்தில் உண்டு.
சினிமாவில் புகழ்பெற அவரது ஜாதகத்தில் முதல் நிலை சுப கிரகமான சுக்கிரன் பலம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் தொடர்பு பெற்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் சினிமாவில் கொடிகட்டி பறக்க வைக்கும்.
பெரிய நிதி நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உள்ள ஜாதகத்தில் தனஸ்தானமான இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் குரு பகவான் தொடர்பு பெற்ற நிலையில் ஜாதகரை அது சார்ந்த துறையில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க உதவுகிறது.
ஒரு ஜாதகத்தில் சனி பகவான் பாவத்துவம் பெற்ற நிலையில் பலம் பெற்று நிற்கும் பொழுது கீழான நிலையில் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய வேலையை பார்க்க வைக்கும். சாக்கடையில் வேலை பார்த்தல், பழைய பேப்பர் மற்றும் இரும்பு சாமான்கள் வாங்குதல், உடல்முழுதும் மசகு அப்பிக்கொண்டு வேலை பார்க்கக்கூடிய சூழலை தரும்.
சனி பகவான் சுபத்துவம் பெற்று நிலையில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் குடிக்க இயலாத பெட்ரோல் ,டீசல் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க் வைத்திருத்தல் மற்றும் அதில் வேலை பார்த்தல், கனரக வாகனங்களை இயக்குதல் ஊர் போற்றும் மக்கள் தலைவராக விளங்கும் சூழல் போன்றவற்றை தருகிறது
ஒருவர் ஜாதகத்தில் புதன் சுபத்துவம் பெற்ற நிலையில் கணித பேராசிரியர்,இசை அமைப்பாளர், புள்ளியியல் நிபுணர்,நிகழ்ச்சிகளை தொகுத்தல்,செய்தி சேகரிப்பாளர், எழுத்தாளர்,கவிஞர்,பாடல் ஆசிரியர், தலையங்கம் எழுதுபவர் மற்றும் இலக்கியவாதி ,
நுண்கலை வல்லுநர் (ஓவியம்,சிற்பம்,
கூடைமுடைதல்,...) போன்றவற்றுள் அடி எடுத்து வைத்து புகழ் பெற வைப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் சுபத்துவம் பெற்ற நிலையில்
தகவல் தொழில்நுட்பம் (IT field), கணிப்பொறித் துறை ,ஆராய்ச்சி துறை மற்றும் கணிதத்துறையில் அடியெடுத்து வைத்து புகழ் பெற வைப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திர பகவான் பலம் பெற்ற நிலையில் நீர் சார்ந்த தொழிலான பால் குடிநீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் போன்ற குடிக்கும் தண்ணீர் சார்ந்த தொழில்கள், தண்ணீரில் வாழும் நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு மற்றும் உப்பாலங்கள் பொண்டாட்டி அடி எடுத்து வைத்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும்.
தொடரும்..
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் & டெலிகிராம் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம் எண்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment