Tuesday, 8 November 2022

யோகங்கள் நிறைந்த ஜாதகம் எது?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  ஒருவருக்கு நல்ல யோகங்களை அள்ளி தரக்கூடிய ஜாதகம்  எது என்று  நன்கு கணித்து ஆராய்ந்து  பார்த்தால் அதில் லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் எவ்விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்கும்.


   ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் முழு ஒளியளவு கொண்டிருக்க வேண்டும்.அதாவது முழு பொளர்ணமி அல்லது வளர்பிறை அமைப்பில் இருக்கும்.


நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான்  தனித்த நிலையில் ஆறு மற்றும் பண்ணிரெண்டாம் இடத்தில் நிற்கும்.


ஜாதகத்தில் தொடர்ந்து வரக்கூடிய தசைகள் நல்ல யோக தசைகளாக இருக்கும்.கோச்சார அடைப்படையில் கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்து இருக்கும்.


  லக்கன அவ யோக கிரகங்கள் மற்றும் பகைக்கிரகங்கள் பலமிழந்தும் லக்கன யோக கிரகங்கள் மற்றும் இயற்கை சுபகரங்கள் வலுவடைந்து ஜாதகத்தில் காணப்படும்


 சாதகத்தில் வீடு கொடுத்தவன் வலு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு கிரகத்திற்கும் அதாவது பாவ கிரகமாக இருந்தாலும் அந்த கிரகம் இருக்க கூடிய வீட்டோட அதிபதி உச்சம் பெற்றால் அது தசை காலங்களில் நல்ல பலனைத் தரும்.


இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது.பாவத் பாவ அமைப்பின்படி அந்த இடமானது லக்கனத்தில் இருந்து கேந்திர கோணமாக இருப்பின் அந்த தசை காலங்களில் சொல்லொண்ணாத மகிழ்ச்சிகளையும் மற்றும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுக்கும்.


சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் ஆறாம் இடத்தில் இருப்பது அல்லது ஆறாம் இடத்தில் பார்வை செய்து இருப்பது ஆறாம் இடத்தை வலு இழக்க செய்வது நல்ல யோக அமைப்பு ஆகும். ஏனெனில் ஆறாம் இடம் என்பது சத்ரு ஸ்தானமாகும் இங்கு கடன் பிணி எதிர்ப்பு வம்பு சண்டை வழக்கு மான அவமானம் போன்ற கெடுதல் தரும் விஷயங்களை தரக்கூடிய இடமாகும்.. எனவேதான் இந்த இடம் பலமிழந்து லக்கனாதிபதி வலுப்பெற்று இருப்பதும் யோக ஜாதகமாக கருதப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் யோகத்தை அள்ளி தரக்கூடிய கோண அதிபதிகள் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று அதன் தசை தொடர்ந்து நடப்பில் இருப்பின் அது யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்கன அவ யோகி மற்றும் பாவ கிரகங்கள் பலமிழந்து நின்று லக்கன யோகர் மற்றும் சுப கிரகங்கள் வலுப்பெற்று சுப மனை ஏறி நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


சில நேரங்களில் ராசியில் பலம் இழந்து நிற்கும் கிரகம் அம்சத்தில் சுப மனை ஏறி நிற்பதும் மற்றும் சுப கிரகங்கள் சேர்க்கை பெற்று நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் யோகம் நிறைந்த ஜாதமாக திகழ பிறந்ததிலிருந்து யோகம் நிறைந்த தசை நடப்பில் இருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    9715189647


 மற்றொரு செல்

   7402570899


Email masterastroravi@gmail.com

   


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: