Sunday, 17 August 2025

உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்?

 உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்? 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்பதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகள் , நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய மூன்றும் முடிவு செய்கிறது.


 ஒருவரது திருமண நிலை பற்றி தெரிந்து கொள்ள  ஜாதக கட்டத்தில் லக்கனம் என்ற ஒன்றாமிடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தாளமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதி 

ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்க  வேண்டும்.


       இதே போல ஏழாம் இடம் , ஏழாம் இடத்தின் அதிபதி மற்றும் களத்திரக்காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


     ஒருவருக்கு நல்ல யோகத்தை அள்ளித் தரக்கூடிய இல்லற  வாழ்க்கை அமைய களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி சுப கிரகமாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று சுபர்களின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பினை பெற்று திருமண காலத்தில் யோகம் தரக்கூடிய தசா புக்தி நடப்பில் இருந்தால் யோகம் தரக்கூடிய நல்ல குணவதியான கணவன்/மனைவி அமைவாள்.


  மாறாக ஏழாம் இடத்தில் சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் நின்று பாவரின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற  நிலைகளை பெற்று மற்றும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் பகவானும் கெட்டு உள்ள நிலையில் மனைவியாலே பெரிய மனக் கஷ்டங்களை உருவாக்கி தரும். 


 ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள ராட்சத தன்மையான  வாழ்க்கை துணை அமையும்.இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள பலனில் மாற்றம் ஏற்படும்.


 ஒருவருக்கு ஏழாம் இடம் பலவீனம் அடைந்து பதினொன்றாம் இடம் பலம் அடைந்த நிலையில் முதல் வாழ்க்கை துணை பிரிவு உண்டாகி இரண்டாம் திருமணம் நடைபெறும்.


 ஏழாம் இடத்தில் சூரியன் மற்றும் புதன் போன்ற கிரக தொடர்பு அரசு வேலை பார்க்கும் மனைவி அமையும்.


 ஏழாம் இட அதிபதி லாப ஸ்தானத்துடன் தொடர்பானது மனைவியால் லாபம் உண்டாகும்.


ஏழாம் இட அதிபதி உடன் சனி மற்றும் செவ்வாய் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு காதல் 🪉 திருமணம் உண்டாகும்.


 மேலும் ஐந்து,ஏழு மற்றும் ஒன்பதாம் இட அதிபதி தொடர்பு ஜாதகருக்கு காதல் மணத்தை உண்டாக்கும்.


 ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதி உடன் ராகு தொடர்பு வெளிநாட்டு வாழ்க்கை துணை அமையும்.


 ஏழாமிடாதிபதி சர ராசியில் இருந்தால் தூரத்தில் உள்ள வாழ்க்கை துணை அமையும்.


ஏழாமிட அதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் உள்ளூரில் வாழ்க்கைத் துணை அமையும்


ஏழாம் இட அதிபதி உபய ராசியில் நின்றால் இந்த ஊர்காரர் ஆனால் வெளியூரில் தங்கி வசித்து வருவார்.


 லக்னம் என்னும் ஒன்றாம் இடம் ,குடும்ப ஸ்தானம்  என்னும் இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்களோடு சனி, செவ்வாய் ,ராகு ,கேது தொடர்பு இருக்குமானால் அவர்களுக்கு கால தாமதமாக திருமணம் நடைபெறும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


( தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

        



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: