கேது பகவான் தரும் சூட்சும பலன்கள் .
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் அறிவு காரக கிரகமான குருவுடன் இணையும் பொழுது அறிவு, தனம், தங்கம் மற்றும் புத்திர பாக்கியம் இவற்றில் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது. அறிவும் ஞானமும் ஒன்று சேர்கின்ற பொழுது அதில் அப்பலுக்கு ஏற்படுமோ ஒருகாலும் ஏற்படாது .
நவக்கிரகங்களில் குரு பகவான் ஒருவராக இருந்தாலும் அவர் பிரகஸ்பதி என்ற நாமம் தரித்து தேவர்களுக்கு குருவாக வழங்குகிறார். அல்லவா சைவப் பிரியராகிய கேது பகவான்
பஞ்ச மகா பாதகங்களை பகுத்துப் பார்க்கின்ற கேது பகவான் ஞானபீடாதிபதி குருவோடு சேருகின்ற பொழுதுதான் புனிதத்தவம் அடைவார்.
வாழ்வியல் பொருளியல் போன்றவற்றில் சிறக்க செய்பவனும் சிற்றின்பத்தில் திழைக்கச் செய்வோனுமாகிய சுக்கிர பகவானுக்கு சுப காரகத்துவம் விசேஷமாக அமைந்துள்ளது.
மேற்கண்ட காரகத்தன்மையை பெற்ற சுக்கிரனோடு கேது பகவான் இனைக்கின்ற பொழுது உண்மையில் ஒரு மனிதனை சிற்றின்ப சுகத்தில் நாட்டம் இல்லாதவனாக, இல்லற வாழ்க்கையின் பற்று இல்லாதவனாக மாற்றிவிட வேண்டும்.
ஆனால் உண்மையில் சுக்கிரன் கேது சேர்க்கை பெற்றிருப்பவர்கள் காமத்தை கட்டுப்படுத்தியும் அதனால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்தும் ,ஒருமுகப்பட்ட எண்ணங்களை உடையவராகவும் சிறந்ததோர் வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.
சுக்கிரனுடன் கேது பகவான் இணைய பெற்றவர்கள் செல்வ நிலையில் சிறந்து விளங்குவார்கள் ஒன்றை கெடுப்பவன் கொடுக்கவில்லை என்று சொன்னால் அதுவே நன்மையாகும்.
சுக்கிரன் காமத்துக்கு காரகன், மது மாது இரண்டையும் தரக்கூடியவர் சிலருக்கு இரு மண பெண்டிர் தரக்கூடியவர். சுக்கிரன் உடன் பாவ கிரகங்கள் ஆகிய சனி ,ராகு மற்றும் செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெறும் பொழுது கீழான நிலையில் காம எண்ணம் உடையவராக, பல மாதருடன் தொடர்புடையவராக சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம செயல்பாடு உடையவராக இருப்பார்.
ஆனால் சுக்கிர பகவான் ஞான காரகன் கேதுவுடன் சேரும்பொழுது சுக்கிரனின் காரகத்துவத்தில் புனிதம் ஏற்படுகிறது ஒழுங்கு பிறக்கிறது சுருக்கமாகச் சொன்னால் அடர்ந்த காட்டில் இருளைத் கிழித்து செல்ல ஒருவன் கையில் பிடித்து செல்கின்ற தீப்பந்தத்தின் ஒளியைப் போல் ஞான காரகன் கேது சுக்கிரனை நல்வழியில் வழி நடத்தி செல்வார் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சனி பகவான் நம் வினை பயனை அறிய உதவும் கர்ம காரகன் ஆவார். வினைப் பயனால் எடுத்து வந்த பிறவிகளுக்கும், இனி எடுக்கப் போகும் பிறவிகளுக்கும் சனி பகவானே காரகன் ஆவார் சனி மரணத்துக்கும் காரகன் ஆவார்.
நம் பூர்வ புண்ணிய பலனை அறிவதற்கு பூர்வ புண்ணிய அதிபதி, லக்கனாதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் கர்மாதிபதி போன்ற கிரகங்கள் நமது இப்பிறப்பை பற்றியோ அல்லது முன்வினை பற்றியோ அல்லது மறு பிறவி பற்றியோ சிந்திக்க இடம் அளிக்க மறந்தாலும் அவ் வழியான எண்ணங்களையும், வாழ்க்கை சம்பவங்களையும் காட்சியாக உணர்த்துபவர் சனி பகவான் ஆவார்.
சனி பகவான் கலியுகத்திற்கு காரகன் ஆவார் .துன்ப வாழ்விற்கும் சனி பகவானே காரணமாகும்.
இத்தகைய தன்மையை கொண்ட சனி பகவான் உடன் ஞான காரகன் கேது இணைந்துள்ள நிலையில் வாழ்க்கையில் சகல விதமான இன்ப சுகங்கள் இருந்த போதும் அவற்றை பற்றற்று தெய்வ சிந்தனையை உடையவர்களாக ,கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பவர்களாக திகழ்வார்கள்..
. சனி கேது சேர்க்கை பெற்றவர்கள் சன்னி,யாசத்தை மேற்கொள்ள நினைப்பார்கள் .அந்த துறவு வாழ்க்கையில் அப்பழுக்கற்ற ஞானிகள் போல இல்லத்தர வாசிகளாக இருந்து கொண்டே துறவறச் சிந்தனையை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள் .
இந்த அமைப்பு உடையவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அந்த செல்வத்தை அறவழியில் செலவிடுவதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம் .
ஆயுள் காரகன் சனியுடன் ஞான காரகன் கேது இணைந்த அமைப்பை பெற்றவர்கள். வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் புனித படுத்து விதமாக செயல்களை செய்து மக்களுக்கு நல்ல ஞான போதனை போதித்து வருவார்கள்.
செவ்வாய் பகவான் அடாவடி மற்றும் ரவுடி தனத்திற்கும் மற்றும் மித மிஞ்சிய காம எண்ணத்திற்கும் காரக கிரகமாக விளங்கக்கூடிய கிரகம் ஆகும்.கட்டுக்கு அடங்காத கோப தன்மைக்கு செவ்வாய் பகவானே காரகன் ஆவார்.இரத்தத்தை கண்டாலே பயப்படாத தன்மை கொண்டு இருப்பார்கள்.
மேற்கண்ட தன்மை உடைய செவ்வாய் பகவான் உடன் ஞான காரகன் கேது பகவான் இணையும் போது செவ்வாய் பகவான் சூட்சும வலுவை அடைந்து ஜாதகரின் கட்டுக்கு அடங்காத கோபம் போலீஸ் மற்றும் ராணுவம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு அவரது ரவுடிகளை சுட்டு வீழ்த்தி பதக்கம் பெறக்கூடிய நிலையில் ஒருவரை மாற்றிவிடும்..மேலும் ரத்தம் பார்த்து பயப்படாத டாக்டர் படிப்பு படித்து மருத்துவராக பணிபுரிவார்கள்.
நவ கிரகங்களில் கோள்களின் தலைவன் என்று அழைக்கப்படுபவர் சூரியன் பகவான் ஆவார்.தலைமை கிரகம் ஆகிய சூரியன் உடன் ஞான காரகன் ஆன கேது பகவான் சேரும் போது தலைமை பண்பை ஜாதகருக்கு கொடுக்கும் அதிலும் கேது பகவான் ஆன்மீக தன்மை தரக்கூடிய கிரகம் என்பதால் ஆன்மீக பீடத்தில் தலைவராக திகழ வைக்க கூடிய தன்மை சூரியன் மற்றும் கேது சேர்க்கைக்கு உண்டாகும்.
மனநிலை காரகன் சந்திரன் உடன் ஞான காரகன் கேது பகவான் இணையும் பொழுது ஒருவிதமான முன் உணர்வு (intution) தன்மை ஜாதகருக்கு உண்டாகிறது.அதே நேரத்தில் லொளகீக வாழ்வில் பற்றற்ற தன்மை உண்டாகிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell no: 7402570899(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment