Sunday, 17 August 2025

 வாழ்வில் அடுத்த கட்டத்துக்க முன்னேற...





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் பல கஷ்டங்களை கண்டு துவண்டு விடாமல் எதிர் நீச்சல் போட்டு முன்னேற்ற தரும் பாதையில் அடி எடுத்து வைக்க ஜாதக கட்டத்தில் லக்கனாதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாகும்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று உச்சம் அல்லது ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பினை பெற்று இருக்க வேண்டும்.


 இவை மட்டும் அல்லாமல் மனநிலை காரகன் என்று அழைக்கக்கூடிய சந்திரன் பகவான் மற்றும் ஆத்மா காரகன் என அழைக்கப்படும் சூரியன் பகவான் ஆகிய இருவரும் பலம் அடைந்து இருக்க வேண்டும்.


ஒருவர் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும்  பலம் இழந்து  காணப்பட்டாலும் லக்னாதிபதி மட்டும்  வலிமையாக இருப்பின் அந்த ஒன்றை மட்டும் கை பிடித்துக் கொண்டு சாதகர்  வெற்றி பாதை நோக்கி அடி எடுத்து வைப்பார்.


ஒரு சிலருக்கு வாழ்வில் தொடக்க காலத்தில் தொடர்ந்து அவயோகத் தசைகளே நடப்பில் இருந்து கடுமையான கஷட நஷ்டங்களை சாதகர் சந்திக்க நேரிடும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல யோக தசைகள் வந்தால் அந்த வாய்ப்பை பிடித்து கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி விடுவார்கள்.


வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர லக்கனாதிபதி வலிமை அவசியமான ஒன்றாக திகழ்கிறது.


ஒருவருக்கு லக்னாதிபதி வலிமை இழந்த நிலையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கி கொண்டு எதிர் நீச்சல் போடும் திராணி அற்றவராக இருப்பார். எவ்வளவு யோகம் வந்தாலும் அதை அனுபவிக்க கூடிய தன்மை அற்றும் இருப்பார்.


சிலருக்கு வாழ்வின் தொடக்க காலத்தில் அவயோகத் தசைகள் தொடர்ந்து வந்து கடுமையான கஷ்டங்களை அனுபவித்து  பின்னர் நல்ல யோக தசைகள் வரும் பொழுது அதை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் அடுத்த கட்டத்தை  நோக்கி நகர்வதற்கு  லக்கனாதிபதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.


ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று இருப்பதுடன் மட்டும் அல்லாமல் முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலிமை பெற்று இருக்க வேண்டும்.


ஒருவர் ஜாதகத்தில் மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.


 எவர் ஒருவர் ஜாதகத்தில் மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் நல்ல நிலையில் அமர்ந்து அதன் தசைகள் நடப்பில் வரும் காலங்களில் ஜாதகர் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வாழ்வின் உயரிய பாதையினை நோக்கி அடி எடுத்து வைப்பார்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, மூன்றாம் இட அதிபதி ஆகிய இருவரும் கேந்திர கோணங்களில் நின்று வலிமை பெற்று இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் , வளர்பிறை சந்திரன், தனித்த  புதன் மற்றும் சுக்கிரன். ஆகியோரின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இருக்க வேண்டும்.


வாழ்வின் தொடக்கத்தில் தொடர்ந்து ஆறு அல்லது எட்டுக்கு உடைய தசைகள் நடப்பில் இருந்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தனம் -பாக்கியம் மற்றும் லாபம் என்று அழைக்கக்கூடிய 2,9 ,11 ஆம் அதிபதிகள் வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று தன காரகன் குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இவற்றில் ஏதாவது ஒரு தசைகள் வரக்கூடிய கால கட்டத்தில் மிகுந்த தனங்களை சம்பாதித்து உயரிய நிலையினை தன் வாழ்நாளில் பெறுவார்.


 ஒருவர் ஜாதகத்தில் மூன்று தூண்கள் என அழைக்கப்படும் 1,5,9 ஆகிய மூன்று ஸ்தானங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் வலிமை அடைந்து இருப்பின் அந்த தசை நடப்பில் வரும் காலங்களில் வாழ்வில் உயரிய பாதையினை நோக்கி அடி எடுத்து வைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.


நன்றி


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

          




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: