செவ்வாய் பகவான் தரும் யோக பலன்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பூமி காரகன் என்று அழைக்கப்படுகிறது.ஒருவர் ஜாதகப்படி அதிக இடங்களை வாங்கி சேர்க்கும் யோகம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஜாதக கட்டத்தில் செவ்வாய் பகவானை ஆராய்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும்.
செவ்வாய் பகவான் உங்கள் ஜாதகத்தில் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதரிகோணம் போன்ற வகைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஒருவர் அதற்குரிய யோக தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது அதிக பூமி வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.
ஜாதகருடைய உடன் பிறந்தோரை பற்றி அறிந்து கொள்ள உதவக்கூடிய கிரகம் செவ்வாய் பகவான் ஆவார் . எனவே தான் செவ்வாய் பகவானை
" சகோதர காரகன்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் பகவான் விளக்குகிறார்.
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை அல்லது பார்வையை பெறாத நிலையில் இயற்கை சுப கிரகங்கள் உடைய தொடர்பு ஏற்பட்டு இருப்பின் அந்த ஜாதகர் உடன் பிறந்தோர் அதாவது சகோதரர்களின் ஆதரவை கடைசிவரை பெறுவர் .சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்ற நிலையில் லக்னத்தோடு தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர் முரட்டுத்தனம் உடையவராக இருப்பார்.
சிலர் ஒருவரை வெட்டுவதற்கு முன்பாக யோசிப்பார்கள் ஆனால் செவ்வாய் பகவானை வலிமையாக பெற்றவர்கள் வெட்டிய பிறகு யோசிப்பார்கள் ..அந்த அளவுக்கு ரத்தத்தை கண்டு பயப்படாத தன்மை மற்றும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
செவ்வாய் பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரக தொடர்பினை பெறும் பொழுது அவர் அடாவடித்தனம் உடையவர்களாகவும், ரவுடி குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.பொது இடங்களில் பல நபரை வெட்டி வீழ்த்தி, குண்டு வைத்து தகர்க்கும் ரௌடிகளாக அல்லது தீவிரவாதிகளாக இருப்பார்கள்.
அதே நேரத்தில் செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையுடன் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் டாக்டர் படிப்பு படித்து பல நபரை அறுவை சிகிச்சை செய்து ரத்தம் பார்த்து அதற்காக அரசிடம் சம்பளம் வாங்கி மருத்துவம் சேவை செய்வார்கள்.
செவ்வாய் பகவானின் சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப எம்பிபிஎஸ் அதை தொடர்ந்து சித்தா,, ஹோமியோபதி,, கால்நடை மருத்துவர் மற்றும் காது , மூக்கு, தொண்டை நிபுணர் ஆகும் யோகம் உண்டாகும் சுபத்துவ படிநிலைக்கு ஏற்ப பதவி நிலை அமைந்து இருக்கும்.சுபத்துவ படிநிலை குறையும் போது இரத்தம் பரிசோதனை நிலையம் வைத்து நடத்துபவராக இருப்பார். விளையாட்டு வீரர்ராக கசாப்பு கடையில் கறி வெட்டும் நபராக திகழ்வார்.
செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ நிலையில் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் திக் பலம் பெற்ற நிலையில் போலிஸ், ராணுவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.இவர்கள் ரவுடிகளை அல்லது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி ரத்தம் பார்த்து இதற்காக பதக்கம் மற்றும் பட்டங்கள் பெற்று இதற்காக பேரும் புகழும் அடையக்கூடிய யோகத்தை செவ்வாய் பகவான் தருவார்.
ஒருவரது இரத்த வகைக்கும் (blood group) செவ்வாய் பகவானுக்கும் தொடர்பு உண்டு.எனவே செவ்வாய் பகவான் இரத்த காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அடிப்படையில் தான் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற ஒரு அமைப்பு பேசப்பட்டு வருகிறது.
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி அல்லது சுக்கிரன் இருக்கும் இடம் இரண்டு நான்கு ஏழு எட்டு மற்றும் பன்னிரண்டு போன்ற இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை செவ்வாய் தோஷம் என்று அழைக்கப்படுகிறது..
என்னைப் பொருத்தவரை செவ்வாய் தோஷம் என்ற ஒன்றிற்கு பயப்படத் தேவையில்லை செவ்வாய் தோஷம் மனித உயிர்களை பழிவாங்கி விடுவதில்லை.
ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் பகவான் லக்னம் என்ற ஒன்றாம் இடம் குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தாலும் அல்லது பார்வை செய்தாலோ அவை திருமண தடையை சாதகருக்கு கொடுக்கிறது இவை தவிர பெரிய பாதிப்பை ஜாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.
இதில் சில விதிவிலக்குகள் இருப்பதாக மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது செவ்வாய் உச்சம்,ஆட்சி, நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறப்படுகிறது செவ்வாய் பகவனை வேறு கிரக பார்வை இருந்தாலும் தோஷ நிவர்த்தி அடைகிறது.
செவ்வாய் பகவான் காமக்கார கிரகம் ஆகும். செவ்வாயுடன் சனி, ராகு போன்ற கிரகங்கள் பார்வை சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவர் காம மிகுதியால் மனைவி அல்லாத மற்றொருவர் உடன் உறவு கொள்ளக்கூடிய நிலை உருவாகும் அதிக காம எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சுப கிரக பார்வை பெறும் பொழுது அதில் விதிவிலக்குகளும் உண்டு.
ஒருவருடைய வீர, தீர ,பராக்கிரம செயல்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் தேவைப்படுகிறது. செவ்வாய் பகவானை வலிமையாக பெற்ற ஜாதகம் முரட்டுத்தனம் கொண்டவராக இருப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு செவ்வாய் பகவானுடைய வலிமை மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
செவ்வாய் பகவான் லக்னத்தில் அல்லது லக்கினத்தை பார்த்தாலும் முரட்டுத்தனம் படைத்தவர்களாக இருப்பார்கள் .இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது கோபம் மற்றும் அனுசரித்து போகும் தன்மை அறவே அற்றவராக இருப்பார்கள்.
செவ்வாய் பகவான் உடன் சூரியன், சந்திரன் மற்றும் குருபகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையை அடைந்து சாதகருக்கு நல்ல பலனை அள்ளி கொடுப்பார் .அதே நேரத்தில் சனி ,ராகு போன்ற இயற்கை பாவ கிரகங்களுடைய தொடர்பை பெறும் பொழுது இந்த செவ்வாய் தசை கடுமையான கஷ்டங்களை நஷ்டங்களை ஜாதகருக்கு கொடுப்பார்.
செவ்வாய் பகவான் நிழல் கிரகமான கேது பகவான் உடன் இணைந்த நிலையில் மறைமுக வலுவான சூட்சும வலிமையை பெறுகிறது.கேது பகவான் உடன் இணைந்த செவ்வாய் பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
பொதுவாக பாவ கிரகங்கள் நேர் வலு பெறாமல் மறைமுக வலிமை பெற்று இருந்தால் அவை ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.
உதாரணமாக துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் ஸ்தான வலிமை இழந்து மறைமுகமாக திக் பலம் பெற்று மறைமுக வலு பெற்ற செவ்வாய் பகவான் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.
அதேநேரத்தில் கன்னி லக்கினத்திற்கு செவ்வாய் பகவான் மூன்று மற்றும் எட்டுக்கு உடையவர் மேலும் லக்கன அவ யோகர் ஆகும் . அதாவது கன்னி லக்கினத்திற்கு வரக்கூடாத தசை செவ்வாய் தசை ஆகும்.இவர் ஐந்தாம் இடமான மகரத்தில் உச்சம் பெற்று நேர்வலு பெற்று இருப்பது சாதகருக்கு நல்ல பலனை தருவதில்லை.
செவ்வாய் பகவான் தரும் பாதிப்பிலிருந்து விலக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வணங்கி வழிபட உத்தமம். துவரம் பருப்பு ,சிவப்பு சேலை ரவிக்கை மற்றும் மஞ்சள் கயிறு இவற்றை சுமங்கலிக்கு தானம் செய்யலாம். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது. மாயவரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தாலும் பழனி மலைக்குச் சென்று முருகனை வழிபட்டாலும் செவ்வாயால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விலகலாம்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.).
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.