Monday, 5 January 2026

ஜாதக பலன் கணிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை.

 ஜாதக பலன் காணும் பொழுது கவனிக்க வேண்டியவை .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மை உடையதாக உள்ளதோ, அந்த கிரகம் அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களை சிறப்பாக ஜாதகருக்கு கொடுக்கிறது.


 ஆதிபத்தியம் தரும் பலன்களை அதன் தசை காலங்களிலும் மற்றும் காரக பலன்களை வாழ்நாள் முழுவதும் தரக்கூடிய தன்மையை பெறுகிறது.


 ஆதிபத்தியம் என்பது அவரவர் லக்கினத்தை பொறுத்து மாறுபடுகிறது.காரகத்துவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.


உதாரணமாக குரு பகவான் பணம், பதவி, பட்டம், புகழ் ,கல்வி ,ஞானம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரக்கூடிய ஒரே கிரகம் ஆகும்.


 அதே நேரத்தில் குரு பகவான் மேஷ லக்கனமாக இருந்தால் ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதியாக இருக்கும்.இவை பாக்கியம் மற்றும் விரய அதிபதியாக செயல்படுவார்.இவர் லக்கன யோகர் ஆவார்.இந்த லக்கனத்திற்கு குரு பகவான் தசை யோக தசையாக செயல்படுகிறது.


ஆனால் ரிஷபம் லக்கனமாக ஆக இருந்தால் இதே குரு பகவான் எட்டு மற்றும் பதினொன்றாம் இட அதிபதி ஆகி விடுவார் அதாவது அஷ்டம மற்றும் லாப அதிபதி ஆக செயல்படுவார்.இங்கு குரு பகவான் அவ யோகத்தை தரும் தசையாக அல்லது இந்த லக்கனத்திற்கு வர கூடாத தசையாக ஆகி விடுகிறார்.


எனவே எந்த ஒரு ஜாதக பலனை துல்லியமாக பலன் அளிப்பதற்கு லக்கனம் மற்றும் அதன் அதிபதி மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.லக்கனமே ஜாதகருக்கு அச்சாணியாக திகழ்கிறது.


 லக்கனத்தினை அடிப்படையாக கொண்டு தசா புக்தி பலன்கள் கணிக்கப்படுகிறது.கோச்சார பலன்களை ராசியை அடிப்படையில் கணிக்கப்படுகிறது.


சில நேரங்களில் விதி கெட்டால் மதி‌ என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஆதாவது உயிர் என்று அழைக்கப்படும் லக்கனம் கெட்டு விட்டால் ராசியை அடிப்படையாக கொண்டு தசா பலன்கள் அறியப்படுகிறது.சில நேரங்களில் ராசியும் கெட்டு விட்டால் சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு ஜாதக பலன் கணக்கிடப்படுகிறது.இதனை கதி என்று அழைக்கப்படுகிறது.


எந்த ஒரு காரக பலன்களை கணிக்க முற்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து ஜாதக பலனை அளிக்க முயல வேண்டும்.இதனை லக்கனம் மற்றும் ராசி என இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் 


காரகத்துவ பலன்களை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது உயிர் காரகத்துவம்‌ மற்றும் ஜட காரகத்துவம் என்று இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க படுகிறது.


உயிர் காரகத்துவ பலன்களை லக்கனம் மற்றும் ராசி என இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக புத்திர பாக்கியம் பற்றிய உயிர் காரகத்துவத்தை ஆராய்ந்து பார்க்க ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரு வழிகளில் ஆய்வு செய்து பலன் அறியப்படுகிறது.


கல்வி போன்ற ஜட காரகத்துவங்களை லக்கினத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டும் ஆய்வுக செய்து பார்த்தாலே போதுமானதாக உள்ளது.


ராசியில் ஒரு கிரகம் இருக்கும் இடத்தின் அதிபதி உடைய நிலை, பார்வை அல்லது சேர்க்கை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து பிறகு அமசத்தில் அதன் பாவ அல்லது சுப வர்க்கம் ஏறி இருக்கிறதா ? என்பதை ஆராய்ந்து நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகிய பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜாதக பலன் அறிய வேண்டும்.


நன்றி 


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


For another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: