கேது பகவான் என்ன தருவார் ?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
கேது பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை ராகு பகவான் அளவிற்கு கெடுக்க மாட்டார்
கேது பகவான் ஞான காரகன் என்றும், செம் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.
கேது பகவான் விருச்சகம் ,சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் நின்று அதன் தசை நடத்தும் பொழுது நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுப்பார்.
கேது பகவான் பாவ கிரகமான அதாவது முழு இருள் கிரகமான சனி பகவானுடன் இணைந்த நிலையில் சூட்சும பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறார். கேது பகவானுடன் இணைந்த சனி பகவான் மிக அதிக அளவில் கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுத்து விடுவது கிடையாது.
இதேபோல கேது பகவான் முக்கால் பாவ கிரகமான செவ்வாய் பகவானுடன் இணைந்த நிலையிலும் சூட்சும வலுவை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறார்.
அதே நேரத்தில் சனி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் கேதுடன் இணைந்த நிலையில் அல்லது சனி மற்றும் கேது இணைந்து செவ்வாய் பகவான் பார்வை செய்த நிலையில் அல்லது செவ்வாய்க் கேது இணைந்து சனி பகவான் பார்வை செய்த நிலையிலும் கேது பகவான் ஜாதகருக்கு சூட்சும வலுவை தருவதில்லை.
சூரிய பகவான் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் ஆன்மிக நிலையில் உயரிய நிலையினைஅடைய செய்கிறது.
குரு பகவானுடன் கேது பகவான் இணைந்த நிலையில் கேள யோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை தருகிறது.
சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் ஜாதகருக்கு ஞான நிலையை அளிக்கப்படுகிறது.
புதன் பகவானுடன் கேது இணைந்த நிலையில் வித்தையில் சாதுர்யத்தை அள்ளிக் கொடுக்கிறது.
சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் சந்திரன் வளர்பிறை சந்திரன் உடனா அல்லது தேய்பிறை சந்திரன் உடனா? என்பதை பொறுத்து சந்திரன் மற்றும் கேது பகவான் இணைவின் பலன் அமைகிறது.
வளர்பிறை சந்திரன் உடன் கேது பகவான் இணைந்த நிலையில் நல்ல பலனை ஜாதகருக்கு அளிக்கிறது
ஜாதகரை ஆன்மீக எண்ணம் உடையவராக திகழ்வார். தேய்பிறை சந்திரன் உடன் கேது இணைவு அப்படி ஒன்றும் பெரிய நல்ல பலன்களை தந்து விடுவதில்லை.
கேது பகவான் லக்னத்தில் அமர்ந்து உள்ள நிலையில் ஜாதகரை தாழ்வு மனப்பான்மை உடையவராக மாற்றி விடுகிறது.திருமண தடையை உடையவராக ,கால தாமத திருமணம் செய்பவராக ஜாதகரை மாற்றிவிடுகிறது.
இரண்டாம் இடத்தில் கேது பகவான் அமரும் பொழுது கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராக வாக்கு வன்மை உடையவராகவும் ஜாதகரை மாற்றி விடுகிறது.கால தாமத திருமணம் செய்பவராகவும் மாற்றி விடுகிறது.
மூன்றாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் சகோதர தோஷம் உடையவராக
இருப்பார்.
நான்காம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் நான்காம் அதிபதி பலவீனம் அடைந்த நிலையில் சொந்த வீடு அமையாமல் வாடகை வீட்டில் கடைசி வரை வசிக்கும் நிலை உண்டாகும். தன் சுகம், தாய் சுகம், வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும்.
ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் ஆன்மீகம் நாட்டம் உடையவராக கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணக்கூடிய யோகம் உண்டாகும்.
ஐந்தாம் இடத்தில் உள்ள கேது பகவானை குரு பகவான் பார்வை செய்த நிலையில் ஆன்மீகத்தில் உயரிய எல்லையை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.
ஆறாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் எதிரியை வெல்லக்கூடிய தன்மை உண்டாகும்.
ஏழாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு தருகிறார்.இது ஒரு சர்ப்ப தோஷம் ஆகும்.
எட்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்த நிலையில் களத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறார்.இது கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.
ஒன்பதாம் இடத்தில் கேது பகவான் தானம் தர்ம குணம் உடையவராக திகழ்வார்.தந்தை ஸ்தானம் மற்றும் அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் சூரியன் ஆகிய கிரகங்கள் உடைய நிலையை பொறுத்து தந்தையின் நிலையானது அமைகிறது .
பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற நிலையில் பத்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேது பகவான் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
12ஆம் இடத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் ஜாதகருக்கு முக்கிய நிலையை கொடுக்கிறது.
கேது பகவான் தரும் தடையில் இருந்து விடுபட ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.கீழப்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.
கேது பகவானும் ராகு பகவானுக்கு போல சொந்த வீடு கிடையாது இருக்கின்ற வீட்டை சொந்த வீடாக கருத வேண்டும் எல்லா கிரகங்களும் முன் நோக்கி நகர கேது பகவானும் பின்னோக்கி நகரக்கூடிய கிரகம் ஆகும்.எனவே இவற்றிற்கும் வக்ர கதி கிடையாது.
இவற்றிற்க்கும் ஸ்தான பலம் ,திருக் பலம்,திக் பலம் போன்ற எந்த ஷட் பலன்களையும் பெற்றிருப்பது கிடையாது.இவற்றிற்கு அஸ்தங்கம் தோஷம் கிடையாது.ஒரை கிடையாது.வாரத்தின் ஏழு நாட்களில் இடம் கிடையாது. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் எமகண்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அஸ்வினி ,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக கேது பகவான் விளக்குகிறார் .அதன் தசைக்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.



















