Tuesday, 2 January 2018

"கேள்வியும் நானே பதிலும் நானே "

கேள்வியும் நானே பதிலும் நானே -(1)

                                                     

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

                                      இந்த கேள்வியும் நானே பதிலும் நானே -என்ற தலைப்பின் கீழ் சோதிடம் / ஆன்மீகம் தொடர்பாக தாங்களுக்கு எழும் சந்தேகங்களை விளக்கும் விதமாக  கேள்விகளை நானே எழுப்பி அதை விளக்கும் விதமாக இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

1) பரிகாரம்  செய்வதால் பலன் உண்டா ?

                        ஒருவரது சாதகத்தில் திசை புத்திப்படியோ அல்லது கோச்சாரப்படியோ ஒருவருக்கு நடக்க  இருக்கும் பலனை யாராலும் ஏன் தெய்வத்தாலும் கூட மாற்ற முடியாது.நடப்பது நடந்தே தீரும்.ஆனால் முழு மன நம்பிக்கையோடு இறைவனுக்கு செய்யப்படும் பரிகாரங்களோ அல்லது அடிப்படை தேவைகளுக்கே அல்லாடும் ஏழைகள் ,அனாதைகள் மற்றும் உடல்ஊனமுற்றோர்கள் ஆகியவர்களுக்கு நீங்களே நேரடியாக செய்யப்படும் தர்மங்களாலோ நிச்சயமாக பலன் உண்டு.

                                  என்ன சார் நடப்பது நடந்தே தீரும் என்று கூறி விட்டு பிறகு பரிகாரத்தாலும் பலன் உண்டு எனவும் குழப்புகிறீரே என வினா எழுப்ப தோன்றும்.நான் கூறிய இரண்டு பதிலும் சரியே.எப்படி என விளக்குகிறேன் சற்று பொறுமையாக பின்தொடருங்கள்.

                                   ஒருவருக்கு சாதக விதிப்படி விபத்து ஒன்றை சந்திக்கவேண்டும் என இருந்தால் ஆனால் கட்டாயம் நடந்தே தீரும்.இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் அவரால் முழு மன நம்பிக்கையோடு தொடர்ந்து செய்யப்பட்டு வந்த பரிகாரத்தாலோ அல்லது தர்மத்தாலோ விபத்தின் தன்மையை மாற்றி அமைக்கும் சக்தி தெய்வத்திற்கு உண்டு.

                                  அதாவது பேருந்தோடு(பஸ்) நேருக்கு நேராக நடந்த மோதலில் பேருந்து டிரைவர் போட்ட சடன் பிரேக்கால் பேருந்து மேதி சிறு சிறு ரத்த காயத்தோடு பெரிய இழப்பு இன்றி (கை,கால் முறிவு இல்லாமல்) தப்பிக்கும்  வாய்ப்பை அந்த பரிகாரத்தால் உமக்கு கிடைத்துவிடுகிறது.
இதனைதான் நமது கிராம மக்கள் தமது பழமொழி வாயிலாக நான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு பதிந்த பதிவை ஒற்றை வரியில் கூறிவிடுவார்கள்.

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு"
என்றும்
"ஓங்கி அடிக்கிறது தாங்கி அடிக்கும்"

                           எனவும் ஒற்றை வரியில் சோதிட உண்மையை கூறியிருப்பார்கள்.
எனவே நாம் செய்யும் பரிகாரம் சோதனையின் தன்மையை குறைக்கும் அல்லது சோதனையை தாங்கிக்கொள்ளும் வலிமையைத்தந்து அந்த பிரச்சினை
யை எளிதாக உருண்டோடச்செய்வார்.

2) சார் எவ்வளவோ பரிகாரம் செய்து பார்த்துட்டேன் ஒரு பரிகாரத்தாலும் பலன் இல்லை என்ன செய்தால் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்?


                                         "முழு மன உறுதியோடு இறைவனுக்கு செய்யப்படும் பரிகாரத்தால் முழுப்பலன் உண்டு.

                                 பரிகாரம் என்றால் பெரும் தொகை செலவழித்து செய்யப்படும் பரிகாரத்தால்தான் பலனை அதாவது  இறைவனிடம் இருந்து பாவமன்னிப்பு கிடைக்கும் என்பதில்லை .பரிகார பலன் நீங்கள் செய்யப்படும் தொகையால் (பணத்தால்) அல்ல.நீங்கள் இறைவனுக்கு கொடுக்கப்படும் மன உறுதியான வழிபாட்டால்.வெறும் பணத்தால் மட்டும் செய்யப்படும் பரிகாரத்தால் பலன் இல்லை.அவை அகந்தையால் அகந்தை வளர்ப்பவை.நான் இவ்வளவு பெரிய மாலையை யாரும் கட்டிபோடாத அளவு கட்டிபோட்டிருக்கிறேன்.எனக்கு மற்றவரை விட அதிக லாபத்தை கொடு என்பது கடவுளிடம் கூட வியாபரம் தேடும் தந்திரம் அல்லது நான் பெரிய பணக்காரன் என்பதை மற்றவருக்கு காட்டிக்கொள்ளும் விஷயம்.எனவே இறைநம்பிக்கையோடு ஒரு சிறு நெய்விளக்கு ஏற்றி வைப்பதுகூட பரிகாரம்தான்.

                        எனவே வெறும் ஆடம்பாரத்தால் செய்யப்படும் பரிகாரங்களால் பலன் இல்லை.

3) கடவுளின் அருளைப்பெற இறைவனுக்கு செய்யப்படும் செலவால் மட்டும்தான் பெற முடியுமா ? சக மனிதனுக்கு செய்யப்படும் உதவியால் பெற முடியாதா ?


                          "பிரார்திக்கும் உதடுகளை விட உதவி செய்யப்படும் கரங்களே மேல்"
"கடவுளுக்கு செய்யப்படும் தொகையை அன்றாடம் உண்ணும் உணவு ,உடை இல்லாமல் அல்லல்படுபவர்களுக்கோ அல்லது கை கால்களை இழந்து தவிக்கும் ஊனமுற்றோர்களுக்கோ அல்லது
ஆதரவற்ற அனாதைகளுக்கோ அல்லது திறமையிருந்தும் படிக்க வசதியில்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கோ உதவி செய்யும்போது அவர்கள் உங்களை தெய்வமாக எண்ணி கை தூக்கி கும்பிடுவார்கள்.
அவ்வாறு செய்யப்படும் உதவிகளால் கடவுளுக்கு பிரியமான பிள்ளைகளாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.அப்பொழுது நீங்களே தெய்வமாகி விடுகிறீர்கள்
.இதனால்தான் இந்த உலகில் பிறர் நலனில் அக்கறையோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் விண்ணில் தெய்வமாக மாறுகிறார்கள் என்பதை திருவள்ளுவர் தமது குறளில் அழகாக கூறியிருப்பார்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் "

                          யார் யார் பிறர் போற்ற அல்லது தெய்வம் என கும்பிடும் அளவிற்கு சேவை செய்பவர்கள்தான் பிறகு விண்ணகத்தில் வாழும் தெய்வங்கள்.
எனவை "சக மனிதனை நேசி "அதுவே கடவுளுக்கு செய்யப்படும் பரிகாரங்களை விட பெரிய பரிகாரம் ஆகும்.சக மனிதனை நேசிக்காது வெறும் பணத்தை செலவழித்து இறைவனிடம் பரிகாரம் தேட நினைப்பது "பஞ்சால் நெருப்பை அணைக்க முயல்வது போல " ஆகும்.
"கையில் உள்ள பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு பிறகு இரண்டு கை தூக்கி சாமி என கும்பிடுவதை விட அந்த கையில்  உள்ள பணத்தை இயலாதவருக்கும்,முடியாதவருக்கும் கொடுத்து உதவி செய்யும்போது  அவர்கள் இரண்டு கையை தூக்கி உன்னை சாமி என கும்பிடுவார்கள் "

                                                                               

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆய்வாளர்,

ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

செல்  : 97 151 89 647
Cell : 740 257 08 99
Whatsup no
    97 151 89 647

(போன் வழியாக தங்களது சாதகத்தினைவீட்டிலிருந்தபடியே பார்க்க தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு )
Message your date of birth ,time and place in my whatsup.

No comments: