யோகமுள்ள மனைவி அமைய
கிரகநிலைகள் எப்படி அமையப்படவேண்டும் ?
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 31 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
"ஒரு பெண் குடும்பத்தில் மருமகளாக அடியெடுத்த வைத்து அந்த குலவிளக்கை ஏற்றிய பிறகு குப்பையாக கீழ்மட்டத்தில் இருந்த அந்த குடும்பம் கோபுரம் போல உயர்ந்து நிற்கும்.
.அந்த குடும்பம் பெண் மகாலெட்சுமியாக அந்த வீட்டில் நுழைந்த பிறகு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த குடும்பம் இன்றைக்கு சாப்பிடவே நேரம் இல்லாத அளவிற்கு சொத்தும்,சமூக அந்தஸ்தும் பெருகி தனது கணவனை உயர்த்தியுள்ளது.
இவ்வாறு புகழ்ந்து கூறும் அளவிற்கு ஒருவருக்கு மனைவி அமைய சாதகத்தில் கீழ்கண்ட அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்தில் புதன் உச்சவீட்டிலிருந்து பதினொன்றாம் வீட்டில் குரு பகவானும் இருக்க பிறந்தவளை மனைவியாக பெற்றவன் ராஜ ஸமானாக ஆவான்.
புதன் பகவான் உச்சனாய் லக்கனத்திலிருந்து குரு பதினொன்றிலும்,சுக்கிரன் இரண்டிலும் ,பத்தில் சந்திரனும் இருக்க பிறந்த பெண்ணை மனைவியாக மணப்பவன் உலக பிரசித்தி பெற்றவனாகவும்,எல்லோராலும் கொண்டாடப்படும் ராஜயோகம் அவனை வந்தடையும்.
ஸ்திர லக்கனத்தில் குருவிலிருந்து அங்காரகன் மூன்றாமிடத்திலோ அல்லது ஆறாமிடத்திலோ இருந்து, பலம் பெற்ற சனி பதினொன்றாம் இடத்தில் இருக்க பிறந்தவளை மனைவியாக அடைந்தவன் போக போக்யங்களிலும்,சுகமும் நிறைந்த பாக்கியவான் ஆவான்.
லக்கனத்தில் சுக்கிரனும் ,மூன்றாம் இடத்தில் புதனும்,நான்காமிடத்தில் பலம் பெற்ற குருவும் உள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் அரசனுக்கு சமமான பாக்கியவான்.
பூர்ண சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று குருவினால் பார்க்கப்பட்ட பெண்ணை மனைவியாக பெற்றவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
லக்கனத்தில் பூரண சந்திரனிலிருந்து பதினொன்றில் சூரியன் உச்சனாகவும்,பத்தில் புதனும் உள்ள பெண்ணை மணந்தவன் அரசனாவான்.
ஒரு பெண்ணின் சாதகத்தில் களஸ்திரகாரகனான செவ்வாய் பாவிகளின் சம்பந்தம் பெறாமல் மேலும் லக்கனம்,இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இது போன்ற ஸ்தானங்களில் பாவிகள் இடம்பெறாமல் அந்த இடங்களுக்கு சுபர் பார்வை பெற்று அந்தந்த ஸ்தானாதிபதிகள் அந்தந்த ஸ்தானங்களில் உச்சம் ஆட்சி போன்ற நேர் வலு பெறாமல் சூட்சும வலுபெற்ற பெண்ணை மனைவியாக பெற்றவன் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்பு கொள்ள
செல் : 97 151 89 647
740 257 08 99
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
Email: masterastroravi@gmail.com
**************************************************************
**************************************************************
website
:AstroRavichandransevvai.blogspot.com
(தங்களுடைய சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்தல் போன்ற சேவைகளையெல்லாம் வீட்டிலிருந்தபடியே போன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு .
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் ).
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் ).
No comments:
Post a Comment