Tuesday, 20 May 2025

கோள்களின் கோளாட்டம் -(2)

 கோள்களின் கோளாட்டம்- (2)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


  கோள்கள் மனித வாழ்வை எம் முறையில் வழிநடத்தி செல்கிறது என்பதை தொடர் கட்டுரையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  சென்ற பதிவில் சூரியனைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டோம் .இந்த பதிவில் மற்றொரு ஒளிக்கிரகமான சந்திர பகவான் பற்றி ஒரு சில அடிப்படை செய்திகளை மற்றும் ஆழமான செய்திகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.


 கிரகங்களில் தாயாக விளங்குவது மற்றும் தாய்க்கு காரக கிரகமாக விளங்குவது சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானை மனநிலை காரகன் என்று அழைக்கப்படுகிறது.


    சந்திர பகவானுடன் சனி அல்லது ராகு நெருக்கமாக இணையும்போது அல்லது சந்திரனை சனி பார்க்கப்படும் பொழுது அதிலும் குறிப்பாக தேய்பிறை சந்திரன் ஆக இருந்து சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது மனதளவில் ஒரு உறுதியற்ற தன்மை பயம் கலந்த உணர்வு எப்பொழுது ஜாதகரிடம்  இருந்து கொண்டிருக்கும்.


 ஜாதக கட்டத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஜென்ம ராசி என்று அழைக்கிறோம் 

  சந்திரனை மையமாகக் கொண்டே கோச்சார பலன்கள் , நாள் ,வார ,மாத மற்றும் ஆண்டு பலன்கள் அறியப்படுகிறது. சனி ,குரு ,ராகு மற்றும் கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்கள் ராசியை மையமாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.


சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் சனி வரக்கூடிய காலங்களில் ஒருவருக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது.. இது முதல் சுற்று #மங்குசனி என்றும் இரண்டாவது சுற்று ஏழரைச் சனியை #பொங்குசனி என்றும் மற்றும் மூன்றாவது சுற்று ஏழரைச் சனியை #மரணச்சனி என்று அழைக்கப்படுகிறது.


 சந்திரன் இருக்கும் இடத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சனி  பகவான் இருக்கக்கூடிய இரண்டரை ஆண்டுகளும் #விரயச்சனி  என்று அழைக்கப்படுகிறது ராசியில் சனி இருக்க கூடிய இரண்டரை ஆண்டுகளும் #ஜென்மசனி என்று அழைக்கப்படுகிறது . ராஜிக்கு இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கக்கூடிய 2 1/2 ஆண்டுகளும் #பாதச்சனி  என்று அழைக்கப்படுகிறது


சந்திர பகவான் உடன் குரு சேரும் பொழுது #குருசந்திரயோகம் ,

சந்திர பகவான் உடன் செவ்வாய் சேர்க்கை பெறும் போது #சசிமங்களயோகம் ,

சந்திர பகவானுக்கு ஆறு,ஏழு , எட்டாம் இடத்தில் குரு பகவான் இடம்பெறுவது #சகடையோகம் ,

சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு நான்கு கேந்திரத்தில் இடம் பெறேவது #கஜகேசரியோகம் போன்ற யோகங்களை சந்திர பகவான் தரக்கூடிய யோகங்களாகும்.


சந்திர பகவான் கடக வீட்டை ஆட்சி வீடாகவும்,  ரிஷபத்தை உச்ச வீடாகவும் விருச்சிகத்தை நீச வீடாகவும் கொண்டுள்ளது.


ரோகினி, அஸ்தம் ,திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் தசை நாதனாக சந்திர பகவான் வழங்குகிறார். சந்திர தசை 10 ஆண்டுகள் ஆகும். 


சந்திரன் ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் தங்குவார். சந்திர பகவான் சூரியனை 8 பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை  யோகத்தை தருகிறது. சூரியனை விட்டு சந்திரன் ஏழாம் வீட்டிற்கு அதாவது 150 பாகை விலகிச் செல்லும் பொழுது பௌர்ணமி அமைப்பை தருகிறது.


தேய்பிறை பஞ்சமி திதியில் இருந்து வளர்பிறை பஞ்சமி திதி வரை  வளர்பிறை காலமாகவும் ,

பௌர்ணமி பஞ்சமி திதியில் இருந்து தேய்பிறை பஞ்சமி திதி  வரை தேய்பிறைக் காலமாகவும் கருதப்படுகிறது.


வளர்பிறை காலத்தை பூர்வபட்சம் அல்லது சுலபட்சம் என்று அழைக்கப்படுகிறது.தேய்பிறை காலத்தை அமரபட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது 


சந்திர பகவான் குரு அணியைச் சேர்ந்த  கிரகமாகும் நட்பு கிரகங்களாக சூரியன், செவ்வாய் ,குரு விளங்குகிறார். சந்திரன் புதனை பகையாக கருதியது ஆனால் புதன் சந்திரனை பகையாக கருதுவதில்லை. 


லக்னத்தில் தேய்பிறைச்சந்திரன், சனி செவ்வாய், ராகு போன்றவை தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பில் பிறக்கக்கூடிய குழந்தை ஆட்டிசம் குழந்தையாக அதாவது மன வளர்ச்சி  குறைந்த குழந்தையாக வளர்கிறது..


 வளர்பிறை சந்திரன் சுபத்துவமான முறையில் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் குடிக்க இயலக்கூடிய திரவங்கள் பால், ஐஸ் கிரீம், கடல் வாழ் உயிர்கள் வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.


வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு ,புதன் ,சுக்கிரன் நிற்கும் பொழுது. #சந்திராதியோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


   சந்திரன்  நிற்கும் இடத்திற்கு இரண்டு பனிரெண்டாவது இடங்களில் சுப கிரகங்கள் நிற்பது   #சுனபாயோகம் மற்றும் #அனபாயோகம் என்று அழைக்கப்படுகிறது.


ராசிக்கு இரண்டு புறத்திலும் இயற்கை சுப. கிரகங்கள் நின்றால் #சுபகர்த்தாரியோகம்   அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு புறங்களில் பாவ கிரகங்கள் இருந்தால்  #பாவகர்த்தாரியோகம் ஆகும்.


 சந்திர பகவான் நான்காம் இடத்திற்கு காரக கிரகமாகும் . நான்காம் இடம் மாதுர் ஸ்தானம் என்றும் ,அதன் அதிபதி மாதுர் ஸ்தானாதிபதி என்று அழைக்கப்படுகிறது.


 நான்காம் இடம் அதனுடைய அதிபதி மற்றும் காரக கிரகமான சந்திரன் வலிமை பெற்று சுபர் பார்வை மற்றும்  சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல புகழ் அடைவார் .தாய் வழியில்  நல்ல ஆதரவு கிடைக்கும்.

நன்றி.

ஃபோர் online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     


அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

No comments: