கோள்களின் கோளாட்டம்- -(3)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் 12 ராசிக்குள் இடம்பெற்று என்னென்ன மாற்றங்களை, ஏற்றங்களை மற்றும் தாழ்வுகளை எல்லாம் மனிதனுக்கு தருகிறது என்பதை தொடர் பதிவாக பார்த்து வருகிறோம்.
இன்றைய பதிவில் செவ்வாய் பகவான் மனித வாழ்வை எந்தெந்த மாற்றங்களை தருகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் சகோதரக்காரகன் என்றும், பூமிக்காரகன் என்றும் மற்றும் காமக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் இளைய சகோதரன் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் மூன்றாம் இடமாகும். இந்த இடத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் இயங்குகிறது..
செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகம் வீட்டில் ஆட்சி வீடாகவும் கடகத்தில் நீசமாகவும். மற்றும் மகரத்தில் உச்சமாகவும் உள்ளது மிருகசீரிடம் ,சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக செவ்வாய் பகவான் விளக்குகிறார்.செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் ஆகும்.
செவ்வாய் பகவான் பத்தாம் இடத்தில் திக் பலம் பெறுகிறார் நான்காம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறார்.
செவ்வாய் பகவான் வலிமையாக சுப தன்மையுடன் இருக்கும் பொழுது நிறைய நிலபலங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பார்.
செவ்வாய் பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து சிறப்பு பார்வையாக நான்கு மற்றும் எட்டாமிடத்தில் பார்வை செய்கிறார்கள்.
செவ்வாய் பகவான் ஒரு முக்கால் பாவராக செயல்படுகிறார். அப்படி என்றால் கால் பங்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.. எனவே செவ்வாய் பகவான் பார்வை மற்றும் இணைவு குரு , சூரிய மற்றும் சந்திர கிரகங்களுக்கு பாதிப்பை தருவதில்லை மாறாக நல்ல பலனையே தருகிறது.
செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் அது முற்றிலும் தனது பலத்தை இழந்து சாதகரை ரவுடியாகவும் அல்லது காம எண்ணம் மிகுந்தாராகவும் இருக்க வைப்பார்.
செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் குருபகவான் ஆகியோரின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த செவ்வாய் பகவான் நன்றாக பலம் பெற்று சுப தன்மை அடைந்து அவற்றுக்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலன்களை சிறப்பாக வழங்குகிறது.
செவ்வாய் பகவான் சூரியனை அதி நட்பு கிரகமாக கொண்டது.
செவ்வாய் பகவான் குருவுடன் இணைவது
குரு மங்கள யோகத்தை தருகிறது. சுக்கிரனுடன் இணையும் பொழுது
பிருகு மங்கள யோகத்தை தருகிறது.
சந்திரன் உடன் செய்யும்பொழுது
சசி மங்கள யோகத்தை தருகிறது.
உங்க ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் நிலைகளில் கேந்திரங்களில் நிற்கும் பொழுது பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான "ருசக யோகத்தை பற்றி தருகிறது.
செவ்வாய் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் அதிக சுப தன்மையை அடைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அல்லது தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது எம்பிபிஎஸ் போன்ற உயரிய படிப்பு படிக்கக்கூடிய யோகத்தை ஜாதகர் பெறுவார்.
அதற்கு அடுத்தபடியான சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப ENT டாக்டர் ,சித்தா, வெட்னரி டாக்டர் ,ரத்த பரிசோதனை நிலையம் வைத்து நடத்துபவர் ,கறிக்கடை வைத்து கசாப்புகளை நடத்துபவர் போன்றவை எல்லாம் செவ்வாய் உடைய சுபத்துவ பாவத்தை படிநிலைக்கு ஏற்ப அமைகிறது.
செவ்வாய் பகவான் அதிகமான சுபத்து நிலையில் தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் ஈடுபட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுவரை சுட்டு பதக்கங்களை பெறுவார்கள் .
அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பாவத்தன்மை அடைந்த நிலையில் பல பேரை சுட்டு வீழ்த்தி அல்லது பொது இடங்களில் பல்வேறு பொதுமக்களுக்கு பாதிப்பு ஈடுபடும் வகையில் நடந்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அல்லது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
செவ்வாய் பகவானுடைய சுப தன்மைக்கு ஏற்ப சிவில் இன்ஜினியர் , விவசாயம் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் நிலையில் ஈடுபட வைப்பார். மாணவர்களுக்கு வீர தீர விளையாட்டுகளில் ஈடுபடும் ஆர்வம் உண்டாகும்.
செவ்வாய் பகவான் சனி உடன் இணைந்து எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது.
செவ்வாய் பகவான் சனியின் பார்வையை பெற்ற நிலையில் அதனுடைய பார்வையானது கடுமையான கெடுபலனை தரக்கூடிய பார்வையாக அமைகிறது.
செவ்வாய் பகவான் சனியுடன் இணைந்த நிலையில் அல்லது சனியின் பார்வையை பெற்ற நிலையில் அவை பாவ நிலையினை அடைந்து கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.
செவ்வாய் பகவான் ராசி மற்றும் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8, 12-ஆம் இடங்களில் இருக்கும் பொழுது செவ்வாய் தோஷத்தை தருகிறது. செவ்வாய் தோஷம் கண்டு பயப்பட தேவையில்லை இது உயிரை கொள்ளும் அளவிற்கு மோசமான தோஷம் அல்ல இவை குறிப்பாக லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் இந்த நான்கு இடங்களில் இருக்கும் பொழுது கால தாமதமாக திருமணத்தை தருகிறது.
லக்கனத்தில் இருக்கும் பொழுது லக்கனத்தை பாவ தன்மையை அடைய வைப்பதுடன் ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடத்தை தனது ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் பார்க்கிறது.
குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருக்கும்பொழுது குடும்ப ஸ்தானத்தையும் , தனது சம சப்தமான ஏழாம் பார்வையால் மாங்கல்ய ஸ்தானத்தையும் பாவத்தன்மை அடைய வைக்கிறது.
ஏழாம் இடத்தில் செவ்வாய் பகவான் இடம்பெறும் பொழுது ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும் , தனது சமசப்தமான ஏழாம் பார்வையால் லக்கனத்தையும் மற்றும் தனது எட்டாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்து பாவத்தன்மை அடைய வைத்து விடுகிறார்.
எட்டாமிடத்தில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் மற்றும் தனது சம சப்தமான பார்வையால் குடும்பஸ்தானத்தையும் பார்வை செய்து காலதாமத திருமணத்தை தர வைக்கிறார்.
இந்த செவ்வாய் பகவானை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன் தொடர்பு கொள்ளும் பொழுது பாதிப்பை தருவதில்லை மாறாக பாவ கிரகங்களான சனி ,ராகு தொடர்பு கொள்ளும் பொழுது கூடுதலான பாவத்தன்மையை அடைந்து திருமணத்தை மிகவும் காலதாமதமாக செய்வதிலும் அல்லது நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதிலும் சிக்கலை உண்டு பண்ணுகிறது.
செவ்வாய் தசை தனுசு ,மீனம் ,மேஷம் விருச்சகம், கடகம் சிம்மம் லக்னங்களுக்கு யோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.
மிதுனம் கன்னி லக்கனங்களுக்கு செவ்வாய் தசை கடுமையான கஷ்டங்களை தரக்கூடிய அவயோக தசையாக கருதப்படுகிறது.சில நேரங்களில் தனது ஆறு மற்றும் எட்டாம் இடத்திற்கு ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் மறைந்து நிற்கும் போது தனது துர்பலன் நீங்கி மற்றொரு சுப ஆதிபத்திய நல்ல பலனை தருகிறது.சில நேரத்தில் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நல்ல பலனை தருகிறது.
செவ்வாய் தசை நடக்கும்போதும் செவ்வாயினால் காலதாமத திருமணம் ஏற்பட்டாலோ , செவ்வாய் தோஷம் இருந்தாலோ செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி வழிபட உத்தமம் .
துவரம் பருப்பு, சிகப்பு சேலை, ரவிக்கை மஞ்சள் கயிறு இவற்றை சுமங்கலிக்கு தானம் செய்யலாம்.
சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.
மாயவரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தாலும் ,பழனிக்கு சென்று முருகனை வழிபட்டாலும் தோஷம் நீங்கும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment