குரு பகவான் மற்றும் சனி பகவான் காட்டும் ஜோதிட பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நவ கிரகங்களில் குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் எந்த இடத்தில் அமர்ந்து உள்ளார்கள் என்பதை கவனிக்காமல் ஜோதிடர்களாகிய எவரும் பலன் அளித்து விட முடியாது.
குரு பகவானின் பார்வை கோடி நன்மையை தரும்.சனி பகவானின் பார்வை சர்வ நாசத்தை தரும்.
குரு பகவானுக்கு ஏழாம் பார்வையை தவிர ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வை என்ற சிறப்புப் பார்வையை கொண்டு உள்ளது.இதே போல சனிக்கு ஏழாம் பார்வையை தவிர மூன்று மற்றும் பத்தாம பார்வையை கொண்டு உள்ளது.
குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் சுப தன்மையை அடைய வைத்து வாழ்வில் நல்ல பலன்களை ஜாதகருக்கு தர செய்கிறார் . குரு பகவான் உடன் இணைந்த அல்லது குருவின் பார்வையை பெற்ற கிரகங்களும் சுப தன்மையை அடைந்து நல்ல பலன்களை ஜாதகருக்கு அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறார் .
குரு பகவான் பார்வையை பெற்ற பாவ அல்லது அவ யோக கிரகம் ஆக இருந்தாலும் அவற்றை சுப தன்மையை அடைய வைத்து அதன் தசையில் யோகத்தை அள்ளி தருகிறார்.குரு பகவான் தொடர்பை பெற்ற சுப கிரகங்கள் கூடுதலான சுப தன்மையை அடைந்து அதன் தசையில் யோகத்தை அள்ளித் தரும் அமைப்பை பெறுகிறது.
குரு பகவான் சுப தன்மையை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர் அல்லது பேராசிரியர் ஆக திகழ்வார்கள்.அதிக சுப தன்மையை அடைந்த நிலையில் நீதிபதியாக திகழ்வார்கள்.மேடை பேச்சாளர்,வழக்காடு மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஆக திகழ்வார்கள்.சுபத்துவ படிநிலை சற்று குறைய நகை கடை வைத்து நடத்துபவர் மற்றும் ஆலோசனை வழங்கும் மந்திரியாக திகழ்வார்கள்.
சனி பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பாவ தன்மையை அடைய வைத்து கடுமையான இன்னல்களை கொடுக்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.சனியின் பார்வையை பெற்ற எந்த ஸ்தானமும் மற்றும் எந்த ஒரு கிரகமும் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.
சனியின் பார்வையை பெற்ற யோக கிரகம் கூட சனியின் பார்வை பெற்றால் அவை பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை தரும் அமைப்பை பெறுகிறார்.
சனியின் பார்வையை பெற்ற லக்கன அவ யோகர் அல்லது பாவ கிரகம் ஆனது அதன் தசையில் கூடுதலாக பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடிய அமைப்பை பெறுகிறார்.
இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிர் தன்மையை கொண்ட குரு பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரும் இணைந்து உள்ள நிலையில் குரு பகவானால் சனி பகவான் சுப தன்மை அடைகிறது.சனி பகவானால் குரு பகவான் பாவ தன்மையை அடைகிறார்.
குரு மற்றும் சனி இணையானது ஜாதகன் ஆன்மீக வழியில் ஈடுபாடு கொண்டவராக செயல்படுவார்கள்.குரு மற்றும் சனி இணையானது ஜாதகரை பற்றற்ற வழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக ஜாதகரை மாற்றி அழகு பார்க்கும்.
குரு மற்றும் சனி பகவான் இணைவானது பற்றற்ற உண்மை சந்நியாசியாகும் அமைப்பை ஜாதகருக்கு கொடுக்கிறது.
குரு பகவான் எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது எந்த இடத்தை பார்த்தாலும் அந்த கிரகம் அல்லது ஸ்தானம் சுப தன்மையை அடைந்து வலிமை பெறுகிறது.குரு பகவானின் தொடர்பை பெற்ற எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் சுப தன்மையை அடைந்து அதற்கு உரிய நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
குரு பகவான் ஜாதகருக்கு பணம் ,பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தந்து வாழ்வில் உயரிய நிலை அடைய வைக்கக்கூடிய கிரகமாகும்.
குரு பகவான் நீதி , நியாயம், நேர்மைக்கு கட்டுபட்டவர் ஆவார்.அடுத்தவர் வளர்ச்சியை கண்டு எள்ளளவும் பொறாமை படாத தன்மை படைத்தவர்.அடுத்தவர் பணத்தை வஞ்சித்து சம்பாதிக்கும் கெட்ட குணம் இல்லாதவர்.ஏமாளி, பிழைக்க தெரியாதவர் . ஒயிட் கலர் ஷாப் புரிபவர்.நல்ல தேஜஸ் உடையவராக காணப்படுவார்.பாவ கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.
சனி பகவான் பாவத்துவமான நிலையில் அழுக்கான இடத்தில் வசிப்பவர்.கீழ் மட்ட தொழில் புரிபவர்,சொல்லி கொள்ள வெட்கப்பட்டுக் கூடிய தொழில் புரிபவர்.பொறாமை குணம் படைத்தவராக திகழ்வர் .குள்ளத்தன்மை கொண்டவராக இருப்பார்.சோம்பேறி ,மந்த தன்மை கொண்டவர்.இயற்கை சுப கிரக தொடர்பு ஏற்பட்டால் பலனில் மாற்றம் உண்டாகும்.
சனி பகவான் சுப தன்மை நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,மெஜினேரி வேலை,கனரக வாகனங்களை இயக்குபவர், வழக்கறிஞர்,பொது மக்கள் தொடர்பு கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் போன்ற பணிகளில் அமரும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் தொடர்பு மண்,கிரசர் போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள்.நீர் ராசிகளாக திகழும் கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் சுப தன்மை உடன் தொடர்பு கொள்ள குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற தொழில் புரிபவராக இருப்பார்கள்.
நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு போன்ற ராசிகளில் சனி பகவான் தொடர்பு கொள்ள தார் ரோடு போடும் ஒப்பந்ததாரர்களாக திகழ்வார்கள்.
சனி பகவான் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடத்தில் நிற்பது அல்லது பார்வை முறையில் மேற்கண்ட ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமாக விளங்கும் சுக்கிரன் உடன் தொடர்பு கொள்ள திருமண தடையை தருகிறார்.புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அல்லது காரக கிரகமாக விளங்கும் குரு பகவான் உடன் தொடர்பு புத்திர தடையை உருவாக்குகிறார்.
அதே நேரத்தில் குரு திருமண மற்றும் புத்திர ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது எல்லாம் சுபமாக மாறி நல்ல தன்மையை அடைய வைத்து மேன்மையை அடைய செய்கிறார்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
।






.webp)



.jpeg)

.jpeg)






