ராகு பகவான் எப்பொழுது கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க வைப்பார்?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ராகு பகவான் ஒருவர் ஜாதகத்தில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நின்று வீடு கொடுத்தவன் உச்சம் பெற்று நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ராகு பகவான் தசை ஆனது மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
ராகு பகவான் குரு பகவான் உடன் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள ராகு பகவான் குரு பகவானால் சுப தன்மையை அடைந்து விடுகிறார்.இவ்வாறு சுப தன்மையை அடைந்த ராகு பகவான் அதன் தசையில் அதிக யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
ராகு பகவான் அதன் தசையில் ஜாதகரே எதிர்பாராத வகையில் மிகப் பெரிய செல்வந்தர் ஆக்கி பார்க்கிறது.குப்பையில் கிடந்த வரை கூட கோபுர உச்சிக்கு கொண்டு சேர்க்கிறது.
ராகு பகவான் ஆனவர் அதன் தசையில் அந்நிய தேசம், அந்நிய மொழி, அடுத்தவர் பணம் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டம் போன்ற வகையில் கோடிக்கணக்கான அல்லது லட்ச கணக்கான தொகையை ஜாதகரை சம்பாதிக்க வைக்கிறது.
ராகு பகவான் ஆனவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் போன்ற ராசிகளில் நின்று அவையே லக்கினத்திற்கு மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நின்று அவையே இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய சுப கிரகங்கள் உடைய தொடர்பை பெற்ற நிலையில் மிகப் பெரிய யோகத்தை அதன் தசையில் அள்ளிக் கொடுப்பார்.
ராகு பகவான் ஆனவர் இணைய வழியில் கணினி அறிவை பயன்படுத்தி ஆன்லைன் வியாபாரம் மூலமாக கோடீக்கணக்கான பணத்தை சம்பாதிக்கும் மூளையை ஜாதகருக்கு கொடுப்பார்.
லாட்டரி, ரேஸ், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற வகையில் கூடுதலான பணத்தை சம்பாதிக்க கூடிய யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும் யோகத்தை ஜாதகருக்கு வழங்குகிறது.
ராகு பகவான் ஆனவர் சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ராகு பகவான் ஆனவர் மிகவும் பாவ தன்மையை அடைந்து அதன் தசையில் நல்ல பலனை தர இயலாதவர் ஆகி விடுகிறார்.
ராகு பகவான் ஆனவர் மகரம் மற்றும் கும்பம் போன்ற சனியினுடைய வீட்டில் அமர்ந்து செவ்வாய் பகவானை பார்வை பெற்ற நிலையிலோ அல்லது செவ்வாயின் வீடுகளில் அமர்ந்து சளியினுடைய பார்வையினை பெற்ற நிலையில் மிகுந்த பாவத்தன்மை அடைகிறார்.
ராகு பகவான் மேற்கண்ட வகையில் பாவத்தன்மை அடையும் பொழுது அதன் தசையில் கோபுரத்தில் உள்ள நபரையும் குப்பைக்கு கொண்டு வந்து விடுவார்..
ராகு பகவான் ஜாதக கட்டத்தில் லக்கனம் என்கிற ஒன்றாம் இடம் , குடும்ப ஸ்தானம் ஆன இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில் நின்றால் சர்ப்ப தோஷத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.
இதே போல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்தாலும் அல்லது புத்திரகாரன் குரு பகவான் உடன் ராகு சேர்ந்திருந்தாலும் புத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
நாக தோஷம் போக்க ஜாதகர் நாகநாத சுவாமி உள்ள திருக்கோயில் ஆன புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள பேரையூர், கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம். அடுத்தபடியாக ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி என்ற இடத்தில் உள்ள நாகநாத சுவாமியை சனிக்கிழமை காலை 9 முதல் 10:30 ராகு காலத்தில் வெள்ளியில் நாக படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட நாக தோசம் நீங்கி நல்ல பலனை தரும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
.webp)

No comments:
Post a Comment