கிரகங்கள் மனித வாழ்வை எவ்வாறு வழி நடத்தி செல்கிறது.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் நவ கிரகங்களின் பங்கு அலாதியானது.
கிரகங்கள் எந்த இடத்தில் யாருடன் சேர்ந்து எந்த கிரகத்தின் பார்வையை பெற்று நிற்கின்றது என்பதை லக்கினத்தை பொறுத்து நடக்கும் தசாபுத்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து இருப்பான் அல்லது எப்படி வாழ போகிறான் ?! போன்ற விவரங்களை அலசி ஆராய்ந்து துல்லியமாக கண்டறிய இயலும்.
ஒவ்வொரு கிரகங்களும் தனது ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் வழியாக அதன் தசாபுத்திகளில் மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது.
ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியம் பலன்கள் ஆனது அதன் லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைகிறது.ஆனால் காரகத்துவம் தரும் பலன்கள் ஆனது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான பலன்களையே தருகிறது.இவை லக்கினத்தை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை.
ஒரு கரு இரட்டையர்கள் என்பது ஒரு விந்தணுவானது ஒரு பெண்ணின் கரு முட்டையில் நுழைந்து ஒரு சைகோட் உருவாகி அவை இரண்டாக பிளந்து இரண்டு குழந்தைகளை உருவாக்குகிறது.இவை பெரும்பாலும் இரண்டும் ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ தான் இருக்கும்.
இவ்வாறு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்த ஒரு கரு இரட்டையர் சாதக பலன்களில் மாற்றங்கள் காணப்படும் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ராசி கட்டங்களில் கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலும் இருவருடைய பலன்கள் ஒரு மாதிரி இருப்பது கிடையாது.
இதே போல இருக்க இரு கரு இரட்டையர்களின் பலன் ஆனது முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் காணப்படுகிறது.
இரு கரு இரட்டையர் என்பது இரண்டு விந்து அணுக்கள் ஆனது இரண்டு அண்ட அணுவுடன் இணைந்து இரண்டு சைகோட் உருவாகி விடுகிறது.இதில் இரண்டும் ஆண் அல்லது பெண் ஆகவோ அல்லது ஒன்று ஆண் மற்றொன்று பெண் ஆக பிறக்கிறது.
இரு கரு இரட்டையர்களுக்கு இடையேயான கிரகங்கள் தாக்குதல் பலன் ஆனது சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது..
ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே இடத்தில் பிறந்த இரண்டு குழந்தை தரும் ஜாதக பலன்கள் மாறுபாடாக இருப்பதற்கு என்னவாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் ஒரு குழந்தை ஆனது தரைமட்ட நிலையில் பிறந்து இருக்கும்.மற்றொரு குழந்தை மாடியில் பிறந்து இருக்கும்.இதே போன்ற பிறக்கும் இடத்தின் உயர மாறுபாட்டால் கூட ஒரு குழந்தை ஜாதக பலனில் மாறுபாடு இருக்கிறது.
ஜாதக பலனை துல்லியமாக ஜாதகருக்கு வழங்குவதற்கு ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி இருந்தால் போதாது. ஜோதிட விதிகளுக்கு அப்பால் ஜோதிட விதி விலக்கையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
ஜோதிட விதிகளை மட்டுமே நம்பி ஜாதக பலன் பார்க்கும் போது ஜாதக பலனில் துல்லிய தன்மை கெட்டு விடுகிறது.அவரவர் லக்கனம்,கிரக பார்வை அல்லது சேர்க்கை மற்றும் வீடு கொடுத்தவன் வலிமை போன்ற பல்வேறு கூறுகளை ஆய்வு செய்து கொடுக்க கூடிய பலன்கள் மட்டுமே துல்லியமான பலனாக இருக்க முடியும்.
ஒரு கிரகம் தரும் பலன் என்பது அந்த கிரகம் அடைந்து இருக்கும் சுப தன்மை மற்றும் பாவ தன்மை ஆகிய இரண்டையும் சார்ந்தே அமைகிறது.
ஒரு கிரகம் எப்படி இருந்தாலும் அவை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்க வேண்டும் ஆயின் அந்த கிரகம் சுப தன்மையை அடைந்து இருக்க வேண்டும்.சில நேரத்தில் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகர் ஆக இருந்தாலும் அவை குருபகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் உயரிய பலனை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.
ஒரு கிரகம் ஆனது லக்கன யோகராக இருந்தாலும் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு, மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடன் சேர்க்கை அல்லது பார்வை போன்ற நிலையினை அடையும் போது அவை அதன் தசையில் கடுமையான பாதிப்பை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment