இன்றைய இளைஞர்களுக்கு ஜோதிடம் தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு தேவையான விஷயங்களை சோதிட ரீதியாக அலசி ஆராய்ந்து சரியான வழியை பெறுவதற்கு பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு தேவையானது கல்வி வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆகும் .இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை பற்றி அவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் ஜாதகம் பார்க்க வருவார்கள்.
இன்றைய இளைஞர்கள் கல்வி பற்றி அறிய இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.இரண்டாம் இட அதிபதி கல்விக்கு அதிபதியாக அழைக்கப்படுகிறது.கல்விக்கு கார்க் கிரகமாக குரு மற்றும் புதன் பகவான் விளக்குகிறார்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் பார்க்காமல் இயற்கை சுப கிரகங்கள் என அழைக்கப்படும் குரு பகவான் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய
பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் , இரண்டாம் அதிபதியும் கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக தொடர்பு பெறும் பொழுது உகந்த தசை அமைப்பு மற்றும் லக்கினாதிபதி வலிமை ஆகியவற்றை பொறுத்து ஒருவர் கல்வி நிலைகளில் உயர்ந்த நிலையில் விளங்குவார்கள்.கல்விக்கு காரக கிரகம் ஆக விளங்கும் குரு மற்றும் புதன் எவ்விதத்திலும் பங்கம் பெறாமல் இருக்க வேண்டும்.
ஒரு சமயம் இரண்டாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகமாக விளங்கும் குரு மற்றும் புதன் பகவான் பாபர் தொடர்பு பெற்று இரண்டாம் இட அதிபதியும் வலிமை இழந்த நிலையில் அவருக்கு கல்வி நிலையில் மிகவும் குறைவான நிலையில் காணப்படுவார்கள். இந்த நிலையில் லக்கனாதிபதியும் வலிமை இழந்த நிலையில் , அவ யோக தசைகள் படிக்கும் நிலையில் வந்தால் சுத்தமாக கல்வி அறிவு இருக்காது.
இந்த கருத்தை வலியுறுத்தும் எனது சோதிட கவி
"வாக்கினிலே பாவி நின்று
வாக்காதிபதியும் கெட்டு விட்டால்
நாக்கினிலே சரஸ்வதியும்
நாலடியே தள்ளி நிற்பார் "
படித்து முடித்த சில மாதங்கள் ஆனவுடன் இளைஞர்களுக்கு வரும் பெரிய பிரச்சினை வேலை வாய்ப்பு ஆகும்.வேலை வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை.
படிக்கும் காலத்தில் உரிய திறமையுடன் கல்வி தகுதிகளை வளர்த்துக் கொண்டால் ஒழிய போட்டி தேர்வு பேன்ற விடயங்கள் மூலமாக எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெற இயலும்.
ஒருவர் எந்த மாதிரியான வேலை அல்லது தொழில் புரிவார் என்பதை அவர்கள் ஜாதக கட்டத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையுடன் ராசி மற்றும் லக்கினத்திற்கு தனம் மற்றும் தொழிற் ஸ்தானமான இரண்டு மற்றும் பத்தாமிடத்துடன் சுப தன்மையுடன் தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த எண்ணங்களும் செயல்களும் சாதகருக்கு உருவாக்கி அந்த கிரக தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்து புகழ் அடைவார்கள்.
சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் சுப தன்மை உடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை மேற்கொண்டு கோடீக்கணக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும்.இதற்கு தசா புக்தி ஒத்துழைக்க வேண்டும்.
சிலருக்கு தொழில் செய்யும் அமைப்பு இருந்தும் அதிக சுப தன்மை கொண்ட கிரகம் தொடர்புடைய தொழிலை ஆரம்பித்தாலும் உகந்த யோகம் தரும் தசை அமைப்பு நடைமுறையில் இல்லாத போது ஜாதகர் தான் மேற்கொண்ட தொழிலால் பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்திக்க நேரிடும்.
இது போன்ற தருணங்களில் இரண்டாம் நிலை சுபத்துவமான கிரகம் தொடர்பு கொண்ட தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.
ஒருவருக்கு தொழில் செய்யும் யோகம் தரும் அமைப்பு உள்ளதா? என்பதை தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் அதன் காரக கிரகமான சூரியன் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.பத்தாம் இடம் மற்றும் சூரியன் ஆகிய இருவரும் வலுத்து உள்ள நிலையில் ஒருவர் தொழில் செய்யலாம் அதே நேரத்தில் பத்தாம் இடம் பலமிழந்து சனி பகவான் வலுத்து உள்ளது வேலை செய்து பிழைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு ஓரிடத்தில் நின்று நான்கு இளைஞர்கள் / இளைஞிகள் கிண்டல் அடித்து கசு குசு என்று பேசினால் அல்லது பேசி நக்கலடித்தால் அது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை பற்றி அதாவது தனக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும் இளைஞர்களுடைய/ இளைஞிகளுடைய பெரிய கனவாக இருப்பது தனது திருமணம் பற்றிய ஒருவித எதிர்பார்ப்பையும், ஒருவித கற்பனை உணவையும் அவர்களுக்குள் வளர்த்திருப்பார்கள் .அவர்களுக்குள் எப்படிப்பட்ட கணவன் அல்லது மனைவி அமைய வேண்டும் என ஒரு தனிப்பட்ட ஒரு கற்பனையே இருக்கும்.
ஒருவருக்கு தான் விரும்பிய படியே கணவன் /மனைவி அமைய அவருடைய ஜாதக கட்டத்தில் லக்கனம் என்ற ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் அதன் அதிபதிகள் மற்றும் களத்திர காரக கிரகமான சுக்கிரன் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
லக்னம் மற்றும் ராசி என இருவகைகளில் ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8 ஆம் இடங்களையும் அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
மேற்கண்ட இந்த ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகமான சுக்கிரன் ஆகியவற்றுடன் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளாது இருக்க வேண்டும். அதன் அதிபதிகளும் பகை, நீசம் மற்றும் அத்தமனம் போன்ற ஸ்தான வலிமை பெறாமல் கேந்திர, கோணங்களில் நின்று உச்ச ,ஆட்சி ,மூலதரிகோணம் போன்ற வகையில் வலிமை அடைந்து இருக்க வேண்டும் . தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவானும் எவ்விதத்திலும் பாவத்தன்மை அடையாத இருக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தால் மனதுக்குப் பிடித்த நல்ல மனைவி அல்லது கணவன் சாதகருக்கு அமைவார்கள்.
அதே நேரத்தில் மேலே குறிப்பிட்ட ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகம் ஆன சுக்கிரன் ஆகியோர்கள் சனி ,செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு கொள்ளும் பொழுது அவர்களுக்கு கால தாமதத் திருமணம் அல்லது மனதுக்கு பிடித்த மனைவி அமைவதில் சிக்கல் அல்லது பாவத்தன்மை கூடுதலாக இருக்கும் பொழுது கணவன் மற்றும் மனைவி பிரிவு நிலை அல்லது விவாகரத்து போன்றவை ஏற்படும் .இதனை அவர்களுக்கு நடக்கக்கூடிய தசை மற்றும் லக்கினாதிபதி வலிமை போன்றவற்றைப் பொறுத்து அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரு கிரகங்களும் பாவத்தன்மை அடைந்திருந்தாலே காலதாமத திருமணத்தை ஒருவருக்கு தருகிறது.
பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நிச்சயமாக திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு திருமணம் செய்து விடாதீர்கள்.
கணவன் ,மனைவி ஆகக்கூடிய இருவருடைய ஜாதகங்களையும் எடுத்து ஆராய்ந்து அவர்களுடைய சாதகத்தில் திருமண ஸ்தானத்தையும், தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இவை மட்டுமல்லாது ஒருவர் செக்ஸ் விஷயத்தில் எப்படி உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அவருடைய ஜாதகத்தில் காம திரிகோணம் என்று அழைக்க கூடிய மூன்று ,ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காம காரக கிரகமான செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுடன் சனி, செவ்வாய் ராகு ஆனது பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு எவ்வித சுப கிரக தொடர்பு இன்றி இருப்பின் அந்த ஜாதகர் பல மலரில் தேன் பருகும் வண்டு போன்ற குணத்தை உடையவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.சிலருடைய ஜாதகத்தில் அலி கிரகங்கள் ஆன புதன்,சனி மற்றும் கேது ஆகிய கிரகங்கள் தொடர்பை வைத்து ஆண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஆராய்ந்து பார்க்காமல் அவர்களுக்கு இடையே திருமணம் நடக்கும் போது அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
நிறைவாக திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதிகள் இருவருடைய லக்கனம் அதன் அதிபதியை கொண்டு ஜாதகரின் குண நலன்களை முடிவு செய்து கொள்ளலாம். ராசி மற்றும் லக்கனத்தை குரு பார்வை செய்த ஒரு நபருடைய ஜாதகத்தை ராசி மற்றும் லக்கனத்தை சனி பார்வை செய்த ஜாதகருடன் இணைத்துக் கொள்ளக் கூடாது.இது போன்ற வகையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.இதே போல வேலை, தொழில் , குழந்தை பாக்கியம் மற்றும் ஆயுள் போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
தம்பதிகள் இருவருக்கும் இடையே நடக்க கூடிய தசா புத்திகள் தான் இருவருக்கும் இடையே ஆன குடும்ப வாழ்க்கை நிலையை முடிவு செய்கிறது.இருவருக்கும் இடையே ஆறு அல்லது எட்டுக்கு உரிய அவ யோகம் தரும் தசைகள் அடுத்தடுத்து வரக் கூடிய சூழலில் அவர்களுக்கு இடையே திருமண பொருத்தம் போட கூடாது.
தம்பதிகள் இருவருக்கும் களத்திர தோஷம்,நாக தோஷம் மற்றும் புத்திர தோஷம் போன்ற ஏதாவது தோஷங்கள் இருந்தால் அதற்கு உரிய பரிகாரம் தரும் வழிபாடுகள் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
சில நேரங்களில் என்னதான் பரிகாரம் செய்தாலும் அவ்வித பாதிப்பிலிருந்து வெளிவர இயலாது என்ற சூழலில் அவர்களுக்கு இடையே திருமணம் பொருத்தம் போட கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment