Tuesday, 3 November 2026

 ஒரு கிரகம் பலமா ? பலவீனமா ? 



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு கிரகம் எப்பொழுது தனது பலத்தை இழக்கிறது ,எப்பொழுது ஒரு கிரகம் பலம் பெற்று நிற்கிறது என்பதையெல்லாம் இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம்.


  ஒரு கிரகம் எப்பொழுது பலத்தை இழக்கிறது என்பதை முதலில் பார்ப்போம் ஒரு கிரகம் ஒளி கிரகமான சூரியனிடம் எட்டு பாகைக்க்குள் நெருங்கும் பொழுது , சூரியனால் அந்த கிரகம் அஸ்தங்கம் அடைந்து அவை தனது பலத்தை இழந்து நிற்கிறது.


  ஒரு கிரகம் ஆனது இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு ,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


   ஒரு கிரகம் ஆனது பகை வீடுகளில் ஏறி நிற்கும் போது அந்த கிரகம் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


  ஒரு கிரகம் ஆனது நீசம் அடைந்து அவை 

நீசபங்கம் அடையாத நிலையில் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


ஒரு கிரகம் ஆனது அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி நிற்கும் போது தனது பலத்தை இழந்து நிற்கிறது.


 பொதுவாக பாவ கிரகங்கள் மற்றும் ஆறு , எட்டாம் அதிபதிகள் தனது பலத்தை இழந்து நிற்பது நல்லது .அதே நேரத்தில் லக்கன யோகர்கள் பலம் இழந்து நிற்பது நல்லது அல்ல என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.


இதேபோல் ஜாதகத்தில் ஒரு கிரகம் எப்பொழுது பலத்தை அடைகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


   ஒரு கிரகம் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அந்த கிரகம் முழு வலிமை பெற்று நல்ல பலனை தரும் அமைப்பை பெறுகிறது.


   ஒரு கிரகம் ஆனது வர்க்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை போன்ற நிலைகளில் பலம் அடைந்து காணப்படுகிறது.


      ஒரு கிரகம் ஆனது நீசபங்கம் அடைந்த நிலையில் நீசபங்க ராஜயோகம் அமைப்பை பெற்று நீசமான அந்த கிரகம் முன்னிலும் பல மடங்கு வலிமை அடைந்த நிலையில் காணப்படுகிறது.


   ஒரு கிரகம் ஆனது அம்சத்தில் சுப வர்க்கம் அடைந்த நிலையில் அவை பலமடைந்த கிரகமாக காணப்படுகிறது.


  ஒரு இயற்கை சுப கிரகம் ஆனது வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நிற்கும் போது சந்திர அதியோகம் பெறுகிறது.

 

 அம்சத்தில் ஒரு கிரகம் இயற்கை சுப வர்க்கம் ஏறி நின்றால் அந்த கிரகம் பலமடைந்த கிரகமாக விளங்குகிறது.


   ஒரு கிரகம் ஆனது உச்சம்,மூல திரிகோணம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்ற கிரகம் ஆனது பலம் அடைந்த கிரகம் ஆக செயல்படுகிறது.


  திக் பலம் பெற்ற கிரகங்கள் பலம் அடைந்த கிரகம் ஆக செயல்படுகிறது.


 பொதுவாக இயற்கை சுப கிரகங்கள் சுபரின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் கூடுதலான பலனை பெறுகிறது.அதே நேரத்தில் பாவ கிரகங்களும் இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் ஓரளவு சுப தன்மையை அடைந்து பலம் அடைந்து விடுகிறது.அதே நேரத்தில் இயற்கை பாவ கிரகங்கள் மேலும் பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற கூடுதலான கெட்ட பலனை தரும் அமைப்பை பெறுகிறது.


நன்றி.


For online appointment 

  Cell & WhatsApp & Gpay no 


  097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd 

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: