Wednesday, 7 March 2018

சந்திரபகவானின் மகத்துவங்களும் மற்றும் அதன் குறைதீர்க்கும் பரிகாரங்களும்.

சந்திரபகவானின் மகத்துவங்களும் மற்றும் அதன் குறைதீர்க்கும் பரிகாரங்களும்.


                                     
              செவ்வாய்பட்டி ஸ்ரீ                 பத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு--( 194 )

              "சாதகரின் மனதினை வழி நடத்துவதில் முதல் பங்கு வகிப்பவர் "மனோகாரகன்" என அழைக்கப்படும் சந்திரபவானே காரணகர்த்தா ஆவார்.

           சந்திரபகவான் மனதினை ஆள்பவர் எனலாம்.சாதகரது அன்பு,கருணை, இரக்கம் ,மகிழ்சி,திருப்தி,காதல்,கணிவு,கோபம்,பொறாமை,கற்பனைவளம்,
ஆனந்தம் போன்ற மனம் சார்ந்த உளவியல் நிகழ்வுகளுக்கு சந்திரபகவானே காரணம் ஆகும்.

          மதியிழந்தவருக்கும் ,சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அமாவாசை,பொளர்ணமி காலங்களில் பைத்தியங்கள் பாதிக்கப்படுவதிலிருந்து மனதினை ஆள்பவர் சந்திரபகவானே ஆவார்.

        ஒளிகிரகங்களில் சூரியபகவானிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வருபவர்  சந்திரபகவானே ஆவார்.சந்திரபகவான் மட்டும ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சுபராகவும்,அடுத்த பதினைந்த நாட்கள் பாவராகவும் செயல்படுகிறார்.

          ஆம் அமாவாசை திதியிலிருந்து பதினைந்து நாட்கள் பொளர்ணமி திதி வரை இடைப்பட்ட காலத்தினை வளர்பிறை காலமாக கருதப்படுகிறது.இவ்விடைப்பட்ட காலத்தினை பூர்வ அல்லது சுக்கில பட்சம் என அழைக்கப்படுகிறது.இக்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் சாதகத்தில் உள்ள சந்திரன் வளர்பிறை சந்திரன் ஆவார்.இதன் வேறு பெயர்களாவன,பூர்வ அல்லது சுக்லபட்சம் ஆகும்.

                   வளர்பிறை சந்திரன் சுபராக சாதகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.திருமணம்,வளைகாப்பு ,புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்கள் வளர்பிறை நாட்களில் விழா கொண்டாடப்படுகிறது.

       தனது சாதகத்தில் வளர்பிறை சந்திரனை கொண்டவர்கள் தெளிவான மனநிலை உடையவர்களாகவும் அதன் திசை காலங்களிள் யோக பலன்களையும் தருகிறது.

       இதேபோல பொளர்ணமி திதியிலிருந்து அமாவாசை வரை இடைப்பட்ட காலத்தினை தேய்பிறை காலமாக கருதப்படுகிறது.இதனை அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் எனவும் அழைக்கப்படுகிறது.

          தேய்பிறை சந்திரனை தனது சாதகத்தில் கொண்டவர்கள் தெளிவற்ற மனநிலை உடையவர்களாகவும் ,அடிக்கடி தன்னை குழப்பிக்கொள்பவர்களாகவும் திகழ்வர்.

              ஒளியின் அளவினைக்கொண்டு ஒரு கிரகத்தினை சுபர்,அசுபர் என வகைப்படுத்தப்படுவதுண்டு அந்த வகையில்  பொளர்ணமி திதியில் சூரியனின் ஒளி அளவானது தனக்கு 180 பாகை நேரேதிர் உள்ள சந்திரன் மீது அதிகமாக விழுவதால் வளர்பிறை சந்திரன் இயற்கை சுபராக கருதப்படுகிறது.

          ஆனால் அமாவாசை காலங்களில் சூரியனும்,சந்திரனும் ஒன்றாக 30 பாகைக்குள் இருக்கும் சூழலால் சந்திரன் மீது விழும் ஒளியின் அளவு குறைவு என்ற அடிப்படையில் பாவராக கருதப்படுகிறது.

          சாதகத்தில் சந்திரபகவான் கொண்ட நட்சத்திர சாரத்தினையே ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது. அந்த நட்சத்திர அதிபதியே சாதகரின் ஜென்ம திசையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

        ஜெனன நேரத்தில் நட்சத்திரம் கடந்து சென்ற பாதத்தின் அடிப்படையிலே ஜென்ம திசையளவு கணக்கிடப்படுகிறது.

         சந்திரபகவான் ஒரு ராசிக்கு இரண்டேகால் ( 21/4) நாள்கள் வீதம் பணிரெண்டு ராசியினையும் 28 நாட்களிலே கடந்து சென்றுவிடுகிறது.இந்த நாட்களும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலங்களும் ஒன்றாகவே உள்ளது.பெண்களின் உடலியலில் உண்டாகும் இத்தகைய மாற்றங்களுக்கு சந்திரபகவானே காரகர் ஆவார்.

         சந்திரபகவானே இரத்த சுழற்சிகளுக்கும் காரகர் ஆவார். ஒரு பெண் ஆனவள் பூப்பெய்தல் நடந்து அவளை இனப்பெருக்கத்திற்கு தயாராக்கும் இத்தகைய வைபவங்களும்,கருவுறுதலுக்கு பின் உருவாகும் சைகோட் எனப்படும் கருவுற்ற முட்டைக்கும் சந்திரபகவானே காரகர் ஆவார்.

        எனவே கருவுற்ற பெண்ணின் மனநிலை அக்குழந்தைகளை பாதிக்கும் என்பதால்தான் கருவுற்ற பெண்ணினை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும்.அவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே வளைகாப்பு போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

         .சந்திரபகவானை " இரவின் காவலர் "என அழைக்கலாம்.ஒருவர் நிம்மதியாக இரவில் உறங்கவேண்டும் எனில் அவருக்கு நல்ல மனநிலை அமையவேண்டும்.இந்த நல்ல மனநிலை அமைவதற்கு சந்திரபகவானின் அருள் அவசியம் ஆகும்.ஆதலால் சந்திரபகவானை " மனோகாரகன்"என அழைக்கப்படுகிறது.

           சந்திரன் "மாதர்காரகர் " என்பதால் சாதகத்தின் பெற்ற தாயின் நிலை அறிய சந்திரபகவானின் வலிமையினை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.

       ஒருவரது தூக்கத்தில் அடிக்கடி கனவுகள் வந்து நிம்மதியற்ற நிலையினை தருவதற்கும் பலம் இழந்த சந்திரபகவானே காரகர் ஆவார்.

                       சந்திராஷ்டமம்


        சந்திரன் மாதந்தோறும்  ஒருவரது ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.

      சந்திரன் மனோகாரகன் மற்றும் உடலை குறிப்பவன் .எனவே இத்தகைய 21/4 நாட்களில் சாதகருக்கு மனவேதனை,உடல் உபாதை,வீண் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும் என்பதால் திருமணம்  செய்யாமலிருத்தல் நல்லது.திருமணம் என்பது உடல் மற்றும் மனநிலை சம்பந்தப்பட்டது என்பதால் தவிர்த்தல் நலம்.இதுபோல புதிய முயற்சிகளை கைவிடுதல்,இந்நாட்களில் எச்சரிக்கை கவனமுடன் இருத்தல் நலம்.

             புதுமனை புகுவிழா,வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் தவிர்த்தல் நல்லது.வேறுவழியின்றி இந்நாட்களில் சுபகாரியம் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட்டு சுப காரியங்கள் தொடரலாம்.

       ஒருவரது சாதகத்தில் தேய்பிறை சந்திரனை பெற்றவர்கள்,நீசம்,பகை மற்றும் மறைவிடங்களில் சந்திரனை பெற்றவர்கள் ,அரவுகளான ராகு,கேது மற்றும் சனியுடன் சேர்க்கை பெற்ற சந்திரன் .இதுபோன்ற அமைப்பினை பெற்றவர்கள் பலம் இழந்த சந்திரனை பெற்றவர்கள் ஆவார்.

                        பரிகாரங்கள்.

               1)  பலம் இழந்த சந்திரனை பெற்று சந்திரதிசை நடப்பவர்கள் திங்கட்கிழமை அன்று சோமவார விரதமிருந்து அன்று மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலில் உல்ள அம்பாள் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வெள்ளிலரி மலரால் அர்ச்சனை செய்து  வழிபடுவது உத்தமம்.

         2) வெள்ளை வேஷடி,தயிர்சாதம்,நெல்  இவற்றை இல்லாதவர்களுக்கு தானம் செய்யலாம்.

         3) பொளர்ணமி அன்று ஏதாவது உங்களுக்கு அருகில் உள்ள அம்பாள் சன்னதியில் பாலாபிஷேகம் செய்து, பால்  கற்கண்டு பொங்கல் வைத்து வழிபடலாம்.

   4) அமாவாசைக்கு பிறகு  மூன்றாம் பிறையன்று சந்திரதரிசனம் செய்தல் உத்தமம்.

  5) கும்பகோணம் அருகில் உள்ள திங்களூருக்கும்,திருப்பதி சென்று வழிபடல் நல்லது.

6) பொது இடங்களில் தண்ணீர்பந்தல் வைத்து மோர்,தண்ணீர் தானம் செய்தல் நல்லது.

7) வளர்பிறை திங்கள் கிழமை வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி பழைய வெல்லத்தை இடல்.

8 ) வசதியுடையோர் தனது மோதிரத்தில் முத்து பதித்து அணிந்து கொள்ளல்.
9) "ஓம் ஹீரிம் விம் சந்திர தேவாய நமஹ !" எனும் மந்திரத்தினை நாள் ஒன்றுக்கு நூற்றிஎட்டு முறை உச்சரித்தல்.

நன்றி!
(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

     வாட்ஸ்அப்
          97 151 89 647
         செல்
         740 257 08 99
            97 151 89 647

                             

 அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd.
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.இந்தியா.

E-mail
  masterastroravi@gmail.com


No comments: